முடியாட்சிக்குரிய மரபுகளை தகர்த்த நோர்வே மன்னர் ஹாரால்ட் காலமானார்

நோர்வே மன்னர் 5ஆம் ஹாரால்ட் (King Harald V), தனது 89ஆவது வயதில் காலமானார்.

ஒஸ்லோவில் உள்ள தேசிய வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 06:35 மணிக்கு அவர் அமைதியான முறையில் உயிர்நீத்ததாக ஒஸ்லோவிலுள்ள அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அரண்மனை கூரையில் பறந்த அரசக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

மன்னரின் மறைவுக்கு முந்தைய 24 மணிநேரத்தில், ராஜ குடும்ப உறுப்பினர்கள் அவரைச் நேரில் சென்று பார்த்ததுடன், பெருந்திரளான மக்கள் அரண்மனைக்கு வெளியே மலர்களை வைத்து அஞ்சலி செலுத்தினர்.

14ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு நோர்வேயிலேயே பிறந்த அந்நாட்டின் முதல் மன்னர் ஹாரால்ட் ஆவார். அவரது மறைவையடுத்து, அவரது 53 வயதான மகனான இளவரசர் ஹோகோன் (Haakon) புதிய மன்னராகப் பொறுப்பேற்கிறார்.

35 ஆண்டுகள் அரியணையில் வீற்றிருந்த மன்னர் ஹாரால்ட், முடியாட்சியை நவீனமயமாக்கிய ஒரு பிரபல மற்றும் சீர்திருத்தத் தலைவராகச் சரித்திரத்தில் நினைவுகூரப்படுவார்.

அரச மரபுகளை உடைத்து ஒரு சாதாரணப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட அவர், நோர்வேயின் மிகவும் கடினமான தருணங்களில் நாட்டை ஒன்றாக இணைத்த ஒரு முக்கிய சக்தியாக விளங்கினார்.

மன்னர் ஹாரால்ட் எளிமையானவர், அனைவராலும் மதிக்கப்பட்டவர் மற்றும் அன்புக்குரியவர் என்று அரச குடும்பத்து மூத்த பார்வையாளர்கள் குறிப்பிடுகின்றனர். அத்துடன், அவரது தந்தையான மன்னர் 5ஆம் ஒலாவ் (King Olav V) அழைக்கப்பட்டதைப் போலவே, இவரும் நாட்டின் “தாத்தா” என்றும் “மக்களின் மன்னர்” என்றும் வர்ணிக்கப்பட்டார்.

கடந்த 2011ஆம் ஆண்டு ஒஸ்லோ மற்றும் உட்டோயா தீவில் நடந்த குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து, நோர்வே மக்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டும் என்றும், “பயத்திற்கு இடம் கொடுத்துவிடக் கூடாது” என்றும் மன்னர் ஹாரால்ட் உருக்கமாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.

சமீபகாலமாக, மன்னர் ஹாரால்ட் மற்றும் அவரது குடும்பத்தினர் பல்வேறு ஆரோக்கியச் சவால்களையும் சர்ச்சைகளையும் எதிர்கொண்டனர்.

குறிப்பாக, அவரது மருமகள் மெட்டே-மாரிட் (Mette-Marit), மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் (Jeffrey Epstein) தொடர்பு கொண்டிருந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் மற்றும் அவரது மகன் மாரியஸ் போர்க் ஹோய்பி (Marius Borg Høiby) கற்பழிப்பு வழக்கில் தண்டனை பெற்றது ஆகிய சம்பவங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles