சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக வட கொரியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.
இரு நாள் விஜயமாக ஜுன் 08ஆம் திகதி அவர் வடகொரியா செல்வார் என தெரியவருகின்றது.
கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் உக்ரைன் போரினால் உருவான புவிசார் அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு, வட கொரியாவுடனான தனது நெருக்கமான உறவை மீண்டும் நிலைநாட்ட சீனா முயற்சிக்கிறது.
வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் விடுத்த அழைப்பின் பேரில் நடைபெறும் இந்தச் சந்திப்பு, அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு ஒரு முக்கியச் செய்தியை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபகாலமாக கிம் ஜாங் உன் ரஷ்யாவுடன் அதிக நெருக்கம் காட்டி வரும் சூழலில், இப்பயணம் ஆசியப் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தைச் சொல்லும் ஒரு நகர்வாகக் கருதப்படுகிறது.
இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவும் தூதரக ரீதியிலான கூட்டணியை மேலும் வலுப்படுத்துவதே இந்த வருகையின் முக்கிய நோக்கமாகும்.
