அரசியலமைப்பில் கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ள 22-ஆவது திருத்தச் சட்ட மூலத்தை எதிர்த்து, இசைக் கலைஞர் இராஜ் வீரரத்ன மற்றும் ‘ஜனநாயகத்திற்கான சமூக ஊடக ஊடகவியலாளர்கள்’ அமைப்பின் பிரதிநிதிகள் இணைந்து உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துச் செவ்வாய்க்கிழமை (25) இம் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அமைப்பின் சார்பில் இராஜ் வீரரத்ன, நிலந்த சத்சர கமகே, சாமர விஜேசூரிய மற்றும் நந்தன குடமீகொட ஆகியோர் மனுதாரர்களாக முன்னிலையாகியுள்ளனர்.










