Home Blog Page 116

நந்தன குணதிலக்கவின் பூதவுடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் இறுதி அஞ்சலி!

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நந்தன குணதிலக்கவின் பூதவுடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (19) காலை இறுதி அஞ்சலி செலுத்தினர்.

” முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நந்தன குணதிலக அவர்களினது திடீர் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த மனவேதனையும் கவலையும் அடைந்துள்ளேன்.

நமது நாட்டின் அரசியல் பரப்பில் ஒரு புரட்சிகர பாத்திரமாக மக்கள் சேவைக்காக வேண்டி இவர் பாடுபட்டவர்.” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

” நந்தன குணதிலகவின் பூதவுடலுக்கு முன்னால் இருந்து கொண்டு அரசியல் தொடர்பில் பேசுவது பொருத்தமான விடயமாக நான் கருதவில்லை. நாமனைவரும் உயிர்களைக் காப்பாற்றுவதற்கே பாடுபட வேண்டும்.

இவரது நோய் குறித்து முன்கூட்டியே நான் அறிந்திருந்தால், இவர் சார்பாக இதைவிடவும் கூடிய தலையீடுகளை செய்திருக்க முடியும்.” என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

காசா அமைதி குழுவில் இணையுமாறு மோடிக்கு ட்ரம்ப் அழைப்பு!

காசாவில் நீடித்து நிலைக்கும் அமைதியை ஏற்படுத்துவதற்கு பணியாற்றவுள்ள குழுவில் இணையுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் இது தொடர்பான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பிரதமர் மோடிக்கு , ஜனாதிபதி டிரம்ப் கடிதம் அனுப்பியுள்ளார்.

“ காசாவில் அமைதியை வலுப்படுத்தும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அபாரமான முயற்சியிலும், உலகளாவிய போருக்குத் தீர்வு காண துணிச்சலான புதிய அணுகுமுறையை தொடங்கவும் என்னுடன் இணையுமாறு உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு விரிவான திட்டத்தை நான் அறிவித்தேன்.
20 அம்சங்களை கொண்ட அந்தத் திட்டத்தை அனைத்து உலகத் தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர்.

இந்தத் திட்டத்தில் உள்ள தொலைநோக்குப் பார்வையை வரவேற்றும், அதற்கு ஒப்புதல் அளித்தும் கடந்த ஆண்டு நவம்பரில் தீர்மானம் ஒன்றை ஐ.நா.பாதுகாப்பு சபையும் ஏற்றுக்கொண்டது.

தற்போது அந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அனைத்து கனவுகளையும் நனவாக்கும் நேரம் வந்துள்ளது. “ எனவும் மேற்படி கடிதத்தில் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் திட்டத்தின் முக்கிய அங்கமாக அமைதி குழு அமைக்கப்பட்டுள்ளது. போரை முடிவுக்குக் கொண்டுவர இதுவரை அமைக்கப்பட்ட குழுக்களில் இதுவே மிகவும் மெச்சத்தக்க, நல்விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய குழுவாகும்.

இந்தக் குழு புதிய சர்வதேச அமைப்பாக செயல்படும். இந்த முயற்சி காசாவில் நீடித்து நிலைக்கும் அமைதியை ஏற்படுத்தும் உயரிய பொறுப்பைப் பகிர தனிச் சிறப்புமிக்க நாடுகளை ஒன்றிணைக்கும் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

உச்ச தலைவர்மீது கைவைத்தால் நடப்பது வேறு: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை!

“ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மீதான எந்தவொரு தாக்குதலும் ஈரானுக்கு எதிரான முழுமையான போருக்குச் சமம். எனவே, உரிய பதிலடி கொடுக்கப்படும்.”

இவ்வாறு ஈரான் ஜனாதிபதி, அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரானின் வெடித்துள்ள போராட்டங்களில் இதுவரை சுமார் 500 பாதுகாப்புப் படையினர் உட்பட 5 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை கைது செய்து ஈரான் அரசு மரண தண்டனை விதித்து வருகிறது. இதற்கு பல நாடுகளும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இது குறித்து அளித்த பேட்டியில்,

“ ஈரானில் புதிய தலைமையைத் தேட வேண்டிய நேரம் இது. 800க்கும் மேற்பட்டோரின் மரண தண்டனையை அவர்கள் இரத்து செய்தனர். அவர்கள் ரத்து செய்ததை நான் மிகவும் மதிக்கிறேன்.

இதன் காரணமாக ஈரான் விவகாரத்தில் அமெரிக்க தலையீட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் தொடர்ந்து கொல்லப்பட்டாலோ அல்லது தூக்கிலிடப்பட்டாலோ அமெரிக்கா தலையிட வாய்ப்பு உள்ளது ” என்று கூறினார்.

இதையடுத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் “ஒரு குற்றவாளி” என்று ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கூறியுள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் மற்றும் கலகக்காரர்கள் தான் ஈரானில் பல ஆயிரம் இறப்புகளுக்கு காரணம் என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தநிலையில் ஈரான் ஜனாதிபதி பெஷேஷ்கியன் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில் ,

“ எந்தவொரு அநீதியான ஆக்கிரமிப்புக்கும் ஈரானின் பதிலடி கடுமையானதாகவும் வருந்தத்தக்க வகையிலும் இருக்கும்.

உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மீதான எந்தவொரு தாக்குதலும் ஈரானுக்கு எதிரான முழுமையான போருக்குச் சமம்.

ஈரானின் பொருளாதார நெருக்கடிகளுக்கு அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தான் காரணம்.

நீண்டகால விரோதமும் மனிதாபிமானமற்ற பொருளாதார தடைகளும் ஈரானிய மக்கள் எதிர் கொள்ளும் சிரமங்களுக்கு ஒரு முக்கிய காரணம்.” – என்றார் ஈரான் ஜனாதிபதி.

ஸ்பெயின் ரயில் விபத்து; பலி 39 ஆக அதிகரிப்பு!

ஸ்பெயினின் தெற்குப் பகுதியில் அதிவேக ரயில்கள் 2 மோதி இடம்பெற்ற விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது.

சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நேற்று (18) , இரவு 7.45 மணியளவில் கோர்டோபா (Cordoba) அருகே இக்கோர விபத்து இடம்பெற்றுள்ளது.

மலாகாவிலிருந்து (Malaga) மட்ரிட் நோக்கி சுமார் 300 பயணிகளுடன் சென்ற அதிவேக ரயில் தண்டவாளத்தை விட்டு விலகி, எதிர் திசையில் வந்து கொண்டிருந்த மற்றுமொரு ரயிலுடன் வேகமாக மோதியதில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

எதிர்ச் திசையில் மட்ரிட்டிலிருந்து உல்வா (Huelva) நோக்கி வந்த ரயிலில் சுமார் 200 பயணிகள் இருந்துள்ளனர்.

ஆரம்பத்தில் 21 பேர் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், பலி எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் மட்ரிட்டிலிருந்து சென்ற ரயிலின் சாரதியும் ஒருவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்தவர்களில் 30 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் அனைவரும் ஹெலிகொப்டர்கள் மற்றும் அம்பியூலன்ஸ் வண்டிகள் மூலம் வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான ரயிலில் இருந்த ஊடகவியலாளர் ஒருவர் கூறுகையில், விபத்தின் போது ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது போன்ற உணர்வு இருந்ததாகத் தெரிவித்தார்.

விபத்து நடந்த தண்டவாளப் பகுதி நேரான பாதையாக உள்ளதோடு, அது கடந்த மே மாதம் புதுப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையிலும், ரயில் தடம் புரண்டமை “மிகவும் விசித்திரமானது” என ஸ்பெயினின் போக்குவரத்து அமைச்சர் ஒஸ்கார் புவென்டே தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தைத் தொடர்ந்து மட்ரிட் மற்றும் அண்டலூசியா பிராந்தியங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

ஸ்பெயினின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sanchez), இது தனது நாட்டிற்கு “ஆழ்ந்த வேதனையளிக்கும் இரவு” எனத் தெரிவித்ததுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த அனுதாபத்தை வெளியிட்டுள்ளார்.

அரச தலைவர் பொது கொள்கையுடன் பயணிக்க வேண்டும்!

இலங்கையில் அனைத்து இன மக்களும் நல்லிணக்கத்துடனேயே வாழ்கின்றனர். எனவே, இல்லாத இனவாதம் பற்றி கதைப்பதுதான் பிரச்சினை என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் மேற்கண்டவாறு கூறினார்.

“ வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதிகளுக்கு விஜயம் செய்யும்போது அந்தந்த பகுதி மக்களை திருப்திபடுத்தும் வகையில் ஜனாதிபதி கருத்துகளை முன்வைத்துவருகின்றார்.

இது ஏற்புடையது அல்ல. அரசாங்க தலைவர் பொது கொள்கையுடன் பயணிக்க வேண்டும். நாட்டில் எந்த பகுதிக்கு சென்றாலும் ஒரே கொள்கை அடிப்படையிலேயே கருத்துகளை முன்வைக்க வேண்டும்.”எனவும் மரிக்கார் எம்.பி. குறிப்பிட்டார்.

ஆனால் தமிழ் டயஸ்போராக்களை திருப்திப்படுத்தும் விதத்திலேயே வடக்குக்கு சென்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உரையாற்றுகின்றார்.

நாட்டில் அனைத்து இன மக்களும் நல்லிணக்கத்துடன்தான் வாழ்கின்றனர். எனவே, இனவாதத்தை தோற்றுவிக்கும் விதத்தில் கருத்துகளை எவரும் முன்வைக்ககூடாது.

அநுரகுமார திஸாநாயக்க என்பவர் எதிர்க்கட்சி தலைவர் அல்லர், அவர் நாட்டின் ஜனாதிபதி. ஆகவே, பொறுப்புடன் கருத்துகளை வெளியிட வேண்டும்.” – என எஸ்.எம். மரிக்கார் மேலும் குறிப்பிட்டார்.

ஷாருக்கான் நடிப்பில் ‘டான் 3’ படத்தை இயக்குகிறாரா அட்லி?

அமிதாப் பச்சன், ஜீனத் அமன் நடித்து 1978-ல் வெளியாகி வெற்றி பெற்ற இந்தி படம் ‘டான்’. இது தமிழில் ரஜினி நடிப்பில் பில்லா என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. அமிதாப் பச்சன் நடித்த ‘டான்’ படம் கடந்த 2006-ம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றது, இதை பர்ஹான் அக்தர் தயாரித்து இயக்கி இருந்தார்.

இப்படத்தின் அடுத்த பாகமாக டான் 3 உருவாக இருப்பதாகக் கடந்த சில வருடங்களாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், சரியான ஹீரோ அமையாததால் இப்படம் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் இதில் ரன்வீர் சிங் ஹீரோவாக நடிக்க இருந்தார்.

‘துரந்தர்’ படம் வெற்றி பெற்றதால், அவர் இப்படத்திலிருந்து விலகிவிட்டார். இந்நிலையில் இதில் ஷாருக்கான் நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஷாருக் கானும் பர்ஹான் அக்தரும் இது தொடர்பாகச் சந்தித்துப் பேசினர். அப்போது படத்தை அட்லி இயக்கினால், தான் நடிக்க தயாராக இருப்பதாகவும் பர்ஹான் தயாரிப்பாளராக இருக்கட்டும் என்றும் ஷாருக்கான் ஆலோசனை கூறியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வரலாம் என்று தெரிகிறது. தற்போது அல்லு அர்ஜுன் இயக்கும் சயின்ஸ் பிக் ஷன் படத்தை இயக்கி வருகிறார் அட்லி. அதை முடித்துவிட்டு அவர் ஷாருக் கானை இயக்குவார் என்கிறார்கள்.

அரசியலமைப்பு பேரவைக்கு 3 உறுப்பினர்களை நியமிப்பதில் இழுபறி

அரசியலமைப்பு பேரவைக்கு மூன்று சிவில் சமூக உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பாக, அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான பேச்சுக்களில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

சிவில் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று உறுப்பினர்களின் பெயர்களை தெரிவு செய்வதில், பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் உடன்பாடு ஏற்படவில்லை.

சிவில் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியலமைப்பு பேரவை உறுப்பினர்களான அனுலா விஜேசுந்தர, பிரதாப் ராமானுஜன் மற்றும் தினேஷா சமரட்ன ஆகியோரின் பதவிக்காலம் வெள்ளிக்கிழமை முடிவடைந்த நிலையில், புதிய நியமனங்கள் குறித்து பிரதமருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையே கலந்துரையாடல்கள் நடந்து வந்தன.

அரசியலமைப்பின்படி, சிவில் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று அரசியலமைப்பு பேரவை உறுப்பினர்களையும் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் உடன்பாட்டின் மூலம் மட்டுமே நியமிக்க முடியும்.

நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற அண்மைய சந்திப்பின் போது, ​​பிரதமர் ஹரிணி அமரசூரியவும், சஜித் பிரேமதாசவும், தலா ஒவ்வொரு பட்டியலை சமர்ப்பித்தனர்.

பிரதமர் ஹரிணி அமரசூரிய ஏழு பெயர்களை சமர்ப்பித்ததாகவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 10 பெயர்களை சமர்ப்பித்ததாகவும் தெரியவந்துள்ளது.

முன்னாள் துணைவேந்தர், முன்னாள் பல்கலைக்கழக விரிவுரையாளர் மற்றும் பல நிபுணர்கள் சஜித் பிரேமதாச முன்வைத்த பட்டியலில் அடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரச தரப்பு பரிந்துரைத்த ஒருவரை ஏற்றுக் கொள்ள சஜித் பிரேமதாச சம்மதித்தால், அவரால் பரிந்துரைக்கப்படும் இரண்டு வேட்பாளர்களை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாக அரசாங்கத் தரப்பு தெரிவித்திருந்தது.

பிரதமர் ஹரிணி அமரசூரிய, முன்னாள் மாவட்டச் செயலாளரின் பெயரை பரிந்துரைத்தார் என்றும், அவரை ஏற்றுக் கொள்ள எதிர்க்கட்சித் தலைவர் உடன்படவில்லை என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது சமீபத்திய நடத்தையைக் கருத்தில் கொண்டு, அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினராக பாரபட்சமின்றி நடந்து கொள்வார் என்று எதிர்பார்க்க முடியாது என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அரசியலமைப்பு பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தெரிவு செய்வதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, அரசியலமைப்பின் பிரிவு 41F இன் படி, அரசியலமைப்பு பேரைவைக்கு சிவில் சமூக உறுப்பினர்களை நியமிப்பதில் தாமதம் ஏற்பட்டால், புதிய உறுப்பினர்கள் பதவியேற்கும் வரை தற்போதைய சிவில் சமூக உறுப்பினர்கள், தங்கள் பதவிகளில் தொடரலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

பிக்பாஸ் சீசன் 9: டைட்டிலை வென்றார் திவ்யா கணேஷ்!

பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் திவ்யா கணேஷ்.

100 நாட்களைக் கடந்து ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியில் விக்கல்ஸ் விக்ரம், விஜே பார்வதி, கம்ருதீன், ஆரோரா சின்க்ளேர், வாட்டர்மெலன் திவாகர் உள்ளிட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். 30 நாட்களுக்குப் பிறகு வைல்டு கார்டு போட்டியாளர்களாக திவ்யா கணேஷ், அமித் பார்கவ், பிரஜின் சாண்ட்ரா ஆகிய நால்வரும் உள்ளே சென்றனர்.

வாரம் ஒரு போட்டியாளர் அல்லது இரண்டு பேர் வெளியேற்றப்பட்ட நிலையில், டிக்கெட் டூ ஃபினாலே போட்டியின்போது சாண்ட்ராவிடம் வன்முறையாக நடந்து கொண்ட காரணத்தால் வார இறுதியில் பார்வதி, கம்ருதீன் இருவரும் ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டனர். டிக்கெட் டூ ஃபினாலே ஆரோராவுக்கு கிடைத்தது.

இந்த நிலையில் விக்ரம், திவ்யா, சபரிநாதன், ஆரோரா நால்வரும் இறுதிப் போட்டியில் நுழைந்தனர். இவர்களில் முதலில் ஆரோரா, அடுத்து விக்ரம் வெளியேறினர். திவ்யா, சபரி இருவரும் ஃபினாலே மேடையில் இருந்தனர். இவர்களில் இருவரில் திவ்யா கணேஷ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். சபரி ரன்னராக அறிவிக்கப்பட்டார்.

தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் வைல்டு கார்டு போட்டியாளராக வந்து வெற்றியாளராக அறிவிக்கப்படும் இரண்டாவது போட்டியாளர் என்ற பெருமையை திவ்யா பெற்றுள்ளார். இதற்கு முன் 7-வது சீசனில் அர்ச்சனா வைல்டு கார்டில் நுழைந்து வெற்றி பெற்ற முதல் போட்டியாளர் ஆவார்.

கிரீன்லாந்து விவகாரம்: ட்ரம்பை சந்திக்கிறார் நேட்டோ பிரதானி!

கிரீன்லாந்து விவகாரம் தொடர்பில் இவ்வாரம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன் பேச்சு நடத்தப்படும் என்று நேட்டோ அமைப்பின் பொதுச்செயலாளர் தெரிவித்தார்.

ஆர்டிக் பகுதியில் உள்ள உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்து, டென்மார்க் நாட்டின் தன்னாட்சி பிராந்தியமாக உள்ளது.

இதற்கிடையே தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக கிரீன்லாந்து அமெரிக்காவுடன் இணைக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் தெரிவித்தார்.

இதுதொடர்பாக டென் மார்க்குடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் உடன்பாடு ஏற்படாவிட்டால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையே கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் 8 நாடுகள் மீது கூடுதல் வரி விதித்து டிரம்ப் உத்தரவிட்டார்.

இந்நிலையில், நேட்டோ அமைப்பின் பொது செயலாளர் மார்க் ரூட் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

“ கிரீன்லாந்து விவகாரம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் பேசினேன். அப்போது கிரீன்லாந்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தேன்.

தொடர்ந்து இந்த விவகாரத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசித்தோம். இந்த வாரம் டாவோசில் ஜனாதிபதி டிரம்பை சந்திக்க உள்ளேன் என தெரிவித்தார்.

மரக்கறி விலைப்பட்டியல் (19.01.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (19) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறந்தது ஈரான்!

0
உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையான ஹார்முஸ் நீரிணையை மீண்டும் முழுமையாகத் திறப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான இருவாரகால போர் நிறுத்தம் அமுலில் உள்ள காலப்பகுதியில் இவ்வாறு திறந்திருக்கும் என...

‘கிளீன் ஸ்ரீலங்கா’ செயல்திட்டங்கள் குறித்து மீளாய்வு!

0
'கிளீன் ஸ்ரீலங்கா' (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான செயல்திட்டங்கள் மற்றும் கடந்த ஆண்டின் முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17) முற்பகல்...

நுவரெலியாவில் குவியும் சுற்றுலா பயணிகள்!

0
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நுவரெலியா நோக்கி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை பாரியளவில் அதிகரித்துள்ளது. இதனால் டெவோன் (Devon) மற்றும் சென்கிளையார் (St. Clair) நீர்வீழ்ச்சிக் காட்சித் தளங்களில் சுற்றுலாப் பயணிகளின்...