காணாமல்போன பதுளை வைத்தியர் சடலமாக மீட்பு!

காணாமல் போயிருந்த பதுளை வைத்தியசாலையைச் சேர்ந்த வைத்தியர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மஹியங்கனை – மாப்பாக்கடவெவ பகுதியில் உள்ள பாறை ஒன்றின் மீது அவர் சடலமாக கிடந்துள்ளார்.

பதுளை போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளார் என பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஞாயிற்றுக்கிழமை (23) கடமையில் இருந்த குறித்த வைத்தியர், அதன் பின்னர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதுளை – மஹியங்கனை கால்வாய் வீதியின் 17 ஆம் மைல் கல்லுக்கு அருகில் உள்ள மாபாக்கடவெவ பகுதியில் வைத்தியரின் கார் நேற்றிரவு கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றது.

Related Articles

Latest Articles