Home Blog Page 118

ரணில், சஜித் சங்கமம் விரைவில் நடக்கும்!

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன ஒன்றிணைவதற்கு எவ்வித தடையும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

தலதா அத்துகொரளவுக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியையும் இவரே சிறிது காலம் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இரு தரப்பு இணைவு தொடர்பில் க ருத்து வெளியிட்ட வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“ ஒன்றிணைவது தொடர்பில் சாதகமான சூழ்நிலையே உள்ளது. எனவே, தடைகள் இருக்கும் என கருத வேண்டியதில்லை.
எதிர்காலத்தில் சங்கமம் நடக்கும் என உறுதியாக நம்புகின்றோம். விரைவில் இது சாத்தியப்படும்.

ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு பதவி என்பது முக்கியம் அல்ல. எமக்கு நாடுதான் முக்கியம்.

நாடு சரியான திசையில் செல்ல வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும். ஆனால் இந்த ஆட்சியின்கீழ் அது நடப்பதாக தெரியவில்லை.” – என பாலிய ரங்கே பண்டார மேலும் கூறினார்.

விரைவில் தனுஷ் – மிருணாள் தாகூர் திருமணம்?

விரைவில் தனுஷ் மற்றும் மிருணாள் தாகூர் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனுஷ் – மிருணாள் தாகூர் இருவரும் காதலித்து வருவதாக சில மாதங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின. ஆனால், இருவரும் இணைந்து நடித்ததில்லை என்பதால் இது உண்மையாக இருக்காது எனக் கூறப்பட்டது. மும்பையில் மிருணாள் தாகூர் நடித்த ‘SON OF SARDAR 2’ படத்தின் ப்ரீமியர் காட்சியில் சிறப்பு விருந்தினராக தனுஷ் கலந்து கொண்டார். இதில் இருந்து தான் இந்த வதந்திகள் பரவத் தொடங்கியது.

தற்போது இருவரும் விரைவில் திருமணம் செய்யவிருப்பதாக இந்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தனுஷ் – மிருணாள் தாகூர் இருவருமே நீண்ட மாதங்களாக காதலித்து வருவதாகவும், பிப்ரவரி மாதத்தில் திருமணம் செய்யவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த திருமணத்தில் இருவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருக்கும் திருமணமாகி இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு இருவரும் விவாகரத்து பெற்று தனியே வசித்து வருகிறார்கள். தற்போது தனுஷ் மீண்டும் திருமணத்துக்கு தயாராகி இருக்கிறார்.

கிரீன்லாந்து ஆக்கிரமிப்புக்கு ஒத்துழைக்காத நாடுகள் மீது வரி: டிரம்ப்

கிரீன்லாந்தை கையகப்படுத்துவதில் ஒத்துழைக்காத நாடுகள் மீது வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பில் ஜனாதிபதி டிரம்ப் பேசுகையில், “அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு கிரீன்லாந்து தேவைப்படுவதால், கையகப்படுத்துவதில் ஒத்துழைக்காத நாடுகள் மீது வரி விதிக்கக் கூடும்” என்று தெரிவித்தார்.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்காக டிரம்ப் அரசு உருவாக்கி வரும் கோல்டன் டோம் பாதுகாப்பு அமைப்புக்கு கிரீன்லாந்து முக்கியமானது என்று கூறிவரும் டிரம்ப், அதனைக் கைப்பற்றும் முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

மேலும், இதற்கு ஆதரவளிப்பதில் நேட்டோ அமைப்பு முன்னணியில் இருக்க வேண்டும் என்று கூறும் டிரம்ப், நேட்டோவின் ராணுவ செயல்திறன் பெரும்பாலும் அமெரிக்காவையே சார்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அறகலயவின் இயக்குநர்தான் அமெரிக்க தூதுவர்: கம்மன்பில குற்றச்சாட்டு!

இலங்கையில் நடந்த அறகலயவுக்குரிய திரைக்கதை மற்றும் தயாரிப்புக்குரிய இரு பணிகளையும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவரே முன்னெடுத்தார் என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“2022 அறகலயவின்போது திரைக்கதை மற்றும் தயாரிப்பு ஆகிய இரு பணிகளையும் அமெரிக்க தூதுவரே செய்திருந்தார்.

மிகவும் சூட்சுமமான முறையிலேயே இது நடந்துள்ளது. அமெரிக்க திரைக்கதை என தெரியாமல் எமது இளைஞர்கள் எமது நாட்டு தேசிய கொடியுடன் களமிறங்கும் நிலை காணப்பட்டது.

2024 இல் 3 சதவீத வாக்கு வங்கியுடன் இருந்த தேசிய மக்கள் சக்தியை ஆட்சியை பிடிக்கும் சக்தி என்ற நிலைக்கு விம்பம் ஏற்படுத்திய பிரதான சூத்திரதாரியும் அமெரிக்க தூதுவர்தான்.

ஜே.வி.பினரை தனது செல்லப்பிள்ளையாக மாற்றிக்கொண்டதுதான் தனது சேவைகாலத்தில் ஜுலி சங், பெற்ற மிகப்பெரிய வெற்றியாகும். “ – என்றார்.

‘நாகபந்தம்’ படத்தில் பார்வதியாக நடிக்கும் நபா நடேஷ்

அபிஷேக் நாமா எழுதி இயக்கும் படம் ‘நாகபந்தம்’. சவுந்தர் ராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். அபே, ஜுனைத் குமார் இசை அமைக்கின்றனர். இதில் விராட் கர்ணா, நபா நடேஷ், ஜகபதி பாபு, ஜெயப்பிரகாஷ், முரளி சர்மா, பி.எஸ்.அவிநாஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தை, கிஷோர் அன்னபுரெட்டி, நிஷிதா நாகிரெட்டி ஆகியோர் தயாரிக்கின்றனர்.

பொங்கலை முன்னிட்டு இப்படத்தில் பார்வதி கதாபாத்திரத்தில் நடிக்கும் நபா நடேஷின் முதல் தோற்ற போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் மற்றொரு நாயகியாக ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ளார்.

“இந்தியாவின் பழமையான விஷ்ணு கோயில்களைப் பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படம், புராணம், சஸ்பென்ஸ் மற்றும் தெய்வீக பாரம்பரியத்தை இன்றைய காலகட்ட கதையுடன் இணைக்கும் திரைக்கதை அமைப்பைக் கொண்டுள்ளது” என்று படக்குழு தெரிவித்துள்ளது.

போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட மூவர் கம்பளையில் கைது!

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த மூன்று சந்தேக நபர்கள் கம்பளை பொலிஸாரால் இன்று (17) கைது செய்யப்பட்டுள்ளனர்.

டுபாயில் இருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் டுபாய் இஷார என்பவரின் போதைப்பொருளை இலங்கையில் விநியோகிக்கும் மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

20 முதல் 22 வயதுக்குட்பட்ட மூவரே இவ்வாறு சிக்கியுள்ளனர்.

கம்பளை, நாவலப்பிட்டிய, உலப்பனை, தொழுவ, கெலிஓயா, பேராதனை மற்றும் வெலிகல்ல உள்ளிட்ட பகுதிகளுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று இவர்கள் போதைப்பொருளை விநியோகித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கம்;பளை தொழுவ பகுதியில் வைத்து இருவரும், மஹர பகுதியில் வைத்து மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கம்பளை அங்கம்ம, கவல்வல ஆகிய பகுதிகளை சேர்ந்த இவர்கள், கொழும்பில் இருந்து போதைப்பொருளை பெற்றுள்ளனர் என தெரியவருகின்றது.

கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

க.யோகா

போதைப்பொருள் என்ற அரக்கனுடன் சில அரசியல் அரக்கர்களும் இணைவு!

“ யாழ்ப்பாணத்திலும் சாபக்கேடான அரசியல் முன்னெடுக்கப்படுகின்றது. அவ்வாறான அரசியலில் இருந்தும் நாம் மீள வேண்டும்.” என்றுகடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

“முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசியச் செயற்பாடு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்று (16) யாழ்ப்பாணத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

“அகன்று செல்” என்ற தொனிப்பொருளில், கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

” போதைப்பொருளுக்கு எதிராக நாட்டு மக்களை அணிதிரட்டும் செயல்பாடு முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. கொழும்பில் இதற்குரிய ஆரம்பக்கட்ட நடவடிக்கை இம்பெற்றது. 2ஆவது நிகழ்வு அம்பாந்தோட்டையில் நடைபெற்றது.

மூன்றாவது மாநாடு யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெறுகின்றது. போதைப்பொருள் பாவனைக்கு எதிராக கிராமிய மட்டத்தில் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு, மக்கள் அணிதிரட்டப்பட்டுவருகின்றனர்.

போதைப்பொருள் பாவனையில் இருந்து எமது இளைஞர்களை மீட்க வேண்டும். இளைஞர்கள் போதைப் பொருள் பிசாசிடம் சிக்காமல் இருப்பதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும்.

போதைப்பொருள் என்ற அரக்கனுடன், சில அரசியல் அரக்கர்களும் இணைந்துள்ளனர் என்பது கசப்பான உண்மையாகும்.

யாழ்ப்பாணத்தை கட்டியெழுப்பும்போது யாழின் மரபுரிமை, கலாசாரம், கௌரவம், அடையாளம் என்பவற்றை பாதுகாத்து அதனை செய்யுமாறு ஜனாதிபதி எனக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதேவேளை, கொழும்பில் “கோட்சூட்” அணிந்து, யாழில் வேட்டியுடன் அரசியல் பேசும் நபர், யாழில் வரவுள்ள சர்வதேச மைதானத்துக்கு எதிராக வழக்கு போடப்போகின்றாராம்.

எமது அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுகின்றன நடவடிக்கைகளுக்கு எதிரானவர்களாக இவர்கள் மாறியுள்ளனர் என்பதை இது வெளிப்படுத்துகின்றது.

தமிழரசுக் கட்சியினர் உட்பட எல்லோருக்கும் நாம் அழைப்பு விடுத்தோம். ஆனால் எவரும் வரவில்லை.

நிகழ்வுக்கு போனால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என கிளிநொச்சி அண்ணனுக்கு கோட்சூட் நபர் கூறினாராம். இப்படிதான் சாபக்கேடான அரசியல் யாழ்ப்பாணத்தில் உள்ளது. இந்நிலையில் இருந்து நாம் மீள வேண்டும்.” –என இராமலிங்கம் சந்திரசேகர் மேலும் குறிப்பிட்டார்.

சூடானில் பஞ்சம் தலைவிரிப்பு:அவசர உதவி கோருகிறது ஐ.நா.!

போரினால் பாதிக்கப்பட்டுள்ள சூடானுக்கு கூடுதலாக நிதி உதவி வழங்கப்படாவிட்டால் அங்கு உணவு பஞ்சம் தலைதூக்கும் என ஐ.நா. எச்சரித்துள்ளது.

சூடானில்  1000 நாட்களுக்கு மேலாக உள்நாட்டுப் போர் நீடிக்கின்றது. இந்நிலையில் சூடானில் பஞசம் போக்குவதற்காக ஐ.நாவின் உலக உணவு திட்டம் அமைப்பு  , 700 மில்லியன் டொலர்களை கோரியுள்ளது.

பஞ்சம் மற்றும் இடம்பெயர்வைத் தடுக்கவே அவசர நிதியாக இது தேவைப்படுகின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இராணுவ ஆட்சிக்கும், துணை இராணுவக்குழுக்களுக்கிடையில் மூன்றாண்டுகளுக்கு மேலாக நீடித்துவரும் போரால் பல்லாயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்.

14 மில்லியன் பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் சூடானில் எதிர்வரும் மார்ச் மாதமளவில் உணவு இருப்பு தீர்ந்துவிடும் என உலக உணவு அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, 700 மில்லியன் டொலர்கள் அவசர நிதி கிடைக்கும்பட்சத்தில் ஜுன் மாதம்வரை நிலைமையை சமாளிக்க முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.

சூடான் சனத்தொகையில் 50 சதவீதமானோர் பட்டினியை எதிர்கொண்டுள்ளனர் உலக உணவு திட்டம்  தெரிவித்துள்ளது.

தலையில் தேங்காய் விழுந்ததால் யாழில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் தலையில் தேங்காய் விழுந்ததால் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கோப்பாய் வடக்கு பகுதியைச் சேர்ந்த தம்பிராசா ஜெயச்சந்திரன் (வயது 60) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த 12ஆம் திகதி கொக்கத்தடி மூலம் தென்னை மரத்தில் தேங்காய் பிடுங்கியுள்ளார். இதன்போது தோங்காய் அவரது தலை மீது விழுந்துள்ளது.

இந்நிலையில் அவர் தனது மனைவியிடம் விடயத்தை கூறியுள்ளார்.

அதன்பின்னர் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டார். இதன்போது அவர் மயக்கமுற்றுள்ளார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றுக் காலை உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

மரக்கறி விலைப்பட்டியல் (17.01.2026)

மரக்கறி விலைப்பட்டியல் (17.01.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (17) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறந்தது ஈரான்!

0
உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையான ஹார்முஸ் நீரிணையை மீண்டும் முழுமையாகத் திறப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான இருவாரகால போர் நிறுத்தம் அமுலில் உள்ள காலப்பகுதியில் இவ்வாறு திறந்திருக்கும் என...

‘கிளீன் ஸ்ரீலங்கா’ செயல்திட்டங்கள் குறித்து மீளாய்வு!

0
'கிளீன் ஸ்ரீலங்கா' (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான செயல்திட்டங்கள் மற்றும் கடந்த ஆண்டின் முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17) முற்பகல்...

நுவரெலியாவில் குவியும் சுற்றுலா பயணிகள்!

0
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நுவரெலியா நோக்கி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை பாரியளவில் அதிகரித்துள்ளது. இதனால் டெவோன் (Devon) மற்றும் சென்கிளையார் (St. Clair) நீர்வீழ்ச்சிக் காட்சித் தளங்களில் சுற்றுலாப் பயணிகளின்...