மரக்கறி விலைப்பட்டியல் (20..01.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (20) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…
மரக்கறி விலைப்பட்டியல் (20..01.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (20) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…
பாஜக தேசியத் தலைவராக நிதின் நபின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி முன்னிலையில் அவர் இன்று பதவியேற்க உள்ளார்.
பாஜகவின் 11-வது தேசியத் தலைவராக ஜே.பி.நட்டா கடந்த 2020 ஜனவரி 20-ம் தேதி பொறுப்பேற்றார்.
பதவிக் காலம் முடிந்த போதிலும், சில காரணங்களால் அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்த சூழலில், பிஹார் மாநில அமைச்சராக இருந்த நிதின் நபின் (45), கட்சியின் செயல் தலைவராக கடந்த மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
இதற்கிடையே, கடந்த சில மாதங்களாக பாஜகவில் உள்கட்சித் தேர்தல் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக 12-வது தலைவரை தேர்ந்தெடுப் பதற்கான தேர்தல் ஜனவரி 20-ம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கான வேட்புமனு நேற்று பெறப்பட்டது. இப்போதைய பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் நிதின் நபின் சார்பில் வேட்புமனுவை தேர்தல் அதிகாரி டாக்டர் கே.லட்சுமணிடம் வழங்கினர். அப்போது மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிதின் கட்கரி, தர்மேந்திர பிரதான், புபேந்திர யாதவ், கிரண் ரிஜிஜு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பின்னர், அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு உள்ளிட்ட மாநிலத் தலைவர்கள் நிதின் நபின் சார்பில் மேலும் ஒரு தொகுப்பு மனுக்களை தாக்கல் செய்தனர். பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் யோகி ஆதித்யநாத், புஷ்கர் சிங் தாமி, நயாப் சிங் சைனி, பிரமோத் சாவந்த் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதுபோல, பிஹார், ஆந்திரா, மகாராஷ்டிரா, அசாம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட இதர மாநில பாஜக தலைவர்களும் நிதின் நபின் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
மனு தாக்கல் முடிந்ததை அடுத்து, கட்சியின் தேசிய தேர்தல் அதிகாரி லட்சுமண் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாடு முழுவதும் உள்ள 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் பாஜக தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்தல் நடந்து வருகிறது. இதில் 50 சதவீத மாநில தேர்தல் முடிந்ததும் தேசியத் தலைவர் தேர்தலை நடத்தலாம் என்பது கட்சி விதி. அதன்படி, 30 மாநில தலைவர் தேர்தல் முடிந்த நிலையில், தேசிய தலைவர் தேர்தலுக்கான நடைமுறைகள் தொடங்கின.
கடந்த ஜனவரி 16-ம் தேதி இதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது. 19-ம் தேதி (நேற்று) மதியம் 2 மணி முதல் 4 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டன. இதில், இப்போதைய செயல் தலைவர் நிதின் நபின் சார்பில் மொத்தம் 37 மனுக்கள் பெறப்பட்டன. அவை அனைத்தும் உரிய படிவத்தில் முறையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ள, செல்லத்தக்க மனுக்கள் என்று பரிசீலனையில் கண்டறியப்பட்டது.
வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில், பாஜக அமைப்புத் தேர்தலில் கட்சியின் தேசியத் தலைவர் பதவிக்கு நிதின் நபின் பெயர் மட்டுமே முன்மொழியப் பட்டுள்ளது. எனவே, அவர் போட்டியின்றி தேர்வு செய்யப் படுகிறார். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
பாஜகவைப் போலவே நிதினுக்கும் 45 வயது. கட்சியின் தேசியத் தலைவர் பதவியை இளம் வயதில் எட்டிப் பிடித்த முதல் தலைவர் என்ற பெருமையும் இவருக்கு கிடைத்துள்ளது. டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் இன்று காலை 11.30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கட்சித் தலைவராக நிதின் நபின் பதவியேற்றுக் கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
“மாகாண சபைத் தேர்தலை இனியும் இந்த அரசால் காலம் தாழ்த்த முடியாது. இந்த அரசு அரசமைப்புக்கு ஏற்பச் செயற்படுவது உண்மையெனில் இந்த வருடம் மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும். .”
– இவ்வாறு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கிடையிலான பேச்சுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவை சரியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எனவே, வெளிநபர்களின் தலையீடுகள் தவிர்க்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அத்தியாவசியமானதாகும்.
எவ்வாறிருப்பினும் பொறுத்தமான நேரத்தில் இந்த இரு கட்சிகளும் உத்தியோகபூர்வமாக இணைந்து பயணிக்கும்.
மாகாண சபைத் தேர்தலை இனியும் இந்த அரசால் காலம் தாழ்த்த முடியாது.
இந்த அரசு அரசமைப்புக்கு ஏற்ப செயற்படுவது உண்மையெனில் இந்த வருடம் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும். அவ்வாறில்லை எனில் அது அரசின் தொடர்ச்சியான பயணத்துக்குச் சிறந்த பாதையல்ல.
உண்மையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னரே மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். எதற்காக தேர்தல் நடத்தப்படவில்லை என்பது தெரியாது. அந்தச் சந்தர்ப்பத்தில் தேர்தலுக்கான நிதி காணப்பட்டது.
தாம் ஜனநாயக ஆட்சியைக் கொண்டு செல்வதாக இந்த அரசு கூறிக் கொண்டிருக்கின்றது. அவ்வாறெனில் ஏன் தேர்தல் நடத்தப்படவில்லை என்பதை அரசே கூற வேண்டும்.
அரசமைப்புக்கமைய செயற்படுவதாகக் கூறிக் கொண்டிருக்கும் இந்த அரசு கணக்காய்வாளர் நாயகம் பதவிக்குப் பொறுத்தமான ஒருவரைத் பரிந்துரைக்கத் தவறியிருக்கின்றது. ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்படும் பெயர் அரசமைப்பு பேரவையால் அங்கீகரிக்கப்பட வேண்டும். ஆனால் அவரால் பரிந்துரைக்கப்பட்ட 4 பெயர்கள் அரசமைப்பு பேரவையால் நிராகரிக்கப்பட்டுள்ளன.
கணக்காய்வுத் திணைக்களத்துக்கு வெளியிலிருந்து ஒருவரது பெயர் பரிந்துரைக்கப்படுகின்றது என்றால், அதற்குள் அடுத்தடுத்த நிலைகளில் பொறுத்தமானவர் இல்லை என்பதே அர்த்தமாகும். இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” – என்றார்.
“ கல்வி மறுசீரமைப்பு அவசியம். அது எமது கலாசாரம் மற்றும் எமது நாட்டுக்கே உரிய வகையில் இடம்பெற வேண்டும். சர்வமதத் தலைவர்கள், துறைசார் நிபுணர்களுடன் இது சம்பந்தமாக கலந்துரையாட வேண்டும்.
பெற்றோர்களிடம் இருந்தும் கல்வி மறுசீரமைப்பு பற்றி ஆலோசனை பெறவேண்டும். எனவே, கல்வி மறுசீரமைப்பை ஒரே நாளில் செய்ய முடியாது. முறையாக அதற்குரிய பணி இடம்பெற வேண்டும் என்பதே எனது கோரிக்கை.” –
இவ்வாறு முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.
கலஹா, தெல்தோட்டை கல்லந்தென்ன கீழ் பிரிவிலுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் வண்ணக் கல்லொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பெறுமதியான இரத்தினக்கல்லாக இருக்கலாம் என பிரதேச மக்கள் நம்புகின்றனர்.
நாட்டில் அண்மையில் ஏற்பட்ட டித்வா புயல் தாக்கத்தால் கோவிலுக்கு அருகாமையில் மண்சரிவு ஏற்பட்டது.
அப்பகுதியில் பல வண்ணங்களில் கல்லொன்று மின்னுவதை நேற்று அவதானித்த பிரதேச வாசி ஒருவர், வழங்கிய தகவலுக்கமையவே , பிரதேச மக்களால் இரத்தினக் கல் என நம்மப்படும் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.
மண்சரிவில் மேற்படி கோவில் உட்பட பல வீடுகள் சேதமடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்படி கோவிலை புனர் நிர்மானம் செய்வதற்கு தோட்ட மக்கள் 2010 ஆம் ஆண்டு முதல் நிதி சேகரித்து வந்தனர். பல சிரமங்களுக்கு மத்தியில் எதிர்வரும் மார்ச் மாதத்தில் கும்பாபிஷேகம் செய்வதற்கு திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில் இயற்கை அனர்த்தில் குறித்த கோவில் சேதமடைந்ததால் தோட்ட மக்கள் கவலை அடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கலஹா பொலிஸார் குறித்த பிரதேசத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த கல் இரத்தினக்கல்லா அல்லது தொல்லியல் பெறுமதிமிக்கதா என்பது பற்றி உரிய தரப்பினர் ஆராய்ந்த பின்னரே அது பற்றி உறுதியாக தெரியவரும்.
அதிகாரிகளின் ஆய்வு அறிக்கை வெளிவந்த பின்னரே விடயம் தெரியவரும். மேற்படி சபையின் அதிகாரிகள் குறித்த பகுதிக்கு சென்றுள்ளனர் என தெரியவருகின்றது.உரிய மதிப்பாய்வு அறிக்கைவரும்வரை அப்பகுதிக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
கம்பளை, கலஹா நிருபர்கள்
“ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் சொந்த ஊரில் வெற்றிகரமாக கூட்டத்தை நடத்தி எமது அரசியல் பலத்தை வெளிப்படுத்தியுள்ளோம்.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று (19) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் 2026 ஆம் ஆண்டுக்குரிய முதலாவது கூட்டத்தை ஜனாதிபதியின் சொந்த ஊரிலேயே (தம்புத்தேகம) நடத்தி காட்டினோம்.
இக்கூட்டத்தை நடத்துவதற்கு பல தடைகள் ஏற்படுத்தப்பட்டன. கொடி நடுவதற்குகூட இடமளிக்கப்படவில்லை. ஆனால் மக்கள் அணிதிரண்டுவந்து சிறந்த பதிலை வழங்கினர்.
அதேவேளை, அநுரகுமார திஸாநாயக்கதான் ஜனாதிபதி என்பதை நாம் ஏற்கின்றோம்.
அவருக்கு பின்னால் ஜே.வி.பியினர் மற்றும் அக்கட்சியினருடன் தொடர்புடையவர்களுக்கு இந்நாட்டில் ஜனாதிபதி பதவிக்கு வரமுடியாது.
பொய்களை நம்பி ஏமாந்தது போதும் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். எனவே, நாட்டை நேசிக்கக்கூடிய ஒருவரை மக்கள் தெரிவுசெய்வார்கள்.” -எனவும் சாகர காரியவசம் குறிப்பிட்டார்.
முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் முதலீடு செய்வதற்கு ஆர்வமாக உள்ள நிலையில், அதற்கான அடிப்படை உட்கட்டுமானங்களை மேம்படுத்தி, முதலீட்டுக்கு ஏற்ற சூழலை உருவாக்க வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
நிதி அமைச்சின் கீழான தேசிய திட்டமிடல் திணைக்களம், தேசிய வரவு – செலவுத் திட்டத் திணைக்களம், வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் ஆகியவற்றின் பணிப்பாளர் நாயகங்கள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழான உலக வங்கியின் திட்டங்களுக்கான பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினருக்கும், வடக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான அதிகாரிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல், ஆளுநர் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (19.01.2026) மாலை நடைபெற்றது.
நிதி அமைச்சின் உயர் அதிகாரிகள் குழுவினர் வடக்கு மாகாணத்துக்கு உத்தியோகபூர்வமாக மேற்கொண்ட முதலாவது விஜயம் இதுவாகும்.
இக்கலந்துரையாடலில் உரையாற்றிய ஆளுநர் தெரிவித்ததாவது:
போர் முடிவடைந்து 16 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், வடக்கு மாகாணம் மீளக்கட்டியெழுப்பப்படுவதில் பல சவால்களை எதிர்கொண்டுள்ளது. பிரதான வீதிகள் புனரமைக்கப்பட்டிருந்தாலும், கிராமப்புற வீதிகள் மற்றும் தீவகப் பிரதேசங்களுக்கான போக்குவரத்து வசதிகள் மிகவும் பின்தங்கியுள்ளன. கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான நீண்ட பயண நேரம் சுற்றுலாவிகளுக்குச் சவாலாக உள்ளது.
எனினும், இந்தியாவுடனான நேரடி வான் மற்றும் கடல்வழித் தொடர்புகள் சுற்றுலாவிகளின் வருகையை அதிகரிக்கச் செய்துள்ளது. எனவே, எதிர்காலத்தில் அதிகரிக்கவுள்ள சுற்றுலாவிகளைக் கருத்தில் கொண்டும், எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள முதலீட்டாளர் மாநாட்டைக் கருத்தில் கொண்டும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும்.
எமது மாகாணத்தின் மூலப்பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டு, மீண்டும் முடிவுப் பொருட்களாக இங்கேயே விற்பனைக்கு வரும் நிலை மாற்றப்பட வேண்டும். இங்கேயே அவற்றைப் பெறுமதிசேர் பொருட்களாக மாற்றுவதற்குரிய பொறிமுறைகள் அவசியம்.
உலக வங்கியின் ‘புத்துயிர்’ (REVIVE) திட்டத்தின் முதல் கட்டத்தில் யாழ். மாவட்டம் மட்டுமே உள்வாங்கப்பட்டுள்ளது. ஆனால், வடக்கின் ஏனைய நான்கு மாவட்டங்களும் அபிவிருத்தியில் பின்தங்கியுள்ளன. எனவே, ஐந்து மாவட்டங்களையும் உள்ளடக்கி எமது பொருளாதார மேம்பாட்டை உறுதிப்படுத்த நாம் விரும்புகின்றோம், என ஆளுநர் வலியுறுத்தினார்.
இதன்போது மாவட்டச் செயலாளர்களால் பின்வரும் முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன:
முல்லைத்தீவு: கொக்கிளாய் பாலம் அமைத்தல்.
கிளிநொச்சி: நீர் விநியோகத் திட்டம் மற்றும் பூநகரி கௌதாரிமுனைச் சுற்றுலா வீதிப் புனரமைப்பு.
மன்னார்: வீதிப் புனரமைப்பு மற்றும் மன்னார் தீவின் வடிகாலமைப்பு மேம்பாடு.
வவுனியா: வடக்கின் நுழைவாயிலான வவுனியாவின் வன்னேரிக்குளம் சுற்றுலாத் திட்டத்தை உள்வாங்குதல்.
யாழ்ப்பாணம்: தெரிவு செய்யப்பட்ட திட்டங்களை விரைவுபடுத்தல்.
இதற்குப் பதிலளித்த நிதி அமைச்சின் உயர் அதிகாரிகள், ‘வடக்கு மாகாணத்திலிருந்து நியாயப்பாடுகளுடன் கூடிய சிறந்த திட்டங்கள் முன்வைக்கப்படும் பட்சத்தில், முன்னுரிமை அடிப்படையில் உலக வங்கித் திட்டங்களை மாற்றியமைக்க முடியும். எனினும், இவை கடன் நிதிகள் என்பதால், முதலீட்டுக்குரிய நற்பேறுகள் கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும். தேவைப்பாடுகளை சரியாக அடையாளம் கண்டு மிகச் சிறந்த திட்டங்களை முன்வைக்கும்போது அரசாங்கத்தால் கூட நிதி வழங்க முடியும், எனக் குறிப்பிட்டனர்.
மேலும், கிராமிய மற்றும் நகர்ப்புறங்களை இணைக்கும் ‘ரூபன்’ (RURBAN) திட்டம் மற்றும் விவசாயத் துறைசார் திட்டமிடல்கள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. கடந்த கால வெளிநாட்டு நிதித் திட்டங்களின் அனுபவங்களைக் கொண்டு, இனிவரும் திட்டங்கள் மாகாணத் தேவைகளைச் சரியாக அடையாளப்படுத்தி முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
இக்கலந்துரையாடலில் நிதி அமைச்சின் பணிப்பாளர் நாயகங்களான இந்திக பிரேமரத்ன (தேசிய திட்டமிடல்), ஜூட் நிலுக்ஷ (தேசிய வரவு-செலவு), சமந்த பண்டார (வெளிநாட்டு வளங்கள்) மற்றும் வடக்கு மாகாணப் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், ஆளுநரின் ஆலோசனைக் குழுவின் தலைவர் கலாநிதி அகிலன் கதிர்காமர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
“ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீள கட்டியெழுப்பும் பயணத்தின்போது கடுமையான முடிவுகளை எடுக்க நேரிடும்.” – என்று தேசிய அமைப்பாளர் , நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அவரை வரவேற்கும் நிகழ்வு நேற்று பதுளையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே சாமர எம்.பி. மேலும் கூறியவை வருமாறு,
“ தேசிய அமைப்பாளர் பதவியென்பது சவாலான விடயமாகும். இப்பதவியை வகித்துக்கொண்டு முன்னோக்கி செல்கையில் கட்சிக்காக வேலை செய்யக்கூடியவர்களுடன்தான் இணைந்து செல்ல முடியும்.
புகழுக்காக பதவிகளை வைத்திருப்பவர்களுடன் பயணிக்க முடியாது. எனவே, கடுமையான சில முடிவுகளை எடுக்க நேரிடும்.
அவ்வாறு முடிவுகளை எடுக்கும்போது தவறாக நினைக்க வேண்டாம் என கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.
அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் கனவுடன் எவரும் செயல்பட முடியாது. சுதந்திரக்கட்சியுடன் இணைந்து செயல்படுமாறு கட்சியைவிட்டு சென்றவர்களையும் அழைக்கின்றேன்.” – என்றார்.
பாகிஸ்தான் அணியுடன் நடைபெறவுள்ள மூன்று டி- 20 போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
அடுத்த மாதம் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளதால் அதற்கு பயிற்சி போட்டியாக இந்த போட்டி நடைபெற உள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
மிட்செல் மார்ஷ் அணி தலைவர் பதவியில் தொடர்கின்றார்.
அணி விபரம் வருமாறு,
