லிந்துலை பகுதியில் நீராடச்சென்றவேளை நீரில் மூழ்கி காணாமல்போயுள்ள சிறுவனை தேடும் நடவடிக்கை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
லிந்துலை பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் தரம் 10-இல் கல்வி கற்கும் 10 மாணவர்கள், மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தினால் இன்று திங்கட்கிழமை (13) நடத்தப்பட்ட பரீட்சையை எழுதிவிட்டு, மதியம் 12:30 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
வழியில் அவர்கள் அருகிலுள்ள ஆக்ரா ஓயா ஆற்றுக்கு நீராடச் சென்றுள்ளனர்.
ஆற்றில் நீராடிக்கொண்டிருந்தபோது ஒன்பது மாணவர்கள் கரை திரும்பிய போதிலும், ஒரு மாணவர் மட்டும் கரை திரும்பவில்லை.
இவ்வாறு காணாமல் போன மாணவர், மிளகுசேனை தோட்டத்தைச் சேர்ந்த பரமநாதன் கிஷோர் (15 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
காணாமல் போன மாணவரைத் தேடும் நடவடிக்கைகளை லிந்துலை பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.
கௌசல்யா
