ஹட்டன் நகரில் மோட்டார் சைக்கிளுக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

ஹட்டன் நகரில் வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிளின் முன்பகுதி பாதுகாப்புக் கவசத்திற்குள் பாம்பு ஒன்று புகுந்த சம்பவம் இன்று (13) சுமார் 3.40 மணியளவில் இடம்பெற்று, அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஹட்டன் நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்கு பொருட்கள் வாங்கச் சென்றிருந்த மோட்டார் சைக்கிளின் உரிமையாளர், தனது வாகனத்தை வீதியோரமாக நிறுத்திவிட்டு சென்றிருந்தார். அந்த நேரத்தில், மோட்டார் சைக்கிளின் முன்பகுதி பாதுகாப்புக் கவசத்திற்குள் பாம்பு ஒன்று புகுந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, அருகில் சென்ற ஒருவர் அந்தப் பாம்பு கவசத்திற்குள் இருந்து தலையை வெளியே நீட்டி எட்டிப்பார்த்ததை கண்டு அதிர்ச்சியடைந்து, அங்கிருந்தவர்களுக்கு தகவல் வழங்கியுள்ளார்.

தகவல் அறிந்ததும் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் சம்பவ இடத்திற்கு திரண்டு வந்ததால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

பின்னர், அங்கிருந்த சிலர் மிகவும் அவதானமாக செயல்பட்டு, மோட்டார் சைக்கிளின் கவசப் பகுதியை தடியின் ஊடாக பாம்பை பாதுகாப்பாக வெளியே எடுத்தனர். அதன் பின்னர், அந்தப் பாம்பிற்கு எந்தவித சேதமும் ஏற்படாத வகையில் ஹட்டன் புகையிரத பாதைக்கு அண்மையிலுள்ள புதர்ப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.

மலைவாஞ்ஞன்

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles