கொழுந்து ஏற்றிச்சென்ற லொறி விபத்து: சாரதி படுகாயம்!

தலவாக்கலை பாமஸ்டன் தோட்டத்தில் தேயிலை கொழுந்துகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று இன்று (20) வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதன் சாரதி படுகாயம் அடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து இன்று (20) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

பாமஸ்டன் தோட்டத்திலிருந்து ரட்ணகிரி தோட்ட வீதியூடாக தேயிலை கொழுந்துகளை ஏற்றிச் சென்ற லொறியே இவ்வாறு வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியது.

விபத்தில் காயமடைந்த சாரதி சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் லொறி பலத்த சேதமடைந்ததாகவும், விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் தெரிவித்த லிந்துலை பொலிஸார் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தலவாக்கலை பி.கேதீஸ்

Related Articles

Latest Articles