7,500 வீடுகளுக்கு மின்சாரம்: வருடாந்தம் 3 மில்லியன் டொலர் சேமிப்பு – மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பு

புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் தம்புள்ளை, இப்பன்கடுவ வாவியில் நிர்மாணிக்கப்பட்ட 05 மெகாவொட் கொள்ளளவு கொண்ட “திய ஜனனி” மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையத்தை தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கும் நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (18) பிற்பகல் இடம்பெற்றது.

10.5 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த சூரிய மின் உற்பத்தி நிலையத்தின் ஊடாக ஆண்டுதோறும் சுமார் 7,500 வீடுகளின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யப்படும்.

இதன் மூலம் ஆண்டுதோறும் காபனீரொக்சைட் (CO2) வெளியேற்றத்தை சுமார் 6,440 மெட்ரிக் தொண்களினால் குறைத்துக் கொள்ள முடிவதுடன், ஆண்டுதோறும் டீசல் மூலம் மின் உற்பத்தி செய்வதற்காகச் செலவிடப்படும் 2.5 மில்லியன் லீற்றர் எரிபொருளும் மிச்சப்படுத்தப்படுகிறது.

இதன் மூலம் ஆண்டுதோறும் 3 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணி நாட்டுக்கு மீதப்படுத்தப்படுகிறது.

உள்ளூர் பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்களின் முழுமையான பங்களிப்புடன் இத்திட்டம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு நிர்மாணப் பணிகளின் போது இப்பிரதேச மக்களில் சுமார் 150 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளமை சிறப்பம்சமாகும்.

நினைவுப் பலகையைத் திறந்து வைத்து, தம்புள்ளை, இப்பன்கடுவ சூரிய மின் உற்பத்தி நிலையத்தை தேசிய மின்சாரக் கட்டமைப்புடன் இணைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி, கட்டுப்பாட்டு அறைக்குச் சென்று அதன் செயற்பாடுகளையும் பார்வையிட்டார்.

இத்திட்டத்தின் கீழ் பல சமூகநலத் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டதோடு, ஜனாதிபதி அடையாள ரீதியாக இந்நிகழ்விலும் கலந்துகொண்டார்.

இதற்கமைய, ஸ்ரீ விவேகாராம விகாரைக்கு ஜெனரேட்டர் ஒன்றும், தர்ம சாலையின் பணிகளுக்காக 800,000 ரூபா நிதி உதவியும், மீன்பிடிச் சமூகத்தினருக்குப் குளங்களை அமைத்துக் கொள்வதற்கும் மீன்பிடி உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கும் 2,000,000 ரூபா நிதி உதவியும், ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தின் கீழ் பசுமைப் பூங்கா ஒன்றை உருவாக்குவதற்காக 1,000,000 ரூபா நிதி உதவியும், ஆனகடாவ ஆரம்பப் பாடசாலையில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரு வருடத்திற்குத் தேவையான பாடசாலை உபகரணங்கள் மற்றும் ஏனைய பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு 800,000 ரூபா உதவியும், வீர மொஹான் ஜயமஹ வித்தியாலயத்திற்கு குடிநீர் திட்டம் ஒன்றை நிர்மாணிப்பதற்காக 400,000 ரூபா நிதி உதவி உள்ளிட்ட பல உதவிகள் இதன் போது வழங்கப்பட்டன.

துறைமுகங்கள், சிவில் விமானப் சேவைகள் மற்றும் வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக, புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் குமார ஜயகோடி மற்றும் அப்பகுதி மக்கள் பிரதிநிதிகள், வலுசக்தி அமைச்சின் செயலாளர், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரஸல் அப்போன்ஸு , வலுசக்தி அமைச்சு மற்றும் இலங்கை நிலைபெறுதகு வலுசக்தி அதிகார சபையின் அதிகாரிகள், மின்சார சபை பதிலீட்டு நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதான அதிகாரிகள், WindForce PLC முகாமைத்துவ பணிப்பாளர் மஞ்ஜுல பெரேரா உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles