Home Blog Page 104

அதிகாரப் பகிர்வு அவசியம்: ராஜித வலியுறுத்து!

“மஹிந்த ஆட்சியின்போது அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை பாதுகாக்க போராடியவன் நான். எனவே, அதிகாரப் பகிர்வென்பது அவசியம். தமது பகுதியை தாமே ஆளக்கூடிய உரிமை தமிழ் மக்களுக்கு இருக்க வேண்டும்.”

இவ்வாறு முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன வலியுறுத்தினார்.

தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு இடித்துரைத்தார்.

“ போர் முடிவடைந்த கையோடு தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளித்தேன்.

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை பாதுகாக்க அவரது அரசாங்கத்தில் இருந்தே போராடினேன்.

13 இல் கைவைத்தால் அமைச்சரவையில் இருந்து வெளியேறுவேன் எனவும் அறிவித்திருந்தேன்.” என வும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.

13 ஆவது திருத்தச்சட்டம் என்பதைவிட, தமிழ் மக்களுக்கு தமது பகுதிகளை ஆள்வதற்குரிய அதிகாரம் வேண்டும். இந்த நோக்கில்தானே மாகாணசபை முறைமை கொண்டுவரப்பட்டது.

நல்லாட்சியின்போது தீர்வைக் காண்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தப்பட்டது. எனினும், எமக்கு போதிய பெரும்பான்மை பலம் இருக்கவில்லை.

சமஷ்டி ஒரு பக்கம் இருக்கட்டும். 13 ஆவது திருத்தச்சட்டம் அரசமைப்பில் உள்ள ஓர் அங்கம். அதனை ஏன் அமுல்படுத்த முடியாமல் உள்ளது?” – என ராஜித சேனாரத்ன கேள்வி எழுப்பினார்.

இந்த எதிரணியால் என்.பி.பி. அரசை அசைக்க முடியாது!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிறப்பாக செயல்பட்டுவருகின்றது. தற்போதைய எதிர்க்கட்சியால் இந்த அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என்று அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ நெருக்கடி நிலையில் இருந்த நாட்டையே நாம் பொறுப்பேற்றோம். இதற்கிடையில் பேரிடரும் ஏற்பட்டது. எனினும், சவாலை நாம் எதிர்கொண்டோம்.

பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

நாட்டில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டபோது நாட்டுக்கு கிடைக்கப்பெற்ற உதவிகள் கொள்ளையடிக்கப்பட்டன. ஆனால் எமது ஆட்சியில் அவ்வாறு நடக்கவில்லை. மக்களுக்குரிய உதவித் திட்டங்கள் வெளிப்படை தன்மையுடன் முன்னெடுக்கப்பட்டன.

அதேவேளை, நாட்டுக்கு தேவையானதொரு எதிர்க்கட்சி எமது நாட்டில் இல்லை என்பதும் பேரிடராகும்.

நாட்டுக்காக இணைந்து செயல்படவேண்டிய தருணங்களில்கூட பொறுப்பை மறந்து, எதிரணிகள் அரசியல் நடத்தும் நிலை காணப்படுகின்றது.

பாதாள குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்போது சில எதிரணி அரசியல் பிரமுகர்களுக்கு நடுக்கம் ஏற்படுகின்றது. ஊழல், மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்போதும் அவர்களுக்கு ஆட்டம் ஏற்படுகின்றது.

மிகவும் மோசமான முறையிலேயே பிரதான எதிரணி செயல்பட்டுவருகின்றது. இந்த எதிர்க்கட்சியால் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது. ஏனெனில் அரசாங்கம் சிறப்பாக செயல்படுகின்றது.”- என்றார்.

இலங்கைக்கு 100 மின்சார சொகுசு பேருந்துகளை வழங்குகிறது சீனா!

மின்சாரத்தால் இயங்கும் 100 நவீன சொகுசு பேருந்துகளை இலங்கைக்கு, சீனா விரைவில் வழங்கவுள்ளதாக, சீனத் தூதுவர் கி சென்ஹொங், தெரிவித்துள்ளார்.

எரிபொருள் பயன்பாட்டினால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வழங்க திட்டமிடப்பட்டுள்ள பேருந்து ஒவ்வொன்றும் சுமார் 225,000 அமெரிக்க டொலர் பெறுமதியானவை என்றும், சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று, மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே சிறி சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரகாகொட சிறி ஞானரதன தேரர் ஆகியோரைச் சந்தித்த போதே, கீ சென்ஹொங் இதனைக் கூறியுள்ளார்.

இன்றைய போட்டியில் வெல்லும் அணி எது?

இந்தியா, நியூசிலாந்து இடையேயான 2வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் , 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.

இதையடுத்து, கடந்த 21ம்திகதிஇரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.

இந்நிலையில், இந்தியா, நியூசிலாந்து இடையேயான 2வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. மராட்டிய மாநிலம் நாக்பூரில் இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

ஈ​ரான் போராட்ட உயிரிழப்பு 3,117: அரசு தொலைக்​காட்சி முதல் முறை​ தகவல்!

ஈரானில் நடை​பெற்ற போராட்​டத்​தில் இது​வரை 3,117 பேர் உயி​ரிழந்​துள்​ள​தாக அரசு தொலைக்​காட்சி முதல் முறை​யாகத் தெரி​வித்​துள்​ளது.

ஈரானில் அரசுக்கு எதிராக கடந்த 28 ஆம் திகதி தொடங்​கிய போராட்டம் கலவர​மாக மாறியது. குறிப்​பாக ஹிஜாப் அணிவது உட்பட பல கட்​டுப்​பாடு​களை எதிர்த்து ஆயிரக்கணக்​கான பெண்​கள் போராட்​டத்​தில் இறங்கினர்.

இ​தில் 5,000-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​துள்​ள​தாக அமெரிக்காவை சேர்ந்த மனித உரிமை அமைப்பு குற்றம் சாட்​டியது. இதை ஈரான் அரசு மறுத்​தது.

இந்​நிலை​யில் போராட்​டத்​தில் இது​வரை 3,117 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரான் அரசு தொலைக்​காட்சி முதல் முறை​யாக கடந்த புதன்​கிழமை தகவல் வெளி​யிட்​டது.

ஈரானில் தற்​போது போராட்​டம் கட்​டுக்​குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக வெளி​யுறவுத் துறை அமைச்​சகம் தெரிவித்துள்ளது. எனினும், ஆங்​காங்கே போ​ராட்​டங்​கள்​ தொடர்ந்து நடைபெற்றுக் கொண்​டிருக்கின்​றன.

 

ஈரானை நோக்கி நகரும் அமெரிக்க கடற்படை!

வளைகுடாவை நோக்கி மிகப்பெரிய கடற்படை சென்றுகொண்டிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று தெரிவித்தார்.

ஈரான் விவகாரத்தைக் கருத்தில்கொண்டே இந்த கப்பல் அனுப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பொருளாதாரமன்ற மாநாட்டை நிறைவுசெய்துவிட்டு, அமெரிக்காவுக்குப் புறப்பட்ட டிரம்ப்,

விமானத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில்களை வழங்கினார்.

ஈரான் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் கூறியவை வருமாறு,

”ஈரானை நோக்கி அமெரிக்காவின் மிகப்பெரிய கடற்படை சென்று கொண்டிருகிறது. அவர்களை தாக்குவதில் விருப்பமில்லை, ஆனால் அவர்களின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.

ஈரானில் போராட்டத்தில் ஈடுபட்ட பெரும்பாலும் இளைஞர்கள் உள்பட 837 பேரை வியாழக்கிழமை தூக்கிலிடத் திட்டமிட்டிருந்தனர்.

அவர்களை தூக்கிலிட்டால் இதுவரை காணாத வகையில் கடுமையான தாக்குதல் நடத்துவோம் என நான் எச்சரித்தேன். ஈரானில் அணு திட்டங்களை அழித்ததைவிட பயங்கரமாக இருக்கும் எனத் தெரிவித்தேன்.

இதன் எதிரொலியாக தண்டனையை நிறைவேற்றுவதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்னதாக ரத்து செய்தார்கள். ஈரானை நோக்கி செல்லும் கடற்படையைப் பயன்படுத்த வேண்டாம் என்றே நினைக்கிறேன். பொருத்திருந்து பார்ப்போம்.” – என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ரமேஷ் பத்திரன மீண்டும் மொட்டு கட்சியுடன் சங்கமம்!

முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரன   , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன   கட்சியுடன் மீண்டும் சங்கமித்துள்ளார்.

காலி மாவட்டத்தை தனது அரசியல் கோட்டையாக கொண்டுள்ள ரமேஷ் பத்திரன, முன்னாள் கல்வி அமைச்சர் ரிசட் பத்திரனவின் மகனாவார்.

ராஜபக்ச அணியிலேயே அவர் அரசியல் சமரில் ஈடுபட்டுவந்தார்.
எனினும், 2024 ஜனாதிபதி தேர்தலின்போது நாமலுக்கு ஆதரவளிக்காது, ரணில் விக்கிரமசிங்க பக்கம் நின்று, அவருக்கு நேசக்கம் நீட்டினார்.

இந்நிலையிலேயே மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பக்கம் சென்றுள்ளார். அவருக்கு எல்பிட்டிய தொகுதி அமைப்பாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

மரக்கறி விலைப்பட்டியல் (23.01.2026)

மரக்கறி விலைப்பட்டியல் (23.01.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (23) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

சட்டமா அதிபரை பதவி நீக்குவது குறித்து அமைச்சரவையில் ஆராயப்படவில்லை!

“சட்டமா அதிபரை பதவி நீக்குவது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்படவில்லை.” – என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார்.

சட்டமா அதிபருக்கு எதிராக நேற்று முன்தினம் போராட்டம் இடம்பெற்றது. அதேபோல அவருக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் சிலர் களமிறங்கி இருந்தனர்.

இந்நிலையிலேயே நீதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

“சட்டமா அதிபரை பாதுகாக்க வேண்டும் என ஒரு சாராரும், அவரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என மற்றுமொரு சாராரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுவருகின்றனர்.

சட்டமா அதிபரை பாதுகாக்கும் நீதி அமைச்சரும் வீடு செல்ல வேண்டும் எனவும் சிலர் கூறிவருகின்றனர்.

ஏதேனும் முறைப்பாடுகள் இருப்பின் உரிய இடங்களில் அவற்றை தாக்கல் செய்யலாம். ஏனெனில் சட்டம் என்பது அனைவருக்கும் சமம்.

சட்டமா அதிபரை நீக்குவது பற்றி அமைச்சரவையில் ஆராயப்பட வில்லை. குற்றப் பிரேரணை கொண்டுவருவது பற்றியும் கலந்துரையாடப்படவில்லை.” – என நீதி அமைச்சர் மேலும் கூறினார்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ட்ரம்புடன் விவாதிக்க விரும்பவில்லை: திருத்தந்தை பதில்!

0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் தான் விவாதத்தில் ஈடுபட விரும்பவில்லை என கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் திருத்தந்தை Pope Leo தெரிவித்தார். மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் தொடர்பான திருத்தந்தை லியோவின் கருத்துக்களை...

ஈரான் துறைமுகங்கள் முற்றுகை: ட்ரம்பின் திட்டத்துக்கு பிரிட்டன் எதிர்ப்பு!

0
ஹார்முஸ் நீரிணை பகுதியில் உள்ள ஈரானின் அனைத்து துறைமுகங்களையும் முற்றுகையிடும் அமெரிக்காவின் திட்டத்துக்கு ஆதரவளிக்கப்படமாட்டாது என பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். எரிசக்தி விலைகளைக் குறைப்பதற்காக ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட வேண்டும்...

நாகரிகம் அழியும் என்ற எனது கருத்தே ஈரானை பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து வந்தது”

0
"நாகரிகம் அழியும்" என்ற எனது கருத்துதான் ஈரானைப் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வந்தது” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். புளோரிடாவிலிருந்து மேரிலாந்தில் உள்ள ஜாயின்ட் பேஸ் ஆண்ட்ரூஸில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “நாகரிகம்...