Home Blog Page 206

மஞ்சுல சுரவீர மன்னிப்பு கோர வேண்டும்!

பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீரவின் சமீபத்திய பேச்சு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் திருமணத்தை நோக்கி முன்வைக்கப்பட்ட தனிப்பட்ட விமர்சனமாகும் என தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் கணபதி கனகராஜ் இன்று (14) கண்டியில் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

மஞ்சுள சுரவீரவின் இந்தக் கருத்து, மக்கள் விடுதலை முன்னணியின் அடிமனதில் பதிந்துள்ள இந்திய விஸ்தரிப்பு வாத அச்சத்தை அரசியல் ஆயுதமாக்கும் முயற்சியாகவும், ஜீவன் தொண்டமான் போன்ற இந்திய வம்சாவளித் தலைவர்களின் இயல்பான குடும்ப மற்றும் கலாச்சாரப் பிணைப்புகளையே வெளிநாட்டு சதி என சித்தரித்து அவர்களை அரசியல் மற்றும் சமூக ரீதியாக தாழ்வுபடுத்தும் செயலாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் தமிழக மக்களுடன் இரத்தத் தொடர்பை பகிர்ந்து கொள்கின்றனர் என்பதையும், தமிழகத்துடனான திருமணப் பந்தம் மிகவும் இயல்பான ஒன்று என்பதையும் கனகராஜ் வலியுறுத்தினார். தனிப்பட்ட திருமண உறவை அரசியல் ஆயுதமாக மாற்றுவது தரமற்ற குறுகிய மனப்பான்மையுடையவர்களின் செயல் எனவும், மஞ்சுள சுரவீர இனவாத பேச்சுக்கு புதிய வடிவம் கொடுக்க முயற்சிக்கிறாரா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

இந்த தாக்குதல் ஜீவன் தொண்டமானை மட்டுமல்ல, இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களை முழுமையாக அவமானப்படுத்தும் முயற்சியாகும் என அவர் கண்டனம் தெரிவித்தார்.

தொண்டமான் குடும்பம் நான்கு தலைமுறைகளாக பாராளுமன்றத்தில் செயல்பட்டு வருவதையும், இவர்களைப் பற்றி தரமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது மஞ்சுள சுரவீர சார்ந்துள்ள சமூகத்தின் மதிப்பை குறைத்து காட்டும் செயல் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டை கைப்பற்றுவதற்காக குவேணியை மணந்து பின்னர் அவரை கைவிட்டு இந்தியத் தமிழ் பெண்களை அழைத்து வந்து திருமணம் செய்துகொண்டவர்களாலேயே வரலாறு நிரம்பியிருக்கின்ற நிலையில், இந்தியத் திருமணப் பந்தங்கள் குறித்து இவ்வாறு பேசுவது வேடிக்கையாக உள்ளது என்றும் கனகராஜ் தெரிவித்தார்.

மஞ்சுள சுரவீரவின் கருத்துக்கள் காரணமாக இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர் உடனடியாக பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்றும் கனகராஜ் வலியுறுத்தினார். சுரவீர தேசிய மக்கள் சக்தியை சேர்ந்தவர் என்பதால், இதற்கு பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கும் உண்டு என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பாதீட்டுக்கு நேசக்கரம் நீட்டிய மலையக எம்.பிக்கள்!

2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாவம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு தொடர்பில்……………
🛑 ஆதரவு – 160
🛑 தேசிய மக்கள் சக்தி
🛑 இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (பொதுத்தேர்தலில் ஐதேக யானை சின்னத்தின்கீழ் ஜீவன் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.)
🛑 தமிழ் முற்போக்கு கூட்டணி
(ஐக்கிய மக்கள் சக்தியின் பட்டியலின்கீழ் முற்போக்கு கூட்டணி எம்.பிக்கள் போட்டியிட்டனர்.)
(தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை கருத்திற்கொண்டே மலையக எம்.பிக்கள் பாதீட்டுக்கு இவ்வாறு நேசக்கரம் நீட்டியுள்ளனர்.
🛑 எதிர்ப்பு- 42
🛑ஐக்கிய மக்கள் சக்தி
🛑சிலிண்டர் கூட்டணி
🛑சர்வஜன அதிகாரம்
🛑தமிழ் தேசிய மக்கள் முன்னணி
🛑ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி
🛑 08 வாக்களிப்பில் இருந்து விலகல்
(இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள்.)
🛑முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தொழிலாளர் கட்சியின் உறுப்பினர் காதர் மஸ்தான் உட்பட 14 பேர் சபை அமர்வில் பங்கேற்கவில்லை.
🛑குழுநிலை விவாதம் நாளை ஆரம்பம்
🛑டிசம்பர் – 5 இறுதி வாக்கெடுப்பு!

தோட்டத் தொழிலாளர்களுக்கு 4 ஆயிரம் ரூபா வழங்கினால்கூட அதனை நாம் ஆதரிப்போம்!

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்குரிய சம்பள அதிகரிப்பை எதிரணி எதிர்ப்பதாக ஆளுங்கட்சியால் முன்வைக்கப்படும் தர்க்கம் ஏற்புடையது அல்ல. தோட்டத் தொழிலாளர்களுக்கு 4 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டால்கூட அதனை ஆதரிப்போம் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பாதீட்டு விவாதத்தில் உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

“ மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவதற்கு எதிரணி எதிர்ப்பு இல்லை. எனவே, வரவு- செலவுத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் தோட்டத் தொழிலாளர்களுக்குரிய சம்பள உயர்வை எதிர்ப்பவர்கள் என ஆளுங்கட்சி தரப்பில் முன்வைக்கப்படும் தர்க்கத்தை ஏற்க முடியாது. அப்படியானால் பாதீட்டில் சம்பள விடயம் மட்டும் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும்.

2,138 ரூபா நாள் சம்பளம் அவசியம் என ஜே.வி.பியின் தொழிற்சங்கவே வலியுறுத்தி இருந்தது. தோட்டத் தொழிலாளர்களுக்கு 4 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டால்கூட அதனை எதிர்க்க மாட்டோம். ஆனால் சம்பள உயர்வை வழங்குவதற்குரிய நடைமுறை உள்ளது. சட்டரீதியில் அவர்களுக்கு சம்பள உரிமையை வழங்க வேண்டும். “- என்றார்.

வரலாற்றில் முதன்முறையாக தொழிற்சங்க அழுத்தமின்றி சம்பள உயர்வு: என்.பி.பி. அரசை போற்றுகிறார் பாரத்!

 

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நேரடியாக உயர்த்துவதற்கு அரசு எடுத்த நடவடிக்கையை ஜனநாயக மக்கள் முன்னணி- தமிழ் முற்போக்கு கூட்டணியின் உப தலைவர் பாரத் அருள்சாமி பாராட்டியுள்ளார்.

இந்த திட்டத்தின் படி, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தினசரி ரூ.200 சம்பள உயர்வு மற்றும் வருகை ஊக்கத்தொகை ரூ.200 வழங்கப்பட உள்ளது. இதனால், தற்போது ரூ.1350 ஆக வழங்கப்படும் நாட்சம்பளம் ரூ.1750 ஆக அதிகரிக்கப்பட உள்ளது.

இது வரலாற்றில் முதல் முறையாக வரவு செலவு திட்டத்தின் மூலம் தொழிலாளர்களின் ஊதியம் நேரடியாக உயர்ந்துள்ளது. எந்த தொழிற்சங்க அழுத்தமும் அரசியல் பேதங்களும் இல்லாமல், பொறுப்பான பேச்சுவார்த்தை மற்றும் நேர்மையான அணுகுமுறையின் மூலம் இது எட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வரவு செலவு உரையில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தமிழ் முற்போக்கு கூட்டணியின் இடைவிடாத முற்போக்கான சிந்தனையையும் பெருந்தோட்ட சமூகத்திற்கான முயற்சிகளையும் நேரடியாக பாராட்டியதையும் பாரத் அருள்சாமி வரவேற்றார். தலைவர் மனோ கணேஷன், பிரதி தலைவர்களான திகம்பரம் மற்றும் இராதாகிருஷ்ணன் ஆகியோரும் நாடாளுமன்றத்தில் இந்த முயற்சியை பாராட்டியதாக அவர் குறிப்பிட்டார்.

தமிழ் முற்போக்கு கூட்டணி, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பல தசாப்தங்களாக நீடித்த கட்டுப்பாட்டு வேலை மற்றும் அடக்குமுறைக்கு எதிராக போராடும் எங்கள் குரலுக்குப் பெரும் வரவேற்பு இருக்கிறது. தொழிலாளர்களை எதிர்காலத்தில் தேயிலை பங்குதார்களாக சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களாக மாற்றும் திட்டம் தான் நிலையான தீர்வாகும்.

2020–2024 காலப்பகுதியில் தேயிலைத் துறையின் வெளிநாட்டு வருமானம்:2020 – ரூ.230 பில்லியன் 2021 – ரூ.268 பில்லியன் 2022 – ரூ.411 பில்லியன்
2023 – ரூ.428 பில்லியன் 2024 – ரூ.450 பில்லியனை மீறும் என எதிர்பார்ப்பு 200 ஆண்டுகளுக்கும் மேலாக தேயிலைத் துறையின் முதுகெலும்பாக இருந்த பெருந்தோட்ட தொழிலாளர்களின் நலன்கள் தனித்து தொழிலாளர்கள் கண்ணோட்டத்தில் பிரிக்கப்படக்கூடாது.

மலையகத் தமிழர்களின் வீட்டு மற்றும் வாழ்வாதார நில உரிமைகள், புதிய கிராம சேவக பிரிவுகள், பிரதேச அலுவலகங்கள், பிரதேச சபைகள், கல்வி, சுகாதார சமத்துவம், அரசு வேலை வாய்ப்புகள், திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகிய பல கோரிக்கைகள் இன்னும் புறக்கணிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கவலை தெரிவித்தார்.

சில பெருந்தோட்ட நிறுவனங்கள் மாதத்தில் 10–15 நாட்கள் மட்டுமே வேலை வழங்கும் சூழலில், 25 நாட்கள் பணிக்கு சென்றால் மாத்திரமே ஊக்கத்தொகை வழங்கப்படும் என்கிற கேள்வியை பரத் அருள்சாமி முன்வைத்தார். தொழில் அமைச்சின் பிராந்திய அலுவலகங்கள் பல ஆண்டுகளாக சரியான கண்காணிப்பு அல்லது தீர்வுகளை வழங்காததையும் அவர் கண்டனமாகக் கூறினார்.

மேலும், அரசாங்கத்தின் தொழிலாளர் சட்ட பரிசீலனை குழுவில் பெருந்தோட்டத் துறைக்கு நிபுணர் இல்லாதது மிகப் பெரிய குறைபாடு என அவர் சுட்டிக்காட்டினார். சில எதிர்க்கட்சியினர் தொழிலாளர்களை தாழ்வாகக் காட்டும் வகையில் “லஞ்சம்” போன்ற சொற்களை பயன்படுத்துவதை அவர் கடுமையாக கண்டித்தார். இதனை எதிர்கட்சி தலைவர் கவனத்திற்கு கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

தமிழ் முற்போக்கு கூட்டணி எப்போதும் சமூக நலனையே முன்னிலையில் வைத்து செயல்படும் என்றும், நல்ல முயற்சிகளை ஆதரிப்பதோடு, தவறுகள் இருப்பின் அரசை பொறுப்புக்கூறச் செய்வோம் என்றும் பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

பேரணி நடத்தி எம்மை மிரட்ட முடியாது: மக்கள் படை எம்பக்கம்!

அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக எதிரணிகளால் 5 ஆயிரம் பேரை திரட்ட முடியுமெனில், அரசாங்கத்தை பாதுகாப்பதற்காக 50 ஆயிரம் பேருடன் களமிறங்கக்கூடிய வலுவான அரசியல் கட்டமைப்பு எம்வசம் உள்ளது என்று ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

36 ஆவது கார்த்திகை வீரர்கள் ஞாபகார்த்தம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் விஹாரமஹாதே வி திறந்த வெளியரங்கில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ரில்வின் சில்வா மேற்கண்டவாறு கூறினார்.

கூட்டு எதிரணி எனக் கூறிக்கொள்ளும் தரப்பினரால் எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையிலேயே அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் மேற்படி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

“ ஆட்சியைக் கவிழ்ப்பது பற்றியும், கொழும்பை சுற்றிவளைப்பது குறித்தும் தற்போது கதைக்கின்றனர். அவர்களின் நகர்வுகள் எமக்கு சவால் அல்ல.
எப்படி போராட்டம் நடத்த வேண்டும், எப்படி பேரணி நடத்த வேண்டும் என செய்து காட்டியவர்கள் நாம். எனவே, 3000 ,4000 பேரை திரட்டி எம்மை மிரட்ட முடியாது.

பேரணி பார்க்க வேண்டுமானால் நாமும் நடத்தி காட்டுகின்றோம். அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக 5 ஆயிரம் பேரை திரட்ட முடியுமென்றால் பாதுகாப்பதற்காக 50 ஆயிரம் பேருடன் களமிறங்கும் வல்லமை எமது அரசியல் அணிக்கு உள்ளது. எனவே, எம்முடன் விளையாட வரவேண்டாம்.” எனவும் ஜே.வி.பி. செயலாளர் குறிப்பிட்டார்.

டெல்லி கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தியவரின் வீடு வெடி வைத்து தகர்ப்பு!

 

டெல்லி – செங்கோட்டை அருகே சிக்கனலில் கார் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு காரணமான மருத்துவர் உமர் நபியின் வீட்டை பாதுகாப்பு படையினர் வெடி வைத்து தகர்த்தனர்.

டெல்லி செங்​கோட்டை அரு​கில் கடந்த திங்​கட்​கிழமை மாலை 6.52 மணிக்கு ஹூண்​டாய் ஐ20 கார் ஒன்று பயங்கர சத்​தத்​துடன் வெடித்து சிதறியது. இதில் அந்த காரை ஓட்டி வந்​தவர் உட்பட 13 பேர் உயி​ரிழந்​தனர். 20-க்​கும் மேற்​பட்​டோர் காயம் அடைந்​தனர். இந்த சம்​பவம் நாடு முழு​வதும் அதிர்வலைகளை ஏற்​படுத்​தி​யது.

இது தொடர்​பான விசா​ரணை​யில், வெடிபொருளு​டன் கூடிய அந்த காரை ஜம்மு காஷ்மீரின் புல்​வாமா பகு​தியை சேர்ந்த மருத்​து​வர் உமர் முகமது நபி ஓட்டி வந்​தது தெரிய​வந்​தது.

வெடித்த காரில் இருந்து சேகரிக்கப்பட்ட உடற்பாகங்கள் மற்றும் உமரின் தாயாரிடம் சேகரிக்கப்பட்ட டிஎன்ஏ மாதிரியை பகுப்பாய்வு செய்ததில் அந்த இரண்டும் ஒத்துப்போவது உறுதியானது. இதனடிப்படையில் காரை மருத்துவர் உமர் ஓட்டி வந்தது உறுதி செய்யப்பட்டது. இந்த தாக்குதலில் அவரது பங்கு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்தச் சூழலில் வெள்ளிக்கிழமை அன்று புல்வாமாவில் உள்ள மருத்துவர் உமர் நபியின் வீட்டை பாதுகாப்பு படையினர் வெடி வைத்து தகர்த்தனர். இதற்கு ஐஇடி வெடிபொருட்களை பாதுகாப்பு படையினர் பயன்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து ஜம்மு காஷ்மீர் போலீஸார் தீவிர சோதனை நடத்தியதில் அங்கு ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் மூவர் மருத்துவர் உமர் நபியின் உறவினர்கள். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனை மற்றும் கைது படலத்தை விசாரணை அமைப்புகளை மேற்கொண்டு வருகின்றன.

டெல்லி கார் குண்​டு​வெடிப்​பில் தொடர்​புடைய மருத்​து​வர்​கள் உமர் நபி, முஜம்​மில், ஷாகின் ஆகியோர் திட்​ட​மிட்டு இந்த சதி செயலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மூவரும் சுவிட்​சர்​லாந்தின் ‘திரீமா’ செயலியைப் பயன்​படுத்தி சதி திட்​டம் தொடர்​பாக கலந்​துரை​யாடி உள்​ளனர்.

சம்பள அதிகரிப்புடன் நின்றுவிடாது பெருந்தோட்ட தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளராக்குங்கள்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 400 ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதுபோல, அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கவும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

விசேட அறிவிப்பொன்றை விடுத்தே எதிர்க்கட்சி தலைவர் இந்த விடயத்தை வலியுறுத்தினார்.

“ பெருந்தோட்ட துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தற்போதைய 1,350 ரூபா சம்பளத்துடன், 400 ரூபா அதிகரிப்பை வரவு- செலவுத் திட்டத்தில் அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.சம்பந்தப்பட்ட தோட்ட நிறுவனம் ரூ.200 வையும், அரசாங்கம் ரூ.200 வையும் செலுத்தும் தீர்மானத்தற்கு வந்துள்ளது.

துயர் நிறைந்த வாழ்க்கையை நடத்தி வரும் பெருந்தோட்ட சமூகத்தினருக்கு, இந்த ரூ.400 சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள எடுத்த தீர்மானம் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இந்த தொகையை மேலும் அதிகரிக்க வேண்டும்.

பெருந்தோட்ட சமூகத்திக்கு சம்பளம் கிடைத்தால், அது ஒரு நல்ல விடயமாகும். அவ்வாறே இது சாதகமான விடயமுமாக அமைந்து காணப்படுகின்றது. அரசாங்கத்தால் இவ்வாறு நிதிகளை ஒதுக்க முடியும்.

கோவிட்-19 தொற்றுநோய் ஏற்பட்ட சமயம், வீழ்ச்சி கண்ட தொழிற்றுறைகளில் பணிபுரிபவர்களின் சம்பளத்தை அதிகரிக்க ஐக்கிய இராச்சிய அரசாங்கம் நிதியை ஒதுக்கீடு செய்தன. இவ்வாறு நிதிகளை ஒதுக்குவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதால் மாத்திரமல்லாது, பெருந்தோட்டத் துறையில் குறைந்த அளவில் பயன்படுத்தப்படும், முற்றுலு மே பயன்படுத்தப்படாத காணிகளில் பயிரிடுவதற்கான உரிமையை வழங்கி, அவர்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதற்கான தேசிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.
இவ்வாறு மேற்கொள்வதன் மூலம் பெருந்தோட்ட சமூகத்தை வலுப்படுத்த முடியும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இன்று, தோட்டத் துறையில் 60-70மூ காணி உரிமைகள் அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமானதாக காணப்பட்ட போதிலும், தேயிலை உற்பத்தியில் இத்தரப்பு 30மூ ஐ விடவும் குறைவான பங்களிப்பை மாத்திரமே பெற்றுத் தருகிறது. மறுபுறம், 30மூ காணி உரிமைகளை கொண்ட சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள்,

நாட்டின் தேயிலை உற்பத்தியில் 60-70மூ ஆன பங்களிப்பைப் பெற்றுத் தருகின்றனர். பயிரிடப்படாத காணிகள் அரசு மற்றும் கம்பனிகளிடம் காணப்படுவதால், இவற்றை வேலையில்லாப் இளைஞர்களுக்கும், தோட்ட சமூகத்தினருக்கும் பிரித்து வழங்கி, அவர்களுக்கு காணி உரிமைகளை வழங்கி, தேயிலை உற்பத்தியை அதிகரிக்கச் செய்ய முடியும் என்றும், இது நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

எனவே, தற்போதைய ரூ.1350 சம்பளத்துடன், மேலும் ரூ.400 அதிகரிப்பதை நான் எதிர்க்கவில்லை. எதிர்க்கப்போவதுமில்லை. பெருந்தோட்ட நிறுவனங்களால் ரூ.400 செயல்படுத்தப்படுவதே விரும்பத்தக்கது.

பயிரிடப்படாத, பயன்படுத்தப்படாத தரிசு காணிகளை இந்த மக்களுக்குப் பெற்றுக் கொடுத்து, செய்கைகளுக்கான சந்தர்ப்பங்களைப் பெற்றுக் கொடுங்கள், இவ்வாறு செய்தால், தமது சொந்தக் காணியில், அவர்களுக்கென சொந்த வீட்டைக் கட்டிக்கொள்ள முடியும். ஐக்கிய மக்கள் சக்தியினதும் ஐக்கிய மக்கள் கூட்டணியினதும் நிலைப்பாடு இதுவாகவே அமைந்து காணப்படுகின்றன.

இரு ஜனாதிபதித் தேர்தல்கள் கொள்கை அறிக்கையில்( விஞ்ஞாபனத்தில்) நாம் முன்வைத்த கொள்கையாகும்.
இது தான் எமது செல்லுபடியான கொள்கையாகும். எனவே இது தொடர்பான ஏனைய கருத்துக்களை புறம்தள்ளி வைத்து விட்டு, ஐக்கிய மக்கள் சக்தியின் இந்த உண்மையான கொள்கையை சமூகமயப்படுத்துவது நமது கடமையாகும்.

எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையிலேனும் பாராளுமன்றத்தில் விசேட கருத்தை முன்வைக்க இன்று எனக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. இந்த நிலைக்கு நாட்டின் ஜனநாயகத்தை இல்லாதொழிக்க இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

குளவிக்கொட்டு: அறுவர் பாதிப்பு!

பொகவந்தலாவ மோரா தோட்டத்தில் நடைமுறைப் பயிற்சிக்காக வந்த ருஹுணு பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள் குழுவை இன்று குளவிகள் தாக்கியதில், ஆறு மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் பொகவந்தலாவ பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாணவர்களின் களப்பயணத்தின்போதே குளவிகள் கொட்டியுள்ளன.

பொகவந்தலாவ பொலிஸார் இச்சம்பவத்தைப் பற்றிய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாகாணசபைத் தேர்தல்: பிரதமர் தலைமையில் குழு அமைக்குமாறு கோரிக்கை!

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் தீர்மானமொன்றை எடுப்பதற்காக பிரதமர் தலைமையில் குழுவொன்றை அமைக்குமாறு சபாநாயகரிடம், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று (13) நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே எதிரணி பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக்க எம்.பி. மேற்படி கோரிக்கையை விடுத்தார்.

மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்காக வரவு- செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, தேர்தல் முறைமை தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட வேண்டியது நாடாளுமன்றத்தின் பொறுப்பு என ஜனாதிபதி அறிவித்துள்ள நிலையிலேயே, எதிரணி தரப்பில் இருந்து மேற்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

“ தாம் ஆட்சிக்கு வந்த பின்னர் ஒரு வருட காலப்பகுதிக்குள் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உறுதியளித்திருந்தது. அந்த உறுதிமொழி இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

தேர்தல் முறைமை தொடர்பில் சட்டம் இயற்றி தருமாறு ஜனாதிபதி நாடாளுமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். எனவே, பிரதமர் தலைமையில் விரைவில் குழுவொன்றை நியமிக்குமாறு எதிரணிகளின் சார்பில் கோரிக்கை விடுக்கின்றேன். பழைய முறைமையிலேனும் தேர்தலை நடத்தி, மக்களுக்குரிய ஜனநாயக வாய்ப்பை வழங்க வேண்டும்.” எனவும் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை நாம் எதிர்க்கவில்லை!

 

“ மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளான்றுக்கு அரசாங்கம் 200 ரூபா வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்பு இல்லை. அதனை நாம் ஆதரிக்கின்றோம்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.

2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் இன்று கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

சினிமா

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

செய்தி

நிர்வாகச் சீர்கேடு: ஹட்டன் – டிக்கோயா நகரசபையில் கடும் அமளி; சபை அமர்வு ஒத்திவைப்பு!

0
மலைவாஞ்சான் ஹட்டன்: ஹட்டன் – டிக்கோயா நகரசபையின் மாதாந்த அமர்வு இன்று (24) காலை 10.45 மணியளவில் நகரசபைத் தலைவர் அசோக்க கருணாரத்ன தலைமையில் கூடியது. எனினும், கடந்த 10 மாதங்களாக நகரசபை நிர்வாகத்தில்...

மலையகத்துக்கு மாடி வீட்டு திட்டம் வேண்டாம்: காணி உரிமையை உடன் வழங்குக!

0
" மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி, வீட்டு உரிமை வழங்கப்பட வேண்டும். எமது மக்களுக்கு மாடி வீட்டும் திட்டம் பொறுத்தமற்றது." என்று திட்டவட்டமாக வலியுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் மற்றும் ஜனநாயகத்துக்கான செயலூக்கப்படுத்தப்பட்ட பிரஜைகள் என்ற செயல்திட்டத்தின்...

காணி பிரச்சினைக்கு உரிய தீர்வு: இளங்குமரன் எம்.பி. உறுதி!

0
“வடக்கு,கிழக்கில் நிலவும் காணிப்பிரச்சினைக்கு சுமுக தீர்வை காண வேண்டும் என்பதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உறுதியாக உள்ளது. எனவே, மயிலிட்டி பிரச்சினையும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட வகையில் தீர்க்கப்படும்.” என்று தேசிய மக்கள்...