IMF மீளாய்வுக் கூட்டம் முன்னெடுப்பு

சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்ட புதிய பொருளாதார மறுசீரமைப்புகளில் இதுவரை அமுல்படுத்தப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பான முதலாவது முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல் இன்று (14) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இன்று முதல் இரு வார காலத்துக்கு இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ள நிலையில் அதன் இறுதி அமர்வு செப்டெம்பர் 26 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெறும்.

இன்று இடம்பெற்ற சந்திப்பில் இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பொருளாதார அலுவல்கள் தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிரிவர்தன, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

சர்வதேச நாணய நிதியத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தலைமை நிர்வாக அதிகாரி பீடர் புருவர் (Peter Breuer), பிரதி நிர்வாக அதிகாரி கட்யா ஸ்விரிசென்கா (Katya Svirydzenka), மைக் லீ (Mike Li), சோபியா சென்ங் (Sophia Zhang), டிமித்ரி ரொஷ்கோவிஷ் (Dmitriy Rozhkov), நோடா செலீம் (Noda Selim), சந்தேஷ் துன்கானா (Sandesh Dhungana), நூயி மியோ (Nui Miao), ஜோயி டர்கேவிட்ஸ் (Joei Turkewitz), நுவோன்க் லூன் வூ (Nuong Lan Vu) ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்ததோடு, மார்க் எடம்ஸ் Mark Adams இணைய வழியாக கலந்துகொண்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles