இலங்கையில் ஜூலை மாதத்தின் கடந்த 12 நாட்களில் மாத்திரம் 13,293 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று, ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் 12 வரையிலான காலப்பகுதிக்குள் நாடு முழுவதும் 68, 672 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெங்கு நோயினால் இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளதாகச் சுகாதார அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.
மேல் மாகாணத்தில் மாத்திரம் 36,118 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கம்பஹா மாவட்டத்தில் 14,112 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 10,765 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 4,600 பேரும் அடங்குகின்றனர்.
மேலும், மத்திய மாகாணத்தில் 5,608 பேரும், சப்ரகமுவ மாகாணத்தில் 5,807 பேரும், ஊவா மாகாணத்தில் 1,817 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் டெங்கு நோய் வேகமாகப் பரவக்கூடிய பகுதிகளாக 175 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
