பிரதமர் ரணில் 07 ஆம் திகதி விசேட உரை
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் 07 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார்.
நாட்டின் பொருளாதார நிலைவரம் பற்றி அவர் அந்த உரையில் தெளிவுபடுத்துவார்.
நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 07 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.
அமைச்சு பதவிக்காக பல்டி அடித்த நிமலுக்கும், அமரவீரவுக்கும் மைத்திரி ஆப்பு!
கட்சி முடிவைமீறி அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்ட நிமல் சிறிபாலடி சில்வா, மஹிந்த அமரவீர ஆகியோர் கட்சியில் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்படுவார்கள் - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரம் மைத்திரிபால சிறிசேன...
21 இழுத்தடிப்பு செய்கிறது மொட்டு கட்சி!
அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தால் ஆளுங்கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போதும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் வெவ்வேறான கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன...
‘தோட்டங்களில் பட்டினி சாவை தடுக்க தரிசு காணிகளை உடன் பிரித்து தொழிலாளருக்கு வழங்குங்கள்’
உரம் இல்லாததால், நெல் விளைச்சல் இல்லை. உள்நாட்டு நெல் விளைச்சல் இல்லாததால் அரிசி இல்லை. அதேபோல், உரப்பிரச்சினை தேயிலை உற்பத்தியையும் பாதித்துள்ளது. தோட்டங்களில் வேலை இல்லை. ஆகவே வருமானம் இல்லை. உணவுக்காக, அரிசி,...
சிறுமி கடத்தப்பட்டு படுகொலையென சந்தேகம்! 20 பேரிடம் வாக்குமூலம் பதிவு!!
பண்டாரகம, அட்டலுகம பகுதியில் காணாமற்போயிருந்த 09 வயது சிறுமி இன்று பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அட்டுலுகம , எப்பிட்டமுல்ல பகுதியை சேர்ந்த 09 வயதான மொஹமட்...
பதவி விலகமாட்டேன் – ஜனாதிபதி கோட்டா திட்டவட்டம்!
“புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பேன்” – என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதிபடத் தெரிவித்தார்.
அமைச்சர்களுடன் நடத்திய விசேட கலந்துரையாடலின்போதே அவர் இதனைக் கூறினார் என்று வெளிவிவகார...
’21’ இற்கு மனோ, திகா, ஜீவன் கூட்டாக ஆதரவு! பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் சங்கமம்!!
அரசியலமைப்பிற்கான 21ஆவது திருத்தச்சட்டமூலத்தை, சர்வஜன வாக்கெடுப்புக்கு வழிவகுக்காத வகையில் - திருத்தங்கள் சகிதம் நாடாளுமன்றத்தில், வெகு விரைவில் நிறைவேற்றிக்கொள்வதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற சர்வக்கட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் விஜயதாச...
21 ஐ இறுதிப்படுத்துவது குறித்து இன்றும் முக்கிய பேச்சு!
அரசியலமைப்பிற்கான உத்தேச 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தை இறுதிப்படுத்துவதற்கான பேச்சுகள் நேற்று இடம்பெற்ற நிலையில், இன்றைய தினமும் முக்கிய சந்திப்புகள் இடம்பெறவுள்ளன.
இதன்படி நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் பிரதமர் ரணில்...
21 ஆவது திருத்தச்சட்டமூலம் – சட்டத்தரணிகள் சங்கம் அதிருப்தி
அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அரசமைப்பிற்கான 21 ஆவது திருத்த வரைவு வெறும் கண்துடைப்பு ஏற்பாடுதான் என்ற சாரப்பட விசனம் தெரிவித்திருக்கின்றது இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்
நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசமைப்பு சீர்திருத்த அமைச்சர் விஜயதாஸ...
4 ஜனாதிபதிகளின் கீழ் அமைச்சு பதவிகளை வகித்துள்ள டக்ளஸ்
ஈ.பி.டிபியின் செயலாளரும், அக்கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் இன்று பதவிப் பிரமாணம் செய்தார்.
டக்ளஸ் தேவானந்தா ,1994 இல் நாடாளுமன்ற அரசியல்...













