Home Blog Page 112

வெனிசுலா, கனடா, கிரீன்லாந்தை உள்ளடக்கிய அமெரிக்க வரைபடத்தை வெளியிட்டார் ட்ரம்ப்!

வெனிசுலா, கனடா மற்றும் கிரீன்லாந்தை அமெரிக்கப் பகுதிகளாகக் காட்டும் செயற்கை நுண்ணறிவு வரைபடத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று வெளியிட்டுள்ளார்.

உலகின் அதிக எண்ணெய் வளமிக்க நாடான வெனிசுலா மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கப் படைகள், அந்நாட்டு ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவை சிறைப் பிடித்து சென்றது.

மேலும், அந்நாட்டை அமெரிக்கா நிர்வாகம் செய்யும் என்றும் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, டென்மார்க் நாட்டின் தன்னாட்சிப் பகுதியாக விளங்கும் கிரீன்லாந்தை முழுவதுமாக அமெரிக்கா ஆக்கிரமிக்க வேண்டும் என ட்ரம்ப் கூறி வருகிறார்.

அமெரிக்காவின் பாதுகாப்புக்கு கிரீன்லாந்து மிகவும் முக்கியம். நாங்கள் இந்த கிரீன்லாந்தை கைப்பற்றாவிட்டால் சீனா அல்லது ரஷ்யா கைப்பற்றிவிடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு கிரீன்லாந்து மற்றும் டென்மார்க் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் ட்ரம்ப் அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.
அமெரிக்காவின் இந்த முடிவுக்கு, டென்மார்க் மற்றும் ஏராளமான ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், வெனிசுலா, கனடா நாடுகள் மற்றும் கிரீன்லாந்தை அமெரிக்காவின் பகுதிகளாகக் குறிப்பிட்டு செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட வரைபடத்தை அதிபர் ட்ரம்ப் நேற்று சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம் – பிரதமர் ஹரிணி சுவிஸில் சந்திப்பு!

சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினத்துடன், இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பேச்சு நடத்தியுள்ளார்.

உலகப் பொருளாதாரமன்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக சுவிட்சர்லாந்து சென்றுள்ள பிரதமர், அங்கு முக்கியத்துவமிக்க சந்திப்புகளை நடத்தி வருகின்றார்.

இந்நிலையில் உலகப் பொருளாதார மன்ற மாநாட்டிற்குச் சமாந்தரமாக மேற்படி சந்திப்பை அவர் நடத்தியுள்ளார்.

” இச்சந்திப்பின்போது, ‘திட்வா’ சூறாவளியைத் தொடர்ந்து இலங்கைக்குச் சிங்கப்பூர் வழங்கிய உதவிகளுக்காக நன்றியைத் தெரிவித்ததோடு இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடினேன்.” – என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

நானுஓயாவில் மாணவிகளுக்கு ஆபாச காணொளி காண்பித்தவர் கைது!

பாடசாலை மாணவிகளுக்கு பல சந்தர்ப்பங்களில் ஆபாச காணொளிகளை காண்பித்தார் எனக் கூறப்படும் நபர் நேற்று (20) சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலை செல்லும் 11-14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு சந்தேக நபர் ஆபாச காணொளிகளை காண்பித்துள்ளார் என நானுஓயா பகுதியில் உள்ள மாணவிகள் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

56 வயது சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை (21) இன்று நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நானுஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்த 06 மாணவிகள் தடயவியல் மருத்துவ அறிக்கையைப் பெறுவதற்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நீதித்துறை மருத்துவ அதிகாரியிடம் பரிசோதனைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸ் நிலையத்தில் பெண்கள் சிறுவர்கள் பிரிவினர் மேற் கொண்டுவருகின்றனர்.

தமிழர்களின் அபிலாஷைகளை பிரதிபலிக்கும் ஆவணத்தை தயாரிக்க திட்டம்!

“ மாகாண சபைத் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. எனவே, இருக்கிற முறையிலே தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்பட வேண்டும்.” என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய கட்சிகள் நேற்று யாழில் சந்தித்து பேசிய நிலையில் குறித்த விடயத்தை எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்.

“ அரசியலமைப்பு விவகாரம் சம்பந்தமாக அரசாங்கம் எடுத்திருக்கிற நடவடிக்கைகள் எடுக்காமல் இருக்கிற நடவடிக்கைகள் சம்பந்தமாக பேசியிருக்கிறோம்.

அண்மைக் காலமாக சில ஆயத்தங்கள் செய்வதாக அரசாங்கம் கூறிவருகிறது. எவ்வளவு தூரத்திற்கு அது உண்மையானது என்பது தெரியவில்லை .

இந்த நிலையில் தமிழ் மக்களுடைய அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய ஒரு ஆவணம் ஒன்றை தயாரிக்கலாம் என நாங்கள் முடிவெடுத்திருக்கிறோம்.

இது சம்பந்தமாக எங்கள் இரண்டு கட்சிகளும் இணைந்து இந்த முயற்சியிலே ஈடுபட போகிறது. இதன் பொழுது தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் ஏனைய தரப்புகளும் எங்களுடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என விரும்புகிறோம்.” எனவும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

தமிழ் தேசத்தினுடைய நிலைப்பாடு என்ன என்பது குறித்து ஒரு ஒருமித்த நிலைப்பாட்டை வெளிப்படுத்துவது காலத்தின் தேவையாக இருக்கிறது.

மாகாண சபை தேர்தல் பிற்போடப்படுவது சம்பந்தமாக நாங்கள் ஆராய்ந்தோம். மாகாண சபைகள் இயங்காமல் இருப்பது எங்களுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.

தமிழ் தேசிய பிரச்சனைக்கு தீர்வாகவே மாகாண சபை முறைமை கொண்டுவரப்பட்டது. அது முழுமையான தீர்வு அல்ல. நாங்கள் ஏற்றுக் கொண்ட தீர்வும் அல்ல.
அது பல குறைபாடுகளோடு இயங்கினாலும் ஏழு எட்டு வருடங்களாக அது இயங்காமல் இருந்தது. அது அரசியலமைப்புக்கு உட்பட்ட விடயம்.

ஜனாதிபதி தேர்தல் அறிக்கையிலே ஒரு வருட காலத்துக்குள்ளே மாகாண சபை தேர்தல்களை நடத்தி முடிப்போம் என்று வாக்குறுதி கொடுத்திருந்தார்கள்.

அப்படி வாக்குறுதி கொடுத்து இருந்தும் கூட இப்பொழுது ஒரு வருடம் நிறைவடைந்து அதற்குப் பிறகு நான்கு மாதங்களும் ஆகியும் இன்னமும் மாகாண சபை தேர்தல் வைப்பதற்கான அறிகுறி கிடையாது. அதை இழுத்தடிப்பதற்கான முயற்சிகள் நடைபெறுகிறது .” என சுமந்திரன் குற்றஞ்சாட்டினார்.

இந்தியப் பெருங்கடல் கடலோர கூட்டணியில் இணைகிறது இலங்கை!

இந்து சமுத்திர கடலோர அரசுகளின் கூட்டணியை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்குரிய யோசனையை கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேர் அமைச்சரவையில் முன்வைத்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (20) நடைபெற்றது.

இதன்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சரவைப் பேச்சாளர் , அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியவை வருமாறு,

“ சூரை மீன்  Tuna fish மீன்பிடித் தொழிலானது இந்து சமுத்திர வலயத்தின் தேசிய பொருளாதாரம், உணவுப் பாதுகாப்பு என்பவற்றுக்கு அதிகளவில் பங்களிப்பு வழங்குகின்றது.

அதேபோல தொழில் உருவாக்கம் மற்றும் கடலோர சமூகத்தவர்களின் சமூக பொருளாதார உறுதிப்பாட்டுக்கும் உந்து சக்தியாக அமைந்துள்ளது.

எனினும், அதிகளவான மீன்களைப் பிடிப்பதால் மீன்கள் குறைவடைந்து ணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

எனவே, சூரை மீன் வளங்கள் முகாமைத்துவத்தில் ஒத்துழைப்புக்களைப் பலப்படுத்துவதற்காக  இந்து சமுத்திரத்தின் கடலோர அரசுகளின் கூட்டணியை உருவாக்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

பங்களாதேஷ், இந்தோனேசியா, ஈரான், மடகஸ்கார், மலேசியா, மாலைதீவு, மொசம்பிக், பாகிஸ்தான், சோமாலியா, தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை போன்ற நாடுகளுக்கிடையில்   புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றின் மூலம் இதனை உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

உறுப்பு நாடுகளுக்கிடையே ஒத்துழைப்புக்களை அதிகரித்தல், மீனவ சமூகத்தவர்களின் வாழ்வாதாரத்தை அதிகரித்தல், இயலளவை கட்டியெழுப்புதல் மற்றும் மீன் வளங்களைப் பேண்தகு வகையில் முகாமைத்துவம் செய்தல் போன்ற நோக்கங்களுக்காகவே குறித்த கூட்டணி உருவாக்கப்படுகின்றது.

இந்நிலையிலேயே இந்து சமுத்திரத்தின் கடலோர அரசுகளின் கூட்டணியை தாபிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.”- என்றார் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ.

நியூசிலாந்தில் நவம்பர் 07 பொதுத்தேர்தல்! பிரதமர் அறிவிப்பு!!

நியூசிலாந்தில் எதிர்வரும் நவம்பர் 07 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறும் என அந்நாட்டு பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் அறிவித்துள்ளார்.

அத்துடன், தனது தேர்தல் பிரச்சார நடவடிக்கையையும் அவர் ஆரம்பித்துள்ளார்.

பிரதமர் கிறிஸ்டோபர் தலைமையிலான கூட்டணி அரசாங்கம் 2023 இல் அரயணையேறியது.

எனினும், பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை வீதம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் மக்கள் மத்தியில் பிரதமருக்கான செல்வாக்கு சரிந்துள்ளது.

இந்நிலையிலேயே மக்கள் ஆதரவை நாடி பிடித்து பார்க்கும் வகையில் தேர்தல் அறிவிப்பு முன்கூட்டியே வெளியாகியுள்ளது.

மறுபுறத்தில் எதிரணிக்கும் பெரும்பான்மை ஆதரவு இல்லை. இதனால் நடைபெறவுள்ள தேர்தலானது கடும் சவால்மிக்கதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆஸ்திரேலியாவின் அண்டை நாடான நியூசிலாந்து அரசியலில் நடக்கும் சம்பவங்கள் ஆஸ்திரேலிய அரசியலிலும் எதிரொலிக்கும் நிலை காணப்படுகின்றது.

பதிலடி கொடுக்குமா இந்தியா? முதலாவது டி- 20 போட்டி இன்று!

இந்தியா – நியூசிலாந்து இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று (21) நடைபெறுகின்றது.

ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்த நியூசிலாந்து அணி அடுத்து 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது.

இதன்படி இந்தியா – நியூசிலாந்து இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமாகும்.

அடுத்த மாதம் -7 ஆம் திகதிதொடங்கும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக இவ்விரு அணிகளும் விளையாடும் கடைசி தொடர் இதுவாகும்.

இதனால் இது உலகக் கோப்பை போட்டிக்கு ஒத்திகையாகவே பார்க்கப்படுகிறது.

சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை முதல்முறையாக பறிகொடுத்த இந்திய அணி, அதற்கு 20 ஓவர் போட்டியில் பதிலடி கொடுக்க வரிந்து கட்டி நிற்பார்கள் என்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

மரக்கறி விலைப்பட்டியல் (21.01.2026)

மரக்கறி விலைப்பட்டியல் (21.01.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (21) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

டித்வா புயல் குறித்து சபையில் இன்று விவாதம்!

டித்வா புயல் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று (21) விவாதம் நடைபெறவுள்ளது.

இதற்குரிய சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி முன்வைக்கவுள்ளது.

டித்வா புயலை எதிர்கொள்வதற்கு முன்னாயத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என எதிரணி குற்றஞ்சாட்டியுள்ளது.

எனவே, தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காகவே விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு கோரப்பட்டது.

அது தொடர்பிலான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் மேற்படி குழு நாடாளுமன்றத்துக்கு பிரேரிக்க வேண்டும்.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடுகின்றது.

முற்பகல் 11.30 மணிமுதல் மாலை 5.30 வரை டித்வா புயல் தொடர்பான விவாதத்துக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

மவுண்ட்வேர்ணன் தமிழ் வித்தியாலய பழைய மாணவர்களின் கிரிக்கெட் திருவிழா!

0
கொட்டகலை /மவுண்ட்வேர்ணன் தமிழ் வித்தியாலயத்தின் 1999ஆம் ஆண்டு பழைய மாணவர் தொகுதியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பழைய மாணவர்களுக்கிடையிலான மாபெரும் சிநேகபூர்வ கிரிக்கெட் சுற்றுப்போட்டியும், ஒன்று கூடல் நிகழ்வும் கடந்த 2026.04.16 அன்று பாடசாலை...

சுயாதீன விசாரணைக்கு இடமளித்தே அமைச்சர் ராஜினாமா!

0
வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால ஆகியோர் இன்று (17) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் இராஜினாமா கடிதங்களை கையளித்து தமது பதவிகளில் இருந்து...

அனல் பறக்கும் நிலக்கரி கொள்வனவு: வலுசக்தி அமைச்சர் ராஜினாமா!

0
வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி மற்றும் அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபால ஆகியோர் பதவி விலகியுள்ளனர். இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது. நிலக்கரி இறக்குமதி தொடர்பில் சுயாதீன விசாரணைக்கு இடமளிக்கும்...