Home Blog Page 200

திருகோணமலை சம்பவம்: ஜனாதிபதி தலைமையில் குழு அமைக்குமாறு வலியுறுத்து!

 

திருகோணமலை புத்தர்சிலை விவகாரம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி தலைமையில் தேசிய ஒருமைப்பாட்டு குழுவொன்று உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார்.

இது தொடர்பில் சஜித் பிரேமதாச மேலும் கூறியவை வருமாறு,

“ திருகோணமலை ஜயந்தி போதிராஜ விகாரையில் நடந்த சம்பவம் தேசிய பாதுகாப்புக்கு சாதகமானதா? பாதிப்பானதா? 1951ஆம் ஆண்டில் அந்த விகாரை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 2010 இல் பௌத்த விவகாரங்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2014 இல் புனித பூமிக்கான உரித்து கிடைத்துள்ளது.

ஏதோவோரு பிரச்சினை உருவாகின்றது. அந்த பிரச்சினையில் புத்தர்சிலையை கொண்டு செல்லும் தரப்பாக பொலிஸார் மாற்றப்பட்டுள்ளனர். புத்தர் சிலையை அகற்றுவதற்கு பொலிஸாருக்கு உள்ள உரிமை என்ன? தவறை புரிந்துகொண்டு மீண்டும் அந்த புத்தர் சிலையை பிரதிஸ்டை செய்துள்ளனர்.

பௌத்த மதத்திற்கு வழங்கப்படும் முன்னுரிமை தொடர்பில் நாம் அனைவரும் அறிவோம். அதேபோன்று மற்றைய மதங்களுக்கு வழங்கப்படும் உரிய கௌரவம் மற்றும் இடம் என்பன வழங்கப்பட வேண்டும்.

எனவே, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தேசிய ஒருமைப்பாட்டு குழுவொன்றை அமைக்க வேண்டும். ஜனாதிபதி அதனை செயற்படுத்த வேண்டும். இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படும் போது இதனை பொலிஸாரிடம் ஒப்படைத்து பலனில்லை. நாட்டுத் தலைவர் இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும்.

இது சாதாரண பிரச்சினையல்ல என்பதனை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். ஏனைய மதங்களில் இது போன்ற பிரச்சினைகள் வரும் போதும் நாங்கள் இவ்வாறு செயற்பட்டோம். சிறந்த பௌத்தர்கள் போன்றே நடந்து கொண்டோம். ஆனால் தற்போது சில குழுக்கள் பௌத்த மதத்தை திரிபுப்படுத்துகின்றன. இந்த நிலைமையில் தேசிய ஒருமைப்பாட்டு குழுவை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு நான் ஜனாதிபதிக்கு கூறுகின்றேன்.

ஜனாதிபதி தீயை உருவாக்கக் கூடாது. தீயை அணைப்பதற்கே நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதுகாப்பு பிரிவினர் இதுபோன்ற விடயங்களில் தலையிடாது. நாட்டின் ஜனாதிபதி இந்தப் பிரச்சினையில் இருந்து தப்பிச் செல்லாத வகையில், இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அமரபுர பீடத்தின் மகாநாயக்க தேரர் உள்ளிட்ட மகாநாயக்க தேரர் மற்றும் இந்த பிரச்சினையில் தொடர்புபட்டுள்ள சகல குழுக்களையும் ஜனாதிபதி செயலகத்திற்கு அழைத்து இந்த பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுங்கள். பிரச்சினையில் இருந்து நழுவிச் செல்வது தலைமைத்துவம் அல்ல. இதனை தீர்க்க வேண்டும். நாட்டில் பல இடங்களிலும் இவ்வாறான பிரச்சினைகள் காணப்படுகின்றன.

ஆகவே இவற்றுக்கு முறையான தீர்ப்புகளை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
நாட்டின் அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை, உண்மையான மக்கள் இறையாண்மை, நாட்டின் சுதந்திரத்தை பலப்படுத்தும் சாதகமான செயற்பாடுகளுக்கு எதிர்க்கட்சி கூட ஒத்துழைப்பை வழங்க தயார். ஆனால் விகாரைகளுக்குள் சென்று செயற்படுவதற்கு பொலிஸாருக்கு உரிமை கிடையாது. இதனால் இந்தப் பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

ட்ரம்பின் காசா அமைதி திட்டத்துக்கு ஐ.நா. பாதுகாப்பு சபை அங்கீகாரம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் காஸா அமைதித் திட்டத்திற்கு ஆதரவாக ஐ.நா. பாதுகாப்பு சபையில் ஆதரவாக வாக்களிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலும் , ஹமாஸும் அமைதியை முன்னெடுக்கும் வகையில், தங்கள் இரண்டு ஆண்டுகால போரை நிறுத்தி, ஒப்பந்தத்தை அங்கீகரித்தன.

இந்த அமைதி ஒப்பந்தத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நேற்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நடைபெற்றது. இந்த திட்டத்திற்கு ஆதரவாக ஐ.நா. பாதுகாப்பு சபை வாக்களித்துள்ளது.

இந்தத் தீர்மானத்திற்கு இங்கிலாந்து, பிரான்ஸ் உட்பட 13 நாடுகள் ஆதரவு தெரிவித்தன.

எவரும் இந்த முன்மொழிவுக்கு எதிராக வாக்களிக்கவில்லை. ரஷ்யாவும் சீனாவும் வாக்களிக்கவில்லை.

ஆனால், இந்த தீர்மானம் தொடர்பாக கருத்து தெரிவித்த ஹமாஸ்,

“பாலஸ்தீனியர்களின் உரிமைகள் மற்றும் கோரிக்கைகளை பூர்த்தி செய்யத் தவறிவிட்டது” என்றும், காஸா மீது சர்வதேச அறங்காவலர் பதவியை திணிக்க முயற்சிக்கிறது என்றும் கூறியது.

ஆனால், ஹமாஸின் இந்த முடிவை பாதுகாப்பு கவுன்சில் நிராகரித்தது.

மறுபுறம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் வாக்கெடுப்பை வரவேற்ற ட்ரம்ப், தனது சமூக ஊடக தளத்தில் ஒரு நீண்ட செய்தியை வெளியிட்டார்.

இந்த முடிவை உலகளாவிய ராஜதந்திரத்திற்கான ஒரு மைல்கல் என்று வர்ணித்த அவர், இந்த நடவடிக்கையை ஆதரித்த நாடுகளைப் பாராட்டினார். அதேநேரத்தில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாலஸ்தீன அரசை நிராகரிப்பதை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

எம்.பிக்களுக்குரிய ஓய்வூதியம் ரத்து: சட்டமூலம் விரைவில் முன்வைப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்குரிய சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது.

இதன்போதே அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ தேசிய அரச பேரவையின் 1971 ஆம் ஆண்டின் 01 ஆம இலக்க நாடாளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை நீக்குவதற்காக 2025.06.16 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை ரீதியான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அரச கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘வளமான நாடு- அழகான வாழ்க்கை’ எனும் தொலைநோக்குக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து இலங்கையர்களுக்கும் அரசு வழங்கிய வாக்குறுதிகளுக்கமைய, நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் அவர்களுடைய துணைகளுக்கும் வழங்கப்பட்டுள்ள ஓய்வூதிய உரித்தை இரத்துச் செய்யும் நோக்கில் நாடாளுமன்ற ஓய்வூதிய சட்டத்தை நீக்குவதற்காக சட்டவரைஞரால் சட்டமூலமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது.

குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் நாடாளுமன்ற அங்கீகாரத்திற்காகவும் சமர்ப்பிப்பதற்கும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.” – என்

திருகோணமலை விவகாரத்தை அரசு முறையாக கையாள வேண்டும்:

திருகோணமலை சம்பவத்தை அரசாங்கம் முறையாக கையாள வேண்டும். இதற்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைத்து தமிழர்கள் அரசாங்கத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கை பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

“ புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்பு இலங்கையில் இனவாதம் மதவாதம் என்பன இல்லாமல் அனைவரையும் சமனாக மதிக்கின்ற அதே நேரம் அனைவருக்கும் சட்டமும் நீதியும் பொதுவானது என்ற வகையில் கடந்த கால அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அமைந்திருந்தது.
ஆனால் திடீரென திருகோணமலையில் ஒரு இரவில் புத்தர் சிலைவைப்பு அதற்கு எதிர்ப்பு பொலிசார் தடியடி சிலை அகற்;றல் மீண்டும் காலையில் அதே பொலிசார் பாதுகாப்புடன் சிலையை பிரதிஸ்டை செய்தல் என ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்த விடயத்தில் அரசாங்கம் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை இன்று பலரும் முன்வைக்கின்றார்கள்.இது தொடர்பாக பாராளுமன்றத்திலும் பேசப்பட்டது.

தற்பொழுது இதனை சர்வதேச ஒரு விடயமாக மாறியுள்ளது.எனவே அரசாங்கம் இதற்கான முறையான தீர்வை நடவடிக்கையை எடுக்க வேண்டும். அதனை விடுத்து இனவாதிகளுக்கு செவி சாய்த்து நீங்களும் கடந்த காலத்தில் இருந்த அரசாங்கத்தைப் போல ஒரு இனவாத அரசாங்கமாக மாறிவிட வேண்டாம்.தவறு எங்கு நடந்தாலும் அதனை ஏற்றுக் கொண்டு அதனை திருத்துவதற்கும் சட்டத்தை மீறுகின்றவர்களுக்கும் உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவிக்க வேண்டும்.

எனவே இந்த விடயத்தை அரசாங்கம் சரியாக கையாளாவிட்டால் சர்வதேச ரீதியாக பல பாதிப்புகள் ஏற்படலாம்.இதன் மூலம் தற்பொழுது மிகவும் வேகமாக வளர்ந்த வருகின்ற உல்லாசத்துறைக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.எமது அந்நிய செலவாணி குறைவடையலாம்.மேலும் அரசாங்கத்தின் மீது வடகிழக்கு மக்கள் பாரிய நம்பிக்கையுடன் வாக்களித்திருக்கின்றார்கள்.

அவர்களுடைய நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றார்கள்.இந்த விடயங்களை கருத்தில் கொண்டு இது தொடர்பாக அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.” எனவும் ராதாகிருஸ்ணன் குறிப்பிட்டார்.

 

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கும் கட்டத்தை நெருங்கிவிட்டோம்!

 

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம் தொடர்பில் வழங்கப்பட்ட உறுதிமொழியை நிறைவேற்றுவதற்குரிய கட்டத்துக்கு வந்துவிட்டோம். புதிய சட்ட முன்மொழிவு குறித்து மக்களிடம் கருத்துகோரும் பணி விரைவில் ஆரம்பமாகும் என்று நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்சன நாணயக்கார தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

“ சட்ட மறுசீரமைப்பு விடயங்களுக்காக நீதி அமைச்சால் பல குழுக்கள் அமைக்கப்பட்டன. அவற்றில் ஒன்றுதான் பயங்கரவாத தடைச்சட்டம் பற்றியது.

இந்நிலையில் மேற்படி சட்டம் பற்றி மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை என்னிடம் கையளிக்கப்பட்டுள்ளது. தற்போது மொழி பெயர்ப்பு நடவடிக்கை இடம்பெறுகின்றது. தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பின்னர் மக்களிடம் பெறப்படும்.

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என்ற உறுதிமொழியை நாம் வழங்கி இருந்தோம். அந்தவகையில் அதனை நிறைவேற்றும் கட்டத்துக்கு வந்துவிட்டோம். அதற்குரிய நடவடிக்கை இடம்பெறுகின்றது.” எனவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.

பொருளாதார தடை குறித்து ட்ரம்ப் எச்சரிக்கை!

 

ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த நாட்டின் மீதும் அமெரிக்கா பொருளாதார தடைகளை மேற்கொள்ளும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து கடுமையான கொள்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அமெரிக்கா முதலில் என்ற கொள்கையை முன்வைத்து பிற நாடுகளுக்கு பரஸ்பர வரி விதித்தார். மேலும் உலக நாடுகளிடையே நிலவி வரும் மோதல்களை நிறுத்துவதாக கூறி வர்த்தக தடை, வரிவிதிப்பு என மிரட்டி வருகிறார்.

2022-ம் ஆண்டு உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததை தொடர்ந்து அந்த நாட்டின் மீது ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைவிதித்தன.

குறிப்பாக, ரஷியாவின் மிகப்பெரிய வருவாய் ஆதாரமாக உள்ள கச்சா எண்ணெய் வர்த்தகத்தை முடக்குவதற்காக பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இதற்கு ஒருபடி மேல் ஏறி ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குதி செய்யும் நாடுகள் மீது அதிகப்பட்ச வரிவிதித்தார்.

ஏற்கனவே இந்தியா மீது 25 சதவீதம் வரிவிதித்தநிலையில் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாக கூறி கூடுதலாக 25 சதவீதம் என உச்சபட்சமாக 50 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டது.

இதனால் இந்தியாவின் சிறு-குறு-நடுத்தர தொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது.

இந்தநிலையில் ரஷியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த நாடாக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படும் என டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர்,

” ரஷியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த நாட்டின் மீதும் அமெரிக்கா பொருளாதார தடைகளை மேற்கொள்ளும். இதில் பாரபட்சம் இல்லை. அது எந்த நாடாக இருந்தாலும் சரி. இந்த பட்டியலில் ஈரானையும் சேர்க்க சொல்லியுள்ளேன்” என்றார்.

 

இனவாத பொறிக்குள் சிக்ககூடாது: அமைச்சர் கோரிக்கை!

இனவாத பொறிக்குள் இருந்து நாட்டு மக்களை மீட்டு, நாம் அனைவரும் இலங்கையர்கள்தான் என்ற நிலைமையை உணர வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான ஆரம்பமாகவே இலங்கையர் தினம் நடத்தப்படவுள்ளது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் இனவாதம் மற்றும் மதவாதத்தை தூண்டிவிட்டு அரசியல் நடத்தியவர்கள் உள்ளனர். நாம் இனவாதத்தை வெறுக்கின்றோம். தேசிய மக்கள் சக்தியென்பது இலங்கையர்களுக்கான கட்சியாகும். எமது கட்சியின் கொள்கையானது நாட்டுக்கானது.

இன ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கு கடந்தகால ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. தமது இனத்தையே அவர்கள் முன்னிலைப்படுத்தினர். இனங்களுக்கிடையிலான முறுகல் நிலையால்தான் இந்நாட்டில் போர்கூட ஏற்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சி காடையர்கள்தான் அன்று யாழ். நூலகத்தை எரித்து நாட்டை நாசமாக்கினர். 94 ஆயிரம் புத்தகங்களை கொளுத்திய பாவிகள் அவர்கள். தமிழ் இளைஞர்கள் ஆயுதத்தை கையிலெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

எமது ஜனாதிபதி நாட்டில் சிறந்த முன்னுதாரணத்தை வழங்கிவருகின்றார். பிரதமரும் அவ்வாறுதான் சிறப்பாக செயல்படுகின்றார். இலஞ்ச, ஊழல் மோசடிகளில் இருந்து நாடு இன்று மீண்டுவருகின்றது. எனவே, தேசிய ஒற்றுமையையும் நாம் கட்டியெழுப்ப வேண்டும்.

அதற்காக அரசாங்கம் அர்ப்புணிப்புடன் செயற்படுகின்றது. அதனால்தான் வடக்கு குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இனவாத பொறிக்குள் இருந்து நாட்டு மக்களை மீட்டு, நாம் அனைவரும் இலங்கையர்கள் எனக் கூரும் நிலையை ஏற்படுத்த வேண்டும். அதற்கான அடித்தளமாக இலங்கையர் தினம் எதிர்வரும் டிசம்பரில் நடத்தப்படுகின்றது.”என அமைச்சர் சந்திரசேகர் மேலும் குறிப்பிட்டார்.

21 ஆம் திகதி பேரணிக்கு ஆதரவு கோருகிறது மொட்டு கட்சி!

 

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள பேரணியில் பங்கேற்க முடியாதவர்கள் குறைந்தபட்சம் பேரணிக்குரிய ஆதரவையேனும் வெளிப்படுத்த வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அக்கட்சியின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் மேற்படி கோரிக்கையை விடுத்தார்.

“ஜனநாயகம் மற்றும் அரசியல் சுதந்திரத்தை விரும்புபவர்கள் 21 ஆம் திகதி பேரணியில் பங்கேற்பார்கள். அதேபோல வழங்கிய வாக்குறுதிகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இன்னும் நிறைவேற்றவில்லை. எனவே, இதனை அரசாங்கத்துக்கு நினைவுபடுத்தி கொடுப்பதற்கு விரும்புபவர்களும் வருவார்கள்.

சிலவேளை எவருக்கேனும் பங்கேற்க முடியாவிட்டால் ஆதரவையேனும் வெளிப்படுத்த வேண்டும். இது எதிர்க்கட்சிகளின் கூட்டு நடவடிக்கை என்பதாலேயே அனைத்து கட்சிகளுக்கும் தெளிவுபடுத்தப்பட்டுவருகின்றது.” எனவும் மொட்டு கட்சி செயலாளர் குறிப்பிட்டார்.

மரக்கறி விலைப்பட்டியல் (18.11.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (18) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

சினிமா

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

செய்தி

2.5 மில்லியன் டொலர்கள் ஹேக்கர்களுக்கு பூஜை: சஜித் குற்றச்சாட்டு!

0
" நாட்டின் வெளிநாட்டுக் கடன்கள் மற்றும் வட்டித் தவணைகளைத் திருப்பிச் செலுத்தும் பொறுப்பு மத்திய வங்கியிடமே முன்னர் காணப்பட்டு வந்தது. பின்னர் மேற்கொண்ட புதிய ஒழுங்குமுறைகள் சட்ட விதிகளுக்கு ஏற்ப பொது கடன்...

காசாவில் 72 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலி!

0
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 72,562 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 172,320 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பாலஸ்தீன சுகாதார அமைச்சின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டே மேற்படி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஒக்டோர் 7 ஆம் திகதி...