Home Blog Page 121

தமிழரின் பிரார்த்தனை நிறைவேற வேண்டும்!

“தைத்திருநாளைக் கொண்டாடும் தமிழ் மக்களின் அனைத்துப் பிரார்த்தனைகளும் நிறைவேறவும், இந்தப் புதிய பயணம் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டுவரவும் இந்தத் திருநாளில் மனதார வாழ்த்துகின்றேன்.”

– இவ்வாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய விடுத்துள்ள தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு:-

உழைப்பிற்கும், இயற்கைக்கும் நன்றி செலுத்தும் உன்னத பண்பாட்டின் அடையாளமாகத் திகழும் தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடும் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மனித வாழ்வியலானது இயற்கையோடு எத்துணை பின்னிப் பிணைந்துள்ளது என்பதை இத்திருநாள் உலகுக்கு எடுத்துரைக்கின்றது.

நாம் அனைவரும் இயற்கையின் படைப்புக்களே. இயற்கையை மீறி எம்மால் எந்தவொரு பயணத்தையும் மேற்கொள்ள முடியாது.

இயற்கையினால் எமக்குக் கிடைக்கப்பெற்ற ஆசீர்வாதங்களுக்குக் கைமாறு செய்வது மிக உயர்ந்த மனிதப் பண்பாகும்.

நாடு என்ற ரீதியில் நாம் இன்று ஒரு தீர்க்கமான மாற்றத்தின் விளிம்பில் நிற்கின்றோம்.

கொள்கை மற்றும் கட்டமைப்பு ரீதியிலான மாற்றங்கள் ஊடாக, மனப்பாங்கிலும் மாற்றத்தை ஏற்படுத்தி, தேசத்தை ஒரு ‘மறுமலர்ச்சி யுகத்தை’ நோக்கி இட்டுச் செல்லும் பாரிய பொறுப்பு எம் அனைவருக்கும் உள்ளது.

சவால்கள் நிறைந்ததாக இருப்பினும், ஒரு அரசாங்கமாக நாம் அந்தப் பொறுப்பை ஏற்று, தேசத்தின் பரிணாம வளர்ச்சிக்கான புதிய வருடத்தை உறுதியுடன் ஆரம்பித்துள்ளோம்.

விவசாயி சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும். அதேபோல, நாட்டின் சுபீட்சத்திற்காக நாம் மேற்கொள்ளும் இந்த அர்ப்பணிப்பான பயணமும் ஒரு நற்பயிரை வளர்ப்பது போன்றதே.

இத்தருணத்தில், இயற்கையைப் போற்றி நன்றி செலுத்தும் தைப்பொங்கல் பண்டிகை, வளமான கலாச்சார விழுமியங்களைக் கொண்ட பிரஜைகளை உருவாக்க எமக்கு வழிகாட்டுகிறது.

ஒருவரையொருவர் மதித்தல், பிற மத மற்றும் கலாச்சார உரிமைகளைப் பேணுதல் போன்ற உயரிய பண்புகளுடன், நல்லிணக்கம் மிக்க ஒரு புதிய இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு இந்தத் தைப்பொங்கல் திருநாளில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதி பூணுவோம்.

தைத்திருநாளைக் கொண்டாடும் தமிழ் மக்களின் அனைத்துப் பிரார்த்தனைகளும் நிறைவேறவும், இப்புதிய பயணம் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டுவரவும் இத்திருநாளில் மனதார வாழ்த்துகின்றேன்.

‘வளமான நாடு – அழகான வாழ்க்கையை’ கட்டியெழுப்புவதற்கான பயணத்திற்கு தைத் தீருநாள் ஆசிர்வாதமாக அமையட்டும்!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பொங்கல் தின வாழ்த்து செய்தி

உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடனும் உற்சாகத்துடனும் இன்று (15) தைப்பொங்கல் தினம் கொண்டாடப்படுகின்றது.

வெற்றிகரமான விளைச்சலுக்கு உதவிய சூரியக் கடவுளுக்கும், கால்நடைகளுக்கும், இயற்கை அன்னைக்கும், நன்றி உணர்வை எடுத்தியம்பும் கொண்டாட்டமாக தைப்பொங்கல் தினம் அமைகின்றது.

செழிப்பு மற்றும் நன்றியுணர்வை அடையாளப்படுத்தும் தைப்பொங்கல் பண்டிகை, சிறந்த விளைச்சலுக்கு நன்றி பாராட்டும் ஒரு நிகழ்வு மாத்திரமன்றி, எதிர்காலத்தில் தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் ஒரு புதிய பயணத்தைத் தொடங்குவதற்கான அழைப்பாகவும் அமைகிறது.

அண்மையில் நாம் சந்தித்த மிகப் பாரிய இயற்கைப் அனர்த்தத்தைத் தொடர்ந்து, ஒரு தேசமாக மீண்டெழும் நம்பிக்கையுடனும் அயராத முயற்சி மற்றும் உறுதியுடனும், இதுவரை இல்லாத அளவிலான பாரிய புனரமைப்பு செயற்பாட்டில் நாம் ஒன்றாக கைகோர்த்துள்ளோம்.

அந்த வேலைத்திட்டத்துடன் மென்மேலும் வலுவாக கைகோர்க்க முன்வருமாறு சுபீட்சமான எதிர்பார்ப்புடன் இந்தத் தைப்பொங்கல் திருநாளில், நான் அனைவரிடமும் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், இயற்கையுடன் நெருக்கமாக இருக்க வேண்டிய அவசியம் முன்னெப்போதையும் விட அதிகமாக உணரப்படும் இந்த நேரத்தில், இயற்கையுடன் ஆழமாக இணைக்கப்பட்ட தைப் பொங்கல் பண்டிகை, நமது வாழ்க்கைக்கும் சமூகத்திற்கும் உயர்வான அர்த்தத்தைச் சேர்க்கிறது என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.

எந்தவொரு இருளுக்கும் பிறகு ஒளி பிறக்கும் என்று நாம் உறுதியாக நம்புகிறோம். உறுதியுடனும் ஒற்றுமையுடனும் சவால்களை வென்று ‘வளமான நாடு – அழகான வாழ்க்கையை’ கட்டியெழுப்புவதற்கான பயணத்திற்கு இவ்வருட தைப் பொங்கல் பண்டிகை சிறந்த ஆசிர்வாதமாக அமைய பிரார்த்திக்கிறேன்.

இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள அனைத்து தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியான தைப்பொங்கல் தின வாழ்த்துகள்.

 

அமைச்சரவை மறுசீரமைப்பு நடக்காது! பிரதமர் பதவியில் ஹரிணி தொடர்வார்!!

அமைச்சரவையில் விரைவில் மாற்றம் வெளிவரவுள்ளதாக வெளியாகும் தகவலை அரசாங்கம் அடியோடு நிராகரித்துள்ளது.

மேற்படி தகவலில் எவ்வித உண்மையும் இல்லை – என்று
அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ கல்வி அமைச்சு பதவியில் மாற்றம் வராது. பிரதமர் பதவியிலும் ஹரிணியே தொடர்வார். அமைச்சரவை மறுசீரமைப்பு கதையெல்லாம் கட்டுக்கதை ஆகும்.” – எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

 

ஈரான் மிக்பெரிய விலை கொடுக்க நேரிடும்: ட்ரம்ப் எச்சரிக்கை!

போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் தொடர்ந்தால் ஈரான் மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

ஈரானில் தலைநகர் டெஹ்ரான், புனித நகரான மஷ்ஹாத் ஆகிய இடங்களில் போராட்டங்கள் மிகவும் தீவிரமடைந்துள்ளன.

இதனால் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் போராட்டக்காரர்கள் மீது ஈரான் அரசு மேற்கொள்ளும் அடக்குமுறைக்கு எதிராகவும், போராட்டக்காரர்களுக்கு ஆதரவாகவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

மேலும், போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினால் மிகப் பெரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.

2 வது வாரத்தை எட்டியுள்ள இந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் இதுவரை அரசு சார்ந்த 135 பேர் உள்பட சுமார் 2,400 க்கும் மேற்பட்டோர் பலியாகினர். சுமார் 10,700 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ஈரானில் இணையச் சேவை முடக்கப்பட்டுள்ளதால், கள நிலவரத்தை அறிவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.

இந்த நிலையில், போராட்டக்காரர்கள் தூக்கிலிடப்பட்டால் “மிகவும் கடுமையான நடவடிக்கை” எடுக்கப்படும் என்று டொனால்ட் டிரம்ப்பின் எச்சரிக்கைக்கு ஈரானின் தலைமையும் கடுமையான பதிலடி கொடுத்துள்ளது.

வடமாகாண தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி நாளை பங்கேற்பு!

நாளை (15) மற்றும் நாளை மறுநாள் (16) மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் பல நிகழ்ச்சிகளில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பங்கேற்க உள்ளார்.

நாளை (15) பிற்பகல் 2.00 மணிக்கு யாழ்ப்பாணம் வேலணை ஐயனார் கோவில் விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் வட மாகாண தைப்பொங்கல் விழாவில் பங்கேற்கும் ஜனாதிபதி, சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக யாழ்ப்பாண சுற்றுலா சபையால் மானிப்பாய் மருதடி விநாயகர் கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தைப்பொங்கல் விழாவிலும் பங்கேற்க உள்ளார்.

‘தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ் நாடு முழுவதும் 31,218 புதிய வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் உட்பட, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் இன்னும் வீடுகளின்றி உள்ள 2,500 குடும்பங்களுக்காக வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் எதிர்வரும் 16 ஆம் திகதி முற்பகல் 9.00 மணிக்கு யாழ்ப்பாணம், சாவகச்சேரி வீரசிங்கம் ஆரம்பப் பாடசாலை மைதானத்தில் நடைபெறும்.

மேலும், போதைப் பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டின் வட மாகாண நிகழ்ச்சித் திட்டம் 16 ஆம் திகதி பிற்பகல் யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற உள்ளது.

காசாவில் போர் நிறுத்தத்துக்கு மத்தியிலும் ராணுவத் தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் பலி!

காஸா பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபரில் மேற்கொள்ளப்பட்ட தற்காலிக போா்நிறுத்த ஒப்பந்தத்துக்குப் பிறகும், இதுவரை தொடரும் ராணுவத் தாக்குதல்களில் 100-க்கும் அதிகமான குழந்தைகள் கொல்லப்பட்டிருப்பதாக ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான ‘யுனிசெப்’ கவலை தெரிவித்துள்ளது.

இது குறித்து காஸாவில் பணியாற்றும் ‘யுனிசெப்’ செய்தித் தொடா்பாளா் ஜேம்ஸ் எல்டா் கூறியுள்ளதாவது:

” போா்நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த பிறகு, வான்வழித் தாக்குதல்களும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களும் குறைந்திருந்தாலும், அவை முழுமையாக முடிவுக்கு வரவில்லை.

இத்தகைய தொடா் தாக்குதல்களால் இதுவரை 100-க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்துள்ளனா். இதில் 60 சிறுவா்களும், 40 சிறுமிகளும் அடங்குவா்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த எண்ணிக்கை, அதிகாரபூா்வ ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் மட்டுமே. ஆனால், களத்தில் நிலவும் உண்மையான உயிரிழப்புகளின் எண்ணிக்கை இதைவிட மிக அதிகமாக இருக்கக்கூடும் என்றாா்.

இன்றைய (14.01.2026) நாணய மாற்று விகிதம்

இன்றைய (14.01.2026) நாணய மாற்று விகிதம்

மக்களுக்கு துரோகம் இழைக்காத வகையிலேயே என்பிபி அரசின் பயணம்! அமைச்சர் சந்திரசேகர்!

இலங்கை – அவுஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான நீண்டகால நட்பு உறவுகள், ஜனநாயக மதிப்பீடுகளின் அடிப்படையில் உருவான கூட்டுறவுகள் மற்றும் வடக்கின் நிலைவரம் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக இந்த சந்திப்பின் போது கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.

இதன்போது, தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன், ஸ்ரீ பவானந்தராஜா, யாழ்.மாநகர சபை உறுப்பினர் சு.கபிலன், இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவரின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு அவுஸ்திரேலிய அரசு வழங்கிய மனிதாபிமான உதவிகளுக்கு அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் மனமார்ந்த நன்றியை தெரிவித்தார். பேரிடர் காலங்களில் அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி மக்களுக்காக துணைநிற்பதே உண்மையான சர்வதேச நட்பின் அடையாளம் என அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், தற்போது நாட்டை மீண்டெழ வைப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் பற்றியும் விவரித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழ் உருவாகி வரும் புதிய அரசியல் பண்பாடு, வெளிப்படைத்தன்மை மற்றும் மக்களுக்கான பொறுப்புணர்வு ஆகியவற்றையும் அமைச்சர் வலியுறுத்தினார்.

குறிப்பாக அரசாங்கம்மீது வடக்கு மக்கள் வைத்துள்ள நம்பிக்கை, அந்த நம்பிக்கைக்கு துரோகம் இழைக்காத வகையில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் சம்பந்தமாகவும் தூதுவருக்கு அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழ் வடக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் அமைச்சர் தெளிவாக எடுத்துரைத்தார்.

போருக்குப் பிந்தைய மீட்சி அரசியலை வெறும் வாக்குறுதிகளாக அல்லாமல், செயற்பாடுகளாக மாற்றும் உறுதியான அரசியல் தீர்மானங்களே இன்று வடக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்திகளுக்குப் பின்னணி என அவர் குறிப்பிட்டார். குறிப்பாக மீன்வளம், கடற்றொழில், நீரியல் வளங்கள் பாதுகாப்பு, கடல்சார் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் திட்டங்கள் ஆகியவை வடக்கு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் முன்னெடுக்கப்படுகின்றன என விளக்கினார்.

மேலும், வடக்கு மாகாணத்தில் உருவாக்கப்படவுள்ள முதலீட்டு வலயங்கள் வெறும் முதலீட்டுக்கான நிலங்களாக மட்டுமல்லாது, வேலைவாய்ப்புகள், தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் பிராந்திய பொருளாதார சமநிலையை உருவாக்கும் திட்டங்களாகும் என அமைச்சர் வலியுறுத்தினார்.

இந்த முதலீட்டு முயற்சிகளுக்கு அவுஸ்திரேலியாவின் ஒத்துழைப்பும் அவசியம்.குறிப்பாக ஆஸ்திரேலிய முதலீட்டாளர்கள் இங்கு வரவேண்டும். அவுஸ்திரேலியாவில் எமது புலம்பெயர் உறவினர்கள் வாழ்கின்றனர். எனவே, அவர்களின் பங்களிப்பையும் பெற்றுதருவதற்குரிய துணையாக தூதுவர் செயல்பட வேண்டும் என அமைச்சர் கோரிக்கை வீடுத்தார்.

அதேபோல், அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் இலங்கையர்கள் தாய்நாட்டின் அபிவிருத்தியில் நேரடியாகப் பங்கெடுக்க வேண்டும் என அமைச்சர் அழைப்பு விடுத்தார்.

வெளிநாட்டு இலங்கையர்களின் முதலீடுகள், குறிப்பாக வடக்கு மாகாணத்தில், தேசிய நல்லிணக்கம், பொருளாதார சமத்துவம் மற்றும் நிலையான அபிவிருத்தியை உறுதிப்படுத்தும் முக்கிய சக்தியாக அமையும் என அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த காலங்களைப் போல அல்லாமல், தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் இலங்கையில் பாதுகாப்பு உத்தரவாதம் உறுதியாக நிறுவப்பட்டுள்ளது. இதன் காரணமாக, புலம்பெயர் தமிழர்களும் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் எந்தவிதத் தயக்கமுமின்றி இலங்கைக்கு வரவும், முதலீடுகளில் ஈடுபடவும் முழுமையான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குறிப்பிட்டார்.

 

தெற்கில் எவ்வாறு இனவாத சக்திகள் செயல்பட்டு வருகின்றனவோ, அதேபோன்று வடக்கிலும் சில இனவாத சக்திகள் செயற்படுகின்றன. இச்சக்திகள் மக்களின் உண்மையான தேவைகளைப் புறக்கணித்து, அபிவிருத்தி பணிகளை தடைசெய்யும் நோக்கத்துடன் செயற்பட்டு வருகின்றன என்பதையும் அமைச்சர் எடுத்து காட்டினார்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சி ஊழலற்ற அரசாங்கமாக உருவெடுத்துவருவது தெளிவாகப் பிரதிபலிப்பதாக அவுஸ்திரேலிய தூதுவர் தெரிவித்தார். வெளிப்படைத்தன்மை, சட்டத்தின் ஆட்சி மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் செயல்படும் இந்நிர்வாக முறை, சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையைப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில், தம்மால் முடிந்த முழுமையான ஒத்துழைப்பை அவுஸ்திரேலியா வழங்கத் தயாராக இருப்பதாக தூதுவர் உறுதியளித்தார்.

குறிப்பாக, வடக்கில் காணப்படும் முதலீட்டு வாய்ப்புகள், தொழில்துறை வளர்ச்சி, வேலைவாய்ப்புகள் மற்றும் நிலையான பொருளாதார மேம்பாடு தொடர்பில் ஆழமாக ஆராயப்படும் எனவும் அவர் தெரிவித்தார். வடக்கின் அபிவிருத்தி முயற்சிகள் அரசியல் ஸ்திரத்தன்மையுடனும் தெளிவான கொள்கை வழிநடத்தலுடனும் முன்னெடுக்கப்படுவதை அவுஸ்திரேலியா வரவேற்பதாகவும் கூறினார்.

இலங்கையில் இனவாதம் தோற்கடிக்கப்பட வேண்டும். மக்களின் வாழ்வில் பல தசாப்தங்களாக பதிந்துள்ள வலியும், வடுக்களும் ஆற வேண்டும். வெறும் சமாதானக் கோஷங்களால் அல்ல, நீதியும் சமத்துவமும் அடிப்படையாகக் கொண்ட உண்மையான நல்லிணக்கம் இந்நாட்டில் பிறக்க வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பாகவும் எனவும் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் உதவி கடற்படை தளபதி- இலங்கை பாதுகாப்பு செயலர் சந்திப்பு!

இந்திய கடற்படையின் உதவி கடற்படைத் தளபதி (வெளிநாட்டு ஒத்துழைப்பு மற்றும் உளவுத்துறை) ரியர் அட்மிரல் Sriniva Maddula, (ஜனவரி 13) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

இந்த சந்திப்பு, இரு தரப்பினருக்கும் பரஸ்பர ஆர்வமுள்ள விடயங்களில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும், இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகளை ஆராயவும் ஒரு வாய்ப்பை வழங்கியது.

கடல்சார் மற்றும் பரந்த பாதுகாப்பு களங்களில் நீடித்த ஈடுபாடு மற்றும் மேம்பட்ட ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்தும் ககலந்துரையாடப்பட்டது.

இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் உட்பட அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

 

22 பேரை பலியெடுத்த கோர விபத்து: 80 பேர் காயம்! தாய்லாந்தில் சோகம்

தாய்லாந்தின் வடகிழக்கு பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 22 பேர் பலியாகியுள்ளனர். 80 பேர் காயமடைந்துள்ளனர்.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து வடகிழக்கே உபோன் ரத்சதானி மாகாணம் நோக்கி இன்று காலை பயணிகள் ரயில் பயணமானது.

குறித்த ரயில பாங்காக்கில் இருந்து 230 கி.மீ. தொலைவில் நகோன் ரச்சசீமா மாகாணத்தின் சிகியோ மாவட்டத்தில் சென்று கொண்டிருந்தது.

ரயில் செல்லும் பாதையில் அதிவிரைவு ரயில் திட்டம் சார்ந்த பணிகள் நடந்து வந்துள்ளன.

இதற்கு பயன்படுத்தப்பட்ட கிரேன் ஒன்று திடீரென சரிந்து ரயில் ஒரு பெட்டியின் மீது விழுந்துள்ளது. இதில் ரயில் தடம் புரண்டது. இந்த விபத்தில் சிக்கி பயணிகள் 22 பேர் உயிரிழந்தனர். 80 பேர் படுகாயமடைந்தனர்.

அவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன. ரயிலில் 195 பேர்வரை பயணித்துள்ளனர். விசாரணை நடக்கின்றது.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறந்தது ஈரான்!

0
உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையான ஹார்முஸ் நீரிணையை மீண்டும் முழுமையாகத் திறப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான இருவாரகால போர் நிறுத்தம் அமுலில் உள்ள காலப்பகுதியில் இவ்வாறு திறந்திருக்கும் என...

‘கிளீன் ஸ்ரீலங்கா’ செயல்திட்டங்கள் குறித்து மீளாய்வு!

0
'கிளீன் ஸ்ரீலங்கா' (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான செயல்திட்டங்கள் மற்றும் கடந்த ஆண்டின் முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17) முற்பகல்...

நுவரெலியாவில் குவியும் சுற்றுலா பயணிகள்!

0
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நுவரெலியா நோக்கி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை பாரியளவில் அதிகரித்துள்ளது. இதனால் டெவோன் (Devon) மற்றும் சென்கிளையார் (St. Clair) நீர்வீழ்ச்சிக் காட்சித் தளங்களில் சுற்றுலாப் பயணிகளின்...