“200 வருடங்களாக ஏமாற்றப்பட்டவர்களே எமது மலையக மக்கள். காணி, வீடு இல்லாதவர்களின் வலி, வேதனை நன்கு புரியும். அந்த சமூகத்தில் இருந்து வந்தவன் நான். ஆனால் தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை மலையக மக்கள் முழுமையாக நம்புகின்றனர்.”
இவ்வாறு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
பதுளை, கபரகலயில் வீடுகள் கையளிக்கும் நிகழ்வில்
கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ ஹட்டன் பிரகடனத்தில் வழங்கப்பட்ட உறுதி மொழிகளை நாம் நிறைவேற்றி வருகின்றோம்.
போராட்டம் இன்றியே பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டது.
மலையகத்திலுள்ள அனைவருக்கும் காணி உரிமை வழங்கப்படும். அநுர ஆட்சியில் மலையக மக்களுக்கான மகிழச்சி தொடரும்.
லயத்து வரிசையை உடைத்தெறிவோம். சொந்த காணியில் வீடு கட்டுவோம்.” எனவும் அவர் குறிப்பிட்டார்.










