Home Blog Page 160

சர்வதேச உதவி முறையாக நிர்வகிப்பு: ஐ.நா. பிரதிநிதியிடம் பிரதமர் எடுத்துரைப்பு!

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியயவுக்கும், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்சேவுக்கும் இடையிலான சந்திப்பு பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இலங்கை அண்மையில் சந்தித்த இயற்கை பேரழிவைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு நிவாரணம் வழங்க அரசாங்கம் விரைவாகவும் முறையாகவும் செயற்பட்டதற்கு மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் பாராட்டு தெரிவித்தார்.

உலகின் ஏனைய நாடுகளின் அனுபவங்களுடன் ஒப்பிடும்போது, இதுபோன்ற பேரனர்த்தங்களின் போது இலங்கைக்கு கிடைத்த சர்வதேச ஒத்துழைப்பின் அளவு மிக உயர்ந்த நிலையில் உள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கைக்குத் தேவையான உதவிகளை வழங்க தனது தொழில்முறை மற்றும் தனிப்பட்ட ஈடுபாட்டை முழுமையாகப் பயன்படுத்துவதாகவும் அவர் வலியுறுத்தினார்.

ஐக்கிய நாடுகள் சபையிடமிருந்து இலங்கைக்கு கிடைத்துவரும் தொடர்ச்சியான ஒத்துழைப்பைப் பாராட்டிய பிரதமர், இந்த பேரனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளில் அரசியல் அதிகார தரப்புகள் மற்றும் அரச அதிகாரிகள் ஆற்றிய பணி சிறப்பாக இருந்தது என்று குறிப்பிட்டார்.

இந்த வெற்றிக்கு, குறிப்பாக மாவட்டத் தலைமை முதல் பிரதேச மட்டத்தில் கீழ் மட்ட அதிகாரிகள் வரை அனைவரின் கூட்டு முயற்சியே காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.

கிடைக்கப்பெற்ற சர்வதேச ஒத்துழைப்பை முறையாக நிர்வகிப்பதற்கும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு வாழ்க்கையை விரைவாக மீட்டெடுப்பதற்கும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

இந்த நிகழ்வில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அக்கரப்பத்தனை பிரதேச சபையின் பட்ஜட் நிறைவேற்றம்!

அக்கரப்பத்தனை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் இன்று (22) நிறைவேற்றப்பட்டது.

வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 8 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

அக்கரப்பத்தனை பிரதேச சபையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸே ஆட்சியமைத்துள்ளன. அச்சபையில் 15 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

அண்மையில் வரவு- செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டவேளை, அது தோற்கடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலேயே இன்று மீண்டும் முன்வைக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளது.

17 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக போராட்டம் நடத்துமாறு தொண்டர்களுக்கு இம்ரான் கான் அழைப்பு!

பாகிஸ்​தான் கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் தலைவர் இம்​ரான் கான், கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை பிரதம​ராக பதவி வகித்​தார்.

அவருக்கு சவுதி இளவரசர் முகமது பின் சல்​மான் 8.5 கோடி மதிப்​பிலான கைக்​கடி​காரத்தை பரிசளித்​தார். அதை அரசின் கரு​வூலத்​தில் சேர்க்​காமல், அதை விற்​ப​தற்கு இம்​ரான் கான் மனைவி புஷ்ரா பீபி முயன்​றார்.

இது தொடர்பான வழக்கில் இம்​ரான் கான், புஷ்ராவுக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது. இந்​நிலை​யில் இம்​ரான்​கானின் எக்ஸ் தள பக்​கத்​தில் நேற்று முன்​தினம் இரவு ஒரு தகவல் வெளி​யிடப்​பட்​டது.

” கடந்த 3 ஆண்​டு​களாக அடிப்​படை ஆதா​ரமற்ற குற்​றச்​சாட்​டு​களால் எனக்கு தண்​டனை​கள் வழங்​கப்​பட்​டன. அது​போல், பரிசு பொருள் வழக்​கில் எனக்கு கிடைத்த தண்​டனை எனக்கு புதிதல்ல.

எனது தரப்பு வாதங்​கள் இந்த வழக்​கில் கேட்​கப்​பட​வில்​லை. நானும், எனது மனை​வி​யும் தனிமை சிறை​யில் அடைக்​கப்​பட்டு கொடுமை​களை அனுப​வித்து வரு​கிறோம். சட்​டம் மற்​றும் அரசி​யலமைப்பை நிலை​நாட்ட நமது வழக்​கறிஞர்​கள் அணி போராட வேண்​டும்.” – என்று அப்பதிவில் கூறப்பட்டுள்ளது.

நீதிக்​காக போராட தெரு இயக்​கத்தை உரு​வாக்க வேண்​டும். தேசிய அளவில் போராட்​டம் நடத்​தப்பட வேண்​டும். பாகிஸ்​தானின் உண்​மை​யான சுதந்​திரத்​துக்​காக நான் எனது வாழ்க்​கையை தியாகம் செய்​ய​வும் தயா​ராக உள்​ளேன் எனவும் அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இம்ரான் கானுக்கு சிறை நிர்வாகம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால், அவர் சார்பில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளளது.

புதிய அரசியல் கலாசாரம் என்றால் என்னவென்பதை செயலில் காட்டியுள்ளோம்!

நாட்டில் புதிய அரசியல் கலாசாரம் ஏற்பட்டுத்தப்பட்டு வருகின்றது. இதற்கு எமது அரசாங்கம் முன்மாதிரியாக செயல்படுகின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

அத்துடன், போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து எமது இளைஞர்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு,

வங்குரோத்து நிலையில் இருந்த நாடே எம்மிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் பொருளாதார ரீதியாக பாதிப்புகள் இருந்தன. எனவே, பொருளாதாரத்தை ஸ்தீரப்படுத்துவதற்கு கடந்த ஒரு வருடமாக பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

நாட்டில் அரசியல் கலாசாரம் மாற்றப்பட்டு வருகின்றது. சிறந்தொரு அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். புதிய அரசியல் கலாசாரம் என்றால் என்னவென்பதை நாம் செயலில் காட்டியுள்ளோம்.

பிரதமருக்கு மாதாந்த எரிபொருள் கொடுப்பனவு 33 லட்சம் ரூபா, ஆனால் எமது பிரதமர் 4 லட்சம் ரூபாதான் பயன்படுத்துகின்றார். ஏனையவற்றை திறைசேரிக்கு அனுப்பி விடுகின்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அமைச்சராக இருந்தால் , நாடாளுமன்ற உறுப்பினருக்குரிய சம்பளம் மற்றும் அமைச்சருக்குரிய சம்பளம் கிடைக்கப்பெற்றது. சலுகைகளும் அப்படிதான். ஆனால் எமது ஆட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை மட்டும் தாருங்கள், வேறு எதுவும் வேண்டாம் என அமைச்சர்கள் கடிதம் அனுப்பினர்கள். நாம் இரண்டு சம்பளம் பெறவில்லை.

அமைச்சர்களுக்கு கொழும்பில் வீடுகள் இருந்தன. அவற்றை நாம் பெறவில்லை. எமது சபாநாயகர்கூட சபாநாயகருக்குரிய அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு செல்லவில்லை.

கடந்த காலங்களில் இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடிகள் தலைவிரித்தாடின. இவற்றை ஒழிப்பதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து எமது இளைஞர் சமுதாயகத்தை நாம் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். போதைப்பொருள் வியாபாரிகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் கறுப்பு அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டும். மக்களால் தெரிவுசெய்யப்பட்ட எமது அரசாங்கத்துக்கு இருக்கும் மிக முக்கிய பொறுப்புகளில் இதுவும் ஒன்றாகும். நிச்சயம் போதைப்பொருளை ஒழிப்போம். என்றார் அமைச்சர்.

 

ரணிலும், சஜித்தும் இணைவது ஜனநாயகத்துக்கு நல்லது!

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன ஒன்றிணைந்து செயல்படுவது ஜனநாயக அரசியலுக்கு நல்லது என்று ஸ்ரீலங்காபொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பனர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச ஆகியோர் இணைந்து செயல்பட வேண்டும் என்பதை கடந்த ஜனாதிபதி தேர்தலின்போதும் தான் வலியுறுத்தி இருந்தாகவும் நாமல் குறிப்பிட்டார்.

பயங்கரவாதத் தாக்குதலின் எதிரொலி: புலனாய்வு துறையை மறுசீமைக்கிறது

ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியாவின் உளவுத்துறை மற்றும் பொலிஸ் உட்பட சட்ட அமுலாக்கத்துறை மீளாய்வுக்குட்படுத்தப்படும் என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸி தெரிவித்தார்.

இது தொடர்பான நடவடிக்கையை ஏப்ரல் மாதத்துக்குள் நிறைவுசெய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

போண்டி பயங்கரவாதத் தாக்குதலையடுத்தே இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

ஆஸ்திரேலியா புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவர் டென்னிஸ் ரிச்சர்ட்சன் தலைமையிலேயே மதிப்பாய்வுக்காக, அரச ஆணைக்குழு அமைக்கப்படவுள்ளது.

ஆஸ்திரேலியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குரிய நடவடிக்கை, அதற்காக செயல்படும் சட்ட அமுலாக்க துறைகளுக்கு உள்ள அதிகாரங்கள்,கட்டமைப்புகள் மற்றும் செயல்முறைகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளது.

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் மோசமானது: தமிழரசுக் கட்சி போர்க்கொடி!

 

பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் வகையில் அரசாங்கத்தினால், வெளியிடப்பட்டுள்ள வரைவில், முன்னைய திருத்தச் சட்டமூலங்களை விட மோசமான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், தெரிவித்துள்ளார்.

தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாக, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் எனும் சட்டவரைவு நீதியமைச்சின் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் அதனைப் பதிலீடு செய்யும் வகையில் முன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் என்பவற்றின் உள்ளடக்கங்களை விடவும், மோசமான விடயங்கள் இந்தப் புதிய வரைவில் உள்வாங்கப்பட்டுள்ளன.

தேசிய மக்கள் சக்தி எதிரணியாக இருந்த வேளையில், பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படும், பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு தனியான சட்டமொன்று தேவையில்லை என்ற நிலைப்பாட்டிலேயே இருந்தது.

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அறிக்கையிலும், பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறதே தவிர, பிறிதொரு சட்டத்தினால் அது பதிலீடு செய்யப்படும் எனக் கூறப்படவில்லை.

இவ்வாறான பின்னணியில், பயங்கரவாத தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் வகையில், பிறிதொரு சட்டத்தைக் கொண்டு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அந்தச் சட்டத்தைப் பதிலீடு செய்வதற்கான நடவடிக்கைகளைத் முற்றாக எதிர்ப்போம்.

நீதியமைச்சினால் வெளியிடப்பட்டிருக்கும் புதிய வரைவின் உள்ளடக்கங்கள் மிகமோசமானவையாக உள்ளன.

அவைபற்றி விரிவாக ஆராய்ந்து தமது கரிசனைகளை வெகுவிரைவில் நீதியமைச்சுக்கு அனுப்பி வைக்கவிருப்பதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.

மரக்கறி விலைப்பட்டியல் (22.12.2025)

மரக்கறி விலைப்பட்டியல் (22.12.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (22) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

ஊழல், மோசடியற்ற தூய ஆட்சியே முன்னெடுப்பு!

“எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஜனாதிபதி நிதியத்தை முற்றுமுழுதாக வறிய மக்களின் நலனுக்காகவே பயன்படுத்தும். இந்த அரசாங்கத்தில் ஊழல், மோசடிக்கு இடமே இல்லை.”

– இவ்வாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

ஜனாதிபதி நிதியத்தால் நடைமுறைப்படுத்தப்படும் ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் விசேட வேலைத்திட்டத்தின் இந்த ஆண்டுக்கான இறுதி நிகழ்வு, நேற்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி இரணைமடுவிலுள்ள ‘நெலும் பியச’ கலையரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

கடந்த 2023/2024 கல்வியாண்டுக்கான ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையில் மாவட்ட ரீதியாக ஒவ்வொரு பாடப் பிரிவிலும் அதியுயர் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

இதற்கமைய, வடக்கு மாகாணத்தில் சாதனை படைத்த 274 மாணவர்களுக்குத் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான நிதியுதவிக் காசோலைகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் இந்த நிகழ்வின் போது உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன.

கல்வியில் சிறந்த பெறுபேறுகளைப் பெறும் மாணவர்களை ஊக்குவிப்பதும், பொருளாதார ரீதியில் பின்தங்கிய திறமைசாலி மாணவர்களுக்குக் கைகொடுப்பதுமே இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

இந்த நிகழ்வில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் இ.சந்திரசேகரன், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க ஆகியோர் விசேட அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறீபவானந்தராஜா மற்றும் க.இளங்குமரன் ஆகியோரும், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகளும், பெருமளவான மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

13 ஐ முழுமையாக அமுலாக்க இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்! தமிழ்த் தலைவர்கள் வலியுறுத்து

தாம் ஆட்சிப்பீடமேறி ஒரு வருடகாலத்துக்குள் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் எனத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இன்னமும் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது.

இது தொடர்பிலும் அதனை நடத்துவதற்கான அழுத்தங்களை வழங்கவேண்டியதன் அவசியம் குறித்தும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கான கடிதத்தில் வலியுறுத்துவதற்குத் தமிழ்த் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

அதனடிப்படையில் நாளை செவ்வாய்க்கிழமை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை நேரில் சந்திக்கும்போது அந்தக் கடிதத்தைக் கையளிப்பதற்கு அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இக்கடிதத்தில் அரசமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு பல்வேறு தளங்களிலும் இந்தியா பகிரங்கமாக வலியுறுத்தி வரும் நிலையில், அந்த அழுத்தத்தைத் தொடர்ந்து பிரயோகிக்குமாறு கோரவிருப்பதாகத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

மேலும் அதிகாரப் பகிர்வானது அர்த்தமுள்ளதாக அமைய வேண்டியதன் அவசியம் குறித்தும் அந்தக் கடிதத்தில் உள்வாங்கப்படும் எனவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.

முன்னதாக குறித்த தினத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியைச் சேர்ந்த 6 கட்சிகளின் தலைவர்கள் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவைச் சந்திப்பதற்கு நேர ஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தது. எனினும், ஜெய்சங்கரின் இலங்கைக்கான திடீர் பயண ஒழுங்கின் காரணமாக அந்தச் சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது என்று இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ஹைதராபாத் அணி 47 ஓட்டங்களால் வெற்றி!

0
ஐ.பி.எல். 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 31 ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி...

மரக்கறி விலைப்பட்டியல் (22.04.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (22) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

போடைஸ் பகுதியில் வெள்ளம்: 56 மேற்பட்ட வீடுகள் பாதிப்பு!

0
டிக்கோயா , போடைஸ் பகுதியில் நேற்று பெய்த கடும் மழையினால் போடைஸ் ஆறு பெருக்கெடுத்து அப்பகுதி வெள்ளக்காடானது. இதனால் கொணகல பிரிவில் உள்ள சுமார் 56 மேற்பட்ட குடியிருப்புக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளம் காரணமாக போடைஸ்...