இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின் பொருளாளராக நிஷாந்தன் தெரிவு!

இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின் 2026ஆம் மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகக் குழு தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

கடந்த 28ஆம் திகதி இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தில் நிர்வாகக் குழு தெரிவு வெளிப்படைத் தன்மையுடன் பத்திரிகை ஸ்தாபனத்தின் மத்தியஸ்தத்துடன், இடம்பெற்றது.

அதன் பிரகாரம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான புதிய தலைவராக ரங்க பண்டாரனாயக்க தெரிவுசெய்யப்பட்டதுடன், செயலாளராக மிதுன் ஜயவர்தனவும், பொருளாளராக சுப்ரமணியம் நிசாந்தனும் தெரிவுசெய்யப்பட்டனர்.

சங்கத்தின் தேசிய அமைப்பாளராக சாந்த விஜேசூரியவும், உப தலைவராக சமந்தி உபெக்ஸா வீரசேகரவும், உப செயலாளராக விந்தியா பாதுக்ககேவும், உப பொருளாளராக தம்மிக்கா தி சில்வாவும் தெரிவுசெய்யப்பட்டனர்.

அத்துடன், சங்கத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களாக அகில ஜயவர்தன, உதித குணவர்தன, எச்.எம்.ரோகா நிலுக்சி, லக்ஸ்மன் முதுதந்தரிகே, சிரோமி ரத்நாயக்க, மில்ரோய் அந்தனி, துமிந்த சம்பத், லசந்த ருகுனுகே, தம்பிராசா நடராசா, மாலனி வீரசிங்க,சாமர விதானகே, எஸ்.ரேணுகா, அஜித் செனவிரத்ன, பி.ஏ.ஜி.சமன் பிரேமரத்ன, நிசாந்தி ரணதுங்க, ஏ.எப்.வசீம் ஹகமட் ஆகியோர் தெரிவாகினர்.

இதேவேளை, கடந்த நான்கு ஆண்டுகளாக துமிந்த சம்பத் இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவராகவும் செயலாளராக ரங்க பண்டாரனாயக்கவும், பொருளாளராக தம்பிராசா நடராசாவும் செயல்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles