Home Blog Page 122

மாகாணசபைத் தேர்தலில் ரணில், சஜித் தரப்புகள் ஓரணியில் போட்டி!

“மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன பொது பட்டியலின்கீழ் போட்டியிடும்.”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

“ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன ஒன்றிணைந்து செயல்படுவதற்குரிய பேச்சு வெற்றியை நோக்கி நகர்ந்துள்ளது. உரிய நேரத்தில் இணைவு நடக்கும்.

கிராமிய மட்டத்தில் இரு கட்சிகளின் ஆதரவாளர்களும் இணைந்தே பயணிக்கின்றனர். எனவே, அவர்களின் முடிவுக்கு தலைமைகள் நிச்சயம் கட்டுப்பட்டாக வேண்டும்.

எது எப்படி இருந்தாலும் மாகாணசபைத் தேர்தலில் பொதுபட்டியலின்கீழ் களமிறங்குவோம். தேர்தலை நடத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

சின்னம், கூட்டணி வியூகம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.” – எனவும் அஜித் பி பெரேரா குறிப்பிட்டார்.

தொடரை வெல்லும் முனைப்போடு இந்தியா இன்று களத்தில்!

இந்​தியா- நியூஸிலாந்து அணி​கள் இடையி​லான 2-வது ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி ராஜ்கோட்​டில் உள்ள நிரஞ்​சன் ஷா மைதானத்​தில் இன்று பிற்​பகல் 1.30 மணிக்கு நடை​பெறுகிறது.

இந்த ஆட்​டத்​தில் வெற்றி பெறும் பட்​சத்​தில் இந்​திய அணி தொடரை கைப்​பற்​றும்.

இரு அணி​கள் இடையி​லான 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டித் தொடரில் வதோத​ரா​வில் நடை​பெற்ற முதல் போட்​டி​யில் இந்​திய அணி 4 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றிருந்​தது.

அந்த ஆட்​டத்​தில் 301 ரன்​கள் இலக்கை துரத்​திய இந்​திய அணி 6 பந்​துகளை மீதம் வைத்து வெற்​றியை வசப்படுத்தி​யிருந்​தது. இதனால் தொடரில் இந்​திய அணி 1-0 என முன்​னிலை வகிக்​கிறது. இந்​நிலை​யில் 2-வது போட்டி ராஜ்கோட்டில் இன்று நடை​பெறுகிறது.

முதல் போட்​டி​யில் விராட் கோஹ்லி 93 ரன்​களை​யும், கேப்​டன் ஷுப்மன் கில் 56, ஸ்ரேயஸ் ஐயர் 49, கே.எல்​.​ராகுல் 29, ஹர்​ஷித் ராணா 29 ரன்​கள் சேர்த்து அணி​யின் வெற்​றி​யில் முக்​கிய பங்கு வகித்​தனர். இவர்​களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த திறன் வெளிப்​படக்​கூடும். கடந்த ஆட்​டத்​தில் காயம் அடைந்த வாஷிங்டன் சுந்​தர் விலகி உள்​ளார். அவருக்கு மாற்​றாக ஆயுஷ் பதோனி அணி​யில் சேர்க்​கப்​பட்​டுள்​ளார்.

எனினும் அவருக்கு விளை​யாடும் லெவனில் வாய்ப்பு கிடைப்​பது சந்​தேகம் ​தான். அநேக​மாக வாஷிங்​டன் சுந்​தர் இடத்​தில் நிதிஷ் குமார் களமிறங்​கக்​கூடும். முதல் போட்​டி​யில் குறைந்த ரன்​களில் ஆட்​ட​மிழந்த ரோஹித் சர்மா பெரிய அளவி​லான இன்​னிங்ஸை விளை​யாடு​வ​தில் முனைப்பு காட்​டக்​கூடும்.

நியூஸிலாந்து அணி இன்​றைய ஆட்​டத்​தில் தோல்வி அடைந்​தால் தொடரை இழக்க நேரிடும். இதனால் அந்த அணி கூடு​தல் கவனத்​துடன் செயல்பட முயற்​சிக்​கக்​கூடும்.

பாடசாலை மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தின் நிதி உதவி வழங்குதல் ஆரம்பம்

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் 10,000 ரூபா கொடுப்பனவு வழங்குதல் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கான நிதி ஒதுக்கீடுகள் அனைத்து மாவட்ட செயலகங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதுடன், அரசாங்கத்தால் வழங்கப்படும் 15,000 ரூபா கொடுப்பனவைப் பெற்ற அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் இந்தக் கொடுப்பனவு வழங்கப்படும்.

மேலும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, கடந்த வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்துத் தெரிவித்த வகையில், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பாடசாலை மாணவருக்கும் 25,000 ரூபா நிதி உதவி வழங்கப்படும்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை வருமா? 20,21 இல் விவாதம் நடத்த அரசாங்கம் தயார்!

“பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் விவாதத்துக்கு எடுப்பதற்கு எதிர்பார்க்கின்றோம்.”

இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், ஆளுங்கட்சி பிரதம கொறடாவுமான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

“பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிரணி விரைவில் முன்வைக்கும் என நம்புகின்றோம்.

அது தொடர்பில் இரு நாட்கள் விவாதிப்பதற்கு நாம் தயார். தேவையேற்படின் மேலும் மூன்று நாட்கள் வழங்கலாம்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டால் கல்வி மறுசீரமைப்பு தொடர்பிலும் உண்மையான பக்கம் தெரியவரும்.

விவாதத்துக்கும், விமர்சனங்களுக்கும் உரிய விளக்கங்களை வழங்கவும் நாம் தயார். முதலில் எதிரணி தயாராகட்டும்.” – என்றார்.

சீனா செல்கிறார் கனடா பிரதமர்: அமெரிக்கா கழுகுப்பார்வை!

 

கனடா பிரதமரின் சீன விஜயம் தொடர்பில் அமெரிக்கா தனது கழுகுப்பார்வையை செலுத்தியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்;ட் டிரம்ப்பின் வர்த்தகப் போர் மற்றும் நாடுகளைக் கைப்பற்றும் அச்சுறுத்தல் ஆகியவற்றால் அமெரிக்கா, கனடா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கனடா பிரதமர் மார்க் கார்னி சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சீனா செல்லும் கார்னி வரும் 16-ம் திகதி சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கைச் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.

இதுதொடர்பாக மார்க் கார்னி வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகளாவிய வர்த்தகக் குழப்பம் நிலவும் இந்த நேரத்தில் கனடா ஒரு போட்டித்தன்மை வாய்ந்த, நிலையான மற்றும் சுதந்திரமான பொருளாதாரத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது.

ஒரே வர்த்தகப் பங்காளியைச் சார்ந்திருந்த நமது பொருளாதாரத்தை மாற்றுவதற்காக நாங்கள் உலகம் முழுவதும் புதிய கூட்டாண்மைகளை உருவாக்கி வருகிறோம் என தெரிவித்தார்.

கடந்த ஒக்டோபர் மாதம் தென் கொரியாவில் நடந்த ஆசியா-பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு மாநாட்டில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை மார்க் கார்னி சந்தித்தார்.

அப்போது சீனா வருமாறு அவர் விடுத்த அழைப்பை ஏற்று அங்கு செல்ல கார்னி ஒப்புக் கொண்டார்.
கனடா பிரதமரின் சீன பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மரக்கறி விலைப்பட்டியல் (14.01.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (14) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

கல்வி மறுசீரமைப்புக்கு மக்கள் ஆணை உள்ளது: 2027 இல் நிச்சயம் நடக்கும் என்கிறது அரசு!

தரம் 6 இற்குரிய கல் வி மறுசீரமைப்பு நடவடிக்கை 2027 ஆம் ஆண்டுவரை ஒத்திவைக்கப்படுகின்றது. எனினும், தரம் ஒன்றிற்குரிய நடவடிக்கை திட்டமிட்ட அடிப்படையில் நடைபெறும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.

இதன்போது கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை அமைச்சர் நளிந்த ஜயஸ்ஸ அறிவித்தார்.

“ நாட்டில் கல்வி மறுசீரமைப்பு நடைபெறும் என ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களின்போது நாம் உறுதியளித்தோம். அதற்கு மக்கள் ஆணை கிடைக்கப்பெற்றுள்ளது.

ஐந்து கட்டங்களாக இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படவிருந்தது. முதலாவதாக தரம் ஒன்று மற்றும் 6 இற்குரிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கை 2026 இல் ஆரம்பமானது.

எனினும், தரம் 6 ஆங்கில பாட திட்டத்தில் உள்ள விடயம் தொடர்பில் சமூகத்தில் சர்ச்சை எழுந்துள்ளது.

சிலர் இதனை அரசியலுக்காக பயன்படுத்துகின்றனர். மேலும் சிலர் வழக்குகளில் இருந்து தப்பிக்கொள்வதற்கு பயன்படுத்துகின்றனர். சிலர் அதிகார ஆசையில் களத்துக்கு வந்துள்ளனர்.

கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் சமூகத்தின் நம்பிக்கையின்மை ஏற்படுத்தப்படுகின்றது. நம்பிக்கையீனத்துடன் இப்பணியை செய்ய முடியாது என நாம் கருதுகின்றோம்.

எனவே தரம் 6 ஆங்கில பாட திட்டம் தொடர்பில் எழுந்த சர்ச்சை தொடர்பில் சிஐடி விசாரணை நடத்தியது, கல்வி அமைச்சும் விசாரணை நடத்தியது. இரு விசாரணைகளின் அறிக்கைகள் மற்றும் முக்கிய சந்திப்புகளின் பிரகாரம் கால அவகாசம் வழங்குவதற்காக தரம் ஆறுக்குரிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கை 2027 இல் ஆரம்பமாகும்.” – என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் கூறினார்.

மலையக தமிழர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க அநுர அரசு முற்படுகிறதா?

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு,

இலங்கை கஷ்டங்களில் விழும் போதெல்லாம், இந்தியா தான் எப்போதும் வேறு எவரையும் விட அதிகம் உதவி செய்கிறது. நன்றி இந்தியா!

ஆனால், இந்த காரணத்தால், இந்த முறை மண் சரிவால் அதிகம் பாதிக்க பட்ட மலையக தமிழ் பெருந்தோட்ட மக்களை இந்தியாவிடம் தள்ளி விட, அனுர அரசு முயல்கிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அப்படியானால், மலையக தமிழ் மக்கள் இலங்கை பிரஜைகள் இல்லையா? அவர்கள் இந்திய வம்சாவளியாக இருக்கலாம். ஆனால், இலங்கை குடிமக்கள் என்பதை இலங்கை அரசாங்கம் மறக்க கூடாது.

பாதிக்க பட்ட சிங்கள மக்களுக்கு அரசாங்கம், காணி கொடுத்து, ஐம்பது (50) இலட்ச ரூபா செலவில் வீடு கட்டி கொடுக்கிறது. இதை மனதார வரவேற்கிறோம். ஆனால், மலையக பெருந்தோட்ட தமிழ் மக்களை இந்தியா பார்த்து கொள்ள வேண்டுமாம். இது என்ன நியாயம்?

அப்படியே ஏதாவது செய்தாலும், இலங்கை அரசு, மலையக தமிழ் மக்களுக்கு இன்று என்ன செய்ய முயல்கிறது?

மலைநாட்டு தமிழ் மக்களுக்கு, “காணி-மண் உரிமையை மறுத்து”, கொழும்பில் கட்டுவது போன்று தொடர்மாடி வீடுகளை மலைகளில் கட்டி தர அரசாங்கம் இரகசிய திட்டம் போடுகிறது.

பெருந்தோட்ட அமைச்சர் சமந்த வித்தியாரத்ன இப்படி திட்டம் போடுகிறார். இவர் போன வருடமே இதை செய்ய முயன்றார்.

“தோழர் சமந்த, இதை செய்ய வேண்டாம்” என நான் இவருக்கு பாராளுமன்றத்தில் தெளிவாக எடுத்து கூறினேன். “சரி, சரி, மனோ கணேசன், இந்த வருடம் நாம் மலைநாட்டில் தொடர்மாடி வீடுகள் கட்ட மாட்டோம், தனி வீடுகள் தான் கட்டுவோம்” என சமாளித்து எனக்கு இவர் பதில் கூறினார். இது பாராளுமன்ற ஹன்சார்டில் இருக்கிறது.
ஆனால், போன வருடம், இவர் எந்த ஒரு வீடுமே மலைநாட்டில் கட்டவில்லை. தனது தொகுதி பதுளை மாவட்டத்துக்கு,

ஜனாதிபதியையும் அழைத்து வந்து, பெரிய விழா நடத்தி, எல்லோருமாக சேர்ந்து, அப்பாவி மக்களை, கட்டி பிடித்து “ஷோ” காட்டி, “வீடு கட்டி தருகிறோம்” என்ற வெறும் கடிதங்களை தான் கொடுத்து சமாளித்து அனுப்பி வைத்தார்கள்.
இப்போது இந்த அமைச்சர் மீண்டும் தொடர்மாடி கதையை தந்திரமாக முன்னெடுக்க முயல்கிறார்.

அரசாங்கத்துக்கு நல்லெண்ணத்துடன் ஒரு ஆலோசனை கூறுகிறேன்.

“தொடர்மாடி வீடுகளை, கொழும்பு போன்ற மாநகரங்களில் கட்டுங்கள். கண்டி, நுவரேலியா போன்ற மலையக மாநகரங்களில் கூட, மாநகர தொழிலாளருக்கு கட்டி கொடுங்கள். ஆனால், பெருந்தோட்டங்களில் வேண்டாம். மலைநாட்டில், இந்த தித்வா பேரழிவில்,

இதுவரை, சுமார் 4,000 மண் சரிவுகள் நிகழ்ந்து உள்ளன என, ஆர்த்தர்-சி-கிளார்க் விஞ்ஞான ஆய்வு நிலைய அறிக்கை மிக தெளிவாக எச்சரித்து கூறி உள்ளது. இந்நிலையில் மலைநாட்டில், மலை மேல் தொடர்மாடி வீடுகள் என்பது அபாயகரமான திட்டம் அல்லவா? மலையக மக்களை சட்டியில் இருந்து அடுப்பில் தள்ளும் காரியம் அல்லவா? இது என்ன நியாயம்?’

இதை நான் இப்போது பொது வெளியில் கூறுகிறேன். உடனே, தற்குறிகள், போலி கணக்கு காவடிகள், என்னை விமர்சிப்பார்கள். இவர்களை நான் பொருட்டுக்கும் கணக்கில் எடுப்பதில்லை.
ஆனால், இந்த அரசை இன்னமும் நம்பி கொண்டு இருக்கும் தோழர்கள், அனுர அரசிடம் என் கேள்விகளுக்கு பதில் பெற முயல வேண்டும்.

நல்ல பதில் கிடைத்தால் நல்லது தானே? நாளை பொங்கல். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறுவோம். “வலி அல்ல, வழி” பிறந்தால் நல்லது தானே. அனைவருக்கும் வாழ்த்துகள்!

பிரதமர் பதவி விலக முன் போராட்டத்தை விமல் முடித்து கொண்டது ஏன்?

கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் அரசாங்கம் எடுத்த முடிவில் விமல்வீரவன்சவின் சத்தியாக்கிரகப் போராட்டம் எவ்விதத்திலும் தாக்கம் செலுத்தவில்லை என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

6 ஆம் வகுப்புக்குரிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கையை 2027 ஆம் ஆண்டுவரை ஒத்திவைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

விமல் வீரவன்ச சத்தியாகிரகப் போராட்டத்தில் ஆரம்பித்துள்ள சூழ்நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதே என அமைச்சரிடம் வினவப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர் கூறியவை வருமாறு,

“கல்வி மறுசீரமைப்பு கைவிடப்பட வேண்டும், கல்வி அமைச்சர் பதவியில் இருந்து பிரதமர் பதவி விலக வேண்டும் என்பதே அவரின் கோரிக்கையாக உள்ளது.

எனவே, அவை நிறைவேற்றப்படவில்லை. எனவே, அவரின் போராட்டம் தொடரட்டும்.

கல்வி அமைச்சின் செயல்பாடு மற்றும் பரீட்சைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அவர் தொடர்ந்து போரடட்டும்.
எவராவது இளநீர் வழங்கி சத்தியாகிரகப் போராட்டத்தை முடித்து வைக்கக்கூடும்.” – என்றார்.

கல்வி மறுசீரமைப்பு கைவிடப்பட வேண்டும், கல்வி அமைச்சர் பதவியில் இருந்து பிரதமர் விலக வேண்டும். இதுவரையில் போராட்டம் தொடரும் என விமல் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், தனது போராட்டம் வெற்றி எனக் கூறி விமல் வீரவன்ச தனது சத்தியாக்கிரகப் போராட்டத்தை நேற்று நிறைவு செய்தார்.

உலக பொருளாதாரமன்ற மாநாடு சுவிஸில்: பிரதமர் பங்கேற்பு!

உலக பொருளாதாரமன்ற மாநாடு எதிர்வரும் 19 ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் ஆரம்பமாகின்றது.

23 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள குறித்த மாநாட்டில் இலங்கை சார்பில பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பங்கேற்கின்றார்.

பிரதி நிதியமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் அவருடன் செல்கின்றனர்.

குறித்த விஜயத்தின்போது பிரதமர் ஹரிணி அமரசூரிய, பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்தவுள்ளார்.

முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும், சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்கான வழிகள் குறித்தும் அவர் கலந்துரையாடல்களை நடத்துவார் என தெரியவருகின்றது.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறந்தது ஈரான்!

0
உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையான ஹார்முஸ் நீரிணையை மீண்டும் முழுமையாகத் திறப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான இருவாரகால போர் நிறுத்தம் அமுலில் உள்ள காலப்பகுதியில் இவ்வாறு திறந்திருக்கும் என...

‘கிளீன் ஸ்ரீலங்கா’ செயல்திட்டங்கள் குறித்து மீளாய்வு!

0
'கிளீன் ஸ்ரீலங்கா' (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான செயல்திட்டங்கள் மற்றும் கடந்த ஆண்டின் முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17) முற்பகல்...

நுவரெலியாவில் குவியும் சுற்றுலா பயணிகள்!

0
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நுவரெலியா நோக்கி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை பாரியளவில் அதிகரித்துள்ளது. இதனால் டெவோன் (Devon) மற்றும் சென்கிளையார் (St. Clair) நீர்வீழ்ச்சிக் காட்சித் தளங்களில் சுற்றுலாப் பயணிகளின்...