Home Blog Page 114

மலையக மக்களுக்கான காணி உரிமையை ஜி.எஸ்.பி. வரி சலுகை நிபந்தனையாக முன்வைக்குமாறு கோரிக்கை!

மலையக மக்களுக்கான காணி உரிமையை, ஜிஎஸ்பி வரி சலுகை நிபந்தனையாக, வைக்க பிரான்ஸ் முன் வர வேண்டும் என்று அந்நாட்டு தூதுவரிடம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மனோ எம்பி தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதிநிதிக் குழு, கொழும்பில் உள்ள பிரான்ஸ் தூதர் ரெமி லாம்பெர்ட்டை சந்தித்து பேச்சு நடத்தியது.

கொழும்பில் உள்ள மனோ கணேசன் எம்பியின் இல்லத்தில் நடைபெற்ற, இந்தச் சந்திப்பில், தமுகூ பிரமுகர்கள், பேராசிரியர் விஜயசந்திரன், பாரத் அருள்சாமி, புஷ்பநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இது தொடர்பில் மனோ எம்பி தன் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், பின்வருமாறு கூறியுள்ளார்:

1. எனது இல்லத்தில், இலங்கைக்கான பிரெஞ்சு தூதர் ரெமி லாம்பர்ட் அவர்களை சந்தித்து, தித்வா பேரழிவால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களாக இருந்தபோதிலும், மலையக தமிழ் மக்களுக்கு — குறிப்பாக தோட்டத் தொழிலாளர்கள் — அரசின் இலங்கை மீள்-கட்டெழுப்பல் (Rebuilding SriLanka) வீடமைப்பு திட்டத்தின் கீழ் திட்டமிட்ட முறையில் விலக்கி வைக்க படுகிறார்கள் என்பதை தூதருக்கு உண்மை ஆதாரங்களுடன் எடுத்துரைத்தோம்.

2/ அரசின் உத்தியோகபூர்வ உறுதிமொழிகள் இருந்தபோதிலும், இடம்பெயர்ந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்பட வேண்டிய ரூ. 5 மில்லியன் நிதியுதவியும், காணி ஒதுக்கீடும், பெருந்தோட்ட சமூகத்திற்கு மறுக்கப்பட்டுவருகிறது. இது கவனயீனம் அல்ல. இது திட்டமிட்ட பாகுபாடு ஆகும்.

3/ மலையக சமூகத்துக்கே உரிய, இன்னும் தீர்க்கப்படாத அநீதிகள் குறித்து விவாதிக்க, தமிழ் முற்போக்கு கூட்டணி, மற்றும் சிவில் அமைப்புகள் சார்பாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களை சந்திக்க பலமுறை கோரிய போதும், அந்த கோரிக்கைகள் திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

4/ இந்தப் பாகுபாட்டு நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், மலையக இலங்கை மக்களுக்கு சம உரிமை, சம வளங்கள், சம மரியாதை உறுதி செய்யவும், இலங்கை அரசுடன் கூடிய தனது நல்லுறவுகளை, பிரான்ஸ் பயன் படுத்த வேண்டும் என வலியுறுத்தினோம்.

5/ மேலும், முன்னணி ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடாகிய பிரான்ஸ், மலையக தமிழ் சமூகத்தின் காணி, வீட்டு உரிமைகள், இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தால், வழங்கப்படும் ஜீஎஸ்பி+ வரி சலுகைகளுக்கான நிபந்தனைகளாக முன்வைக்க பட

வேண்டும் என வலியுறுத்த வேண்டும் என்றும் நாம் கோரிக்கை விடுத்தோம்.

தோட்டத் தொழிலாளர்களுக்கான கொடுப்பனவு குறித்து அமைச்சரவை எடுத்துள்ள முடிவு!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் 200 ரூபா ஊக்குவிப்பு கொடுப்பனவை 2026 ஜனவரி மாதம் 01 திகதியிலிருந்து அமுலாகும் வகையில் 06 மாத காலத்துக்கு ஏற்புடைய பெருந்தோட்டக் கம்பனிகள் ஊடாக செலுத்தப்படும்.

அதன் பின்னர், தொடர்புடைய அனைத்து தரப்பினரிடமும் கேட்டறிந்து மேற்குறித்த ஊக்குவிப்பு கொடுப்பனவை நேரடியாக தோட்ட தொழிலாளர்களின் தனிப்பட்ட வங்கி கணக்குகளில் வரவு வைப்பதற்கும், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவை யோசனை வருமாறு,

பெருந்தோட்ட தொழிலாளர்களின் தொழிலுக்கேற்ற நியாயமான நாளாந்த சம்பளத்தை வழங்கும் நோக்கத்துடன் பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த ஆகக்குறைந்த சம்பளத்தை ரூபா 1,550 வரை அதிகரித்தல் மற்றும் வருகைக்கான நாளாந்த ஊக்குவிப்பு கொடுப்பனவாக அவர்களுக்கு ரூபா 200 வழங்குவதற்கும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி ; 2026 வரவுசெலவு திட்டத்தில் முன்மொழிந்துள்ளார்.

அதற்கமைய, குறித்த முன்மொழிவை அமுல்படுத்துவதற்காக 5,000 மில்லியன் ரூபா நிதி 2026 ஆண்டு வரவுசெலவு திட்டத்தின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய அரசு செலுத்த உத்தேசிக்கும் ஊக்குவிப்பு கொடுப்பனவை 2026 ஜனவரி மாதம் 01 திகதியிலிருந்து அமுலாகும் வகையில் 06 மாத காலத்துக்கு ஏற்புடைய பெருந்தோட்டக் கம்பனிகள் ஊடாக செலுத்துவதற்கும்,

அதன் பின்னர், தொடர்புடைய அனைத்து தரப்பினரிடமும் கேட்டறிந்து மேற்குறித்த ஊக்குவிப்பு கொடுப்பனவை நேரடியாக தோட்ட தொழிலாளர்களின் தனிப்பட்ட வங்கி கணக்குகளில் வரவு வைப்பதற்கும், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு திட்டமிட்டுள்ளது.

அதற்கமைய, மேற்குறித்த முறைமையை பின்பற்றி குறித்த ஊக்குவிப்பு கொடுப்பனவை தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக தொழில் அமைச்சர் மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

 

நம்பிக்கையில்லாப் பிரேரணை கைவிடப்படுமா?

பிரதமர் கலாநிதி ஹரணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எப்போது முன்வைக்கப்படும் என்று ஆளுங்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

நாடாளுமன்றம் இன்று கூடியவேளையிலேயே சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, எதிரணியிடம் இந்த கேள்வியை எழுப்பினார்.

“ பிரதமருக்கு எதிராக எதிரணி நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பம் திரட்டியது.

குறித்த பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்தால் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் அது தொடர்பில் விவாதம் நடத்துவதற்கு நாம் தயார்.
ஆனால் பிரேரணை இன்னும் வரவில்லை. அது முன்வைக்கப்படுமா அல்லது இல்லையா என்பதை எதிரணி தெளிவுபடுத்த வேண்டும்.” எனவும் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.

உரிய நேரத்தில் அது ஒப்படைக்கப்படும் என எதிரணி தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

இரு தசாப்தங்களுக்கு பிறகு ஈராக்கை விட்டு வெளியேறியது அமெரிக்க படை!

ஈராக் ராணுவ தளங்களில் இருந்து சுமார் 23 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறியது.

கடந்த 2003ல் சதாம் உசேன் ஆட்சியை கவிழ்க்க ஈராக்கை அமெரிக்கா படையெடுத்தது.

அந்த சமயத்தில் ஈராக்கின் அல்-அன்பர் மாகாணத்தில் உள்ள அயின் அல் அசாத் விமானப்படைத்தளத்தில் அமெரிக்கப் படைகள் தகளமிறங்கின.

இந்த விமானத் தளத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கப் படைகள் இருந்தன.

2023 ஆம் ஆண்டில் ஈராக் அரசாங்கம் அழைப்பு விடுத்ததிலிருந்து அயின் அல் அசாத் விமானப்படைத்தளத்தில் இருந்த படைகளை அமெரிக்க இராணுவம் குறைத்து வந்தது.

இந்நிலையில், ஈராக்கின் அல்-அன்பர் மாகாணத்தில் உள்ள அயின் அல் அசாத் விமானப்படைத்தளத்தில் இருந்த அமெரிக்கப் படைகள் வெளியேறியதாக ஈராக் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இனிமேல் அமெரிக்கா உடனான உறவு, நேரடி ராணுவ தலையீடாக இல்லாமல், இருதரப்பு பாதுகாப்பு உறவாக மட்டுமே இருக்கும் என ஈராக் அறிவித்துள்ளது.

போரை முடித்ததால்தான் ஜனாதிபதியால் யாழில் சுதந்திரமாக நடக்க முடிகிறதாம்: மொட்டு கட்சி

“யாழில் தமிழ் மக்களை தூண்டிவிடும் விதத்திலேயே ஜனாதிபதி கருத்து வெளியிட்டுள்ளார்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

“ சிங்கள மக்கள் விகாரைக்கு வருவது வழிபடுவதற்கு அல்ல – வைராக்கியத்தை விதைக்கவே” என்ற கருத்துமூலம் சிங்கள மக்கள் யாழ்ப்பாணம் வந்தால் கவனித்துக் கொள்ளுங்கள் என்ற அர்த்தத்தையே ஜனாதிபதி வழங்குவதற்கு முற்பட்டுள்ளார்.

சிங்கள மக்களை தூண்டுவதற்கு அல்ல, தமிழ் மக்களை தூண்டுவதற்காகவே தவறான கருத்தை விதைத்துள்ளார்.

ஓமந்தைக்கு அப்பால் செல்வதற்குரிய சுதந்திரம் மக்களுக்கு முன்பு இருக்கவில்லை. ஆனால் 30 வருடகால போரை முடிவுக்கு கொண்டுவந்ததால்தான் இன்று ஜனாதிபதியால் சுதந்திரமாக நடமாட முடிகின்றது.” – எனவும் சாகர காரியவசம் குறிப்பிட்டார்.

கிரீன்லாந்து விவகாரம்: ஐரோப்பிய நாடுகள்மீது வரிப்போர் தொடுக்கும் ட்ரம்ப்!

கிரீன்லாந்தை அமெரிக்காவுக்கு வழங்க எதிர்ப்பு தெரிவிக்கும் ஐரோப்பிய நாடுகள்மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆர்டிக் பகுதியில் உள்ள உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்து, டென்மார்க் நாட்டின் தன்னாட்சி பிராந்தியமாக உள்ளது.

தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக கிரீன்லாந்து அமெரிக்காவுடன் இணைக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.

இதுதொடர்பாக டென் மார்க்குடன் பேச்சு நடத்தப்படும் என்றும் உடன்பாடு ஏற்படாவிட்டால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையே கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த டென்மார்க், பிரிட்டன், பிரான்ஸ், பின்லாந்து ஜெர்மனி உள்ளிட்ட 8 ஐரோப்பிய நாடுகள் மீது கூடுதலாக 10 சதவீத வரி விதித்து ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டார்.

இந்நிலையில், கிரீன்லாந்தை ஒப்படைக்காவிட்டால், ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்கா புதிய வரிகளை விதிக்கும் என்றும், இதில் உறுதியாக உள்ளதாகவும் டிரம்ப் மீண்டும் மிரட்டல் வைத்துள்ளார்.

வடக்கில் ஒன்றையும், தெற்கில் வேறொன்றையும் கதைக்க கூடாது!

“ வடக்கில் ஒன்றையும், தெற்கில் வேறொன்றையும் பேசி நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என நினைப்பது தவறு. நாட்டில் இன்று இனவதாம் இல்லை.”

இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தேசிய அமைப்பாளர் , நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்தார்.

சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அவரை வரவேற்கும் நிகழ்வு நேற்று பதுளையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே சாமர எம்.பி. மேலும் கூறியவை வருமாறு,

” ஸ்ரீமாபோதிக்கு அப்பால் சென்று வழிபடவேண்டாம் என ஜனாதிபதி கூறுகின்றார். வடக்கில் ஒன்றையும், தெற்கில் வேறொன்றையும் கூறி நாட்டை மாற்றலாம் என ஜனாதிபதி நினைக்கின்றார் போலும்.

நாட்டில் இன்று இனவாதம் என்பது வடக்கிலும் இல்லை, தெற்கிலும் இல்லை. எனவே, இரு வேறு பகுதிகளில் இருவேறு விதத்தில் கதைக்க வேண்டியதில்லை.

ரயில் வீதியில் விழுந்த மண்ணை அகற்றிவிட்டுகூட நிகழ்வு நடத்தும் நிலைதான் தற்போதைய ஆட்சியின்கீழ் காணப்படுகின்றது.
.” – என்றார்

சுவிஸில் உயர்மட்ட சந்திப்புகளை நடத்த உள்ள பிரதமர்!

சுவிஸில் உயர்மட்ட சந்திப்புகளை நடத்த உள்ள பிரதமர்!

உலக பொருளாதார மன்றத்தின் 56வது கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று சுவிட்சர்லாந்தை சென்றடைந்துள்ளார்.

அவருடன் நிதி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னான்டோவும், சூரிச்சை சென்றடைந்துள்ளார்.

சூரிச் விமான நிலையத்தை அடைந்த அவர்களை, ஜெனீவாவில் உள்ள ஐ.நா பணியகத்துக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ஹிமாலி அருணதிலக வரவேற்றார்.

இந்தப் பயணத்தின் போது, இலங்கை ​​பிரதமர் வெளிநாடுகளின் தலைவர்கள், உலகளாவிய நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் மன்றத்தின் பிரமுகர்களுடன் உயர்மட்ட இருதரப்பு சந்திப்புகளை நடத்த உள்ளார்.

 

ஆப்பிரிக்கா கோப்பையை வென்றது செனகல் அணி!

ஆப்பிரிக்கா கோப்பை கால்​பந்து தொடரின் இறுதி போட்​டி​யில் நேற்று மொராக்கோ – செனகல் அணி​கள் பலப்​பரீட்சை நடத்​தின.

இந்த ஆட்​டம் மொராக்​கோ​வின் ரபாத் நகரில் உள்ள பிரின்ஸ் மவுலே அப்​தெல்லா மைதானத்​தில் நடை​பெற்​றது. போட்​டியை காண்​ப​தற்​காக மைதானத்​தில் சுமார் 70 ஆயிரம் ரசிகர்​கள் திரண்டிருந்தனர்.

நிர்​ண​யிக்​கப்​பட்ட 90 நிமிடங்​களின் முடி​வில் இரு அணிகள் தரப்​பில் கோல் ஏதும் அடிக்​கப்​பட​வில்​லை. இதைத் தொடர்ந்து காயங்​களுக்கு இழப்​பீ​டாக 8 நிமிடங்கள் வழங்​கப்​பட்​டது.

இதன் 2-வது நிமிடத்​தில் செனகல் அணி கோல் அடித்​தது. ஆனால் அது ஃபவுல் என அறிவிக்​கப்​பட்​டது. தொடர்ந்து 6-வது நிமிடத்​தில் கார்னரில் இருந்து அடிக்​கப்​பட்ட பந்தை பாக்ஸ் பகுதிக்குள் வைத்து தடுக்க முயன்ற போது செனகல் வீரர் எல் ஹாட்ஜி மாலிக் டியூஃப், மொராக்கோ வீர் பிரஹிம் தியாஸை தள்​ளி​விட்​டார்.

இதனால் மொராக்கோ அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்​கப்​பட்​டது. இதற்கு எதிர்ப்பு தெரி​வித்து செனகல் அணி வீரர்​கள் பயிற்​சி​யாளர் பபே தியாவ்​வுடன் மைதானத்​தில் இருந்து வெளி​யேறினர். முன்​ன​தாக இரு அணி​களின் பதிலி வீரர்​களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

மொராக்கோ அணி​யின் பயிற்​சி​யாள​ரும் வாக்​கு​வாதத்தில் ஈடு​பட்​டார். அப்​போது மைதானத்​தின் கேலரிகளில் இருந்த செனகல் ரசிகர்​களின் ஒரு பகுதியினர் களத்​துக்​குள் நுழைய முயன்​றனர். அப்​போது ரசிகர் ஒரு​வர் நாற்​காலியை தூக்கி எறிந்​தார்.

இதையடுத்து காவல்​துறை​யினர் ரசிகர்​களை கட்​டுப்​படுத்​தினர். இதனால் மைதானத்​தில் பரபரப்பு ஏற்​பட்​டது. சுமார் 14 நிமிடங்​களுக்கு பிறகு செனகல் அணி வீரர்​கள் மீண்​டும் களத்​துக்​குள் வந்​தனர். அப்​போது பெனால்டி வாய்ப்​பில் மொராக்கோ வீரர் பிரஹிம் தியாஸ் அடித்த பந்து செனகல் கோல்​கீப்​பர் எட்​வார்ட் மெண்​டி​யின் கைகளுக்​குள் நேராக தஞ்​சம் அடைந்​தது.

இதனால் செனகல் அணி கோல் வாங்​கு​வ​தில் இருந்து தப்​பித்​தது. நிர்​ண​யிக்​கப்​பட்ட ஆட்ட நேரத்​தின் முடி​வில் இரு அணி​கள் தரப்​பில் கோல் ஏதும் அடிக்​கப்​ப​டாத​தால் வெற்றியை தீர்​மானிக்க கூடு​தல் நேரம் வழங்​கப்​பட்​டது. இதில் 94-வது நிமிடத்​தில் செனகல் அணி​யின் வீரர் பேப்குயே கோல் அடித்து அசத்​தி​னார்.

மொராக்கோ அணி கடைசி வரை போராடிய போதி​லும் பதில் கோல் அடிக்க முடி​யாமல் போனது. முடி​வில் செனகல் அணி 1-0 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்று சாம்​பியன் பட்​டம் வென்றது. செனகல் அணி ஆப்​பிரிக்கா கோப்​பையை வெல்​வது இது 2-வது முறை​யாகும். அந்​த அணி கடந்​த 2021-ம்​ ஆண்​டும்​ பட்​டம்​ வென்​றிருந்​தது.

ட்ரம்பின் அமைதி வாரியம்: பின்னணி என்ன?

இஸ்ரேல் – ஹாமஸ் இடையிலான போரில் சிக்கிச் சிதிலமடைந்த காசா பகுதியை மீளுருவாக்கம் செய்யும் அமைதி வாரியத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிறுவியிருக்கிறார்.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நீடித்து வரும் போரால் பாலஸ்தீனத்தின் காசா பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே, அந்தப் பகுதியை ராணுவமற்ற மண்டலமாக மாற்றவும், மீண்டும் அந்தப் பகுதியைக் கட்டியெழுப்பவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டிருக்கிறது.

அதற்காக உயர்மட்ட ‘அமைதி வாரியம் – Board Of Peace’ என்ற ஒரு அமைப்பையும் உருவாக்கியிருக்கிறது. இந்த அமைதி வாரியம் மூன்று கட்டமைப்புகளாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

1. நிதி திரட்டுதல், முதலீடு, பிராந்திய உறவுகளைக் கவனிக்கும் பொருப்பை ஜனாதிபதிர் ட்ரம்ப் தலைமையிலான குழு கவனிக்கும்.

இந்த முதல் அமைப்பில் அமெரிக்காவின் செல்வாக்குமிக்க நபர்களும், உலகளாவிய நிதி நிபுணர்களும் இடம்பெற்றுள்ளனர்.

இந்த அமைப்பின் முக்கிய உறுப்பினர்களாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, ஜாரெட் குஷ்னர், ஸ்டீவ் விட்கா ப் ஆகியோர் பொறுப்பு வகிக்கின்றனர்.

மேலும், இந்த அமைப்பில் சர்வதேச பிரதிநிதியாக முன்னாள் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர், உலக வங்கித் தலைவர் அஜய் பங்கா ஆகியோர் அறிவிக்கப்பட்டிருக்கின்றனர்.

மேலும், காசாவின் பொதுச் சேவைகளைக் கண்காணிக்கப் போகும் தேசியக் குழுவிற்குப் பாலஸ்தீனிய அதிகார சபையின் முன்னாள் துணை அமைச்சர் அலி ஷாத் தலைமை தாங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2. தொழிற்நுட்ப வல்லுநர் குழு காசாவின் அன்றாட சிவில் நிர்வாகத்தைக் கவனிக்கும். இந்தப் பொறுப்புகளில் பெரும்பாலானவர்கள் பாலஸ்தீனத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

3. ஆலோசனை மற்றும் வழிகாட்டும் அமைப்பாக ‘காசா நிர்வாக வாரியம்’ செயல்படும் எனத் திட்டமிடப்பட்டு, அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அமைப்பு மனிதாபிமான உதவிகள் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த அமைதி வாரியத்தில் இணைந்து கொள்வதற்கு உலகின் பல்வேறு நாடுகளுக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

கனடா, ஆஸ்திரேலியா, இந்தியா, ரஷ்யா, பிரான்ஸ் உட்பட பல நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. எனினும், அது ஏற்கப்படுமா என்பது பற்றி இன்னும் எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை.

 

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறந்தது ஈரான்!

0
உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையான ஹார்முஸ் நீரிணையை மீண்டும் முழுமையாகத் திறப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான இருவாரகால போர் நிறுத்தம் அமுலில் உள்ள காலப்பகுதியில் இவ்வாறு திறந்திருக்கும் என...

‘கிளீன் ஸ்ரீலங்கா’ செயல்திட்டங்கள் குறித்து மீளாய்வு!

0
'கிளீன் ஸ்ரீலங்கா' (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான செயல்திட்டங்கள் மற்றும் கடந்த ஆண்டின் முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17) முற்பகல்...

நுவரெலியாவில் குவியும் சுற்றுலா பயணிகள்!

0
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நுவரெலியா நோக்கி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை பாரியளவில் அதிகரித்துள்ளது. இதனால் டெவோன் (Devon) மற்றும் சென்கிளையார் (St. Clair) நீர்வீழ்ச்சிக் காட்சித் தளங்களில் சுற்றுலாப் பயணிகளின்...