Home Blog Page 120

ஒன்றிணைவுக்குரிய பேச்சு வெற்றியளிக்கும்: சஜித் நம்பிக்கை!

மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக முன்னெடுக்ககூடிய அத்தனை நடவடிக்கைகளையும் ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்கும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக கொண்டுவருவதற்கு உத்தேசிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிரணி கைவிடுமா என அவரிடம் கேள்வி எழுப்பட்டது.

இதன்போது சஜித் பிரேமதாச கூறியவை வருமாறு,

“ கல்வி மறுசீரமைப்பை ஒரு வருடத்துக்கு பிற்போடுவதால் இந்த ஆட்சியின்கீழ் கல்வித்துறையில் எழுந்துள்ள பிரச்சினைகள் தீரப்போவதில்லை.

பல்வேறு தரப்பினர்களுடனும் கலந்துரையாடியே கல்வி மறுசீரமைப்பு இடம்பெற வேண்டும். இது கூட்டு முயற்சியாக இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய ஆட்சியின்கீழ் கட்சியொன்றின் நிகழ்ச்சி நிரல் அமுலாகின்றது.

நம்பிக்கையில்லாப் பிரேரணை உட்பட அனைத்து விடயங்களையும் நாம் உரிய வகையில் கையாள்வோம். 41 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்துக்காக நாம் செய்ய வேண்டிய அனைத்து திட்டங்களையும் முன்னெடுப்போம்.

அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பவற்றை ஒன்றிணைப்பதற்குரிய முயற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கே நாம் எதிர்பார்க்கின்றோம்.

இது கொள்கை அடிப்படையிலான ஒன்றிணைவாகும். உரிய நேரத்தில், உரிய அறிவிப்பு வெளியிடப்படும்.” – என்றார்.

நோபல் பரிசை ட்ரம்புக்கு வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர்!

வெனிசுலா நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, தான் பெற்ற அமைதிக்கான நோபல் பரிசுக்கான பதக்கத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு வழங்கியுள்ளார்.

கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா நாட்டில் ஜனநாயகம் மலர போராடிய மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டது.

அப்போதே அந்தப் பரிசை ட்ரம்ப்புக்கு அர்ப்பணிப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜனாதிபதி ட்ரம்ப்பை வெள்ளை மாளிகையில் அவர் சந்தித்து பேசினார். அப்போது தனது நோபல் பரிசை ட்ரம்ப்புக்கு அவர் வழங்கினார்.

“அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வசம் அமைதிக்கான நோபல் பரிசை நான் வழங்கினேன். இது எங்கள் தேசத்தின் சுதந்திரத்துக்காக அவரது தனித்துவ அர்ப்பணிப்பிற்கான அங்கீகாரம்” என மரியா கொரினா மச்சாடோ தெரிவித்தார்.

வெள்ளை மாளிகைக்கு வெளியே பத்திரிகையாளர்களை அவர் சந்தித்தார். அப்போது அவரது ஆதரவாளர்கள் அங்கு திரண்டது குறிப்பிடத்தக்கது.

நோபல் பரிசை தனக்கு வழங்கிய மச்சாடோவுக்கு சமூக வலைதள பதிவு மூலம் ட்ரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.

‘நோபல் பரிசை பெற்றவர்கள் அதை அடுத்தவருக்கு பகிரவோ, மாற்றவோ முடியாது’ என இந்த விவகாரம் தொடர்பாக நோபல் கமிட்டி குழு தெரிவித்துள்ளது.

22 ஆம் திகதி இலங்கை வருகிறது IMF குழு!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் (IMF) குழவினர் எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கை வரவுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் கடன் தொடர்பில் 5ஆவது மீளாய்வு கூட்டத்துக்காகவே இவர்கள் இலங்கை வருகின்றனர்.

இலங்கை நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட குறைநிரப்பு பிரேரணை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படும் என தெரியவருகின்றது.

மரக்கறி விலைப்பட்டியல் (16.01.2026)

மரக்கறி விலைப்பட்டியல் (16.01.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (16) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

பிளவுகளைக் கடந்து அனைவரும் ஒன்றிணைந்து முன்னேறுவோம்!

“உலகெங்கும் வாழும் இந்து மக்கள் தங்கள் அறுவடைக்கு பங்களிக்கும் சூரியன், விவசாயிகள் மற்றும் பசுக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தைப்பொங்கலைக் கொண்டாடுகின்றனர்.

அறுவடைக்கு உதவும் சூரியனுக்கு, விவசாயிகளுக்கு, பசுக்களுக்கு நன்றி செலுத்தும் தைபொங்கல் பண்டிகையில் நாம் அனைவரும் ஒன்றுபடுவதை காண்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். இது இயற்கையோடு இணைந்த பண்பாட்டையும் பிரதிபலிப்பதாக அமைகின்றது.

தைப்பொங்கல் பண்டிகை மக்களின் நன்றியுணர்வு கலாசாரத்தை வளர்க்கும் நம்பிக்கையை ஊக்குவிப்பதோடு, அமைதி, ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தையும் வெளிப்படுத்துகின்றது.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தைப்பொங்கல் விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“தென்னிந்தியாவை மையமாகக் கொண்டு தொடங்கிய இந்தப் தைப்பொங்கல் பண்டிகை, சூரிய பகவானுக்கு நன்றி செலுத்துவதன் மூலம் கனமழை பொழிந்து மனித வாழ்விற்கு எண்ணற்ற நன்மைகளைப் பெற்றுத் தரும் என்று மக்கள் நம்புகின்றார்கள்.

சீரான அறுவடையைப் போல சீரான தொடக்கமும் இதன் மூலம் நிகழ்கின்றது.

சூரிய தெய்வத்துக்காக வணங்கி வழிபடுதல், விவசாயத்துக்கு உதவும் அனைத்து செயல்களையும், பசு வளத்தின் மதிப்பைப் பாராட்டுதலும் விவசாயிகளுக்கு நன்றி செலுத்துதலும் இந்தப் பண்டிகை மூலம் எடுத்தியம்பப்படுகின்றது. இதுவே செழிப்பு, வளம், ஒற்றுமை, நட்பு மற்றும் அனைவருக்கும் சௌபாக்கியத்தைக் கொண்டு வருகின்றது.

நமது நாடு கடந்த காலங்களில் நான்கு பெரும் துயர் சம்பங்களை எதிர்கொண்டது . இதனால் மக்களின் வாழ்க்கை நிலைகுலைந்து போயுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நடைமுறை ரீதியிலான சகல நடவடிக்கைகளையும் எடுக்க நாம் தயார்.

செழிப்பு, வளங்கள், நன்மைகள், செல்வம் மற்றும் வருமானம் ஆகியவற்றின் விடியல் சமமாகப் பகிரப்படும் கட்டமைப்பொன்றை உருவாக்குவதற்கு எதிர்பார்க்கின்றோம். இன, மத வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல், ஒரு நாடாக அமைதி, ஒற்றுமை, நட்புறவின் மூலம் பொதுவான இலக்கை நோக்கிச் செல்வதை நாம் இலக்காகக் கொள்ள வேண்டும்.” – என்றார்.

தடைகளை தகர்த்தெறிந்து முன்னோக்கி செல்வோம்: அமைச்சர் சந்திரசேகர் சூளுரை!

“ நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்தின்போது எத்தடை வரினும் அவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து இலக்கை நோக்கி பயணிப்போம்.” என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் வேலனை மற்றும் மானிப்பாய் பகுதிகளில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பங்கேற்புடன் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” இலங்கையில் டித்வா புயலால் 400 இற்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். சிலர் காணாமல் போனார்கள். அதுமட்டுமல்ல முழு நாடும் ஸ்தம்பிதமடைந்தது.

பொருளாதார ரீதியில் பெரும் அழிவுகள் ஏற்பட்டன. இவ்வாறு பேரழிவு ஏற்பட்டிருந்த நிலையிலும் சிலர் அரசியல் நடத்துவதற்கே முற்பட்டனர்.

இலங்கையால் இனி மீண்டெழ முடியாது, இந்த அரசாங்கத்தால் அப்பணியை செய்ய முடியாது என கோஷம் எழுப்பினர்.

அரசாங்க இயந்திரம்கூட மந்த கதியிலேயே இயங்குகின்றது. எனவே , மீண்டெழுவது சாத்தியமில்லாத விடயம் எனவும் கருத்துகளை பரப்பினர்.

ஆனால் எமது நாட்டு அரசாங்க ஊழியர்களும், மக்களும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்ப முன்வந்தனர்.

முழு நாடும் ஒன்றிணைந்து உதவி திட்டங்களை முன்னெடுத்தது. வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களும் நேசக்கரம் நீட்டினார்கள். உலக நாடுகளும் துணை நின்றன.

தை பிறந்தாள் வழி பிறக்கும் என்பார்கள், அதற்காகவே நாம் பிரார்த்திக்கின்றோம். ஆனால் தை பிறந்தாலும் மக்களுக்கு வழி பிறக்கக்கூடாது என சில அரசியல்வாதிகள் சிந்திக்கின்றனர்.

எது எப்படி இருந்தாலும் தை பிறப்பதையும், இந்நாட்டுக்கு வழி பிறப்பதையும் அந்த அரசியல்வாதிகளால் தடுத்து நிறுத்த முடியாது. அவர்களின் சூழ்சிகள் எல்லாம் தோற்கடிக்கப்படும்.

இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களும் ஒன்றிணையும் பட்சத்திலேயே மீட்சி என்பது சாத்தியம். பிரிந்து நின்று எதையும் சாதிக்க முடியாது.” – என அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் மேலும் கூறினார்.

கிரீன்லாந்துமீது வச்ச குறி தப்பாது!

“ கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பதே சிறந்தது” – என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அறிவித்துள்ளார்.

பிரான்ஸ், ஜேர்மன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் பரப்பளவுக்கு இணையாக ஆர்டிக் பகுதியில் அமைந்துள்ள உலகின் மிகப் பெரிய தீவாக கிரீன்லாந்து உள்ளது.

இது டென்மார்க் நாட்டின் கீழ் தன்னாட்சி பிராந்தியமாக உள்ளது.

கிரீன்லாந்தை சுற்றியுள்ள கடல் பகுதிகள் தற்போது ரஷ்யா, சீன கப்பல்களால் நிரம்பியுள்ளதாகவும் அதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்காவுடன் கிரீன்லாந்து இணைக்கப்படும் என்றும் ஜனாதிபதி டொனால்ட ; ட்ரம்ப் அண்மையில் அறிவித்தார்.

இதற்கு டென்மார்க் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் கிரீன்லாந்தை அமெரிக்காவின் 51-வது மாகாணமாக இணைப்பது தொடர்பான சட்டமூலத்தை அமெரிக்க குடியரசு கட்சி எம்.பி.யான ராண்டி பைன் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

இதற்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளத்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கருத்து வெளியிடுகையில்,

‘‘அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் கிரீன்லாந்து இருப்பதைத் தவிர வேறு எதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பதே சிறந்தது’’ என்று குறிப்பிட்டார்.

 

மரக்கறி விலைப்பட்டியல் (15.01.2026)

மரக்கறி விலைப்பட்டியல் (15.01.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (15) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

ஈரான்மீது இராணுவ நடவடிக்கைக்கு தயாராகும் அமெரிக்கா?

ஈரானின் போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கு அந்நாட்டு அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுத்துவருகின்றது.

இந்நிலையில் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள அமெரிக்கா, அடக்குமுறையை நிறுத்தாவிட்டால் ஈரானுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

கத்தாரிலுள்ள தமது படை தளத்தில் இருந்து பணியாளர்களை அமெரிக்கா மீள அழைத்துள்ளது. இதனால் ஈரான்மீது இராணுவ நடவடிக்கை எடுக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

ஈரான்மீதான இராணுவ நடவடிக்கைக்கு சவூதி, கட்டார் உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன என்று அறியமுடிகின்றது.

ஈரான் நாட்டில் அயோதுல்லா அலி காமேனி தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது.

இந்நிலையில், நாட்டில் அதிகரித்துள்ள பணவீக்கம், அதன் தொடர்ச்சியாக அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை உள்ளிட்டவற்றால் அதிருப்தி அடைந்துள்ள மக்கள் அரசுக்கு எதிராக தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரானின் 31 மாகாணங்களில் 100 நகரங்களில் 18-வது நாளாக நீடித்து வருகிறது போராட்டம்.

ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்க பாதுகாப்பு படையினரை அரசு இறக்கி விட்டு உள்ளது. இதன்படி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

வன்முறையை தடுக்கும் நோக்கில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இணையதள சேவையை அரசு முடக்கி வைத்து உள்ளது. சில அரசு ஊடகங்கள் மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 3,428 பேர் பலியாகி உள்ளனர் என நார்வே நாட்டை அடிப்படையாக கொண்ட மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்து உள்ளது.

அவர்கள் ஈரான் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டவர்கள் என்றும் தெரிவித்து உள்ளது.

போராட்டக்காரர்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

“கருணையுடன் கூடிய சமுதாயத்தை உருவாக்க வாய்ப்பு கிடைக்கட்டும்”

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் பொங்கல் தின வாழ்த்துச் செய்தி

ஒருவரை ஒருவர் மதித்து, கருணையுடன் கூடிய சமுதாயத்தை உருவாக்க வாய்ப்பு கிடைக்கட்டும்.

பல இனங்கள், பல மதங்கள் மற்றும் பல மொழிகள் கொண்ட சமுதாயத்தின் இருப்பு உறுதிப்படுத்தப்படுவது, அந்தந்த இனங்களின் கலாசார அடையாளங்களை மதிக்க அனைவரும் காட்டும் அர்ப்பணிப்பின் அடிப்படையிலாகும்.

அதேபோல் அந்தந்த கலாசாரங்களின் மையக் கருத்துகளை சரியாகப் புரிந்துகொண்டு செயல்படுவதிலுமாகும் இந்து பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தைப்பொங்கல் விழா நமக்குச் சொல்லித் தரும் பாடத்தை நன்றாக அறிந்துகொண்டால், அது நமது வாழ்க்கையில் மிகப்பெரிய பயனாக இருக்கும்.

நன்றியுணர்வு பற்றி தைப்பொங்கல் விழா நமக்கு நினைவூட்டுவது, இயற்கைக்கு, உயிரினங்களுக்கு கூட நமது அன்பு, கருணை, மரியாதை செலுத்தப்பட வேண்டும் என்பதேயாகும்.

தற்போதைய உலகில் நாம் எதிர்கொண்டுள்ள இயற்கைப் பேரிடர்கள் மற்றும் மோதல்கள் அனைத்திற்கும் காரணம் இயற்கையும் மனித மனமும் கடுமையாக சிதைந்திருப்பதேயாகும்.

தைப்பொங்கல் கொண்டாட்டத்தில் நாம் நினைவில் கொள்ள வேண்டியதும் புரிந்துகொள்ள வேண்டியதும், அந்த விழாவின் பல்வேறு நிகழ்வுகளில் கொண்டாடப்படும் கலாசார அம்சங்களின் ஆழமான பொருளேயாகும்.

இந்தத் தருணத்தில் நமது பொறுப்பு, அந்த தூரநோக்கையும் தத்துவத்தையும் சமுதாயத்திற்கு வழங்குவதற்கான வழிகளை முடிந்த அளவு விரிவுபடுத்துவதாகும். பாடசாலைகள், அறநெறி பாடசாலைகள்,

விகாரைகள், கோயில்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் ஆகியவை அடிப்படையில் அந்தந்த மதத்தினருக்கு உரிய கலாசார மற்றும் மத நிகழ்வுகள் பற்றிய முறையான அறிவை வழங்க தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்தகைய நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் ஒருவரையொருவர் மதித்து, கருணையுடன் கூடிய சமுதாயத்தை உருவாக்க நமக்கு வாய்ப்பு கிடைக்கும்.

தைப்பொங்கல் விழாவின் உண்மையான பொருளைப் புரிந்துகொண்டு, இந்த கலாசார விழாவைக் கொண்டாட அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கட்டும் என்று மனதாரப் பிரார்த்திக்கிறேன்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறந்தது ஈரான்!

0
உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையான ஹார்முஸ் நீரிணையை மீண்டும் முழுமையாகத் திறப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான இருவாரகால போர் நிறுத்தம் அமுலில் உள்ள காலப்பகுதியில் இவ்வாறு திறந்திருக்கும் என...

‘கிளீன் ஸ்ரீலங்கா’ செயல்திட்டங்கள் குறித்து மீளாய்வு!

0
'கிளீன் ஸ்ரீலங்கா' (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான செயல்திட்டங்கள் மற்றும் கடந்த ஆண்டின் முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17) முற்பகல்...

நுவரெலியாவில் குவியும் சுற்றுலா பயணிகள்!

0
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நுவரெலியா நோக்கி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை பாரியளவில் அதிகரித்துள்ளது. இதனால் டெவோன் (Devon) மற்றும் சென்கிளையார் (St. Clair) நீர்வீழ்ச்சிக் காட்சித் தளங்களில் சுற்றுலாப் பயணிகளின்...