மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் 1, 3 மற்றும் 4-ஆம் பிரிவுகளை, மேல், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள தற்போதைய வீதி அமைப்புடன் இணைக்கும் வீதி அபிவிருத்தித் திட்டத்திற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அதிவேக நெடுஞ்சாலைக்கும் தற்போதைய வீதி அமைப்புக்கும் இடையிலான இணைப்பை மேம்படுத்துதல், போக்குவரத்தை இலகுபடுத்துதல் மற்றும் வாகன நெரிசலைச் சீரமைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைய, மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் 1-ஆம் பிரிவிற்காக 117.68 கிலோமீற்றர் நீளமுடைய இணைப்பு வீதி அமைப்பு முன்மொழியப்பட்டுள்ளது.
மேலும், 3-ஆம் பிரிவிற்காக 83.98 கிலோமீற்றர் நீளத்தைக் கொண்ட 12 இணைப்பு வீதிகளும், 4-ஆம் பிரிவிற்காக 81.36 கிலோமீற்றர் மொத்த நீளமுடைய 9 இணைப்பு வீதிகளும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.
இத்திட்டத்திற்கான தற்காலிக மொத்த மதிப்பீட்டுச் செலவு 104.9 பில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
2026-2030 காலப்பகுதியில் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் 1, 3 மற்றும் 4 ஆகிய பிரிவுகளுக்கான இணைப்பு வீதி அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காகப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கே அமைச்சரவை இவ்வாறு ஒப்புதல் அளித்துள்ளது.










