Home Blog Page 117

இந்திய மண்ணில் வரலாற்று சாதனை படைத்த நியூசிலாந்து அணி!

 

நியூஸிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணி கைப்பற்றியது.

இந்திய மண்ணில் சுமார் 37 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஒருநாள் தொடரை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் வதோதராவில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

தொடர்ந்து ராஜ்கோட்டில் நடை பெற்ற 2-வது ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.

இதனையடுத்து தொடரின் மூன்றாவது போட்டி இந்தூரில் நேற்று நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணியின் தலைவர் சுப்மன் கில், முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி ஆரம்பத்தில் தடுமாறியது. எனினும் டாரில் மிட்செல் (137) மற்றும் கிளென் பிலிப்ஸ் (106) ஆகிய இருவரின் அதிரடி சதங்கள் அணியைப் ஸ்கோரை உயர்த்தின.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 337 ஓட்டங்கள் குவித்தது.

இந்தியத் தரப்பில் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

338 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நோக்கிப் பதிலடி கொடுத்த இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.
71 ஓட்டங்களுக்குள்ளேயே 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து திணறிய நிலையில், விராட் கோஹ்லி நங்கூரம் போல் நிலைத்து நின்று ஆடினார்.

அவர் 108 பந்துகளில் 124 ஓட்டங்கள் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு நம்பிக்கையளித்தார். அவருக்குத் துணையாக நிதிஷ் குமார் ரெட்டி (53) மற்றும் ஹர்ஷித் ராணா (52) ஆகியோர் அரைசதம் அடித்து அதிரடி காட்டினர்.

ஆனால், கோஹ்லியின் விக்கெட்டுக்குப் பிறகு இந்திய அணியின் பேட்டிங் வரிசை சரிந்தது. இறுதியில் 46 ஓவர்களில் இந்திய அணி 296 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

நியூசிலாந்து தரப்பில் ஜாக் ஃபால்க்ஸ் மற்றும் கிறிஸ்டியன் கிளார்க் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றியைத் தடுத்தனர்.

2019-ஆம் ஆண்டிற்குப் பிறகு சொந்த மண்ணில் இந்தியா சந்திக்கும் முதல் ஒருநாள் தொடர் தோல்வி இதுவாகும். 1988-ஆம் ஆண்டுக்குப் பிறகு (37 ஆண்டுகள்) இந்திய மண்ணில் நியூசிலாந்து பெறும் முதல் இருதரப்பு ஒருநாள் தொடர் வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.

உலக பொருளார மாநாட்டில் பங்கேற்க பிரதமர் சுவிட்சர்லாந்து பயணம்!

உலகப் பொருளாதார மன்றத்தின் 56ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (19) அதிகாலை சுவிட்சர்லாந்து நோக்கிப் பயணமானார்.

ஜனவரி 19 முதல் 23ஆம் திகதி வரை ‘A Spirit of Dialogue’ எனும் தொனிப்பொருளின் கீழ் நடைபெறவுள்ள இம்மாநாட்டில், கொள்கை வகுப்பாளர்கள், புத்தாக்கச் சிந்தனையாளர்கள் மற்றும் உலகளாவிய தலைவர்கள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

பிரதமர் ஹரிணி அமரசூரிய, பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்தவுள்ளார்.

பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்ணான்டோ மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும் பிரதமருடன் சென்றுள்ளனர்.

தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்பட்ட சம்பள உயர்வு எதிர்வரும் 10 ஆம் திகதி சம்பளத்துடன் கிடைக்கப்பெறும் என்று பெருந்தோட்டத்துறை அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 2026 ஜனவரி முதல் 400 ரூபா சம்பள உயர்வு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

ஜனவரி மாதத்துக்குரிய சம்பளம் பெப்;ரவரி 10 ஆம் திகதியே வழங்கப்படும். இதன்போது அதிகரிக்கப்பட்ட சம்பளம் கிடைக்கப்பெறும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கமைய பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கான சம்பளமாக 1,750 ரூபாவரை கிடைக்கப்பெறும்.

 

பதுளையில் பஸ் விபத்து: சாரதி பலி!

 

கொழும்பு – பதுளை பிரதான வீதியில், ஹல்துமுல்ல, கலுபஹான பகுதியில் உள்ள ஒரு வளைவில் இன்று (18) காலை தனியார் பயணிகள் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பஸ் சாரதி உயிரிழந்துள்ளார்.

மேலும், பல பயணிகள் காயமடைந்து தியத்தலாவ, பதுளை பொது வைத்தியசாலையிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹல்தமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நடராஜா மலர்வேந்தன்

மரக்கறி விலைப்பட்டியல் (18.01.2026)

மரக்கறி விலைப்பட்டியல் (18.01.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (18) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

யாழில் அநுர சுதந்திரமாக நடப்பது மகிழ்ச்சி: நாமல் கருத்து!

தெற்கு மக்கள் வடக்குக்கு வழிபட செல்வது இனவாதம் அல்ல. அது மத நம்பிக்கையாகும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

அநுராதபுரம், தம்புத்தேகமயில் நடைபெற்ற மொட்டு கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே நாமல் ராஜபக்ச இவ்வாறு கூறினார்.

“ வடக்கில் இன்று போர் இல்லை. எனவே, சுதந்திரமாக நாக தீபவுக்கு செல்ல முடியும்.

அதேபோல யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமத்துக்கு பாத யாத்திரை வரமுடியும்.

தெற்கு மக்கள் வடக்குக்கு வழிபட செல்வதும், வடக்கு மக்கள் கதிர்காமதத்துக்கு இறை யாத்திரை செல்வதும் இன வாதம் அல்ல. அது மத ரீதியான நம்பிக்கையாகும்.” எனவும் நாமல் சுட்டிக்காட்டினார்.

எனது தந்தைதான் சுதந்திரம் பெற்றுக்கொடுத்தார். அந்த சுதந்திரத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முழுமையாக அனுபவிப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கின்றது.” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

யாழில் ஜனாதிபதி ஆற்றிய உரை மற்றும் மேற்கொண்ட நடை பயிற்சி என்பவற்றை இலக்கு வைத்தே நாமல் ராஜபக்ச இவ்வாறு குறிப்பிடுகின்றார் என்பது புலனாகின்றது.

கல்வி மறுசீரமைப்பு கைவிடப்படாது: அரசு திட்டவட்டம்!

“ கல்வி மறுசீரமைப்பு கைவிடப்படமாட்டாது. வங்குரோத்து அரசியலின் வெளிப்படாகவே கல்வியைக்கூட எதிரணி அரசியல் ஆயதமாக்கியுள்ளது.” என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

“ கல்வி மறுசீரமைப்பின் முக்கியத்துவம் பல வருடங்களாக வலியுறுத்தப்பட்டுவருகின்றன. எமது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இது பற்றி உறுதியளிக்கப்பட்டது.

துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய வகையிலேயே மறுசீரமைப்பு நடவடிக்கையை முன்னெடுக்க திட்டமிட்டோம்.

முதற்கட்டமாக தரம் ஒன்று மற்றும் 6 இல் கல்வி மறுசீரமைப்பை மேற்கொள்ள இருந்தோம். எனினும், தரம் ஆறு ஆங்கில பாடதிட்டத்தில் இடம்பெற்ற ஒரு குளறுபடியை அடிப்படையாகக் கொண்டு எதிரணிகள் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முற்படுகின்றன.

எதிரணி கூறுவதுபோல் கல்வியை நாம் ஆபாசமாக்கவில்லை.” – எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பேரிடரிலும் அரசியல் நடத்த முற்பட்ட எதிரணி தற்போது கல்வியிலும் நடத்துகின்றது. இது வங்குரோத்து அரசியலின் வெளிப்படாகும். கல்வியையும் அரசியல் ஆயுதமாக்குவதற்கு முற்பட்டனர்.

கல்வி மறுசீரமைப்பை மக்கள் வரவேற்றுள்ளனர். அதனை வலியுறுத்தி போராட ஆரம்பித்துள்ளனர். குறைபாடு இருந்தால் நிவர்த்தி செய்வோம். கல்வி மறுசீரமைப்பை கைவிடபடாது.

சமூகத்தில் தோற்றுவிக்கப்பட்ட குழப்பத்தால் மக்கள் மத்தியில் ஐயம் ஏற்பட்டது. அதனால்தான் தரம் ஆறு திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.” – என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் குறிப்பிட்டார்.

88,89 களில் போட்ட விளையாட்டை தற்போது போட வரவேண்டாம்! தம்புத்தேகமயில் முழங்கிய நாமல்!

“ 988, 1989 களில் போட்ட விளையாட்டை தற்போது போட வரவேண்டாம். அந்த அரசியல் கலாசாரம் மாறிவிட்டது. அன்று மஹிந்த ராஜபக்ச இருந்தார். இன்று நாமல் ராஜபக்ச இருக்கின்றார். இது புதிய அரசியல் பரம்பரை என்பதை புரிந்துகொண்டால் சரி.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் சொந்த ஊரான அநுராதபுரம், தம்புத்தேகமவில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இன்று நடத்திய அரசியல் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே நாமல் ராஜபக்ச இவ்வாறு கூறினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து சென்றவர்களை மீண்டும் கட்சிக்கு வருமாறு அழைப்பு விடுக்கின்றேன். பேச்சு நடத்துவதற்கு நாம் தயாராகவே இருக்கின்றேன் எனவும் நாமல் ராஜபக்ச அழைப்பு விடுத்தார்.

அடக்குமுறைமூலம் தமது அரசியல் பயணத்தை தடுக்க முடியாது எனவும் சூளுரைத்துள்ளார் நாமல்.

உகண்டா ஜனாதிபதியாக 7-வது முறையாக முசேவேனி வெற்றி!

உகண்டாவின் ஜனாதிபதியாக யோவேரி முசேவேனி ஏழாவது முறையாக வெற்றி பெற்றார்.

உகண்டாவின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட 81 வயதான யோவேரி முசேவேனி 71.65 சதவிகித வாக்குகளைப் பெற்று, 7-வது முறையாக மீண்டும் ஜனாதிபதியாக வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட 43 வயதான பாபி வைன் 24.72 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றார்.

சுமாா் 4.5 கோடி மக்கள்தொகை கொண்ட உகண்டாவில், இந்தத் தோ்தலில் 2.16 கோடி மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனா். இருப்பினும், 52 சதவிகிதத்தினர் மட்டுமே வாக்களித்தனர்.

1986-ல் ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்து, யோவேரி முசேவேனி ஜனாதிபதியாக பதவியேற்றார்.

நாடாளுமன்றத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஆளுங்கட்சியான முசேவேனியின் தேசிய எதிர்ப்பு இயக்கக் கட்சி, வயது மற்றும் பதவிக்கால வரம்புகளை நீக்க அரசியலமைப்பை பல முறை மாற்றியதன் மூலம் முசேவேனியின் பதவியும் தக்கவைக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

போதைப்பொருள் பயன்படுத்திவிட்டு வாகனம் செலுத்திய 300 இற்கு மேற்பட்ட சாரதிகள் கைது

நச்சு போதைப்பொருள் பயன்படுத்திவிட்டு வாகனம் செலுத்திய 300ற்கு மேற்பட்ட சாரதிகள் கடந்த 15 நாட்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் டபிள்யூ.பீ.ஜே.சேனாதீர தெரிவித்தார்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 7500இற்கு மேற்பட்ட சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதி பொலிஸ் மாஅதிபர் கூறினார்.

போதைப்பொருள் மற்றும் மதுபானம் அருந்திவிட்டு வாகனம் செலுத்துவதினால் வாகன விபத்துக்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் நடமாடும் இரசாயன ஆய்வுகூடங்களில் போதைப்பொருள் பயன்படுத்திய சாரதிகளின் சிறுநீர் மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் டபிள்யூ.பீ.ஜே.சேனாதீர தெரிவித்தார்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறந்தது ஈரான்!

0
உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையான ஹார்முஸ் நீரிணையை மீண்டும் முழுமையாகத் திறப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான இருவாரகால போர் நிறுத்தம் அமுலில் உள்ள காலப்பகுதியில் இவ்வாறு திறந்திருக்கும் என...

‘கிளீன் ஸ்ரீலங்கா’ செயல்திட்டங்கள் குறித்து மீளாய்வு!

0
'கிளீன் ஸ்ரீலங்கா' (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான செயல்திட்டங்கள் மற்றும் கடந்த ஆண்டின் முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17) முற்பகல்...

நுவரெலியாவில் குவியும் சுற்றுலா பயணிகள்!

0
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நுவரெலியா நோக்கி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை பாரியளவில் அதிகரித்துள்ளது. இதனால் டெவோன் (Devon) மற்றும் சென்கிளையார் (St. Clair) நீர்வீழ்ச்சிக் காட்சித் தளங்களில் சுற்றுலாப் பயணிகளின்...