Home Blog Page 180

சரத் பொன்சேகா எழுதிய நூல் வெளியிடப்பட்டது

இலங்கையில் இறுதிக்கட்ட போரை வழிநடத்திய முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எழுதிய நூல் வெளியிடப்பட்டது.

“நாட்டிற்கு இராணுவத் தளபதியின் வாக்குறுதி – அடுத்த இராணுவத் தளபதிக்கு நான் இந்த போரை விட்டு விடமாட்டேன்” என குறித்த நூலுக்கு பெயரடப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள பாதுகாப்பு சேவைகள் கல்லூரி கேட்போர் கூடத்தில் இதற்கான வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர பிரதம விருந்தினராகவும், பாதுகாப்புச் செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் மூத்த இராணுவ அதிகாரிகள், இராஜதந்திரிகள், அழைக்கப்பட்ட விருந்தினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

போரின் இறுதிக் கட்டத்தில் இராணுவத் தளபதியாக பணியாற்றிய சரத் பொன்சேகாவின் பதவிக்காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களை மையப்படுத்தி இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.

இலங்கையின் நவீன வரலாற்றில் ஒரு தீர்க்கமான காலகட்டத்தில் தனது அனுபவங்களையும் தான் அனுபவித்த தலைமைத்துவ சவால்கள் தொடர்பில் பீல்ட் மார்ஷல் பொன்சேகா உரையாற்றினார்.

கண்டி மாவட்டத்தில் ஆபத்தான பகுதிகளில் மக்களை மீளக்குடியமர்த்தக்கூடாது: உரிய பகுப்பாய்வு அவசியம்!

கண்டி மாவட்டத்தில் ஆபத்தான பகுதிகளில் மக்களை மீளக்குடியமர்த்தக்கூடாது: உரிய பகுப்பாய்வு அவசியம்!

கண்டி மாவட்டத்தில் ஆபத்தான இடங்களெனக் கருதப்படும் பகுதிகளுக்கு இடைத்தங்கள் முகாம்களில் உள்ள மக்களை மீண்டும் அனுப்பக்கூடாது. மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கும் வகையிலேயே ஏற்பாடுகள் இடம்பெற வேண்டும் என்று கண்டி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

“ சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட நிலையில் நாவலப்பிட்டிய பகுதிகளில் இடைத்தங்கள் முகாம்களில் உள்ள சிலரை, அவர்கள் முன்னர் வசித்த பகுதிக்கே செல்லுமாறு வற்புறுத்தப்படுகின்றனர் என எனக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இப்படியான அணுகுமுறையை ஏற்கமுடியாது. ஆபத்தான பகுதியென அடையாளம் காணப்பட்டிருந்தால் அங்கு மக்கள் குடியேற்றத்தை மீள செய்யக்கூடாது. அதேபோல மீள்குடியேற்றத்தின்போது மக்களின் அபிப்ராயமும் கேட்டறியப்பட வேண்டும்.

அத்துடன், மக்கள் மீளக்குடியேறுவதற்கு பொறுத்தமான இடங்கள் எவை, ஆபத்தான பகுதிகள் எவை என்பன தொடர்பில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்திடம் இருந்து அறிக்கை பெறப்பட்டே, உரிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். இதற்காக விசேட பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும்.” என்று வேலுகுமாரால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைமைப் பதவி எதிரணிக்கு வேண்டும்!

தித்வா புயலினால் ஏற்படும் பேரிடர் தொடர்பில் வளிமண்டளவியல் திணைக்களத்தால் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தப்பட்டதா என்பது பற்றி ஆராய்வதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய ஐக்கிய குடியரசு முன்னணி தலைவர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

மேற்படி குழுவின் தலைமைப் பதவி எதிரணிக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

“ வளிமண்டளவியல் திணைக்களத்துக்கு விஞ்ஞானப்பூர்வமான தகவல்கள் நவம்பர் 24, 25 ஆம் திகதிகளில் கிடைத்திருக்கும் என நம்புகின்றேன்.
எனவே, தேசிய அனர்த்த நிலையை பிரகடனப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இழப்புகளை குறைத்திருக்கலாம்.

இந்நிலை தொடர்பில் வளிமண்டளவியல் திணைக்களத்தால் ஜனாதிபதி செயலர் ஊடாக ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தப்பட்டதா, அவ்வாறு தெரியப்படுத்தி இருந்தால் ஏன் முன்னாயத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை, தெரியபடுத்தவில்லையெனில் அதற்குரிய காரணம் என்ன என்பன பற்றி ஆராய்வதற்கே மேற்படி தெரிவுக்குழு அவசியம்.” எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டார்.

90 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் சேதம்!

டித்வா புயல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 639 ஆக அதிகரித்துள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

203 பேர் காணாமல்போயுள்ளனர்.

5 ஆயிரத்து 350 வீடுகள் முழமையாகவும், 86 ஆயிரத்து 882 வீடுகள் பகுதியளவும் சேதம் அடைந்துள்ளன என்று மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

27 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் இடைத்தங்கல் முகாம்களில் தொடர்ந்து தங்கவைக்கப்பட்டுள்ளன.

மண்சரிவு மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்த வீதிகளை புனரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றன. மத்திய மலை நாட்டில் பிரதான வீதிகளில் சரிந்துள்ள மண்மேடுகளை அகற்றும் பணியும் இடம்பெற்றுவருகின்றது.

மரக்கறி விலைப்பட்டியல் (10.12.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

எதிரணி ஆட்சி கவிழ்ப்பு சூழ்ச்சியில் ஈடுபடவில்லை!

அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி எவ்வித எவ்வித சூழ்ச்சிகளிலும் ஈடுபடாது என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.

“ தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்நாட்டை ஐந்து வருடங்களுக்கு ஆள வேண்டும். தமது பொறுப்பை நிறைவேற்றாமல் அவர்கள் தப்பிச்செல்ல முடியாது. நாம் ஆட்சியைக் கவிழ்க்க சூழ்ச்சிசெய்யவில்லை. அதற்கான உத்தரவாதத்தை நாம் வழங்குகின்றோம்.

கடந்த ஒரு வருடமாக நாம் எவ்வித பேரணியையும் நடத்தவில்லை. நாசகார செயலிலும் ஈடபடவில்லை. ஆனால் தேசிய மக்கள் சக்தி எதிரணியில் இருந்திருந்தால் இந்நேரம் என்ன நடந்திருக்கும் எனவும் முஜிபூர் ரஹ்மான் எம்.பி. கேள்வி எழுப்பினார்.

மத்திய மாகாணத்தில் பேரிழப்பு: 351 பேர் உயிரிழப்பு! 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் சேதம்!

டித்வா புயலையடுத்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் மத்திய மாகாணம் பேரிழப்பை சந்தித்துள்ளது. உயிரிழப்பு மற்றும் உடமை இழப்பு என்பன இம்மாகாணத்திலேயே அதிகளவு இடம்பெற்றுள்ளன.

இலங்கையில் கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதே மத்திய மாகாணமாகும்.

கண்டி மாவட்டத்தில் 234 பேர், நுவரெலியா மாவட்டத்தில் 89 பேர், மாத்தளை மாவட்டத்தில் 28 பேர் என பேரிடரால் மத்திய மாகாணத்தில் 351 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேற்படி மூன்று மாவட்டங்களிலும் மொத்தமாக 128 பேர் காணாமல்போயுள்ளனர்.

நுவரெலியா, கண்டி மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் 2 ஆயிரத்து 537 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.

அதேவேளை, மத்திய மாகாணத்தில் பாரிய வீதிகள், ரயில் பாதைகள் மற்றும் பாலங்கள் என்பனவும் சேதமடைந்துள்ளன. விவசாய நிலங்களும் அழிவடைந்துள்ளன.

உதவிப் பணிக்கு மற்றொரு எம்ஐ-17 உலங்குவானூர்தியை அனுப்பியது இந்தியா

 

பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவிப்பணிகளில் ஈடுபடுவதற்காக, இந்திய விமானப்படையின் எம்ஐ-17 உலங்குவானூர்தி ஒன்று, இன்று காலை 11.50 மணியளவில் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தை வந்தடைந்துள்ளது.

சாகர் பந்து நடவடிக்கைக்காக முன்னர் பயன்படுத்தப்பட்ட இரண்டு எம்ஐ-17 உலங்குவானூர்திகள் அத்தியாவசிய பராமரிப்புக்காக இந்தியாவுக்குத் திரும்பிய நிலையில், இந்த உலங்குவானூர்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

திருப்பி அனுப்பப்பட்ட இரண்டு உலங்குவானூர்திகளும் கூட்டாக டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட 270 இலங்கையர்களை மீட்டன.

இரண்டு உலங்குவானூர்திகளும் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விநியோக மையங்களுக்கு சுமார் 50 மெட்ரிக் தொன் நிவாரணப் பொருட்களை கொண்டு சென்றன.

இன்று வந்த உலங்குவானுர்தியில் 14 பேர் கொண்ட இந்திய விமானப்படை குழு வந்துள்ளது.

இது சிறிலங்கா விமானப்படையினருடன் இணைந்து தொடர்ச்சியான நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடும்.

நாட்டின் ஒட்டுமொத்த நிலைமை கணிசமாக மேம்பட்டுள்ளதால், தொடர்ச்சியான பேரிடர் நிவாரண முயற்சிகளுக்கு ஒரு உலங்குவானூர்தி போதுமானது என்று, இந்திய தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இந்தியாவிலிருந்து பேரிடர் நிவாரண உதவிகளை ஏற்றிக் கொண்டு, மற்றொரு விமானம் இன்று கட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இந்திய விமானப்படையின் மிகப்பெரிய சரக்கு விமானமான C-17 விமானம், இன்று பிற்பகல் 1:55 மணியளவில், இந்தியாவின் படாநகரில் இருந்து கட்டுநாயக்கவுக்கு வந்துள்ளது.

இந்த விமானத்தில் 110 அடி நீளம் கொண்ட 61 மெட்ரிக் தொன் பெய்லி பாலம், 600 கிலோ எடையுள்ள மருந்துகள் ஆகியன கொண்டு வரப்பட்டுள்ளன.

ஜனாதிபதி செயலர் – பிரான்ஸ் தூதுவர் சந்திப்பு!

ஜனாதிபதியின் செயலாளருக்கும் பிரான்ஸ் தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் Remi Lambert ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (09) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு பிரான்ஸ் அபிவிருத்தி முகவர் நிறுவனம் ஆதரவளிக்கும் என்றும், இதற்காக எதிர்காலத்தில் நிபுணர்கள் குழுவை நாட்டிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதியின் செயலாளரிடம் பிரான்ஸ் தூதுவர் உறுதியளித்தார்.

பிரான்ஸ் தூதரகத்தின் துணைத் தலைவர் Matthieu John இந்நிகழ்வில் பங்கேற்றார்.

இடர் முகாமைத்துவ பொறிமுறையை மாற்றியமைக்க வேண்டும்!

பேரிடரில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். இடர் முகாமைத்துவ பொறிமுறையை நாம் மாற்றியமைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட நிலையில் அடைத்தங்கள் முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்தவேளையிலேயே சஜித் பிரேமதாச இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ காலநிலை மாற்றங்களால் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. இதன் விளைவாக ஏற்படும் அனர்த்தங்கள் மற்றும் அபாயங்கள் குறித்து தெரிவிக்கும் முறையான முன்னெடுப்பு நடவடிக்கை உரியவாறு இயங்கவில்லை என்பது தெரியவருகிறது.   அபாயத்தை முன்கூட்டியே மக்களுக்கு அறிவித்திருந்தால், இழப்புகளை ஓரளவுக்குக் குறைத்திருக்கலாம்.

வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்தபோது, இடர் முகாமைத்துவ நிலைய பொறிமுறை ஏன் உரியவாறு செயற்படாது போனது என்பதை நினைத்துப் பார்க்க முடியாதுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள், செய்திச் சேவைகள் மற்றும் வானிலை முன்னறிவிப்பு நிறுவனங்கள் 15 நாட்களாக எச்சரிக்கை விடுத்த போதிலும், இதுபோன்ற ஆபத்து இருந்தபோதிலும் இடர் முகாமைத்துவ பொறிமுறை ஏன் முறையாக இயங்கவில்லை என்ற விடயத்தில் பிரச்சினை காணப்படுகின்றன.

அனர்த்தம் குறித்து அறிந்திருந்தும் நடவடிக்கை எடுக்காதிருப்பது பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை மற்றும் மனித உரிமைகளை மீறும் செயலாக அமைந்து காணப்படுகின்றது.

சுனாமியிலிருந்தும் பாடம் கற்றுக்கொள்ளாவிட்டாலும், இந்தப் பேரழிவிலிருந்தேனும் நாம் பாடம் கற்றுக்கொண்டு, நமது நாட்டில் ஏற்படும் பல்வேறு வானிலை மற்றும் காலநிலை தாக்கங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.   இடர் முகாமைத்துவ பொறிமுறையை நாம் மாற்றியமைக்க வேண்டும்.” என்றார்

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

என்.பி.பி. அரசாங்கத்திடம் இனவாதம் இல்லை! இது மக்கள் ஆட்சி!!

0
தெற்கில் தமிழர் விரோத அசுர அரசொன்று இருக்க வேண்டும் என்பதையே வடக்கில் தோல்வி அடைந்துள்ள கட்சிகள் விரும்புகின்றன. நாம் அவ்வாறு செயல்படமாட்டோம். எம்மிடம் இனவாதம் கிடையாது. தேசிய மக்கள் சக்தியென்பது இலங்கை மக்களுக்கான...

திறைசேரியில் 2.5 மில்லியன் டொலர் திருட்டு-CID விசாரணை!

0
திறைசேரியில் 2.5 மில்லியன் டொலர் திருட்டு-CID விசாரணை! வெளிநாட்டுக் கடன் சேவைக்காக ஒதுக்கப்பட்டிருந்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் சம்பந்தப்பட்ட மோசடி குறித்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது. திறைசேரி அளித்த முறைப்பாட்டைத்...