Home Blog Page 12

‘மலையக தமிழர்களுக்கான உரிமைகள்’ – மனோ, ஜேர்மன் தூதுவர் சந்திப்பு!

மலையக தமிழரின் வீடு, வாழ்வாதார காணிக்கான
உரிமை, பெருந்தோட்ட முறை மாற்றம் மூலம் தொழிலாளர், பங்காளராக மாறுவது, ஐரோப்பிய ஒன்றிய ஜிஎஸ்பி+, மனித உரிமை விதிகள், தோட்டங்களில் நிலவும் நவீன அடிமைத்துவம், ஒதுக்கல், தொடர்பாக, ஜெர்மன் தரப்புக்கு எடுதாது கூறியதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஜெர்மன் தூதுவர் கலாநிதி பீலிக்ஸ் நியுமனை, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தலைமையிலான குழுவினர் சந்தித்து உரையாடினர்.

இந்த உரையாடலில், தமுகூ அரசியல் குழு உறுப்பினர்கள் எஸ். சசிகுமார், பரத் அருள்சாமி, எஸ். பிரஜீவன் ஆகியோரும் கலந்து கொண்டனர். இது தொடர்பில் மனோ தனது எக்ஸ் தளத்தில் மேலும் கூறியுள்ளதாவது,

மலையக தமிழர், என்பவர்கள் சமீபத்தைய இந்திய வம்சாவளி பின்னணியுடைய 1.5 மில்லியன் தேசிய சிறுபான்மை இனத்தவர் ஆகும்.

இவர்களை, ஒரு தொழிலாளர் பிரிவாக மட்டும் காட்ட கயமை முயற்சிகள் முன்னெடுக்க படுகின்றன. உலகம், இந்த இன அடையாளத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.

உலக உதவிகள், மிகவும் நலிந்த பிரிவினரை அடைகிறதா என உறுதி செய்ய பட வேண்டும்.

ஜெர்மனியில் சிதறி வாழும் சிறுபான்மை சமூகங்களான டேன்ஸ், சோர்ப்ஸ், ஃபிரீசியன், சிநிதி-ரோமானியர், ஆகியோர் அனுபவிக்கும் நலவுரிமைகள் பற்றி அறிய விரும்புகிறோம். அதன் மூலம், எமது அரசியலமைப்பு யோசனையான நில-சார்பற்ற சமூக சபை (NTCC) முன்மொழிவை மேலும் சிறப்பிக்க விரும்புகிறோம்.

ஜெர்மன் தூதுவர் மலையக மக்களின் காணி உரிமை தொடர்பில் தாம் தெளிவு கொண்டுள்ளதாகவும், அதை தற்போது மென்மேலும் விரிவு படுத்தி கொண்டதாகவும், தொடர்ந்து நமக்குள்ளே உரையாடலை தொடர விரும்புவதாகவும், தெரிவித்தார்.

போர் சில வாரங்களில் முடிவுக்கு வரும்: அமெரிக்கா நம்பிக்கை!

ஈரான்மீது முன்னெடுக்கப்பட்டுவரும் இராணுவ நடவடிக்கைகள் சில வாரங்களில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் Marco Rubio நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஈரானின் அணுசக்தி நிலையங்கள், ஆயுத உற்பத்திசாலைகள், இராணுவத் தளங்கள் என்பவற்றின்மீது வான்வழித் தாக்குதலை நடத்திவரும் அமெரிக்கா, தரைப்படையையும் களமிறங்க திட்டமிட்டுவருகின்றது.

தரைப்படையினரின் நேரடித் தாக்குதல் இன்றி இலக்குகளை எட்ட முடியும் என அமெரிக்கா கருதினாலும், அவசரத் தேவைகளுக்காக ஆயிரக்கணக்கான அமெரிக்க படையினர் மத்திய கிழக்கில் குவிக்கப்பட்டுவருகின்றனர்.

இந்நிலையிலேயே அமெரிக்க வெளிவிவகார செயலாளர் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்த போரானது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் மனிதாபிமான நெருக்கடியையும் உலகப் பொருளாதாரத்தில் பெரும் சரிவையும் ஏற்படுத்தியுள்ளது.

ஈரானின் ஏவுகணை ஆற்றலே அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு தற்போது பெரும் தலையிடியாக மாறியுள்ளது.

அனைத்து அமைச்சுகளையும் ஒருங்கிணைக்க பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் ஐந்து அதிகாரிகள் நியமனம்

 

விவசாய நிலங்கள் உட்பட எரிபொருள் தேவைப்படும் ஏனைய துறைகளுக்கும் QR குறியீட்டு முறை ஆரம்பம்

எரிபொருள் பிரச்சினைகள் குறித்து கண்டறிவதற்கும் தேவையான தலையீடுகளை மேற்கொள்வதற்கும் அனைத்து அமைச்சுகளையும் உள்ளடக்கும் வகையில், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திலிருந்து ஐந்து அதிகாரிகளை நியமிப்பதற்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்தை மேற்பார்வையிடுவதற்காக நியமிக்கப்பட்ட குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

ஒவ்வொரு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களில் ஏற்படும் எரிபொருள் சிக்கல்களைக் கண்டறிந்து, கூட்டுத்தாபனத்துடன் ஒருங்கிணைப்பை பேணி தீர்வுகளை வழங்கத் தலையிடுவது இந்த அதிகாரிகளின் பொறுப்பாகும் என இதன்போது கலந்துரையாடப்பட்டது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில், அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்தை மேற்பார்வையிடுவதற்காக நியமிக்கப்பட்ட குழு நேற்று (27) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கூடிய போதே இந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

கைத்தொழிலாளர்கள் தமது உற்பத்திகளை நாடு முழுவதும் விநியோகிப்பதற்காக வாகனங்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீடு போதுமானதாக இல்லை என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த கோரிக்கைகளை நிராகரித்தால் பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், அவ்வாறு நடந்தால் பண்டிகைக் காலத்தில் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாக நேரிடும் என்றும் இங்கு அதிக கவனம் செலுத்தப்பட்டது.

தொழிற்சாலைகள், சதொச உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிக்கும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், இறக்குமதியாளர்கள், சுற்றுலாத் துறை சேவை நிறுவனங்கள் அல்லது ஹோட்டல்கள் மற்றும் ஏனைய சேவை வழங்கல் நிறுவனங்களுக்கு எரிபொருள் விநியோகிப்பது குறித்தும் இக்குழுவில் கலந்துரையாடப்பட்டது.

அதன்படி, அந்த நிறுவனங்களிலிருந்து முன்வைக்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு தொடர்பான கோரிக்கைகளை பரிசீலித்து தேவையான நடவடிக்கைகளை விரைவாக எடுப்பதற்கும், அக்கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட அமைச்சுகள் ஊடாக வலுசக்தி அமைச்சிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

விவசாயம், கடற்றொழில் உள்ளிட்ட ஏனைய துறைகளுக்காக, விவசாய ஆராய்ச்சி அதிகாரிகள் உள்ளிட்ட அந்தந்த துறைகளுக்குரிய அரச அதிகாரிகளின் பரிந்துரைக்கு அமைய வழங்கப்படும் கடிதத்திற்கு எரிபொருள் வழங்குவதற்குப் பதிலாக, QR குறியீட்டு முறையைப் பயன்படுத்தும் வேலைத்திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டு காலத்தில் பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி பொருட்களை வழங்குவதையும், பொருட்களின் விலை அதிகளவில் உயர்வதைத் தவிர்ப்பதையும் இலக்காகக் கொண்டு, எரிபொருள் விநியோகத்தைத் தடையின்றியும் முறையான முகாமைத்துவத்துடன் பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க இங்கு வலியுறுத்தினார்.

வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, வலுசக்தி பிரதி அமைச்சர் அர்கம் இல்யாஸ் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா உள்ளிட்ட அரச அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

இஸ்ரேல்மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்!

ஈரானுக்கு ஆதரவான ஹூதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல்மீது ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதால் மோதல் தற்போது தீவிரமடைந்துள்ளது.

மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர் இன்று 29 ஆவது நாளாக தொடர்கின்றது.

இந்த போர் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தைப் பாதித்து பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்பட்டுத்திவருகின்றது.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, இன்னும் சில வாரங்களில் ராணுவ நடவடிக்கைகள் நிறைவடையும் என்று கணித்துள்ள அதே வேளையில், கடல்வழிப் பாதைகளைப் பாதுகாக்கப் பிற நாடுகளின் ஒத்துழைப்பைக் கோரியுள்ளார்.

செங்கடல் மற்றும் சூயஸ் கால்வாய் போன்ற முக்கியமான வர்த்தக வழித்தடங்கள் முடக்கப்படும் அபாயம் இருப்பதால், இந்த போர் சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மலையக மக்களை அவமதிக்கும் பேச்சுகளுக்கு கடும் கண்டனம்

“மலைநாட்டு மக்களின் மரியாதையை தாழ்த்தும் எந்தவொரு கருத்தையும் நான் வன்மையாக கண்டிக்கிறேன். புரட்சிகர மக்கள் சக்தியாக நாம் மலையக மக்களையும், அவர்கள் சார்ந்த இன, மத, பிரதேச ரிதியாக இழிவாகப் பேசுவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.”

இவ்வாறு புரட்சிகர மக்கள் சக்தி செயலாளர் நாயகம் அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

காலத்திற்கு காலம் மலையக மக்களையோ அல்லது மலையகத்தை சார்ந்தவர்களை இன மத ரீதியாக, பிரதேச ரீதியாக பாகுபடுத்தி அவதூறாக சித்தரிக்கும் நிலைமை கடந்த காலங்களில் அதிகரித்துவருவதை எம்மால் அவதானிக்க கூடியதாக இருக்கிறது.

தற்சமய இலங்கை அரசியலை உற்று நோக்கினால் வடகிழக்கு, மலையகம் என அனைத்து
சிறுபான்மை சமூகங்களும் ஐக்கியத்துடன் ஒற்றுமையாக செயல்பட கைகளை நீட்ட வேண்டுமே தவிர அவமானப்படுத்துவதற்காகவோ, சமூகங்களை எதிர்க்கவோ எமது கைகளை நீட்ட கூடாது. இதனை பெரும்பாலான அரசியல் தலைமைகள் உணர்ர்ந்திருந்தாலும் கூட ஒரு சிலரது தகாத நடவடிக்கைகளினால் அனைவரும் பழியேற்க வேண்டிய நிலமைக்கு தள்ளப்படுவது துரதிர்ஷ்டமான செயலாக அமைந்துவிடுகின்றது.

ஒருசில மக்களால் தெரிவுசெய்யப்பட மக்கள் பிரதிநிதிகள் தம்மை தெரிவு செய்த மக்களுக்கு எந்தவொரு சேவையும் வழங்காமல், எந்தவொரு நன்மையும் பயக்காமல் தம்முடைய வங்குரோத்து அரசியலை மூடி மறைக்க இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டு சிறுபான்மை இன குழுக்களுக்கு மத்தியில் இன, மத , ரீதியாக கடும் வார்த்தை பிரயோகங்களால் சமூகங்களுக்கிடையில் நெருப்பை கொளுத்தி விட்டு குளிர் காய எண்ணினாலும், எமது மக்களின் மீது என்றும் மரியாதை கொண்ட, பொறுப்புள்ள அரசியலாளர்களாக, புரட்சிகர மக்கள் சக்தியாக நாங்கள் இவற்றை முறையாக கையாளவும், மக்களிடையே அமைதியை பேணவும், இன ஐக்கியத்தை பேணவும் கடமைப்பட்டிருக்கிறோம்.

நாம் அந்த கடமையை சரிவர நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறோம்.
மலையகத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக, புரட்சிகர மக்கள் சக்தியின் செயலாளர் நாயகமாகவும், மலையக பெண்ணாகவும், பட்டதாரியாகவும் மலைநாட்டு மக்களின் மரியாதையை தாழ்த்தும் எந்தவொரு கருத்தையும் நான் வன்மையாக கண்டிக்கிறேன். புரட்சிகர மக்கள் சக்தியாக நாம் மலையக மக்களையும், அவர்கள் சார்ந்த இன, மத, பிரதேச ரிதியாக இழிவாகப் பேசுவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எனது தந்தையும், பெருந்தலைவருமான பெ. சந்திரசேகரன், மலையக மக்களின் உரிமைக்காக மட்டுமல்லாமல் வடகிழக்கு பிரதேசங்களில் வாழ்ந்த மக்களின் நலன்களுக்காகவும் தன்னலமின்றி குரல் கொடுத்தவர்.

மலையகத்தில் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் கூட கிளிநொச்சி மாவட்டத்தில் வாழ்ந்த மக்களுக்கான அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளும் அளவுக்கு உயர்ந்த உள்ளமும், பண்பும் படைத்தவராக விளங்கியவர்.

இவ்வாறான சமூக ஒற்றுமை முயற்சிகளே சிறுபான்மை சமூகங்களுக்கிடையில் வலுவான உறவை உருவாக்கும். சிறுபான்மை சமூக குழுக்களான எங்களுக்குள் பரஸ்பர மரியாதையும் ஒற்றுமையும் மிகவும் அவசியமானவை.

ஒவ்வொரு சமூகத்திற்கும் தனித்துவமான வரலாறு உள்ளது. அதைப் போலவே, மலையக மக்களுக்கும் 200 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உள்ளது. பல சவால்களையும் தாண்டி, கல்வி, கலை, கலாச்சாரமென ஒவ்வொரு துறையிலும் எங்கள் சமூகமானது உயர்ந்து வளர்ந்து வருகிறது.

அதுமட்டுமன்றி சிறுபான்மை சமூகங்களாக நாம் ஒன்றிணைந்து நமது மக்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு எமது மக்களின் உரிமைகளுக்காகவும் அபிவிருத்திக்காகவும் போராடவேண்டும். இது புரட்சிகர மக்கள் சக்தியாக எங்கள் கட்சியின் கோரிக்கையாக இருப்பதுடன் இனிவரும் காலங்களில் மலையக மக்களை அவமதிக்கும் விதமாக செயற்பட எண்ணுபவர்களுக்கு விடுக்கப்படும் உறுதியான எச்சரிக்கையும் ஆகும்.

எப்.பி.ஐ. இயக்குநரின் மிச்சஞ்சலை ஹேக் செய்த ஈரான் ஆதரவுக்குழு!

அமெரிக்காவின் (FBI) புலனாய்வு அமைப்பின் இயக்குநர் காஷ் படேலின் தனிப்பட்ட மின்னஞ்சல்கள் மற்றும் புகைப்படங்களை ஈரானுடன் தொடர்புடைய குழு ஹேக் செய்தது.

மேலும், அந்தக் குழு காஷ் படேலின் புகைப்படங்களையும், ஆவணங்களையும் இணையத்தில் வெளியிட்டது.

‘Handala Hack Team’ என்ற ஈரான் தொடர்புடைய ஹேக்கர் குழு, காஷ் படேலின் மின்னஞ்சல் கணக்கை ஹேக் செய்ததாக அறிவித்துள்ளது.

அந்தக் குழு, “படேலின் பெயர் இனி வெற்றிகரமாக ஹேக் செய்யப்பட்டவர்களின் பட்டியலில் இடம்பெறும்” என்று தெரிவித்தது.

அமெரிக்காவின் சில பாதுகாப்பு அதிகாரிகள் இச்சம்பவம் நிகழ்ந்ததை உறுதிப்படுத்தினர். இருப்பினும், இந்தச் சம்பவம் குறித்து எஃப்பிஐ மற்றும் அமெரிக்க நீதித்துறை ஆகியவை இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

இந்த ஹேக்கிங் மூலம், பத்தாண்டுகளுக்கும் மேலான பழமையான சில ஆவணங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அந்த மின்னஞ்சல்களில், படேலின் பயணங்கள் மற்றும் வணிகம் தொடர்பான கடிதப் பரிமாற்றங்கள் வெளியாகியுள்ளன.

ஒரு பழமையான ஸ்போர்ட்ஸ் கார் அருகே நிற்கும் படேல், வாயில் சிகார் வைத்துக்கொண்டு அவர் போஸ் கொடுக்கும் படம் மற்றும் கையில் ரம் பாட்டிலுடன் கண்ணாடி முன் நிற்கும் படம் ஆகியவை வெளியாகியுள்ளது.

தங்களை பாலஸ்தீன ஆதரவு ஹேக்கர் குழுவாக சொல்லிக்கொள்ளும் இந்தக் குழு, சமீபத்தில் ‘Stryker’ என்ற மருத்துவ உபகரண நிறுவனத்தின் கணக்கையும் ஹேக் செய்தது. ஈரானிய இணையப் புலனாய்வுத் துறையுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இந்தக் குழு, தெற்கு ஈரானின் மினாப் நகரில் உள்ள குழந்தைகள் பள்ளி மீது அமெரிக்கவும், இஸ்ரேலும் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்த ஹேக்கிங் நடத்தப்பட்டதாகக் கூறியது.

அடிப்படை உரிமைகளை மீறிய ரம்புக்வெல்லவுக்கு 75 மில்லியன் ரூபா அபராதம்

அடிப்படை உரிமைகளை மீறிய ரம்புக்வெல்லவுக்கு 75 மில்லியன் ரூபா அபராதம்!

சர்ச்சைக்குரிய மருந்து கொள்வனவு உடன்பாட்டின் மூலம், பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி, அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறியதற்காக, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நஷனல் சிறிலங்கா தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு மீது, நேற்று தீர்ப்பை வழங்கிய உயர்நீதிமன்றத்தின் பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சுரசேன, நீதியரசர் குமுதினி விக்ரமசிங்க மற்றும் நீதியரசர் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய அமர்வு, சுகாதார அமைச்சின் செயலாளர், தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, மற்றும் மருத்துவ வழங்கல் பிரிவின் பணிப்பாளர் ஆகியோரும் அடிப்படை உரிமைகள் மீறல்களுக்குப் பொறுப்பானவர்கள் என்று தீர்ப்பளித்துள்ளது.

அந்தக் காலத்தில் அதிகாரிகளால் வழங்கப்பட்ட பதிவு விலக்கு “தவறானது, தன்னிச்சையானது மற்றும் மனம்போன போக்கானது” என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், கேள்விப்பத்திரம் கோரப்படமல் நேரடி ஒப்பந்தம் மூலம் மருந்துகளைக் கொள்முதல் செய்தது சட்டவிரோதமானது என்றும், அந்தப் பரிவர்த்தனையை செல்லாதது என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் சுகாதார அமைச்சர் 75 மில்லியன் ரூபாவும், ஏனைய ஒவ்வொரு பிரதிவாதியும் 50 மில்லியன் ரூபாவும் இழப்பீடாகச் செலுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, இதற்குப் பொறுப்பானவர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நேபாள முன்னாள் பிரதமர் கைது!

கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற ‘ஜென் ஸீ’ போராட்டங்களின் போது நிகழ்ந்த டஜன் கணக்கான உயிரிழப்புகளைத் தடுக்கத் தவறிய குற்றச்சாட்டு தொடர்பாக நேபாளத்தின் முன்னாள் பிரதமரான கே.பி. சர்மா ஒலி, இன்று (மார்ச் 28, 2026) கைது செய்யப்பட்டார்.

நேபாளத்தின் புதிய பிரதமராக பாலேந்திர ஷா பதவியேற்ற மறுநாளே, கடந்த ஆண்டு நடந்த ஜென் ஸீ போராட்டங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த குற்றச்சாட்டின் பேரில், நேபாள முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி கைது செய்யப்பட்டார்.

பக்தபூர் மாவட்டத்தின் குண்டு பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்திலிருந்து, நேபாள காவல்துறையினரால் ஒலி கைது செய்யப்பட்டார்.

சர்மா ஒலியுடன் சேர்த்து, முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகக்கும் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து பேசிய காத்மண்டு பள்ளத்தாக்கு காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் ஓம் ஆதிகாரி, “அவர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டனர்; சட்டத்திற்கு உட்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்,” என்று கூறினார்.

ஒலி கைது செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே, புதிதாகப் பொறுப்பேற்ற உள்துறை அமைச்சர் சுதான் குருங், “கொடுத்த வாக்குறுதி என்பது வாக்குறுதியே. சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் எவரும் இல்லை. நாங்கள் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலியையும், முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகக்கையும் கைது செய்துள்ளோம். இது எவருக்கும் எதிரான பழிவாங்கும் நடவடிக்கை அல்ல; இது நீதியின் தொடக்கம் மட்டுமே. இதன் மூலம் நாடு ஒரு புதிய திசையை நோக்கிப் பயணிக்கும் என்று நான் நம்புகிறேன்,” என்றார்.

தனது கைது குறித்து ஊடகங்களிடம் தெரிவித்த சர்மா ஒலி, “பழிவாங்கும் நோக்கத்துடன் நான் கைது செய்யப்பட்டுள்ளேன். இதற்கு எதிராக நான் சட்டரீதியான போராட்டத்தை முன்னெடுப்பேன்,” என்று தெரிவித்தார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 8 மற்றும் 9 தேதிகளில் நடைபெற்ற ஊழல் எதிர்ப்பு ஜென் ஸீ போராட்டத்தில், 19 இளைஞர்கள் உட்பட 70-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தற்காலிகத் தடையின் காரணமாகத் தொடங்கிய இந்தப் போராட்டம், அரசுக்கு எதிரான போராட்டமாக மாறியது. நாடு முழுவதும் பரவிய இப்போராட்டத்தில், நாடாளுமன்றம் மற்றும் அரசு அலுவலகங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. இதன் காரணமாக, ஒலி தலைமையிலான அரசாங்கம் கவிழ்ந்தது

இதன் பின்னர் நேபாளத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியான சுஷிலா கார்கி, இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்தினார். அதன்பிறகு, ராப் பாடகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய பாலேந்திர ஷா, மார்ச் 5 அன்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, நேற்று (மார்ச் 27) நேபாளப் பிரதமராகப் பதவியேற்றார்.

நேபாளத்தில் புதிதாக அமைந்த அரசாங்கத்தின் முதல் அமைச்சரவைக் கூட்டம், வெள்ளிக்கிழமையன்று பாலேந்திர ஷா தலைமையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று முன்னாள் பிரதமர் சர்மா ஒலி கைது செய்யப்பட்டுள்ளார்.

 

ட்ரம்புக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்!

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் நிர்வாகத்திற்கு எதிராக “நோ கிங்ஸ்” (No Kings) என்ற பெயரில் நடைபெறவுள்ள பிரம்மாண்டமான மூன்றாவது கட்ட போராட்டம் சனிக்கிழமை (28) நடைபெறவுள்ளது.

ஊழல் மற்றும் சர்வாதிகாரப் போக்கைக் கண்டிக்கும் வகையில், அமெரிக்கா முழுவதும் சுமார் 3,000 இடங்களில் பொதுமக்கள் திரளத் திட்டமிட்டுள்ளனர்.

இது அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவிலான மக்கள் எழுச்சியாக இருக்கும் என்று ஏற்பாட்டாளர்கள் கருதுகின்றனர்.

முன்னதாக நடைபெற்ற இரண்டு போராட்டங்களிலும் பல மில்லியன் கணக்கான மக்கள் பங்கேற்ற நிலையில், தற்போதைய நிகழ்வு மேலும் வலுப்பெற்றுள்ளது.

இருப்பினும், இந்த எதிர்ப்புப் பேரணிகளை குடியரசுக் கட்சியினர் எதிர்மறையாக விமர்சிப்பதோடு, சில இடங்களில் வன்முறை தூண்டப்படுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

டிரம்பின் குடியேற்றக் கொள்கைகள் மற்றும் ஈரான் மீதான போர் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதே போராட்டங்கள் இடம்பெறவுள்ளன என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

IPL திரு​விழா இன்று தொடக்கம்: ஆர்சிபி – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பலப்பரீட்சை!

ஐபிஎல் டி 20 கிரிக்​கெட் திரு​விழா​வின் 19-வது சீசன் பெங்களூரு​வில் உள்ள எம்​.சின்​ன​சாமி மைதானத்​தில் இன்று தொடங்​கு​கிறது.

இந்​தத் தொடரில் நடப்பு சாம்பியனான ஆர்​சிபி, தலா 5 முறை பட்​டம் வென்​றுள்ள சிஎஸ்​கே, மும்பை இந்​தி​யன்​ஸ், 3 முறை கோப்​பையை கைப்​பற்றி உள்ள கொல்​கத்தா நைட் ரைடர்​ஸ், தலா ஒரு முறை வாகை சூடி​யுள்ள ராஜஸ்​தான் ராயல்​ஸ், குஜ​ராத் டைட்​டன்​ஸ், சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் ஆகிய அணிகளுடன் இது​வரை பட்​டம் வெல்​லாத டெல்லி கேப்பிடல்​ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்​ஸ், பஞ்​சாப் கிங்ஸ் ஆகிய அணி​களும் களமிறங்​கு​கின்​றன.

தொடக்க நாளான இன்று நடப்பு சாம்​பிய​னான ரஜத் பட்டிதார் தலை​மையி​லான ஆர்​சிபி அணி, முன்​னாள் சாம்​பிய​னான சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி​யுடன் மோதுகிறது.

இந்த ஆட்​டம் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இரு அணி​களுமே இம்​முறை பந்துவீச்சுதுறை​யில் சற்று பலவீன​மாக உள்​ளன. முக்​கிய வீரர்​கள் இல்​லாதது இரு அணி​களுக்​கும் பின்​னடை​வாகக் கருதப்​படு​கிறது.

ஆர்​சிபி அணி கடந்த ஆண்டு சாம்​பியன் பட்​டம் வென்றதில் முக்​கிய பங்கு வகித்த வேகப்​பந்து வீச்சாளரான ஜோஷ் ஹேசில்​வுட் காயத்​தால் அவதிப்​பட்டு வரு​கிறார். இதனால் அவர், தொடக்க போட்​டிகளில் களமிறங்குவது சந்தேகம்தான்.அதேவேளை​யில் யாஷ் தயாள் தனிப்​பட்ட காரணங்​களுக்​காக இந்த சீசனில் இருந்து முழு​மை​யாக விலகி உள்​ளார்

பவர்​பிளே​வில் துல்​லிய​மாகப் பந்​து​வீசும் திறன் கொண்ட ஜோஷ் ஹேசில்​வுட் களமிறங்கவில்லை என்றால் அது ஆர்சிபி அணி​யில் பெரிய தாக்​கத்தை ஏற்​படுத்​தக்​கூடும். இடது கை வேகப்​பந்து வீச்​சாள​ரான யாஷ் தயாள், கடந்த சீசனில் இக்​கட்​டான நேரங்​களில் விக்​கெட்​டு​களை வீழ்த்தி உதவி​யிருந்​தார். தற்போதைய சூழ்நிலையில் சீனியர் வேகப்​பந்து வீச்​சாள​ரான புவனேஷ்வர் குமார், இடதுகை வேகப்​பந்து வீச்​சாள​ரான மங்​கேஷ் யாதவ், சுழற்​பந்து வீச்​சாளர்​களான கிருணல் பாண்​டி​யா, சுயாஷ் சர்மா ஆகியோரையே ஆர்​சிபி அணி நம்​பி​யிருக்க வேண்டியது உள்​ளது.

அதேவேளை​யில் சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி​யில் கேப்​டன் பாட் கம்​மின்ஸ் காயம் காரண​மாக முதற்​கட்ட போட்​டிகளில் விளை​யாடுவது சந்தேகமாகி உள்ளது. அந்த அணி​யில் பிரைடன் கார்​ஸ், ஜெயதேவ் உனத்​கட், ஹர்ஷால் படேல், ஹர்ஷ் துபே ஆகியோரை உள்​ளடக்​கிய பந்​து​வீச்சு துறைக்கு இன்​றைய ஆட்​டம் கடும் சவால் நிறைந்​த​தாக இருக்​கக்​கூடும். பாட் கம்​மின்​ஸ், எப்​போது அணிக்கு திரும்​பு​வார் என்​பதும் தெளிவு படுத்தப்படவில்லை.

ஐபிஎல் தொடரில் கடந்த ஆண்டு ஜூன் 4-ம் தேதி பெங்களூரு​வில் நடை​பெற்ற ஆர்​சிபி வெற்றி கொண்​டாட்டத்​தின் போது ஏற்​பட்ட கூட்ட நெரிசலில் உயி​ரிழந்த 11 ரசிகர்​களுக்கு அஞ்​சலி செலுத்​தும் வித​மாக, இந்த ஆண்டு தொடக்க விழா ரத்து செய்​யப்​பட்​டுள்​ளது. மைதானத்​தில் 11 இருக்​கைகள் அவர்​கள் நினை​வாக காலியாக வைக்​கப்​படும் எனவும் அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

சினிமா

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

செய்தி

நுவரெலியா கிரகரி வாவியிலிருந்து சடலம் மீட்பு!

0
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் உள்ள கிரகரி வாவியிலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று (06) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிரகரி வாவியில் படகு சவாரியில் ஈடுபடுவோர்...

தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம் ஆரம்பம்!

0
- இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 5,000 ரூபாய் வரையிலான அனைத்து LankaQR பரிமாற்றங்களுக்கும் வர்த்தகர்களிடம் வசூலிக்கப்படும் சேவைக்கட்டணம் முழுமையாக நீக்கம். - புதிய முறைமையின் ஊடாக எந்த நிமிடமும் எந்த இடத்தில்...

ஈரான் உளவுத்துறை தளபதி பலி!

0
ஈரான் புரட்சிகர காவல்படையின் உளவுத்துறைத் தலைவர் மஜித் காதேமி Majid Khademi, கொல்லப்பட்டுள்ளார். ஈரான் ஊடகங்கள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளன. தாக்குதலுக்குரிய பொறுப்பை இஸ்ரேல் ஏற்றுள்ளது. பயங்கரவாதத் தலைவர்களுக்கு எதிரான வேட்டை தொடரும் என்று இஸ்ரேல்...