Home Blog Page 123

உலக பொருளாதாரமன்ற மாநாடு சுவிஸில்: பிரதமர் பங்கேற்பு!

உலக பொருளாதாரமன்ற மாநாடு எதிர்வரும் 19 ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் ஆரம்பமாகின்றது.

23 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள குறித்த மாநாட்டில் இலங்கை சார்பில பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பங்கேற்கின்றார்.

பிரதி நிதியமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் அவருடன் செல்கின்றனர்.

குறித்த விஜயத்தின்போது பிரதமர் ஹரிணி அமரசூரிய, பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்தவுள்ளார்.

முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும், சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்கான வழிகள் குறித்தும் அவர் கலந்துரையாடல்களை நடத்துவார் என தெரியவருகின்றது.

வெற்றியாம்! போராட்டத்தை நிறுத்தினார் விமல்!!

தன்னால் முன்னெடுக்கப்பட்ட சத்யாகிரகப் போராட்டம் வெற்றிபெற்றதாகக் கூறி, போராட்டத்தை இன்று நிறைவுக்கு கொண்டுவந்தார் விமல் வீரவன்ச.

கல்வி மறுசீரமைப்பு கைவிடப்பட வேண்டும், கல்வி அமைச்சு பதவியை பிரதமர் துறக்க வேண்டும் என வலியுறுத்தியே கல்வி அமைச்சுக்கு முன்பாக விமல் நேற்று போராட்டத்தில் குதித்தார்.

தரம் 6 இற்குரிய கல்வி மறுசீரமைப்பு 2027 வரை ஒத்திவைக்கப்படும் என அரசாங்கம் இன்று அறிவித்த நிலையிலேயே, போராட்டத்தை விமல் முடிவுக்கு கொண்டுவந்துள்ளார்.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

அரசாங்கம் செயற்படுத்தியுள்ள புதிய கல்வி மறுசீரமைப்பு மற்றும் அதன் அவசியத்தை ஏற்றுக்கொள்வதாகவும், 06ஆம் வகுப்பு பாடத்திட்டம் புதிய திருத்தத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் இங்கு சுட்டிக்காட்டிய ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகள், புதிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

தேசிய கல்வி ஆணைக்குழு, தேசிய கல்வி நிறுவகம், கல்வியலாளர்கள், சட்டத்தரணிகள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் கல்வித் துறை தொழிற்சங்க பிரதிநிதிகளைக் கொண்ட முறையான பொறிமுறையின் மேற்பார்வையின் கீழ் அந்த செயற்பாடுகளை மேற்கொள்ளவும் அவர்கள் இங்கு முன்மொழிந்தனர்.

கல்வி மறுசீரமைப்புகளை வெற்றிகரமாக்குவதற்கு, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் நம்பிக்கையைப் பெறுவது அத்தியாவசியமானது என்றும், சந்தேகம் அல்லது அவநம்பிக்கையுடன் மாற்றத்தை மேற்கொள்ள முடியாது என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, புதிய கல்வி மறுசீரமைப்புகளில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறு ஆசிரியர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

 

அரசாங்கம் தொடங்கியுள்ள புதிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கை குறித்து இங்கு ஆசிரியர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்திய ஜனாதிபதி, முதலாம் தர மறுசீரமைப்பு செயற்பாடுகளைத் திட்டமிட்டபடி செயற்படுத்துவதாகவும், ஆனால் மொடியுல்களைத் தயாரிப்பதில் எழுந்துள்ள சிக்கல்கள், ஆசிரியர் பயிற்சியில் ஏற்படும் தாமதம் மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களைத் தவிர்த்து 6ஆம் வகுப்பு பாட மறுசீரமைப்புகளை 2027 ஆம் ஆண்டில் தொடங்க எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

மறுசீரமைப்பிற்குத் தேவையான ஸ்மார்ட் போட்கள், தொலைக்காட்சிகள் மற்றும் கணனிகள் போன்ற அடிப்படை வசதிகளைப் பெற்றோரின் பணத்தில் அன்றி அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.

மேலும், மாகாணங்களுக்கிடையிலான ஆசிரியர் இடமாற்றங்கள், பதவி உயர்வுகள், ஊதிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அதிபர் சேவையில் நிலவும் சிக்கல்கள் குறித்தும் இங்கு ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

இலங்கை பிரிவெனா ஆசிரியர் சேவை சங்கத்தின் தலைவர் வண. வகமுல்லே உதித தேரர், அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் வண. யல்வெல பஞ்ஞாசேகர தேரர், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின், இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தலைவர் தம்மிக அலஹப்பெரும, கல்வி கூட்டுறவு சங்கத்தின் தலைவர் எம்.ஜி.பி.எல். லால் குமார, அதிபர் சேவை சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சிசிர ராஜபக்ஷ ஆகியோர் உட்பட பல ஆசிரியர் தொழிற்சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பலர் இதில் கலந்து கொண்டனர்.

தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்கவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

கலைப் போராளிக்கு கிடைத்த அங்கீகாரம்!

கலைப் போராளிக்கு கிடைத்த அங்கீகாரம்!

மலையக நட்சத்திரக் கலைப்பேரவையின் தலைவர் கலைஞர் மலையக வாசுதேவன், கலாபூஷணம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

நாட்டின் கலை மற்றும் இலக்கியத்துறைக்கு பெரும் பங்காறிய கலைஞர்களுக்கும், இலக்கிய ஆளுமைகளுக்கும் கலாபூஷணம் அரச விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

இதன்போதே கலைத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்கு உயரிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மலையக தமிழர்களின் கலை, கலாசார , பண்பாட்டு விழுமியங்களை பாதுகாப்பதற்காக களமாடிய கலைப் போராளியே மலையக வாசுதேவன் ஆவார்.

புரட்டொப், மேமலை தோட்டத்தை சேர்ந்த இவர், புதிய கலைஞர்களை உருவாக்குவதிலும் தம்மால் முடிந்த அனைத்து பங்களிப்பையும் வழங்கி வருகின்றார்.

வாழ்த்துகள் ஐயா
www.kuruvi.lk

தரம் 6 இற்குரிய கல்வி மறுசீரமைப்பு ஒத்திவைப்பு!

“ஆறாம் வகுப்புக்குரிய கல்வி மறுசீரமைப்பை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. உரிய மீளாய்வின் பின்னர் 2027 ஆம் ஆண்டு முதல் மறுசீரமைப்பு நடவடிக்கை இடம்பெறும். ”

இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது.

இதன்போது நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கல்வி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பில் அமைச்சர் கருத்து வெளியிட்டார்.

“ தரம் ஒன்று மற்றும் ஆறிக்குரிய கல்வி மறுசீரமைப்பு ஆரம்பமாகி இருந்தாலும் தரம் 6 ஆங்கி பாட திட்டம் தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளது.

இந்நிலையில் சிலர் இதனை அரசியலுக்காக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் சிலர் தவறான கருத்துகளை விதைக்கின்றனர். இதனால் கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் நம்பிக்கையீனம் ஏற்படும். நம்பிக்கையுடன்தான் இப்பணியை முன்னெடுக்க வேண்டும்.

அதனால்தான் கால அவகாசம் வழங்கும் நோக்கில் தரம் ஆறிற்குரிய கல்வி மறுசீரமைப்பு 2027 வரை ஒத்திவைக்கப்படுகின்றது.  எனினும், தரம் 1 இற்குரிய கல்வி மறுசீரமைப்பு திட்டமிட்ட அடிப்படையில் நடைபெறும்.” – என்றார்.

 

அஸ்வெசும கொடுப்பனவு உரித்துள்ள குடும்பங்களின் மாணவர்களுக்கு ரூ. 6000 கொடுப்பனவு!

அஸ்வெசும உரித்துள்ள குடும்பங்களில் உள்ள மாணவர்களுக்கு  பாடசாலை எழுதுபொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கு 2025 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட  6 ஆயிரம் ரூபா கொடுப்பனவை  2026 ஆம் ஆண்டிலும் நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும்: ஐ.தே. க. வலியுறுத்து!

பிரதமர் ஹரிணி அமரசூரிய கல்வி அமைச்சு பதவியை துறக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் தலதா அத்துகோரள இவ்வாறு வலியுறுத்தினார்.

புதிய கல்வி மறுசீரமைப்பு கைவிடப்பட வேண்டும், கல்வி அமைச்சு பதவியில் இருந்து பிரதமர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி விமல் வீரவன்சவால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

தொடர்கிறது விமலின் சத்தியாகிரகப் போராட்டம்!

கல்வி மறுசீரமைப்பு கைவிடப்பட வேண்டும், கல்வி அமைச்சர் பதவியில் இருந்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய விலக வேண்டும் என வலியுறுத்தி விமல் வீரவன்சால் நேற்று ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று 2ஆவது நாளாக தொடர்கின்றது.

கல்வி அமைச்சுக்கு முன்பாகவே நேற்று போராட்டம் ஆரம்பமானது. தமது கோரிக்கை நிறைவேறும் வரை போராடப்போவதாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

ஈரான் போருக்கு தயாராகவே உள்ளது: எச்சரிக்கை விடுப்பு!

“ ஈரான் போருக்கு முழுமையாகத் தயாராக உள்ளது. அதேநேரத்தில் பேச்சுவார்த்தைக்கும் தயாராக இருக்கிறது” என்று அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்தார்.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்ற வெளிநாட்டுத் தூதர்களின் மாநாட்டில் அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட உரையின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“ஈரான் இஸ்லாமியக் குடியரசு போரை நாடவில்லை; ஆனால், போருக்கு முழுமையாகத் தயாராக உள்ளது. நாங்கள் பேச்சுவார்த்தைக்கும் தயாராக இருக்கிறோம்.

ஆனால், அந்தப் பேச்சுவார்த்தைகள் நியாயமானதாகவும், சம உரிமைகளுடனும், பரஸ்பர மரியாதையின் அடிப்படையிலும் இருக்க வேண்டும்.

நாடு தழுவிய போராட்டங்களுக்குப் பிறகு நிலைமை தற்போது முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தப் போராட்டங்கள், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலையிடுவதற்கு ஒரு சாக்குப்போக்கு அளிக்கும் வகையில் வன்முறை மற்றும் ரத்தக்களரியாக மாறியது” எனத் தெரிவித்தார்.

அப்பாஸ் அராக்சி இன்று தெஹ்ரானில் உள்ள வெளிநாட்டுத் தூதர்களிடம் பேசினார். நாட்டில் இணையம் துண்டிக்கப்பட்டிருந்தபோதிலும், செயல்பட அனுமதிக்கப்பட்ட கத்தார் நிதியுதவி பெறும் அல்ஜசீரா செயற்கைக்கோள் செய்தி நிறுவனம் அராக்சியின் கருத்துகளை ஒளிபரப்பியது.

ஈரான் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் நாணய மதிப்பு வீழ்ச்சி ஆகியவற்றுக்கு அந்நாட்டில் கடந்த சில வாரங்களாக போராட்டம் நடந்து வருகிறது.

இந்தப் போராட்டத்தின் காரணமாக அந்நாட்டில் 490 போராட்டக்காரர்கள் மற்றும் 48 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்துள்ளதாகவும், 10,600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பான ஹெச்ஆர்ஏஎன்ஏ (HRANA) தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இப்பிரச்சினையைத் தூண்டிவிடுவதாக ஈரான் அரசு குற்றம் சாட்டியுள்ளது.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

“காலத்தை ஓட்டாதீங்க, ஊழல்வாதிகளை உள்ளே போடுங்கள்”

0
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு, " அரசாங்க பேச்சாளர் நண்பர் நலிந்த என்ன உளறுறார்? ராஜினாமா செய்த குமார ஜயக்கொடி தொடர்புல, "குற்றம் சாட்டிய எதிர் கட்சி எம்பீக்கள்,...

ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறந்தது ஈரான்!

0
உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையான ஹார்முஸ் நீரிணையை மீண்டும் முழுமையாகத் திறப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான இருவாரகால போர் நிறுத்தம் அமுலில் உள்ள காலப்பகுதியில் இவ்வாறு திறந்திருக்கும் என...

‘கிளீன் ஸ்ரீலங்கா’ செயல்திட்டங்கள் குறித்து மீளாய்வு!

0
'கிளீன் ஸ்ரீலங்கா' (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான செயல்திட்டங்கள் மற்றும் கடந்த ஆண்டின் முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17) முற்பகல்...