தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட வேண்டும்: சாணக்கியன் அழைப்பு!

தமிழ் மக்கள் ஒரே குடையின் கீழ் ஒன்றுபட வேண்டும் என்ற நோக்கில் முன்னெடுக்கப்படும் முயற்சிகளை, சில அரசியல் புல்லுருவிகள் தங்களது சுயநல சுகபோகத்துக்காகத் தடுத்து வருகின்றனர் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சாடியுள்ளார்.

மட்டக்களப்பு, துறைநீலாவணையில் நடைபெற்ற ‘யுனைட்டெட்’ விளையாட்டுக் கழகத்தின் சித்திரை விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்;

“தமிழ் மக்களின் நியாயமான அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின், அனைத்துத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஓரணியில் இணைந்து ஒற்றுமையுடன் செயற்பட வேண்டியது அவசியமாகும்.

இதற்காகப் பல்வேறு சிவில் அமைப்புகள் கட்சிகளுடன் தீவிரப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றன.

இருப்பினும், சில அரசியல்வாதிகள் தங்களது தனிப்பட்ட அரசியல் இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்காக இவ்வாறான ஒற்றுமை முயற்சிகளைத் திட்டமிட்டுச் சீர்குலைக்கின்றனர்.” – என்றார்.

இதேவேளை, நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடர்பாகவும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

அத்திரைப்படத்தின் சில காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதைக் குறிப்பிட்ட அவர், அதில் சித்தரிக்கப்படுவது போலவே நிஜ வாழ்க்கையிலும் சில அரசியல்வாதிகள் மக்களிடையே பிரிவினைவாதத்தை விதைத்து, அதன் மூலம் அரசியல் இலாபம் ஈட்டி வருகின்றனர் என்றும் குற்றம் சுமத்தினார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles