Home Blog Page 205

எப்படியான சவால் வந்தாலும் பெருந்தோட்ட மக்களுக்கு சம்பள உயர்வை வழங்குவது உறுதி!

மலையக மக்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும்!

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எத்தடை வரினும் நாம் சம்பள உயர்வை நிச்சயம் பெற்றுக்கொடுப்போம். அவர்களுக்குரிய உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

அரசாங்கத்துக்கு எதிராக பிரமாண்ட அறிவிப்புகளை விடுத்த கூட்டு எதிரணி எனக் கூறிக்கொள்ளும் தரப்பினர், தற்போது திடீர் பின்வாங்கலை மேற்கொண்டுள்ளனர். ஏனெனில் மக்கள் எமது பக்கமே உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“அரசாங்கத்தை விரட்யடிப்பதற்குரிய முதலாவது வேட்டு நுகேகொடையில் வைக்கப்படும் என அன்று கூறினார்கள். ஆனால் உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்தை நினைவு படுத்துவதற்காகவே பேரணி என இன்று குறிப்பிடுகின்றனர்.

அரசாங்கம் என்ன செய்கின்றது என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரமே நாம் செயற்படுகின்றோம். மக்களுக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்.

அதேவேளை, தேசிய மக்கள் சக்தி புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டுசென்ற தரப்பினரே இன்று பொருளாதாரம் பற்றி கேள்வி எழுப்புகின்றனர்.” எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்கே தமிழர்கள் ஆணை!

புதிய அரசமைப்பு ஊடாக தமிழர்களுக்குரிய அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக போராடுவோம். சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை பெறுவதற்காகவே தமிழ் மக்கள் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு ஆணை வழங்கிவருகின்றனர் என்று அக்கடசியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ பொறுப்புகூறல், காணி விடுவிப்பு உள்ளிட்ட விடயங்களில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்குரிய அழுத்தங்களை பிரயோகிப்பதற்கு எமது மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். காணி விடுவிப்பில் ஓரளவு முன்னேற்றம் இருந்தாலும் மேலும் செய்ய வேண்டியுள்ளது.

தமது அரசியல் அபிலாசைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும், அதற்காக சமஷ்டி அடிப்படையிலான தீர்வு அவசியம். இதனை பெறும் நோக்கிலேயே தமிழரசுக் கட்சிக்கு தமிழ் மக்கள் ஆணை வழங்கிவருகின்றனர்.

இது கார்த்திகை மாதம், வடக்கு, கிழக்கில் எமது விடு தலைக்காக போராடிய வீரமறவர்களை நினைவுகூரும் மாதம். ஆயிரக்கணக்கான போராளிகள் இனத்தின் விடுதலைக்காக இம் மண்ணில் விதைக்கப்பட்டனர். அவர்களை நினைவு கூரும் மாதம்.

எனவே, பாலமொன்றை பெறுவதற்காக எமது ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் தியாகம் செய்யவில்லை. ஒரு பொறுப்புள்ள கட்சி என்ற அடிப்படையில் தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றி சிந்தித்து முடிவெடுக்க கூடிய உரிமை எமது கட்சிக்கு உள்ளது.

தமிழ் மக்களின் உரிமைக்கானது எமது கட்சி. ஜனாதிபதிமீது எமக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது.” எனவும் சாணக்கியன் எம்.பி. குறிப்பிட்டார்.

மரக்கறி விலைப்பட்டியல் (15.11.2025)

மரக்கறி விலைப்பட்டியல் (15.11.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (15) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

நாட்டுக்காக உழைக்கும் மக்களே தோட்டத் தொழிலாளர்கள்: அவர்களுக்கு சம்பள உயர்வு கிடைத்தது மகிழ்ச்சி

“ தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கப்பெற்றமை மகிழ்ச்சியளிக்கின்றது. இந்நாட்டுக்காக அவர்கள் சேவையாற்றுகின்றனர்.” என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

எனவே, சம்பள அதிகரிப்பு சட்டப்பூர்வமா என்பதை எல்லாம் ஆராய்வதைவிட அம்மக்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

 

 

நுகேகொடை கூட்டத்தில் பங்கேற்கமாட்டேன்: பந்துல அறிவிப்பு!

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள பேரணியில் தான் பங்கேற்கப்போவதில்லை என்று முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

“ தேசிய மக்கள் சக்தியால் நாட்டை மீட்க முடியும் என நம்புகின்றனர். அரசாங்கம் சிறப்பாக பயணிப்பதற்குரிய சட்டங்களை எமது ஆட்சியில் இயற்றி கொடுத்துள்ளோம். அந்த வழியில் தற்போது பயணிப்பதால் பிரச்சினை இல்லை.

2028 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த அரசாங்கத்தால் செயற்பட முடியாவிட்டால், அதைவிடவும் சிறப்பான திட்டத்தை முன்வைக்கும் தரப்புக்கு ஆதரவளிக்கக்கூடும். அதை நோக்கியே எதிரணியின் பயணம் அமைய வேண்டும்.” எனவும் பந்துல குணவர்தன கூறினார்.

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி கூட்டு எதிரணி என கூறிக்கொள்ளும் தரப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணியில் பங்கேற்பதில்லை என முக்கிய அரசியல் பிரமுகர்கள் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குடியுரிமை பறிக்கப்பட்டு 77 ஆண்டுகள் நினைவு தினம் இன்று!

இற்றைக்கு 77 ஆண்டுகளுக்கு முன்னர் இதேபோன்றதொரு நாளில்தான் இலங்கையில் குடியிருப்பு பறிப்பு சட்டம் அமுலுக்கு வந்தது. இதன்மூலம் லட்சக்கணக்கான மலையகத் தமிழர்கள் குடியுரிமை இழந்து நாடற்றவர்களாக்கப்பட்டனர். 1949 ஆம் ஆண்டு தேர்தல் திருத்தச்சட்டமூலம் ஊடாக வாக்குரிமையும் பறிபோனது.

வரலாற்று துரோகம் வஞ்சிப்பு அரங்கேறி 7 சதாப்தங்கள் கடந்திருந்தாலும் மலையகத் தமிழர்களுக்கு இன்னும் நீதி நிலைநாட்டப்படவில்லை. மீள் நிகழாமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தாலும், பொறுப்புகூறல் இடம்பெறவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.

3 தசாப்தகால புறக்கணிப்புக்கு மத்தியில் மலையக தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டிருந்தாலும் 2002 காலப்பகுதியிலேயே அப்பிரச்சினை முழுமையாக தீர்ந்தது.

குடியுரிமை கிடைக்கப்பெற்றிருந்தாலும் மலையகத் தமிழர்களுக்கு இன்னும் அடிப்படை உரிமைகள்கூட முழுமையாக கிடைக்கப்பெறவில்லை என்பது கசப்பான உண்மையாகும். காணி உரிமை அற்றவர்களாகவே இன்னும் வாழ்கின்றனர்.

மலையகத் தமிழர்கள் என்ற அடையாளம் தற்போது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. காணி உரிமையை வழங்குவதற்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது. எனவே, ஒரு நாட்டில் பிரஜை ஒருவருக்குரிய அத்தனை உரிமைகளையும் பெறுவதற்குரிய அழுத்த குழவாக செயற்படுவோம்.
ஆர்.சனத்

சம்பள உயர்வை எதிர்த்துவிட்டு இப்போது நாடகம் அரங்கேற்றம்: சஜித்துக்கு பதிலடி!

“ மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இம்முறையே அதிகளவு சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. எனினும், தனது சகாக்கள் ஊடாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இதற்கு எதிர்ப்பு வெளியிட்டார். இதற்கு எதிராக தோட்டத் தொழிலாளர்கள் கிளர்ந்தெழுந்ததையடுத்து, தாம் எதிர்ப்பை வெளியிடவில்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஊடக அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.”

இவ்வாறு பெருந்தோட்டத்துறை அமைச்சர் சமந்தி வித்யாரத்ன தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று விடுத்த அறிவிப்புக்கு பதிலடிகொடுக்கும் வகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“ நபரொருவருக்கு உணவளிப்பதற்கு முற்பட்டால் அந்த உணவில் மண்போட முற்படாதீர். விஷம் கலக்க வேண்டாம். ஏனெனில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எல்லாத வித துன்பங்களையும் அனுபவித்துவிட்டனர். 200 வருடங்கள் கடந்தும் அம்மக்களுக்கு உரிமைகள் கிடைக்கப்பெறவில்லை. மலையக மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அது நிவர்த்தி செய்யப்படும் என ஹட்டன் பிரகடனத்தில் உறுதியளித்தோம். அந்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்படும்.

பெருமளவு சம்பளத்தை வழங்கிவிட்டோம் என நாம் நினைக்கவில்லை. ஆனால் கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் இது அதிக தொகையாகும்.” எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கூலி வேலை செய்யும் ஒருவருக்கு நாளொன்றுக்கு 2 ஆயிரம் ரூபா வழங்கப்படுகின்றது. உணவும் வழங்கப்படும். ஆனால் தோட்டத் தொழிலாளர்களுக்கு உணவுகூட நிறுவனங்களால் வழங்கப்படுவதில்லை. அப்படி இருக்கையில் அவர்களுக்கு சொற்ப அளவு சம்பள அதிகரிப்பையும் எதிர்த்தது ஏற்புடையது அல்ல எனவும் அமைச்சர் கூறினார்.

மஞ்சுல சுரவீர மன்னிப்பு கோர வேண்டும்!

பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீரவின் சமீபத்திய பேச்சு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் திருமணத்தை நோக்கி முன்வைக்கப்பட்ட தனிப்பட்ட விமர்சனமாகும் என தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் கணபதி கனகராஜ் இன்று (14) கண்டியில் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

மஞ்சுள சுரவீரவின் இந்தக் கருத்து, மக்கள் விடுதலை முன்னணியின் அடிமனதில் பதிந்துள்ள இந்திய விஸ்தரிப்பு வாத அச்சத்தை அரசியல் ஆயுதமாக்கும் முயற்சியாகவும், ஜீவன் தொண்டமான் போன்ற இந்திய வம்சாவளித் தலைவர்களின் இயல்பான குடும்ப மற்றும் கலாச்சாரப் பிணைப்புகளையே வெளிநாட்டு சதி என சித்தரித்து அவர்களை அரசியல் மற்றும் சமூக ரீதியாக தாழ்வுபடுத்தும் செயலாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் தமிழக மக்களுடன் இரத்தத் தொடர்பை பகிர்ந்து கொள்கின்றனர் என்பதையும், தமிழகத்துடனான திருமணப் பந்தம் மிகவும் இயல்பான ஒன்று என்பதையும் கனகராஜ் வலியுறுத்தினார். தனிப்பட்ட திருமண உறவை அரசியல் ஆயுதமாக மாற்றுவது தரமற்ற குறுகிய மனப்பான்மையுடையவர்களின் செயல் எனவும், மஞ்சுள சுரவீர இனவாத பேச்சுக்கு புதிய வடிவம் கொடுக்க முயற்சிக்கிறாரா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

இந்த தாக்குதல் ஜீவன் தொண்டமானை மட்டுமல்ல, இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களை முழுமையாக அவமானப்படுத்தும் முயற்சியாகும் என அவர் கண்டனம் தெரிவித்தார்.

தொண்டமான் குடும்பம் நான்கு தலைமுறைகளாக பாராளுமன்றத்தில் செயல்பட்டு வருவதையும், இவர்களைப் பற்றி தரமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது மஞ்சுள சுரவீர சார்ந்துள்ள சமூகத்தின் மதிப்பை குறைத்து காட்டும் செயல் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டை கைப்பற்றுவதற்காக குவேணியை மணந்து பின்னர் அவரை கைவிட்டு இந்தியத் தமிழ் பெண்களை அழைத்து வந்து திருமணம் செய்துகொண்டவர்களாலேயே வரலாறு நிரம்பியிருக்கின்ற நிலையில், இந்தியத் திருமணப் பந்தங்கள் குறித்து இவ்வாறு பேசுவது வேடிக்கையாக உள்ளது என்றும் கனகராஜ் தெரிவித்தார்.

மஞ்சுள சுரவீரவின் கருத்துக்கள் காரணமாக இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர் உடனடியாக பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்றும் கனகராஜ் வலியுறுத்தினார். சுரவீர தேசிய மக்கள் சக்தியை சேர்ந்தவர் என்பதால், இதற்கு பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கும் உண்டு என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பாதீட்டுக்கு நேசக்கரம் நீட்டிய மலையக எம்.பிக்கள்!

2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாவம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு தொடர்பில்……………
🛑 ஆதரவு – 160
🛑 தேசிய மக்கள் சக்தி
🛑 இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (பொதுத்தேர்தலில் ஐதேக யானை சின்னத்தின்கீழ் ஜீவன் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.)
🛑 தமிழ் முற்போக்கு கூட்டணி
(ஐக்கிய மக்கள் சக்தியின் பட்டியலின்கீழ் முற்போக்கு கூட்டணி எம்.பிக்கள் போட்டியிட்டனர்.)
(தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை கருத்திற்கொண்டே மலையக எம்.பிக்கள் பாதீட்டுக்கு இவ்வாறு நேசக்கரம் நீட்டியுள்ளனர்.
🛑 எதிர்ப்பு- 42
🛑ஐக்கிய மக்கள் சக்தி
🛑சிலிண்டர் கூட்டணி
🛑சர்வஜன அதிகாரம்
🛑தமிழ் தேசிய மக்கள் முன்னணி
🛑ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி
🛑 08 வாக்களிப்பில் இருந்து விலகல்
(இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள்.)
🛑முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தொழிலாளர் கட்சியின் உறுப்பினர் காதர் மஸ்தான் உட்பட 14 பேர் சபை அமர்வில் பங்கேற்கவில்லை.
🛑குழுநிலை விவாதம் நாளை ஆரம்பம்
🛑டிசம்பர் – 5 இறுதி வாக்கெடுப்பு!

தோட்டத் தொழிலாளர்களுக்கு 4 ஆயிரம் ரூபா வழங்கினால்கூட அதனை நாம் ஆதரிப்போம்!

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்குரிய சம்பள அதிகரிப்பை எதிரணி எதிர்ப்பதாக ஆளுங்கட்சியால் முன்வைக்கப்படும் தர்க்கம் ஏற்புடையது அல்ல. தோட்டத் தொழிலாளர்களுக்கு 4 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டால்கூட அதனை ஆதரிப்போம் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பாதீட்டு விவாதத்தில் உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

“ மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவதற்கு எதிரணி எதிர்ப்பு இல்லை. எனவே, வரவு- செலவுத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் தோட்டத் தொழிலாளர்களுக்குரிய சம்பள உயர்வை எதிர்ப்பவர்கள் என ஆளுங்கட்சி தரப்பில் முன்வைக்கப்படும் தர்க்கத்தை ஏற்க முடியாது. அப்படியானால் பாதீட்டில் சம்பள விடயம் மட்டும் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும்.

2,138 ரூபா நாள் சம்பளம் அவசியம் என ஜே.வி.பியின் தொழிற்சங்கவே வலியுறுத்தி இருந்தது. தோட்டத் தொழிலாளர்களுக்கு 4 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டால்கூட அதனை எதிர்க்க மாட்டோம். ஆனால் சம்பள உயர்வை வழங்குவதற்குரிய நடைமுறை உள்ளது. சட்டரீதியில் அவர்களுக்கு சம்பள உரிமையை வழங்க வேண்டும். “- என்றார்.

சினிமா

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

செய்தி

துறைமுக முற்றுகையை அமெரிக்கா கைவிட வேண்டும்: ஈரான் திட்டவட்டம்!

0
அமைதி பேச்சு தொடர வேண்டுமானால் ஈரான் மீதான துறைமுக முற்றுகையை அமெரிக்கா உடனடியாக நீக்க வேண்டும் என ஜெனிவாவுக்கான ஈரான் தூதுவர் Ali Bahreini வலியுறுத்தியுள்ளார். தற்போதைய தடையானது போர்நிறுத்த ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறுகின்றது. எனவே,...

ஈரான் வெளிவிவகார அமைச்சர் இன்று பாகிஸ்தான் பயணம்!

0
ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரகச்சி, பாகிஸ்தான் அதிகாரிகளைச் சந்திப்பதற்காக இன்றிரவு இஸ்லாமாபாத் செல்லவுள்ளார். ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே நிலவும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு முக்கிய முயற்சியாக இந்தப் பயணம் பார்க்கப்படுகிறது. தற்போது இரு நாடுகளுக்கும்...

கல்வி மறுசீரமைப்பு: பிரதமர் விடுத்துள்ள அறிவிப்பு!

0
" 2027ஆம் ஆண்டில் 6ஆம் தரத்திலிருந்து புதிய கல்விச் சீர்திருத்தங்கள் ஆரம்பிக்கப்படும்" - என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கண்டியில் இன்று மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரைச்...