Home Blog Page 201

21 ஆம் திகதி பேரணிக்கு ஆதரவு கோருகிறது மொட்டு கட்சி!

 

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள பேரணியில் பங்கேற்க முடியாதவர்கள் குறைந்தபட்சம் பேரணிக்குரிய ஆதரவையேனும் வெளிப்படுத்த வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அக்கட்சியின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் மேற்படி கோரிக்கையை விடுத்தார்.

“ஜனநாயகம் மற்றும் அரசியல் சுதந்திரத்தை விரும்புபவர்கள் 21 ஆம் திகதி பேரணியில் பங்கேற்பார்கள். அதேபோல வழங்கிய வாக்குறுதிகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இன்னும் நிறைவேற்றவில்லை. எனவே, இதனை அரசாங்கத்துக்கு நினைவுபடுத்தி கொடுப்பதற்கு விரும்புபவர்களும் வருவார்கள்.

சிலவேளை எவருக்கேனும் பங்கேற்க முடியாவிட்டால் ஆதரவையேனும் வெளிப்படுத்த வேண்டும். இது எதிர்க்கட்சிகளின் கூட்டு நடவடிக்கை என்பதாலேயே அனைத்து கட்சிகளுக்கும் தெளிவுபடுத்தப்பட்டுவருகின்றது.” எனவும் மொட்டு கட்சி செயலாளர் குறிப்பிட்டார்.

மரக்கறி விலைப்பட்டியல் (18.11.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (18) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள விவகாரம்: 28 ஆம் திகதி உரிய பதிலடி!

 

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு விவகாரம் தொடர்பில் தமது கட்சிமீது முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு எதிர்வரும் 28 ஆம் திகதி உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நேற்று அறிவித்தார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் எதிரணி உறுப்பினர்கள் சிலர் எதிரான கருத்தை முன்வைத்தனர் என சுட்டிக்காட்டி, மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் நேற்று முன்தினம் போராட்டங்கள் இடம்பெற்றன.

இதன்போது சஜித் பிரேமதாச, நாமல் ராஜபக்ச உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன.

இந்நிலையிலேயே நாடாளுமன்றத்தில் இன்று சஜித் மேற்கண்டவாறு கூறினார்.

“பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு விமர்சனம் முன்வைக்கப்படுகின்றது. குறித்த அமைச்சுக்கான குழுநிலை விவாதத்தின்போது இதற்குரிய உரிய பதில் வழங்கப்படும்.

பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் அரசாங்கத்திடம் இருந்து எங்களுக்கு உபதேசம் அவசியமில்லை.
மலையக மக்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கு ரணசிங்க பிரேமதாசவே நடவடிக்கை எடுத்தார் என்பதை மறக்க வேண்டாம்.” எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

பெருந்தோட்ட அமைச்சு தொடர்பான குழுநிலை விவாதம் எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை சம்பவம்: இனவாத அரசியலுக்கு இடமில்லை!

திருகோணமலை விவகாரத்தை வைத்து இனவாதம் மற்றும் அரசியல் நடத்துவதற்கு இடமளிக்கப்படாது. கடந்தகால சம்பவங்கள் இனி நடக்காது என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று மதியம் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் கூறியவை வருமாறு,

“ புத்தர் சிலைக்கு சேதம் விளைவிக்கப்படக்கூடும் என்பதாலேயே திருகோணமலை துறைமுக பொலிஸாரால் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டது. இரவு 10 மணியளவில் சம்பவம் நடந்ததால் உரிய பொலிஸ் பாதுகாப்பை வழங்க முடியவில்லை. எனவே, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்வரை புத்தர் சிலை பொலிஸ் நிலையம் கொண்டுசெல்லப்பட்டது. துறைமுக பொலிஸில் இது தொடர்பில் பதிவு உள்ளது.

பாதுகாப்பை பலப்படுத்தி புத்தர் சிலை இருந்த இடத்தில் மீண்டும் வைக்குமாறு கூறினோம்.

இனவாதத்தை தூண்டுவதற்கு இடமளிக்கமாட்டோம். இப்பிரச்சினையை அரசியல் மயப்படுத்தவும் இடமில்லை. சும்பந்தப்பட்ட தரப்புகளுடன் பேச்சு நடத்தி பிரச்சினையை தீர்ப்போம். சில விடயங்களுக்கு நீதிமன்றம் ஊடாக தீர்வு காணப்படும்.” என்றார் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால

ஜனாதிபதி – தமிழரசுக் கட்சியினருக்கிடையில் வியாழனன்று சந்திப்பு

 

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியினருக்கும் இடையில் நாளைமறுதினம் வியாழக்கிழமை பிற்பகல் ஒரு மணிக்குக் கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் நேரடிப் பேச்சு நடைபெறவுள்ளது.

தம்முடன் பேச்சுக்கு நேரம் ஒதுக்கித் தருமாறு தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் ஒப்பமிட்டு அனுப்பி வைத்த கோரிக்கைக் கடிதத்தின் அடிப்படையில் இந்தச் சந்திப்புக்கு ஜனாதிபதி செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சந்திப்புக்கான தினத்தையும், நேரத்தையும் ஜனாதிபதி செயலகம் இன்று தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனைத் தொடர்புகொண்டு அறிவித்துள்ளது.

தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவர், பொதுச்செயலாளரோடு கட்சியின் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாளைமறுதினம் நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பில் பங்குபற்றவுள்ளனர்.

இனப் பிரச்சினைக்குத் தீர்வு, மாகாண சபைத் தேர்தல், 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துதல் மற்றும் திருகோணமலை கடற்கரையில் அமைக்கப்பட்டு வரும் பெளத்த வணக்கஸ்தலம் மற்றும் அங்கு அடாத்தாக நிறுவப்பட்ட புத்தர் சிலை ஆகியவை உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து தமிழரசுக் கட்சியினர் இந்தச் சந்திப்பில் ஜனாதிபதியிடம் வலியுறுத்துவார்கள் என்று தெரிகின்றது.

அகற்றப்பட்ட அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது புத்தர் சிலை!

திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் புதிதாக புத்தர்சிலை வைக்கும் வைபவம் இன்று திங்கட்கிழமை (17) பிற்பகல் 1.35 மணிக்கு பௌத்த சம்பிரதாய அடிப்படையில் இடம்பெற்றது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) இரவு அவசர அவசரமாக தற்காலிக கட்டடம் அமைத்து புத்தர்சிலை கொண்டு வந்து வைக்கமுற்பட்ட போது ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக மீண்டும் புத்தர்சிலை கொண்டு செல்லப்பட்டு இன்றையதினம் மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

சட்ட அனுமதி இன்றி நேற்று இரவு 8 மணியளவில் இந்தப் புத்தர் சிலை இந்த இடத்தில் வைக்கப்பட்டது. எனினும், இரவு 11 மணியளவில் துறைமுகப் பொலிஸார், திருகோணமலை பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் வந்து பெளத்த பிக்குகளின் பெரும் எதிர்ப்புக்கு மத்தியில் புத்தர் சிலையை அங்கிருந்து அகற்றினர்.

பின்னர் இந்தப் புத்தர் சிலை துறைமுகப் பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு இன்று நண்பகல் வரை அங்கு வைக்கப்பட்டிருந்தது.

கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவளங்கள் முகாமைத்துவ திணைக்களம், பெளத்த பிக்குமார், பொலிஸார், நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன, திருகோணமலை மாவட்ட அரச அதிபர் ஆகியோர் கலந்துகொண்ட விசேட கூட்டம் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் வழங்கியிருந்த அறிவுறுத்தலின் அடிப்படையில் மீளவும் புத்தர் சிலை, அகற்றப்பட்ட அதே இடத்தில் வைக்கப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டு இதன்படி சிலை மீள வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்தப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சட்ட அனுமதி அற்ற சிற்றுண்டிச்சாலை நேற்று அகற்றப்பட இருந்தது. ஆனால், அதனை அகற்றுவது தொடர்பில் தடையாணை உத்தரவு ஒன்றை இந்தப் பகுதி பெளத்த பிக்கு கொழும்பு உயர்நீதிமன்றத்தில் பெற்றிருந்தமையால் தாம் எதிர்பார்த்தபடி இன்று சிற்றூண்டிச்சாலை இடித்து அகற்றப்படவில்லை எனத் திருகோணமலை மாவட்ட கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவளங்கள் முகாமைத்துவ திணைக்கள அதிகாரி தகவல் தெரிவித்தார்.

நேற்றுக் காலை முதல் திருகோணமலை மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் உற்பட அனைத்து உயர் பொலிஸ் அதிகாரிகளும், விசேட அதிரடிப் படையினரும் இங்கு பாதுகாப்புப் பணிகள் ஈடுபட்டிருந்தனர்.

புத்தர் சிலை மீளவும் வைக்கப்படுவதற்கு முன்னர் அங்கு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமனவுக்கு அங்கு திரண்டிருந்த பெளத்த பிக்குமார் உட்பட சிங்கள மக்கள் அவரின் வருகையை எதிர்த்துக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து, அவரை அங்கிருந்து வெளியேறுமாறு கடுமையாகக் கோஷமிட்டனர். இதனையடுத்து அவர் அங்கிருந்து உடனடியாக வெளியேறினார்.

இது இவ்வாறிருக்க திருகோணமலை கடற்கரையில் மாநகர சபைக்குச் சொந்தமான பகுதியில் முன் அனுமதியின்றி சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு வரும் பெளத்த வணக்கஸ்தலத்தில் அடாத்தாக புத்தர் சிலை வைக்கப்பட்டமைக்கு எதிராகவும், இது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் எனத் தெரிவித்தும் திருகோணமலை மாநகர சபையின் மேயர் க.செல்வராஜா, துறைமுகப் பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளார்.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரின் அறிவிப்பு

அதேவேளை, திருகோணலை விவகாரத்தை இனவாதத்தை தூண்டுவதற்கு இடமளிக்கமாட்டோம். இப்பிரச்சினையை அரசியல் மயப்படுத்தவும் இடமில்லை. சும்பந்தப்பட்ட தரப்புகளுடன் பேச்சு நடத்தி பிரச்சினையை தீர்ப்போம். சில விடயங்களுக்கு நீதிமன்றம் ஊடாக தீர்வு காணப்படும்என்று இன்று நாடாளுமன்றத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை!

Sheikh Hasina, the newly elected Prime Minister of Bangladesh and Chairperson of Bangladesh Awami League, speaks during a meeting with foreign observers and journalists at the Prime Minister's residence in Dhaka, Bangladesh, January 8, 2024. REUTERS/Mohammad Ponir Hossain

மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அவர் குற்றவாளி என அந்நாட்டின் சர்வதேச குற்ற தீர்ப்பாயம் அறிவித்தது. இந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கடந்தாண்டு பங்களாதேசில் ஏற்பட்ட மாணவர் போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. இதில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த வன்முறையை தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. மேலும், அவர் பங்களாதேசை விட்டு வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.

இதையடுத்து, நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில், வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்தது. புதிய அரசு அமைந்த உடன் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இனப்படுகொலை, ஊழல் செய்தது உட்பட ஏராளமான வழக்குகள் பதியப்பட்டுள்ளன. சமீபத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்து, அந்நாட்டின் சர்வதேச குற்ற தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

கடந்த ஆகஸ்டில் அரசின் இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிராக போராடுவோரை சுட்டுக்கொல்ல ஹசீனா உத்தரவிட்ட ஆடியோ வெளியானது. இதை ஆதாரமாக வைத்து ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை அமைச்சர், முன்னாள் போலீஸ் ஐ.ஜி., ஆகியோர் மீது, மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக புதிய வழக்கை தீர்ப்பாயம் பதிந்து விசாரணை நடத்தி வந்தது. இந்த நிலையில், ஷேக் ஹசீனாவுக்கான தண்டனையை இன்று (நவ., 17) அந்நாட்டின் சர்வதேச குற்ற தீர்ப்பாயம் அறிவித்தது.
மனித குலத்திற்கு எதிராக ஷேக் ஹசீனா குற்றம் செய்துள்ளார் என அந்நாட்டின் சர்வதேச குற்ற தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. இதனால் இந்த வழக்கில் ஷேக் ஹசீனா குற்றவாளி என அறிவிக்கப்பட்டு உள்ளார்.

* மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை ஷேக் ஹசீனா செய்துள்ளார். அவரது ஆட்சியில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுள்ளது.

* அதிகாரத்தில் நீடிக்க ஷேக் ஹசீனா அதிகாரத்தை பயன்படுத்தி உள்ளார். அவர், போராட்டக்காரர்களை கொல்ல ஹெலிகாப்டர் உள்ளிட்ட கொடிய ஆயுதங்களை பயன்படுத்த உத்தரவிட்டு இருக்கிறார்.

* போராட்டக்காரர்கள் மீது ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளது. போராட்டக்காரர்களுக்கு மருத்துவ உதவி மறுக்கப்பட்டு உள்ளது. கடந்தாண்டு ஜூலை-ஆகஸ்ட் மாதம் நடந்த போராட்டங்களில் 1,400 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 24 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர்.

* ஷேக் ஹசீனா போராட்டக்காரர்களை தூண்டிவிட்டார். அவர்களை அவர் களங்கப்படுத்தினார்.

இவ்வாறு சர்வதேச குற்ற தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

மரண தண்டனை

ஷேக் ஹசீனா தற்பொழுது இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள நிலையில் அவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என வழக்கு விசாரணையின் போது வாதங்கள் முன்வைக்கப்பட்டது. பின்னர், இந்த வழக்கில் மரண தண்டனை விதித்து, சர்வதேச குற்ற தீர்ப்பாயம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.

ஆளுங்கட்சி தமிழ் எம்.பிக்கள் பதவி விலக வேண்டும்: சுமந்திரன் வலியுறுத்து!

“ தேசிய மக்கள் சக்தி அரசும் முன்னைய அரசுகளைப் போலவே ஒரு இனவாத, சிங்கள பௌத்த பேரினவாத அரசு என்பதை நிறுவியுள்ளது. எனவே, பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரா உட்பட அக்கட்சியிலு;ளள அனைத்து தமிழ் உறுப்பினர்களும் உடன் பதவி விலக வேண்டும்”

இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் தனது முகநூல் பக்கத்தில் அவர் இட்டுள்ள பதிவு வருமாறு,

“ அமைச்சர் ஆனந்த விஜயபாலவும் தே. ம. ச. அரசும் பேரினவாத சக்திகளின் அழுத்தங்களுக்கு கோழைத்தனமாக அடிபணிவதை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கேவலமாகக் காண்கிறது.

நேற்றிரவு அமைச்சரின் கட்டளைப்படி திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட சிலை பொலிசாரினால் அகற்றப்பட்ட போது, அரசாங்கம் இனவாத எண்ணமில்லாமல் சரியாக நடந்து கொள்கிறது என்று சிலர் நினைத்தார்கள்.

ஆனால் அப்படியல்ல என்பதை சில மணி நேரத்துக்குள்ளேயே அமைச்சர் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தினார். பாதுகாப்புக்காகவே சிலை அகற்றப்பட்டதாகவும் அது இன்று மீள நிறுவப்படும் என்றும் வெட்கமில்லாமல் அறிவித்த போதே சகல மக்களும் சமத்துவமாக நடத்தப்படுவார்கள் என்ற வாக்குறுதி காற்றில் பறக்க விடப்பட்டது.

தே. ம. ச. அரசும் முன்னைய அரசுகளைப் போலவே ஒரு இனவாத, சிங்கள பௌத்த பேரினவாத அரசு என்பதை நிறுவியுள்ளது. இக் கட்சியைச் சேர்ந்த திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அருண் ஹேமச்சந்திரா உட்பட அனைத்து தமிழ் உறுப்பினர்களும் உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளியென தீர்ப்பு

Sheikh Hasina, the newly elected Prime Minister of Bangladesh and Chairperson of Bangladesh Awami League, speaks during a meeting with foreign observers and journalists at the Prime Minister's residence in Dhaka, Bangladesh, January 8, 2024. REUTERS/Mohammad Ponir Hossain

 

வன்முறை வழக்கில் பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை குற்றவாளி என அந்நாட்டு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.

கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் நடந்த போராட்டத்தின்போது நடந்த வன்முறை மற்றும் உயிரிழப்பு சம்பவங்களில் ஷேக் ஹசீனா குற்றவாளி என வங்கதேசத்தில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.

தனது அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய சொந்த நாட்டு மக்களையே ஷேக் ஹசீனா கொல்ல உத்தரவிட்டது உறுதியானதாக நீதிபதி தெரிவித்தார்.

பங்களாதேசின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாணவர்கள் நடத்திய போராட்டம் காரணமாக அவர் தனது பதவியை இழந்து, அங்கிருந்து தப்பி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அமைப்பு சார்பில், நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் இடைக்கால தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மாணவர்கள் பலர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை நாமல் எதிர்க்கவில்லை: மொட்டு கட்சி அறிவிப்பு!

 

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை தமது கட்சி எதிர்க்கவில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இன்று அறிவித்தார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

“ பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டதை நாமல் ராஜபக்சவோ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியோ எதிர்க்கவில்லை. சிறுதேயிலை தோட்டங்களில் தொழில் செய்பவர்கள், காமன்ட்களில் வேலை செய்பவர்கள் உட்பட இந்நாட்டில் குறைந்த வருமானம் பெறுபவர்கள் உள்ளனர்.
இவர்களுக்கும் சம்பள உயர்வு அவசியம் என்றே வலியுறுத்துகின்றோம்.

வாக்குக்காக ஒரு குழுவை தெரிவு செய்யாமல் குறைந்த வருமானம் பெறும் அனைவருக்கும் சம்பள உயர்வு அவசியம் என்பதே எமது நிலைப்பாடாகும். அது தொடர்பான யோசனையை முன்வைக்கப்பட்டுள்ளது.” எனவும் சாகர காரியவசம் குறிப்பிட்டார்.

 

சினிமா

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

செய்தி

பிரதேச செயலகத்தை நோர்வூட்டுக்கு மாற்றுக: பொகவந்தலாவயில் நாளை கை எழுத்து இயக்கம் !

0
நோர்வூட் பிரதேச செயலகத்தை நோர்வூட் நகரத்தை அண்மித்து அமைக்கக் கோரும் கை எழுத்து இயக்கம் நாளை (25) பொகவந்தலாவ பகுதியில் இடம்பெறவுள்ளது. மலையக அரசியல் அரங்கம் முன்னெடுக்கும் இந்தத் தொடர் கை எழுத்துக்குத் தமது...

சீரற்ற காலநிலை: நுவரெலியா உட்பட 4 மாவட்டங்களில் 147 குடும்பங்கள் பாதிப்பு!

0
நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் நுவரெலியா உட்பட நான்கு மாவட்டங்களில் 147 குடும்பங்களைச் சேர்ந்த 682 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (24) பகல் வெளியிட்டுள்ள நாளாந்த நிலைவர...

2.5 மில்லியன் டொலர்கள் ஹேக்கர்களுக்கு பூஜை: சஜித் குற்றச்சாட்டு!

0
" நாட்டின் வெளிநாட்டுக் கடன்கள் மற்றும் வட்டித் தவணைகளைத் திருப்பிச் செலுத்தும் பொறுப்பு மத்திய வங்கியிடமே முன்னர் காணப்பட்டு வந்தது. பின்னர் மேற்கொண்ட புதிய ஒழுங்குமுறைகள் சட்ட விதிகளுக்கு ஏற்ப பொது கடன்...