Home Blog Page 125

ஜனாதிபதியை சந்தித்தார் அமெரிக்க தூதுவர்!

பதவிக்காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங், ஜனாதிபதியை சந்தித்தார்

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி 16ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படவுள்ள திருமதி ஜூலி சாங் (Julie Chung), நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தார்.

திருமதி ஜூலி சாங் தனது பதவிக்காலத்தில் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதற்காக மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளை ஜனாதிபதி இதன்போது பாராட்டினார்.

அத்துடன், ‘டித்வா’ (Ditwa) சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரிதமாக நிவாரணங்களை வழங்குவதற்காக அமெரிக்காவுடன் இணைந்து அவர் ஆற்றிய பங்களிப்பிற்கு ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) பேச்சுவார்த்தைகளின் போது அவர் வழங்கிய விசேட ஆதரவிற்கும் ஜனாதிபதி இதன்போது பாராட்டுத் தெரிவித்தார்.

2022 பெப்ரவரி மாதம் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராகப் பதவியேற்ற திருமதி ஜூலி சாங், அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75-வது ஆண்டு நிறைவு உட்பட, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் பல முக்கிய மைல்கற்களில் தனது தலைமைத்துவத்தை வழங்கியிருந்தார்.

பலாலி, காங்கேசன்துறையில் பொருத்த ஸ்கானர்களை வழங்கியது ஆஸ்திரேலியா!

வடக்கின் இரண்டு உள்நுழைவு முனையங்களில் பொதிகளை சோதனையிடுவதற்கான ஸ்கானர் கருவிகளை ஆஸ்திரேலியா கொடையாக வழங்கியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் எல்லைப் படைகளால் கொடையாக வழங்கப்பட்டுள்ள இந்த உயர் தொழில்நுட்ப ஸ்கானர்களை கையளிக்கும் நிகழ்வு நேற்று காங்கேசன்துறையில் இடம்பெற்றது.

இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவர் மத்யூ டக்வேர்த், இலங்கை சுங்கப் பணிப்பாளர் சீவலி அருகொடவிடம் இவற்றைக் கையளித்தார்.

இந்த நிகழ்வில் ஆஸ்திரேலிய சுங்கப் பணிப்பாளர் நாயகம் போல் எட்வர்ட்ஸ், அவுஸ்ரேலிய தூதரக அதிகாரிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுக பயணிகள் முனையம் ஆகியவற்றில் இந்த ஸ்கானர்கள் பொருத்தப்படவுள்ளன.

மரக்கறி விலைப்பட்டியல் (13.01.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (13) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

கல்வி மறுசீரமைப்பை கைவிடும்வரை ஓயமாட்டேன்: விமல் கொக்கரிப்பு!

புதிய கல்வி மறுசீரமைப்பு கைவிடப்பட வேண்டும், கல்வி அமைச்சு பதவியில் இருந்து பிரதமர் நீக்கப்பட வேண்டும். அதுவரையில் போராட்டம் தொடரும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச சூளுரைத்துள்ளார்.

மேற்படி இரு விடயங்களையும் முன்வைத்து கல்வி அமைச்சுக்கு முன்பாக தனது சகாக்களுடன் விமல் வீரவன்ச சத்தியாக்கிரகப் போராட்டத்தை நேற்று ஆரம்பித்தார்.

கோ ஹோம் ஹரிணி, கோ ஹோம் ஹரிணி என்ற கோஷத்துடன் சத்தியாக்கிரகத்தை விமல் வீரவன்ச முன்னெடுத்தார். பிரதமர்மீது கடும் விமர்சனங்களையும் முன்வைத்தார்.

அரச சார்பற்ற நிறுவனங்களின் முகவராக செயல்படும் பிரதமர், கல்வி அமைச்சு பதவியை வகிப்பதற்கு தகுதியற்றவர் என சுட்டிக்காட்டினார்.

ஐ.நாவுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி அரசியல் நகைச்சுவையாளராக மாறிய விமலின் இந்த போராட்டமும் அரசியல் நாடகமென சமூகவலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டுவருகின்றது.

கல்வி அமைச்சுக்கு முன்பாக கூடாரம் அமைத்து விமல் தரப்பு போராட்டத்தை தொடர்கின்றது. கையெழுத்து திரட்டும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

குறித்த இடத்துக்கு இலங்கை கொடியுடன் வந்த நபரொருவர், பிரதமருக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தினார். அவரை அங்கிருந்தவர்கள் விரட்டினர்.

அதேவேளை, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கல்வி அமைச்சு பதவியில் இருந்து விலக வேண்டும் என எதிரணிகள் வலியுறுத்தியுள்ளன.

‘வா வாத்தியார்’ படத்தை பொங்கலுக்கு வெளியிட உயர் நீதிமன்றம் நிபந்தனை

‘வா வாத்தியார்’ பட விவகாரத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா 3 கோடியே 75 லட்சம் ரூபாய் செலுத்திய நிலையில், மீதமுள்ள கடன் தொகையை செலுத்தினால் படத்தை பொங்கலுக்கு வெளியிடலாம் என அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திவாலானவர் என அறிவிக்கப்பட்ட அர்ஜுன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் ஸ்டூடியோ கிரீன் படத் தயாரிப்பு நிறுவனம் பெற்ற 10 கோடியே 35 லட்சம் ரூபாய் கடனை வட்டியுடன் சேர்த்து 21 கோடியே 78 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை செலுத்த ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவும், அர்ஜுன்லால் சொத்துகளை நிர்வகிக்க நியமிக்கப்பட்ட சொத்தாட்சியர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பணத்தை திரும்ப செலுத்தும் வரை ‘வா வாத்தியார்’ படத்தை வெளியிடகூடாது என தடை விதித்து உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஸ்டுடியோ கிரீன் தரப்பில், 3 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கான டிடி-யை, பட தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் செலுத்தியது.

இதையடுத்து மீதி தொகையையும் செலுத்தினால் படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்து கொள்ளலாம் என நீதிபதிகள் அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.

இதற்கிடையில், மூன்று கோடி ரூபாய் கடன் தொகையை திருப்பித் தராததால் படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி தனேஷ் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, படத்துக்கு தடை விதிக்க மறுத்து, மனுவுக்கு பதிலளிக்கும்படி ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

ரணில் – சஜித் விரைவில் நேரடி சந்திப்பு!

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தொலைபேசி ஊடாக பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அத்துடன், சஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வுக்கு தமது பிரதிநிதிகளையும் அவர் அனுப்பியுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் 59 ஆவது பிறந்தநாள் நேற்றாகும். இதனை முன்னிட்டு கங்காராம விகாரையில் விசேட வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, சிரேஷ்ட உப தலைவர் சாகல ரத்நாயக்க , ரவி கருணாநாயக்க ஆகியோர் பங்கேற்று, வாழ்த்து கூறினர்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதித் தலைவர் பழனி திகாம்பரம் ஆகியோரும் பங்கேற்றனர்.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றை ஒன்றிணைப்பதற்குரிய பேச்சுவார்த்தை வெற்றியை நோக்கி பயணிப்பதை இன்றைய நிகழ்வு உறுதிப்படுத்தியுள்ளது.

சஜித்தின் பிறந்தநாள் நிகழ்வில் ஐதேக பிரதிநிதிகள் பங்கேற்றமை இரு தரப்பு இணைவுக்கான இறுதியான – உறுதியான சமிக்ஞையென தெரியவருகின்றது.

சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரும் நேரடியாக சந்தித்து பேச்சு நடத்திய பின்னர் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.

சஜித்துடன் இணைந்து செயல்பட தயார் என்பதையே ரணில் விக்கிரமசிங்க, சஜித்துக்கான பிறந்தநாள் பரிசாக வழங்கியுள்ளார் என ஐதேக ஆதவாளர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தர் பலி: கொத்மலை பகுதியில் சோகம்!

கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தவலந்தண்ண பகுதியில் மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தரொருவர் பலியாகியுள்ளார்.
இத்துயர் சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளது.

இறம்பொடை 50 ஏக்கர் தோட்டத்தில் சேர்த்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 34 வயதுடைய ராஜகோபால் தியாகன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அண்மையில் டீத்வா புயலால் ஏற்பட்ட பேரிரால் தவலந்தண்ண பகுதியில் பாதிக்கப்பட்ட வீடுகளின் திருத்தப் பணியில் ஈடுபட்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஏணி ஒன்றை வைத்துக்கொண்டு இப்பணியில் ஈடுபட்ட இவர், குறித்த ஏணி மின் கம்பத்தில் மோதியதனால் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இவரது மனைவி வெளிநாட்டில் தொழில் புரிகின்றார் என தெரியவருகின்றது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொத்மலை பொலிசாரா மேற்கொண்டு வருகின்றனர்.

கௌசல்யா

சஜித்துக்கு “59”: சப்ரைஸ் கொடுத்தார் ரணில்!

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் 59 ஆவது பிறந்தநாள் இன்றாகும். இதனை முன்னிட்டு ஐக்கிய தேசியக் கட்சி, அவருக்கு அரசியல் ரீதியில் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

கொழும்பு, , ஹுணுபிட்டிய கங்காராம விகாரையில் மகா சங்கத்தினரின் பங்கேற்புடன் மத அனுஷ்டானம் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் அரசியல் கூட்டணி வைத்துள்ள மனோ கணேசன் மற்றும் திகாரம்பரம் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
ரணில் விக்கிரமசிங்கவின் பிரதிநிதிகளாகவே அவர்கள் பங்கேற்றிருந்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியை ஒன்றிணைப்பதற்குரிய முயற்சியின் சிறந்த முன்னேற்றமாக இது கருதப்படுகின்றது.

2029 இல் பொது வேட்பாளர் யார்? நாமல் கூறுவது என்ன?

“2029 ஜனாதிபதி தேர்தலின்போது பொதுவேட்பாளர் யார் என்பது தொடர்பில் இன்னும் முடிவெடுக்கப்படவில்லை.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்

“ ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட எதிரணிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்தால் 2029 ஜனாதிபதி தேர்தலின்போது பொதுவேட்பாளர் யார் என்பது தொடர்பில் சர்ச்சை ஏற்படாதா?

அவ்வாறு எழும் பட்சத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கும் .” என நாமல் ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர்,

“இது பற்றி 2029 ஆம் ஆண்டில் கதைப்போதும். தற்போது விவாதிக்க வேண்டிய விடயம் அல்ல அது.

எதிரணிகள் ஒன்றிணைந்து வலுமான அரசியல் பயணத்தை முன்னெடுப்பது பற்றியே தற்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.” – என்றார்.

அமெரிக்காவும், இஸ்ரேலும் சதி: ஈரான் ஜனாதிபதி குற்றச்சாட்டு!

ஈரானில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு அமெரிக்காவும், இஸ்ரேலுமே காரணம் என்றும், இவ்விரு நாடுகளும் திட்டமிட்டு கலவரங்களைத் தூண்டி வருவதாகவும் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் குற்றஞ்சாட்டினாா்.

மேலும், ‘மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக அவா்களுடன் பேச்சு நடத்த தயாா்; அதேநேரம், வன்முறையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் அவா் எச்சரித்தாா்.

ஆட்சிக்கு எதிரான போராட்டம் தொடங்கிய பிறகு முதல்முறையாக அரசுத் தொலைக்காட்சியில் நாட்டு மக்களிடையே உரையாற்றிய உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” ஈரானில் குழப்பத்தை ஏற்படுத்த அமெரிக்காவும் இஸ்ரேலும் துடிக்கின்றன.

வெளிநாடுகளில் அமா்ந்துகொண்டு இங்கிருக்கும் போராட்டக்காரா்களுக்கு அவா்கள் உத்தரவுகளைப் பிறப்பிக்கின்றனா். நாட்டின் மீது நேரடித் தாக்குதல் நடத்தியவா்களே, தற்போது போராட்டக்காரா்களைத் தூண்டிவிட்டு வன்முறையைப் பரவச் செய்கின்றனா்.

வன்முறையை ஏற்க முடியாது: பயங்கரவாதிகள் வெளிநாடுகளில் இருந்து ஊடுருவி மசூதிகளுக்குத் தீ வைப்பதும், அப்பாவிகளைக் கொலை செய்வதுமான செயல்களில் ஈடுபடுகின்றனா்.

இத்தகைய வன்முறைகளை ஒருபோதும் ஏற்க முடியாது. நாட்டின் இளைஞா்கள் இத்தகைய கலவரக்காரா்கள் மற்றும் பயங்கரவாதிகளின் வலையில் சிக்கி ஏமாற வேண்டாம். வன்முறையாளா்களிடமிருந்து விலகியிருக்க வேண்டும். சமூக அமைதியைச் சீா்குலைக்க யாரையும் அனுமதிக்கக் கூடாது..” எனவும் தனது உரையில் ஈரான் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ஆர்.சி.பியின் வெற்றிநடை தொடருமா?

0
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 26 ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. பிற்பகல் 3.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் இப்போட்டி...

உலகின் செல்வாக்கு மிக்க தலைவர் பட்டியல்: பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலிடம்

0
உலகின் செல்வாக்குமிக்க தலைவர்களின் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார். உலகின் 24 ஜனநாயக நாடுகளில் நடத்தப்பட்ட மக்கள் கருத்து கணிப்புகளின் அடிப்படையிலேயே இத்தெரிவு இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த மார்னிங் கன்சல்ட் என்ற...

பதுளையில் சிறப்பாக நடைபெற்ற “சூரிய மங்கள விழா – 2026”

0
பதுளை வர்த்தக சங்கம், பதுளை மாநகர சபை மற்றும் பதுளை ஐக்கிய வர்த்தக சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த “பதுளை சூரிய மங்கள விழா - 2026” நேற்று (17) பதுளை கால்பந்து...