மட்டக்குளியில் கோரவிபத்து: மூவர் பலி

கொழும்பு , மட்டக்குளி, பர்கியூஷன் சந்தியில் நேற்றிரவு(16) இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் மூவர் பலியாகியுள்ளனர். மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார், 02 முச்சக்கரவண்டிகள், 02 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த 10 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தை ஏற்படுத்திய 52 வயதுடைய கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.

Related Articles

Latest Articles