Home Blog Page 113

பதிலடி கொடுக்குமா இந்தியா? முதலாவது டி- 20 போட்டி இன்று!

இந்தியா – நியூசிலாந்து இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று (21) நடைபெறுகின்றது.

ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்த நியூசிலாந்து அணி அடுத்து 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது.

இதன்படி இந்தியா – நியூசிலாந்து இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமாகும்.

அடுத்த மாதம் -7 ஆம் திகதிதொடங்கும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக இவ்விரு அணிகளும் விளையாடும் கடைசி தொடர் இதுவாகும்.

இதனால் இது உலகக் கோப்பை போட்டிக்கு ஒத்திகையாகவே பார்க்கப்படுகிறது.

சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை முதல்முறையாக பறிகொடுத்த இந்திய அணி, அதற்கு 20 ஓவர் போட்டியில் பதிலடி கொடுக்க வரிந்து கட்டி நிற்பார்கள் என்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

மரக்கறி விலைப்பட்டியல் (21.01.2026)

மரக்கறி விலைப்பட்டியல் (21.01.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (21) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

டித்வா புயல் குறித்து சபையில் இன்று விவாதம்!

டித்வா புயல் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று (21) விவாதம் நடைபெறவுள்ளது.

இதற்குரிய சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி முன்வைக்கவுள்ளது.

டித்வா புயலை எதிர்கொள்வதற்கு முன்னாயத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என எதிரணி குற்றஞ்சாட்டியுள்ளது.

எனவே, தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காகவே விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு கோரப்பட்டது.

அது தொடர்பிலான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் மேற்படி குழு நாடாளுமன்றத்துக்கு பிரேரிக்க வேண்டும்.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடுகின்றது.

முற்பகல் 11.30 மணிமுதல் மாலை 5.30 வரை டித்வா புயல் தொடர்பான விவாதத்துக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

எதிரணியின் பலவீனம் நம்பிக்கையில்லாப் பிரேரணைமூலம் அம்பலம்!

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவகாரத்தில் எதிரணியின் பலவீனம் புலப்படுகின்றது என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“பிரதமர் 23 ஆம் திகதி நாடு திரும்புகின்றார். அவருக்கு எதிராக எதிரணிகள் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைக்கவுள்ளன. அதற்காக நாம் காத்திருக்கின்றோம்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

பிரேரணைக்கு கையொப்பம் திரட்டி, அதனை கையளிக்காமல் இருப்பது எதிரணியின் பலவீனத்தை வெளிப்படுத்துகின்றது.

நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான விவாதத்துக்கு எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் வழங்குவதற்கு நாம் தயார்.” – என்றார் பிமல் ரத்நாயக்க.

நம்பிக்கையில்லாப் பிரேரணை உரிய நேரத்தில் வரும்!

” நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருவதற்கான நேரம் மற்றும் பொருத்தமான சந்தர்ப்பம் என்பவற்றை எதிர்க்கட்சியே தீர்மானிக்கும், அதைவிடுத்து அரசாங்கம் இதனை தீர்மானிக்க வரக் கூடாது. அரசாங்கம் கூறும் நேரங்களில் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர நாம் தயார் இல்லை.” என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை முறையாகவும், சரியான நேரத்திலும் தேவையான கையொப்பங்களைப் பெற்றதன் பின்னர் நாம் சமர்ப்பிப்போம்.

முடிந்தால் மூன்று நாள் கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான விவாதத்தை நாளை முதலே நடத்துமாறு அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையிலான அரசாங்கத்திற்கு நாம் சவால் விடுக்கிறோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

டித்வா சூறாவளி மற்றும் அரசாங்கத்தின் செயற்திறன் இன்மை போலவே கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுப்பது தொடர்பான விவாத்த்திற்கும் எதிர்க்கட்சி தயார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறினார்.

யாழில் முதியவர் படுகொலை: இருவருக்கு மரணதண்டனை!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற படுகொலை சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக காணப்பட்ட இருவருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் மரணதண்டனை வழங்கியுள்ளது.

கொடிகாமம், மந்தைவெளிப் பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அந்தப் பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய முதியவர் ஒருவர் கோடாரி மற்றும் பொல்லுகளால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் யாழ் . மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று வழக்குத் தீர்ப்புக்காகத் திகதியிடப்பட்டிருந்தது.

தீர்ப்புக்காக வழக்கு மன்றில் நீதிபதி டி.எஸ் சூசைதாஸ் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, எதிரிகளான இருவரையும் மன்று நியாமான சந்தேகங்களுக்கு அப்பால் குற்றவாளிக்காகக் கண்டு இருவருக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டது.

“ஜனாதிபதியால் தீர்மானிக்கப்படும் திகதியில் நிர்ணயிக்கப்படும் இடத்தில் குற்றவாளியின் உயிர் பிரியும் வரை தூக்கிலிடுமாறு இந்த மன்று பரிந்துரைக்கின்றது.” – என்று நீதிபதி தண்டனைத் தீர்ப்பளித்தார்.

இசை அமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்மபாணி விருது

அஜந்தா-எல்லோரா சர்வதேச திரைப்பட விழா, ஒவ்வொரு ஆண்டும் மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில் நடத்தப்பட்டு வருகிறது. இதன் 11-ஆவது பட விழா, ஜன.28 முதல் பிப் 4-ஆம் திகதி வரை நடை​பெற உள்​ளது. 8 நாட்​கள் நடை​பெறும் இப்பட விழா​வில் சுமார் 70 திரைப் படங்​கள் திரை​யிடப்​படு​கின்​றன. இவ்​விழா​வில் இசை அமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம​பாணி விருது வழங்​கப்பட இருக்​கிறது.

இதை விழா ஏற்​பாட்​டாளர்​கள் அறிக்கை மூலம் தெரி​வித்​துள்​ளனர். இந்​திய மற்​றும் சர்​வ​தேச கலைஞர்​கள், பல்​வேறு துறை​களைச் சேர்ந்த முக்​கிய பிர​முகர்​கள், திரைப்பட ஆர்வலர்கள் முன்​னிலை​யில், ஜன. 28 அன்று மாலை​யில் நடை​பெறும் விழா​வின் தொடக்க நிகழ்ச்​சி​யில் இவ்​விருது அவருக்கு வழங்​கப்பட இருக்​கிறது.

திரைப்பட விமர்​சகர் லத்​திகா பட்​கோங்​கர் (தலை​வர்), திரைப்​பட இயக்குநர்​களான அசுதோஷ் கோவாரிக்​கர், சுனில் சுக்​தங்​கர், சந்​திர​காந்த் குல்​கர்னி ஆகியோர் அடங்கிய குழு இளை​ய​ராஜாவை, இந்த விருதுக்​குத் தேர்ந்​தெடுத்​துள்​ளது. அவருக்​கு, பத்​ம​பாணி நினை​வுச் சின்​னம், பாராட்​டுப் பத்​திரம், ரூ.2 லட்​சம் ரொக்​கப் பரிசு வழங்கப்படும். இதற்கு முன்​னர் இந்த விருதைப் பாடலாசிரியர் ஜாவேத் அக்​தர், மூத்த இயக்​குநர் ​- எழுத்தாளர் சாய் பரஞ்ச்​பே, நடிகர் ஓம் பூரி போன்​றோர்​ பெற்றுள்​ளனர்​.

மலையக மக்களுக்கான காணி உரிமையை ஜி.எஸ்.பி. வரி சலுகை நிபந்தனையாக முன்வைக்குமாறு கோரிக்கை!

மலையக மக்களுக்கான காணி உரிமையை, ஜிஎஸ்பி வரி சலுகை நிபந்தனையாக, வைக்க பிரான்ஸ் முன் வர வேண்டும் என்று அந்நாட்டு தூதுவரிடம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மனோ எம்பி தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதிநிதிக் குழு, கொழும்பில் உள்ள பிரான்ஸ் தூதர் ரெமி லாம்பெர்ட்டை சந்தித்து பேச்சு நடத்தியது.

கொழும்பில் உள்ள மனோ கணேசன் எம்பியின் இல்லத்தில் நடைபெற்ற, இந்தச் சந்திப்பில், தமுகூ பிரமுகர்கள், பேராசிரியர் விஜயசந்திரன், பாரத் அருள்சாமி, புஷ்பநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இது தொடர்பில் மனோ எம்பி தன் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், பின்வருமாறு கூறியுள்ளார்:

1. எனது இல்லத்தில், இலங்கைக்கான பிரெஞ்சு தூதர் ரெமி லாம்பர்ட் அவர்களை சந்தித்து, தித்வா பேரழிவால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களாக இருந்தபோதிலும், மலையக தமிழ் மக்களுக்கு — குறிப்பாக தோட்டத் தொழிலாளர்கள் — அரசின் இலங்கை மீள்-கட்டெழுப்பல் (Rebuilding SriLanka) வீடமைப்பு திட்டத்தின் கீழ் திட்டமிட்ட முறையில் விலக்கி வைக்க படுகிறார்கள் என்பதை தூதருக்கு உண்மை ஆதாரங்களுடன் எடுத்துரைத்தோம்.

2/ அரசின் உத்தியோகபூர்வ உறுதிமொழிகள் இருந்தபோதிலும், இடம்பெயர்ந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்பட வேண்டிய ரூ. 5 மில்லியன் நிதியுதவியும், காணி ஒதுக்கீடும், பெருந்தோட்ட சமூகத்திற்கு மறுக்கப்பட்டுவருகிறது. இது கவனயீனம் அல்ல. இது திட்டமிட்ட பாகுபாடு ஆகும்.

3/ மலையக சமூகத்துக்கே உரிய, இன்னும் தீர்க்கப்படாத அநீதிகள் குறித்து விவாதிக்க, தமிழ் முற்போக்கு கூட்டணி, மற்றும் சிவில் அமைப்புகள் சார்பாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களை சந்திக்க பலமுறை கோரிய போதும், அந்த கோரிக்கைகள் திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

4/ இந்தப் பாகுபாட்டு நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், மலையக இலங்கை மக்களுக்கு சம உரிமை, சம வளங்கள், சம மரியாதை உறுதி செய்யவும், இலங்கை அரசுடன் கூடிய தனது நல்லுறவுகளை, பிரான்ஸ் பயன் படுத்த வேண்டும் என வலியுறுத்தினோம்.

5/ மேலும், முன்னணி ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடாகிய பிரான்ஸ், மலையக தமிழ் சமூகத்தின் காணி, வீட்டு உரிமைகள், இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தால், வழங்கப்படும் ஜீஎஸ்பி+ வரி சலுகைகளுக்கான நிபந்தனைகளாக முன்வைக்க பட

வேண்டும் என வலியுறுத்த வேண்டும் என்றும் நாம் கோரிக்கை விடுத்தோம்.

தோட்டத் தொழிலாளர்களுக்கான கொடுப்பனவு குறித்து அமைச்சரவை எடுத்துள்ள முடிவு!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் 200 ரூபா ஊக்குவிப்பு கொடுப்பனவை 2026 ஜனவரி மாதம் 01 திகதியிலிருந்து அமுலாகும் வகையில் 06 மாத காலத்துக்கு ஏற்புடைய பெருந்தோட்டக் கம்பனிகள் ஊடாக செலுத்தப்படும்.

அதன் பின்னர், தொடர்புடைய அனைத்து தரப்பினரிடமும் கேட்டறிந்து மேற்குறித்த ஊக்குவிப்பு கொடுப்பனவை நேரடியாக தோட்ட தொழிலாளர்களின் தனிப்பட்ட வங்கி கணக்குகளில் வரவு வைப்பதற்கும், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவை யோசனை வருமாறு,

பெருந்தோட்ட தொழிலாளர்களின் தொழிலுக்கேற்ற நியாயமான நாளாந்த சம்பளத்தை வழங்கும் நோக்கத்துடன் பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த ஆகக்குறைந்த சம்பளத்தை ரூபா 1,550 வரை அதிகரித்தல் மற்றும் வருகைக்கான நாளாந்த ஊக்குவிப்பு கொடுப்பனவாக அவர்களுக்கு ரூபா 200 வழங்குவதற்கும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி ; 2026 வரவுசெலவு திட்டத்தில் முன்மொழிந்துள்ளார்.

அதற்கமைய, குறித்த முன்மொழிவை அமுல்படுத்துவதற்காக 5,000 மில்லியன் ரூபா நிதி 2026 ஆண்டு வரவுசெலவு திட்டத்தின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய அரசு செலுத்த உத்தேசிக்கும் ஊக்குவிப்பு கொடுப்பனவை 2026 ஜனவரி மாதம் 01 திகதியிலிருந்து அமுலாகும் வகையில் 06 மாத காலத்துக்கு ஏற்புடைய பெருந்தோட்டக் கம்பனிகள் ஊடாக செலுத்துவதற்கும்,

அதன் பின்னர், தொடர்புடைய அனைத்து தரப்பினரிடமும் கேட்டறிந்து மேற்குறித்த ஊக்குவிப்பு கொடுப்பனவை நேரடியாக தோட்ட தொழிலாளர்களின் தனிப்பட்ட வங்கி கணக்குகளில் வரவு வைப்பதற்கும், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு திட்டமிட்டுள்ளது.

அதற்கமைய, மேற்குறித்த முறைமையை பின்பற்றி குறித்த ஊக்குவிப்பு கொடுப்பனவை தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக தொழில் அமைச்சர் மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

 

நம்பிக்கையில்லாப் பிரேரணை கைவிடப்படுமா?

பிரதமர் கலாநிதி ஹரணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எப்போது முன்வைக்கப்படும் என்று ஆளுங்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

நாடாளுமன்றம் இன்று கூடியவேளையிலேயே சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, எதிரணியிடம் இந்த கேள்வியை எழுப்பினார்.

“ பிரதமருக்கு எதிராக எதிரணி நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பம் திரட்டியது.

குறித்த பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்தால் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் அது தொடர்பில் விவாதம் நடத்துவதற்கு நாம் தயார்.
ஆனால் பிரேரணை இன்னும் வரவில்லை. அது முன்வைக்கப்படுமா அல்லது இல்லையா என்பதை எதிரணி தெளிவுபடுத்த வேண்டும்.” எனவும் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.

உரிய நேரத்தில் அது ஒப்படைக்கப்படும் என எதிரணி தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

வலுசக்தி அமைச்சின் செயலாளராக அபொன்சு நியமனம்!

0
வலுசக்தி அமைச்சின் செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு,ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இன்று (17) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அவரிடம் கையளித்தார். நிதி...

தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட வேண்டும்: சாணக்கியன் அழைப்பு!

0
தமிழ் மக்கள் ஒரே குடையின் கீழ் ஒன்றுபட வேண்டும் என்ற நோக்கில் முன்னெடுக்கப்படும் முயற்சிகளை, சில அரசியல் புல்லுருவிகள் தங்களது சுயநல சுகபோகத்துக்காகத் தடுத்து வருகின்றனர் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற...

பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியின் பழைய மாணவர் சங்கப் பொதுக் கூட்டம்!

0
பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியின் பழைய மாணவர் சங்கப் பொதுக் கூட்டம் எதிர்வரும் 18ஆம் திகதி சனிக்கிழமை மு.ப.9.00 மணிக்கு கல்லூரியின் அதிபரும் பழைய மாணவர் சங்கத் தலைவருமான ஏ.கனகதேரன் தலைமையில் கல்லூரியின்...