இந்திய வெளிவிவகார செயலர் நாளை கொழும்பு வருகை: மலையக பிரதிநிதிகளுடனும் பேச்சு

இந்திய வெளிவிவகாரச் செயலர் விக்ரம் மிஸ்ரி , இரு நாள் பயணமாக நாளை இலங்கைக்கு வருகின்றார்.

இவ்விஜயத்தின்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரைச் சந்தித்து, இந்திய வெளிவிவகாரச் செயலர் விரிவான பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

அத்துடன், வடக்கு-கிழக்கு மற்றும் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் கட்சிகளையும், இந்திய வெளிவிவகாரச் செயலர் விக்ரம் மிஸ்ரி தனித்தனியாகச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார் என தெரியவருகின்றது.

இதன்போது, 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களுடன் மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்த, அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழ் க் கட்சிகள் வலியுறுத்த திட்டமிட்டுள்ளன.

Related Articles

Latest Articles