கஷ்டம்…! எனக்கு பென்ஷன்கூட இல்லை!!

ஓய்வூதியமும் ரத்து செய்யப்பட்டுவிட்டது. பொருட்களின் விலையேற்றத்தால் நானே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளேன்.” – என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“நான் தற்போது செயற்பாட்டு அரசியலில் இல்லை. எவராக இருந்தாலும் பரவாயில்லை, நாட்டை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுத்தால் அதனை வரவேற்க முடியும்.

எரிபொருள் விலையேம் உட்பட பொருட்களின் விலையேற்றத்தால் நான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளேன். உங்களுக்கு சரி, (ஊடகவியலாளர்) சம்பளம் ஒன்று கிடைக்கப்பெறுகின்றது.

எனக்கு ஓய்வூதியத்தையும் இல்லாது செய்துவிட்டனர். சிறப்புரிமைகளும் இல்லை. எனவே, எனக்குதான் நெருக்கடி அதிகம்.” – என்றார்.

Related Articles

Latest Articles