Home Blog Page 119

கண்டியில் பிறந்து, தமிழரின் இதயங்களை ஆண்ட எம்.ஜி.ஆர்.

தமிழ் திரையுலகமும், திராவிட அரசியலும் ஒரே பெயரை உச்சரிக்கும் போது அது எம்.ஜி.ஆர்.—மறைந்த முன்னாள் தமிழக முதல்வர்,
மக்கள் திலகம் எம்.ஜி. ராமச்சந்திரன்.

இன்று அவரது 109 பிறந்தநாளில், அவரை நினைவுகூரும் தருணத்தில் ஒரு முக்கிய விடயத்தையும் குறிப்பிட வேண்டும். எம்.ஜி.ஆர். பிறந்தது தமிழ்நாட்டில் அல்ல; மலையகம் கண்டியில்.

1917ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் திகதி, இலங்கையின் கண்டி மாவட்டத்தில் பிறந்த எம்.ஜி.ஆர்., பின்னாளில் தமிழக அரசியலைத் தீர்மானித்த ஒரு பெரும் வரலாற்றுப் பாத்திரமாக உருவெடுப்பார் என்று அப்போது யாரும் எண்ணியிருக்க முடியாது.

கண்டி மலையக கலாச்சாரங்கள் கலந்த மண்—அந்த மண் வளர்த்த ஒரு குழந்தை, தமிழினத்தின் அடையாளமாக மாறியது வரலாற்றின் வியப்பு.

எம்.ஜி.ஆரின் வாழ்க்கை, புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்க்கையைப் போலவே ஆரம்பமானது. வறுமை, இடம்பெயர்வு, போராட்டம்—இவை அனைத்தையும் கடந்து, அவர் கலையுலகில் கால்பதித்தார்.

சினிமாவில் அவர் எடுத்த பாத்திரங்கள் வெறும் நடிப்பு அல்ல; அது ஏழை, எளிய மக்களின் கனவுகளின் பிரதிபலிப்பு.

அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் நாயகன், ஏழையின் பக்கம் நிற்கும் மனிதன்—இந்த உருவமே எம்.ஜி.ஆரை “நடிகர்” என்ற வரம்பைத் தாண்டி “மக்களின் மனிதர்” ஆக மாற்றியது.

இலங்கையின் கண்டியில் பிறந்தவர் என்ற அடையாளம், எம்.ஜி.ஆருக்கு தமிழினத்தை எல்லைகளால் அளக்க முடியாது என்பதைக் கற்றுத்தந்ததாகத் தோன்றுகிறது.

தமிழ்நாட்டில் அவர் அரசியல் அதிகாரத்தைப் பெற்றாலும், அவரது உள்ளத்தில் இன, மொழி, மனிதாபிமான உணர்வு ஆழமாக வேரூன்றியிருந்தது.

ஈழத் தமிழர் விவகாரங்களில் அவர் காட்டிய அக்கறை, மலையகத் தமிழர் மீது கொண்டிருந்த உணர்ச்சி—இவை அனைத்தும் அவரது பிறப்பின் நிலத்துடன் மறைமுகமாக இணைந்தவை.

கண்டியில் பிறந்த ஒரு தமிழர், சென்னை அரசியல் அரங்கில் முடிசூடுவது சாதாரண நிகழ்வு அல்ல. அது தமிழ்சமூகத்தின் எல்லை கடந்த வரலாற்றுச் சாதனை.

எம்.ஜி.ஆர். ஒருவரின் வாழ்க்கை, “பிறந்த இடம் முக்கியமல்ல; மக்களின் நம்பிக்கையைப் பெறும் இடமே வாழ்க்கையின் உச்சம்” என்பதை உணர்த்துகிறது.

இன்று அவரது பிறந்தநாளில்,
கண்டி மண்ணில் பிறந்து, தமிழ்நாட்டின் ஆட்சியாளராக உயர்ந்த அந்த மகத்தான மனிதரை நினைவுகூருவது, இலங்கைத் தமிழர்களுக்கும் ஒரு பெருமை.

எம்.ஜி.ஆர். ஒரு நடிகர் அல்ல; ஒரு முதல்வர் மட்டுமல்ல;
எல்லைகளைத் தாண்டிய தமிழர் அடையாளத்தின் சின்னம்.

அமெரிக்க தூதுவர் விடைபெறுவதால் பாற்சோறு சாப்பிட்டு மகிழ்சியை வெளிப்படுத்திய கம்மன்பில

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜு{லி சங், இன்று நாடு திரும்பும் நிலையில், அது தொடர்பில் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று ஊடக சந்திப்பை நடத்தி, பாற்சோறு சாப்பிட்டு தனது மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

நான்கு வருடகால சாபம் முடிவடைகின்றது எனவும், இது பாற்சோறு சமைத்து கொண்டாட வேண்டிய தருணம் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

ஜுலி சங் 2022 பெப்ரவரி மாதம் முதல் இலங்கைக்கான அமெரிக்காவின் தூதுவராக செயல்பட்டார். சுமார் 4 வருடகால இராஜதந்திர சேவையின் பின்னர் இன்று அவர் நாடு திரும்புகின்றார்.

நயினை அம்மனை வழிபட்ட ஜனாதிபதி!

வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்துக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று சென்று வழிபாடுகளை மேற்கொண்டார்.

நயினாதீவுக்குக் ஹெலியில் சென்ற ஜனாதிபதி, நாக விகாரையில்  விசேட வழிபாடுகளை மேற்கொண்டு, விகாராதிபதியிடம்ஆசிகளைப் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து, நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலயத்துக்கும் ஜனாதிபதி சென்று வழிபாடுகளை மேற்கொண்டார்.

வடக்கிலும், தெற்கிலும் இனவாதம் தலைதூக்க இடமளியோம்!

இன்றும் கூட, சிலர் தொல்பொருள் நினைவுச்சின்னங்கள் அல்லது மதத் தளங்களை மையமாகக் கொண்டு, ஆங்காங்கே இன மோதல்களைத் தூண்ட முயற்சித்தாலும், வடக்கு, தெற்கு, கிழக்கு அல்லது வேறு எந்த இடத்திலும் இனவாதம் மீண்டும் தலைதூக்க இடமளிக்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

மேலும், யுத்தத்தினால் இடம்பெயர்ந்த அனைத்து மக்களின் வீட்டுப் பிரச்சினையும் தனது பதவிக் காலத்தில் தீர்க்கப்படும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இன்று (16) முற்பகல் சாவகச்சேரி, மீசாலை, வீரசிங்கம் ஆரம்பப் பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற, யுத்தத்தினால் இடம்பெயர்ந்த குடும்பங்களின் மீள்குடியேற்றத்திற்காக 2,500 வீடுகளை நிர்மாணித்தல் உட்பட நாடு முழுவதும் 31,218 குடும்பங்களுக்காக வீடுகளை நிர்மாணிக்கும் “தமெக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ தேசிய வீட்டுத் திட்டம் 2026”

அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகோண்ட போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனை தெரிவித்தார்.

வட மாகாணத்தை விரிவான அபிவிருத்திக்கு உட்படுத்தி அந்த மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தியுள்ளது என்று நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.

சுற்றுலாத் துறையை மேம்படுத்தக் கூடிய அழகிய கடற்கரைகளும், பல கவர்ச்சிகரமான இடங்களும் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ளதுன என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்காக, பலாலி விமான நிலையத்தைப் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், காங்கேசன்துறை துறைமுகப் பணிகளை உடனடியாகத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதற்காக இந்திய அரசாங்கம் 60 மில்லியன் டொலர் நிதி உதவியை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

முதல் முறையாக யாழ்ப்பாண மக்கள் நம்பிக்கை வைக்கும் ஒரு அரசாங்கம் இன்று நாட்டில் உருவாகி இருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அந்த நம்பிக்கை ஒரு துளி கூட மீற இடமளிக்கப்பட மாட்டாது என்றும் உள்ளங்களை ஒன்றிணைத்து, பிள்ளைகளுக்காக மோதலற்ற, ஒற்றுமையுடன் வாழக்கூடிய நாட்டை உருவாக்க ஒன்றிணையுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,

குறிப்பாக யுத்தத்தினால் பெருமளவான வீடுகள் சேதமடைந்தன. நீண்டகாலம் சென்ற போதும் அந்த வீடுகள் முழுமையாக நிர்மாணிக்கப்பட்டு நிறைவு செய்யப்படவில்லை.யாழ்ப்பாண மாவட்டத்தில் வாழும் அநேகமானோர் யுத்த சமயத்திலும் இடம்பெயர்ந்திருந்தார்கள். யுத்தத்தின் பின்னரும் இடம்பெயர்ந்திருந்தார்கள். நீண்டகாலமாக தமக்கென வீடோ, இடமோ இன்றி அவர்கள் வாழ்வது நியாயமல்ல.

எமது ஆட்சிக் காலத்திற்குள் யுத்தத்தினால் இடம்பெயர்ந்துள்ள அனைத்து மக்களினதும் வீட்டுப் பிரச்சினையை நாம் தீர்ப்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

இந்த பிரதேச மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் எமது அரசாங்கத்தை உருவாக்க பங்களித்தார்கள்.ஆட்சியில் இருக்கும் தரப்பினருக்கு எதிரான மற்றும் உடன்பாடற்ற நிலைப்பாடே நீண்டகாலமாக இங்கு காணப்பட்டது. அதில் தவறில்லை. அரசாங்கம் இனவாதத்தை போசிப்பதாகவோ மக்களின் சொத்துக்களை திருடுவதாகவோ பொதுமக்கள் குறித்து சிந்திக்காமல் இருந்தாலோ அல்லது அரசாங்கம் தம்மைப் பற்றி மாத்திரமே சிந்திப்பதாக இருக்குமாயின் அரசாங்கமும் மக்களும் தூரமாவதை தடுக்க முடியாது.

ஏனென்றால் அவை மக்களுக்கு எதிரான முரண்பாடுகளை உருவாக்கும் அரசாங்கங்கள். தங்களையும் தங்கள் குடும்பத்தையும் பற்றி மாத்திரம் சிந்திக்கும் அரசாங்கங்களாகவே அவை இருந்தன.ஆனால் இலங்கை வரலாற்றில் முதன்முறையாக நாட்டின் பொதுமக்களின் அரசாங்கம் உருவாக்கப்பட்டது. தேர்தல் சமயங்களில் மக்களின் மனங்களில் குறிப்பாக வடபகுதி மக்களிடையே எம்மைப்பற்றி குழப்பமும் தெளிவின்மையும் இருந்திருக்கும். எம்மை ஆட்சிபீடமேற்ற வாக்களித்தாலும் சந்தேகத்துடன் தான் வாக்களித்திருக்கலாம்.

எமது அரசாங்கம் உருவாகி ஒரு வருடத்திற்கு சற்று கூடுதல் காலம் சென்றுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நீங்கள் நம்பிக்கை வைக்கக் கூடிய அரசாங்கம் முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ளது.முதலில் கீழ்மட்டத்தில் உள்ள மக்களின் கஷ்டங்களை தீர்க்க வேண்டும். அரசாங்கமென்ற வகையில் எம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.வீடற்றவர்களுக்கு வீட்டை வழங்க நடவடிக்கை எடுப்போம்.பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்க வேண்டும். வரலாற்றில் அதிக தொகையை அதற்காக ஒதுக்கியுள்ளோம்.

மக்களுக்கு சிறந்த வருமான வழியை அமைக்க வேண்டும். குறிப்பாக விவசாயத்துறை,தெங்குப் பயிர்ச்செய்கை, மீன்பிடித்துறை மற்றும் சிறிய கைத்தொழிற்துறைகள் என்பன இப்பிரதேச மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. அந்த அனைத்துக் கைத்தொழிற்துறைகளுக்கும் ஆதரவு வழங்கி மக்களின் வாழ்க்கை நிலையை, இருப்பதை விட உயர்ந்த நிலைக்கு மேம்படுத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். இது அதற்காக பாடுபடும் அரசாங்கம். அது மட்டும் எமக்கு போதுமானதல்ல.நீண்டகாலமாக எமது வாழ்வில் பெரும்பகுதியை யுத்தத்துடனே கழித்தோம்.

மோதல்களுக்கு மத்தியில் வாழ்ந்தோம். சந்தேகத்துடன் வாழ்ந்தோம். குரோதத்துடன் வாழ்ந்தோம். தமிழ் மக்கள் குறித்து சிங்கள இனவாதக் குழுக்கள் சந்தேகமாக பார்த்தன.சிங்கள மக்கள் குறித்து தமிழ் இனவாதக் குழுக்கள் சந்தேகக் கண்கொண்டு நோக்கின.நீண்டகாலமாக முரண்பாடுகள் நீடித்தன.அந்த மோதலினால் எவருக்கும் பலன் கிடைக்கவில்லை. அந்த மோதலினால் எஞ்சியது எதுவும் இல்லை.

வீடுகளை இழந்த குடும்பங்கள்,பெற்றோர்களை இழந்த பிள்ளைகள், பொருளாதாரத்தில் முழுமையான வீழ்ச்சி என்பவை தான் கிடைத்தன. உற்றார் உறவினர்களை இழக்க நேரிட்டது. வடக்கு தெற்கு இரண்டிலுமுள்ளோர் இந்த அழிவினால் பாதிக்கப்பட்டனர்.இந்த முழு அழிவின் பின்னாலும் அரசியல் தான் இருந்தது. அதிகாரத்தைப் பெறுவதற்காக சிங்கள மக்களை தூண்டிவிட்டார்கள்.அதிகாரத்தைப் பெறுவதற்காக தமிழ் மக்களை தூண்டிவிட்டார்கள்.இவ்வாறான இனவாத அரசியல் தான் முன்னர் காணப்பட்டது.இன்றும் ஆங்காங்கே அந்த நிலைமை இருக்கிறது.

தொல்பொருள் விடயத்தை முன்வைத்து அல்லது ஒரு மத ஸ்தலத்தை காரணம் காட்டி இந்த இனவாத முரண்பாடுகளை தூண்டிவிடப் பார்க்கிறார்கள்.மீண்டும் எமது நாட்டில் வடக்கிலோ, தெற்கிலோ, கிழக்கிலோ நாட்டின் எப்பகுதியிலும் சிங்களவரோ தமிழரோ முஸ்லிமோ எந்த ஒரு இனவாதத்திற்கும் இடமளிக்க மாட்டோம் என உங்களுக்கு ஒரு உத்தரவாதத்தை தருகிறேன். நாம் அனைவரும் சகோதரத்துவத்துடனும் ஒற்றுமையுடனும் வாழும் நாடு தேவை.அதேபோன்று , சிறப்பான பொருளாதா நிலையுள்ள பொழுதுபோக்குள்ள மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை எமக்கு அவசியம்.

யாழ்ப்பாணத்தில் பாரிய விளையாட்டு மைதானமொன்றை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளோம்.அதில் சில சிக்கல்கள் உருவாகியுள்ளன. அதனை எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்து நேற்று மாவட்ட செயலாளருடன் கலந்துரையாடினேன்.அதற்கான பணிகளை இந்த வருடத்திற்குள் துரிதமாக நிறைவு செய்ய உள்ளோம். பிள்ளைகளுக்கு விளையாடுவதற்காக, அவர்களுக்கு தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்த, பொழுதுபோக்காக வாழக்கூடிய வாய்ப்பை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

யாழ்மாவட்டத்தில் உள்ளக விளையாட்டரங்கொன்றை உருவாக்க திட்டமிட்டோம்.ஆனால் அரசியல்வாதிகளின் ஊடாக வழக்கு தொடரப்பட்டது. யாழ்ப்பாண பிள்ளைகளுக்கு அது அவசியமானது. ஆனால் அரசியல்வாதிகள் வழக்குத் தொடர்கின்றனர்.அதாவது அவர்கள் மக்களுக்கு எதிரான அரசியலை செய்கிறார்கள். நாம் மிக விரைவில் அந்த வழக்கை நிறைவு செய்து அதே இடத்திலோ அல்லது அதற்கு அண்மித்த பகுதியில் அந்த உள்ளக விளையாட்டரங்கின் பணிகளை நிறைவு செய்ய எதிர்பார்க்கிறோம்.

அதேபோன்று சுற்றுலாத்துறையின் ஊடாக பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பு கிடைக்கிறது.யாழ் மாவட்டம் மிகவும் ரம்யமான கடற்கரையைக் கொண்டுள்ளது. மக்களை கவரக்கூடிய பல பிரதேசங்கள் உள்ளன. இருந்தாலும் இன்னும் பலமான சுற்றுலாத்துறை கிடையாது.

பலாலி விமான நிலையத்திலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து அதனை மறுசீரமைக்க எதிர்பார்க்கிறோம்.மிகவிரைவில் காங்கேசன்துறை துறைமுக பணிகளை ஆரம்பிக்க இருக்கிறோம்.இந்திய அரசாங்கம் 60 மில்லியன் டொலர் உதவியை வழங்க உடன்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் மிக முன்னேற்றகரமான சுற்றுலாத்துறையை ஆரம்பிக்க எதிர்பார்க்கிறோம்.அதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களுக்கு சிறந்த தொழில்கள் அவசியம். சிறந்த பொருளாதாரம் அவசியமானது.மக்களுக்கு பொருளாதார வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.எமது பொறுப்பை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம்.

இங்குள்ள பெற்றோர்கள், சகோதர சகோதரிகள்,தமது வாழ்நாளில் முதன் முறையாக ஜனாதிபதி, அமைச்சர்கள்,அமைச்சின் செயலாளர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் கலந்து கொள்வதாக இருக்கும் என கருதுகிறேன்.

சந்தேகத்தையும் அவநம்பிக்கையையும் ஒதுக்க வேண்டும்.எமது சந்ததி யுத்தம் செய்து கொண்டது.எமது சந்ததி மோதிக் கொண்டது.எமது பிள்ளைகளின் சந்ததிக்கு மோதலற்ற நாட்டை ,யுத்தமில்லாத நாட்டை ஒற்றுமையாக வாழும் நாட்டை உருவாக்க வேண்டும்.அதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.

துணிச்சலான செயற்பாட்டை இந்த பெற்றோர் மற்றும் சகோதர சகோதரிகள் மேற்கொண்டார்கள். நேரில் கண்டிறாத எம்மை ,கேள்விப்படாத எம்மை, நம்பி இணைந்திருக்கிறீர்கள்.நாம் ஆட்சியமைக்க நீங்கள் பங்களித்திருக்கிறீர்கள்.நீங்கள் எம்மீது நம்பிக்கை வைத்துள்ளீர்கள். நீங்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை எந்த வகையிலும் மீறாமல் மென்மேலும் நம்பிக்கை ஏற்படும் வகையில் அன்பு, நெருக்கம் அதிகரிக்கும் அரசாங்கம் மற்றும் மேம்படுத்தும் தலைவர்களாக நாமிருப்போம்.நீங்கள் எம்மை விட்டும் ஒதுங்கிச் செல்லாதது போன்றே நாமும் உங்களை விட்டும் விலக மாட்டோம்.

நாம் இணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்புவோம். அதற்காக அனைவரும் சகோததரத்துவத்துடனும் குறிக்கோளுடனும் இணைந்து செயற்படுமாறு அழைப்பு விடுக்கிறேன்.

எதிர்க்கட்சி தலைவர் – அமெரிக்க தூதுவர் சந்திப்பு!

தனது இராஜதந்திர பதவிக் காலச் சேவை நிறைவடைந்து நாட்டிலிருந்து விடைபெற்றுச் செல்லும் இலங்கைக்கான அமெரிக்க ஜூலி சங் (Julie Chung), இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்து கலந்துரையாடினார்.

அவரது பதவி காலத்தில், இரு நாடுகளின் உறவுகளை பல்வேறு துறைகள் ஊடாக வலுப்படுத்துவதற்கும், முன்னேற்றம் காணச் செய்வதற்கும், வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கும் எடுத்த முயற்சிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

மிக அண்மைக் காலங்களில் இலங்கை எதிர்கொண்ட அசாதாரண துயர் சம்பவங்களின் போது இலங்கைக்கு மனிதாபிமான ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் அமெரிக்கா ஊடாக பெற்றுத் தந்த ஒத்துழைப்புகளுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தமது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்தார்.

 

31,218 புதிய வீடுகளை நிர்மாணிக்கும் தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போரால் பாதிக்கப்பட்டு வீடுகளின்றித் தவிக்கும் 2,500 குடும்பங்களுக்கான வீடுகளை நிர்மாணிக்கும் விசேட வேலைத்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை (16.01.2026) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

‘தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ், நாடு முழுவதும் 31,218 புதிய வீடுகளை நிர்மாணிக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை இடம்பெற்றது.

யாழ்ப்பாணம், சாவகச்சேரி – மீசாலை கிழக்கில் தெரிவு செய்யப்பட்ட பயனாளி ஒருவரின் வீட்டுக்கான அடிக்கல், மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில், குறித்த பயனாளியின் குடும்பத்தாரால் நடுகை செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மீசாலை வீரசிங்கம் ஆரம்பப் பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற பிரதான நிகழ்வில், பயனாளிகளுக்கான வீட்டு மானியக் காசோலைகள் ஜனாதிபதி முன்னிலையில் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனும் கலந்துகொண்டார்.

நீண்டகாலமாக தற்காலிக வசிப்பிடங்களில் வாழ்ந்து வரும் இடம்பெயர்ந்த குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கிலும், அவர்களுக்குப் பாதுகாப்பானதொரு எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கிலும் இவ்வீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் எல்.பி.குமுது லால் வரவேற்புரையுடன் ஆரம்பமான இந்நிகழ்வில், வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் கலாநிதி எச்.எம்.சுசில் ரணசிங்க மற்றும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆகியோர் உரையாற்றினர்.

அதனைத் தொடர்ந்து மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் கௌரவ அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெ.றஜீவன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர், மாவட்டச் செயலக அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள், பயனாளிகள் மற்றும் பெருந்திரளான பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.

‘இம்முறை இலக்கு தப்பாது’- ட்ரம்ப்புக்கு ஈரான் எச்சரிக்கை!

2024ம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த ஒரு துப்பாக்கிச் சூட்டில் ட்ரம்ப் நூலிழையில் உயிர் தப்பிய படத்துடன், ‘இந்த முறை குண்டு இலக்கை தவறவிடாது’ என எழுதப்பட்ட வாசகத்துடன் ஈரானில் நடைபெற்ற ஊர்வலம் குறித்த செய்தியை ஈரான் அரசு தொலைக்காட்சி நேற்று ஒளிபரப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது, ட்ரம்ப்பக்கான ஈரானின் நேரடி எச்சரிக்கையாகக் கருதப்படுகிறது.

ஈரான் ஆட்சியாளர்களுக்கு எதிராக அந்நாட்டில் கடந்த சில வாரங்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதில், போராட்டக்காரர்கள் தரப்பில் 3,500-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படையினர் தரப்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட பாதுகாப்புப் படையினரின் உடல்களின் இறுதி ஊர்வலம் தெஹ்ரானில் நடைபெற்றது.

இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களில் பலர் அந்த நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் புகைப்படங்களை ஏந்தியவாறு பங்கேற்றனர்.
மேலும் பலர், அமெரிக்காவுக்கு மரணம் என அச்சிடப்பட்ட பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

இதில் பங்கேற்ற ஒரு நபர், கடந்த 2024-ம் ஆண்டு அமெரிக்காவின் பென்சில்வேனியாவின் பட்லரில் நடந்த ஒரு பிரச்சாரக்கூட்டத்தில் ட்ரம்ப் பேசிக்கொண்டிருக்கும்போது நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு குறித்த புகைப்படத்தை ஏந்தியவாறு பங்கேற்றார்.

அந்த புகைப்படத்தில், ‘இந்த முறை குண்டு இலக்கை தவறவிடாது’ என பாரசீக மொழியில் எழுதப்பட்ட வாசகம் எழுதப்பட்டிருந்தது.

இந்த வீடியோ, அரசு கட்டுப்பாட்டில் உள்ள தொலைக்காட்சியான இஸ்லாமிய குடியரசு ஈரான் செய்தி நெட்வொர்க் என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

இது, டொனால்ட் ட்ரம்ப்புக்கான ஈரானின் நேரடி எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

டொனால்ட் ட்ரம்ப்புக்கு எதிராக கடந்த காலங்களில் நடந்த பல்வேறு சம்பவங்களின் பின்னணியில் ஈரான் அரசு இருந்ததாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

வெளிநாடுகளில் நிகழ்ந்த பல்வேறு கொலைச் சதித்திட்டங்களுடனும் ஈரான் அரசு இதற்கு முன் தொடர்பு படுத்தப்பட்டுள்ளது. அவை, பெரும்பாலும் ஈரானிய அதிருப்தியாளர்களை இலக்காகக் கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தேவி ஸ்ரீபிரசாத் நாயகனாக அறிமுகமாகும் ‘எல்லம்மா’

தேவி ஸ்ரீபிரசாத் நாயகனாக அறிமுகமாகும் படத்துக்கு ‘எல்லம்மா’ எனப் பெயரிட்டுள்ளனர்.

வேணு எல்டண்டி இயக்கத்தில் உருவாகும் ‘எல்லம்மா’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத். இதன் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதற்கு தெலுங்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தேவி ஸ்ரீபிரசாத்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இப்படத்தில் நாயகனாக நடிக்க நிதின், நானி, சர்வானந்த், பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியது படக்குழு. இறுதியாக தேவி ஸ்ரீபிரசாத் நாயகனாக நடிக்கவுள்ளார்.

’எல்லம்மா’ படத்துக்காக தனது உடலமைப்பை முழுமையாக மாற்றியிருக்கிறார் தேவி ஸ்ரீபிரசாத். நாயகனாக நடிப்பது மட்டுமன்றி ‘எல்லம்மா’ படத்துக்கு இசையமைப்பாளராகவும் பணிபுரியவுள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. தில் ராஜு தயாரிக்கவுள்ள இப்படத்தின் இதர நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தெலுங்கில் ‘பாலகம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் வேணு எல்டண்டி. அப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து தில் ராஜு தயாரிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் வேணு எல்டண்டி.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் தேவி ஸ்ரீபிரசாத். இப்படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளதால், பிற படங்களின் இசையமைப்புக்கு சில காலம் ஓய்வு கொடுப்பார் எனத் தெரிகிறது.

“நான் பொயிட்டு வாரன்” – யாழில் ஹிட்டான ஜனாதிபதியின் நடை பயிற்சி!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யாழ்.மண்ணில் நடை பயிற்சியில் ஈடுபடும் காணொளி வைரலாகியுள்ளது.

தனக்கு காலை வணக்கம் சொன்ன இளைஞர் ஒருவருக்கு ஜனாதிபதி தமிழில் பதில் அளிப்பதும் பலரது பாராட்டடை பெற்றுள்ளது.

தைப்பொங்கல் நிகழ்வு மற்றும் அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

பொங்கல் நிகழ்வுகளில் நேற்று பங்கேற்ற ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை ஜனாதிபதி நடை பயிற்சியில் ஈடுபட்டார். அவரை சூழ விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பளித்தனர்.

ஜனாதிபதி நடந்து செல்லும்போது இளைஞர் ஒருவர் “குட்மோர்னிங் சேர்” எனக் குறிப்பிடுவார்.

அதற்கு கை காட்டி, “நான் போய்ட்டு வாரன்” என ஜனாதிபதி பதிலளிப்பார்.

மறுமுனையில் இருந்த இளைஞர் நன்றி எனக் குறிப்பிடுவார்.

இது தொடர்பான காணொளி தற்போது சமூகவலைத்தளங்களை முழுமையாக ஆக்கிரமித்துள்ளது.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறந்தது ஈரான்!

0
உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையான ஹார்முஸ் நீரிணையை மீண்டும் முழுமையாகத் திறப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான இருவாரகால போர் நிறுத்தம் அமுலில் உள்ள காலப்பகுதியில் இவ்வாறு திறந்திருக்கும் என...

‘கிளீன் ஸ்ரீலங்கா’ செயல்திட்டங்கள் குறித்து மீளாய்வு!

0
'கிளீன் ஸ்ரீலங்கா' (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான செயல்திட்டங்கள் மற்றும் கடந்த ஆண்டின் முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17) முற்பகல்...

நுவரெலியாவில் குவியும் சுற்றுலா பயணிகள்!

0
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நுவரெலியா நோக்கி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை பாரியளவில் அதிகரித்துள்ளது. இதனால் டெவோன் (Devon) மற்றும் சென்கிளையார் (St. Clair) நீர்வீழ்ச்சிக் காட்சித் தளங்களில் சுற்றுலாப் பயணிகளின்...