Home Blog Page 207

ரூ. 200: 25 நாட்கள் வேலைக்கு வரவேண்டும் என கட்டாய நிபந்தனை இல்லை!

தோட்டத் தொழிலாளி மாதத்தில் ஒருநாள் வேலைக்கு வந்தாலும் எங்களால் வழங்கப்படும் வருகைக் கொடுப்பனவான 200 ரூபாவை கொடுக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிபந்தனையாகும். அந்த தொகையை பெற்றுக்கொள்ள 25 நாட்கள் வேலைக்கு வர வேண்டும் என்று நிபந்தனைகள் விதிக்கப்படவில்லை என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (13) நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின் ஐந்தாம் நாள் விவாதத்தின் போது, பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணி உறுப்பினர் வே.இராதாகிருஸ்ணன் முன்வைத்த கருத்துக்களுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு கூறினார்.

இதன்போது அமைச்சர் வசந்த சமரசிங்க மேலும் தெரிவிக்கையில்,

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்திக்கொள்கின்றனர். பெருந்தோட்ட முதலாளிமார்கள் 200 ரூபாவை அடிப்படை சம்பளத்தில் சேர்க்க இணக்கம் தெரிவித்துள்ளனர். அத்துடன் மேலும் 200 ரூபாவை வருகை கொடுப்பனவான வழங்குவதற்கு அரசாங்கம் இணங்கியுள்ளது. வருகையை ஊக்குவிக்கவே அரசாங்கம் அந்த தொகையை கொடுக்க தீர்மானித்துள்ளது.

குறைந்தது 15 நாட்களாவது வருகை தந்தால் 200 ரூபாவை கொடுக்குமாறே முதலாளிமார்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் நாங்கள் அவ்வாறு கூறவில்லை. நாளொன்றுக்கு வேலைக்கு வந்தால் 200 ரூபா வழங்குவதற்கே நாங்கள் தீர்மானித்துள்ளோம். 14 நாட்களுக்கு ஒருமுறை சம்பளம் வழங்கப்படுகிறது. இதனால் தொழிலாளர்களுக்கு குறைந்தது 8 நாட்களாவது வேலை வழங்கப்பட வேண்டும். அத்துடன் 25 நாட்களும் வேலையை வழங்குங்கள். அவர்கள் ஒரு நாள் வந்தாலும் 200 ரூபாவை வழங்க வேண்டும் என்பதே எமது நிபந்தனையாகும் என்றார்.

ஹெரோயினுடன் இரு இளைஞர்கள் ஹட்டன் பொலிஸாரால் கைது!

ஈஸி கேஷ் (Easy Cash) முறையின் மூலம் பணம் செலுத்தப்பட்டு ஹெரோயின் போதைப்பொருள் எடுத்துச் செல்ல வந்த ஒரு இளைஞன், ஹட்டன் பொலிஸ் பிரிவின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் (13) கைது செய்யப்பட்டார்.

ஹட்டன் பகுதியில் நடைபெற்ற மற்றொரு சோதனையைத் தொடர்ந்து, ஹட்டன்–பொகவந்தலாவ பிரதான வீதியிலுள்ள டிக்கோயா தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் இருந்த இரண்டு இளைஞர்கள் மீது பொலிஸ் அதிகாரிகள் சந்தேகம் கொண்டனர்.

அவர்களின் நடத்தை சந்தேகத்துக்குரியதாக இருந்ததால், பொலிஸார் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோதனை செய்தபோது, பிரதான வீதியின் அருகிலுள்ள புல்வெளியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெராயின் பொட்டலத்தை கண்டுபிடித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹட்டன் டிக்கோயா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஆவார். அவர் ரூ. 6,000 செலுத்தி, ஈஸி கேஷ் அமைப்பு மூலம் போதைப்பொருள் பொட்டலத்தை வாங்கியிருப்பது விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சோதனையை மேற்கொண்ட ஹட்டன் பொலிஸ் பிரிவு ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், போதைப்பொருள் விநியோக வலையமைப்பை கண்டறிந்து, சம்பந்தப்பட்ட வியாபாரியை கைது செய்வதற்காக சந்தேக நபரின் தொலைப்பேசி தரவுகளை ஆய்வு செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

(க.கிஷாந்தன்)

பாதீட்டுக்கு ஆதரவா? 3 மணிக்கு கூடுகிறது முற்போக்கு கூட்டணி!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆவது வாசிப்புமீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறவுள்ளது.

இந்நிலையில் வரவு- செலவுத் திட்டத்தை ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பாதா, நடுநிலை வகிப்பதா என்பது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்றக்குழு இன்று மாலை 3 மணிக்கு கூடுகின்றது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முடிவும் இன்று மதியம் அறிவிக்கப்படவுள்ளது.

மரக்கறி விலைப்பட்டியல் (14.11.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (14) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

மாவீரர் இல்லங்களை தமிழர்களிடம் ஒப்படையுங்கள்!

வடக்கு, கிழக்கிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை அங்கீகரித்து, அங்கிருந்து இராணுவத்தை வெளியேற்றி அவற்றை தமிழ் மக்களிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம், இலங்கை தமிழரசுக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் க. கோடீஸ்வரன் மேற்படி வேண்டுகோளை முன்வைத்தார். ,

“ ஜே.வி.பியின் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் கார்த்திகை வீரர்கள் தினம் நவம்பர் 13 ஆம் திகதி நினைவு கூறப்படுகின்றது. இடதுசாரி கொள்கையுடன் போராடிய வீரன் என்ற அடிப்படையில் நானும் அஞ்சலி செலுத்துகின்றேன்.

கார்த்திகை மாதத்தில் வடக்கு, கிழக்கில் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கில் 32 இற்கு மேற்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள் உள்ளன.
எங்களது இனத்துக்காக, விடுதலைக்காக போராடிய மாவீரர்கள். பொதுமக்கள் விதைக்கப்பட்டுள்ள அந்த புனிதமான – கண்ணியமான இடங்களை பாதுகாக்க வேண்டும்.

மாவீரர் துயிலும் இல்லங்களைவ டக்க, கிழக்கில் வாழும் தமிழ் மக்களிடம் பொறுப்பு கொடுக்க வேண்டும் . இடங்களை அங்கீகரிக்க வேண்டும். அந்த இடங்களில் இருந்து இராணுவத்தை அகற்ற வேண்டும். மக்கள் சுதந்திரமாக நினைவு கூறுவதற்கு இடமளிக்க வேண்டும்.
நீங்கள் நிதி ஒதுக்க தேவையில்லை. நாங்கள் தமிழர்கள் நிதி ஒதுக்கி, புனிதமான இடங்களை பாதுகாப்போம்.”- என கோடீஸ்வரன் எம்.பி. மேலும் குறிப்பிட்டார்.

திகில் காமெடி கதையாக உருவாகியுள்ள ‘ரஜினி கேங்’

ரஜினி கிஷன் தயாரித்து நடிக்க, ‘பிஸ்தா’, ‘உப்பு புளி காரம்’, ‘கனா காணும் காலங்கள்’ ஆகியவற்றை இயக்கிய எம்.ரமேஷ் பாரதி ரமேஷ் பாரதி இயக்கத்தில் ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ரஜினி கேங்’. மொட்டை ராஜேந்திரன், ராம் தாஸ்,கூல் சுரேஷ், கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

இதில், நடிகர் ரஜினி கிஷன் பேசியதாவது: “இது எனது மூன்றாவது படம். ஏற்கனவே இரண்டு படம் செய்துவிட்டேன். மக்கள் மனதில் பெரிய ஹீரோவாக இடம் பிடிக்க வேண்டும் என்பது தான் என் கனவு. அதற்காகத் தான் கதை கேட்டேன். ரமேஷ் பாரதி மூன்று கதை சொன்னார், அவரே இந்தக்கதை செய்யுங்கள், காமெடி மக்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்றார். முதலில் நாமே தயாரித்தும், நடிக்கவும் வேண்டுமா? என யோசித்தேன், பிறகு நாமே தயாரித்து விடலாம் என முடிவு செய்து படத்தை ஆரம்பித்து விட்டோம்.

படத்தில் எல்லா பெரிய நடிகர்களையும் கமிட் செய்துவிட்டோம், ஆனால் எனக்கு ஹீரோயின் மட்டும் செட்டாகவில்லை. பலரை அணுகினோம் யாரும் ஒப்புக்கொள்ளவில்லை. இறுதியாக தான் திவிகா வந்தார். என்னுடன் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு நன்றி. முனீஷ்காந்த் என் நடிப்பைப் பாராட்டினார்” என்று தெரிவித்தார்.

அடுத்த தேர்தலில் ஆட்சி கவிழுமாம்: கூறுகிறார் சரத் வீரசேகர!

நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவுள்ள பேரணியானது ஆட்சி கவிழ்ப்புக்குரிய போராட்டம் அல்ல என்று முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது 21 ஆம் திகதி நடைபெறவுள்ள எதிரணியின் பேரணி தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ நவம்பர் 21 ஆம் திகதி பேரணி வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும்;. இது ஆட்சி கவிழ்ப்புக்குரிய போராட்டம் அல்ல என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றோம். ஏனெனில் அடுத்த தேர்தலின்போது நாட்டு மக்கள் நிச்சயம் இந்த ஆட்சியை கவிழ்ப்பார்கள்.

வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதே பேரணியின் பிரதான நோக்கம். போதை ஒழிப்பு நடவடிக்கை வரவேற்கத்தக்கது. எனினும், போதை ஒழிப்பு என்ற போர்வையில் மக்களுக்கு வழங்கும் வாக்குறுதியை மறந்து செயல்படுவது ஏற்புடையது அல்ல” எனவும் சரத்வீரசேகர குறிப்பிட்டார்.

ஐயப்ப யாத்திரை புனித யாத்திரையாக பிரகடனம்; வெளியானது வர்த்தமானி

ஐயப்ப யாத்திரை புனித யாத்திரையாக பிரகடனம்; வெளியானது வர்த்தமானி
ஐயப்ப பக்தர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக இருந்த ஐயப்ப யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தும் கோரிக்கை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பின் வேண்டுகோளுக்கிணங்க, புத்தசாசன, சமயம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி ஆலோசனை பிரகாரம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பரிந்துரைக்கமைய அமைச்சரவை அனுமதி பெறப்பட்டதுடன் அதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று (13) அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒன்றிணைப்பதற்குரிய ஏற்பாடு தீவிரம்!

தமிழ்த் தேசியக் கட்சிகளின் இணைந்த செயற்பாட்டைக் கருத்தில்கொண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் கலந்துரையாடலை நடத்த அழைப்பு விடுத்துள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவின் தீர்மானத்துக்கமைய அந்தக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் செயலாளர் நா.இரட்ணலிங்கத்துக்குக் கடிதம் மூலம் கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

தமிழினம் சார்ந்த பல பொது விடயங்களில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒற்றுமையின்மை தொடர்பாக முன்வைக்கப்படுகின்ற பாரிய விமர்சனங்கள் தொடர்பாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் ஆராய்ந்தது.

அதன் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் முக்கியமான சகல பொது விடயங்களில் இணைக்கப்பாட்டுடன் இணைந்து செயற்படுவது காலத்தின் தேவை எனக் கருதி ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் ஒரு  பூர்வாங்கக் கலந்துரையாடலை நடத்துவற்கு உத்தேசித்து இலங்கைத் தமிழரசுக் கட்சி கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளது.

இந்நிலையில், அந்தக் கடிதத்துக்குப் பதிலளித்துள்ள ஜனநாயகத் தமிழ்த்  தேசியக் கூட்டணியின் செயலாளர், “உங்கள் கடிதம் குறித்து கூட்டணிக்குள் ஆராய்ந்து இயன்றளவு விரைவாகப் பதிலளிக்க நடவடிக்கை எடுப்பேன்.” –  தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் முடிவுக்கு வந்தது நிதி முடக்கம்!

 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று புதன்கிழமை (12) இரவு அரசாங்க நிதி சட்டமூலத்தில் கையெழுத்திட்டார். இது 43 நாட்களாக நீடித்த அரசின் நிதி முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.

அமெரிக்க நிதியாண்டு செப்டம்பர் 30 ஆம் திகதி முடிவடையும். ஓக்டோபர் முதலாம் திகதி புதிய நிதியாண்டு தொடங்கும்.

இதனையடுத்து ஆண்டுதோறும் புதிய நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்ட சட்டமூலம் செப்டம்பர் 30 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

அமெரிக்க அரசு இயங்கத் தேவையான ஆண்டு செலவின சட்டமூலத்துக்கு இரு அவைகளின் உறுப்பினர்களும் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

ஒட்டுமொத்தமாக, 60 சதவீத செனட் உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே, அரசின் செலவினங்களுக்கான நிதி விடுவிக்கப்படும். இந்நிலையில், ஒக்டோபர் முதலாம் திகதி அமெரிக்க நாடாளுமன்றத்தில் 60 சதவீத உறுப்பினர்களின் ஒப்புதல் கிடைக்காததால் நிதி மசோதா தோல்வியடைந்தது. இதனால் அமெரிக்க அரசு எதிர்கொண்ட நிதி முடக்கம் 43 நாட்களாக நீடித்தது.

இந்த நிதி முடக்கத்தால் அமெரிக்காவில் ராணுவம், எல்லை பாதுகாப்புப் படை, விமானக் கட்டுப்பாட்டுத் துறை உள்ளிட்ட சில அத்தியாவசிய துறைகள் மட்டுமே இயங்கியது. மற்ற துறைகளின் அரசு ஊழியர்கள் பணிபுரியவில்லை, அதுபோல அரசு ஊழியர்களுக்கு ஊதியமும் வழங்கப்படவில்லை.

இந்தச் சூழலில் சில ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களின் ஆதரவுடன், செனட் சபையில் நிதி சட்டமூலம் நேற்று நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 222 வாக்குகளும், எதிராக 209 வாக்குகளும் பதிவானது. மசோதா நிறைவேறிய இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு கையெழுத்திடும் விழா நடந்தது.

இந்த சட்டமூலம் ஜனவரி 30-ம் திகதி வரை அரசுக்கான நிதியுதவியை நீட்டிக்கும். இதனால் அரசின் அத்தனை துறைகளும் இனி செயல்பட ஆரம்பிக்கும். அனைத்து அரசு ஊழியர்களும் பணிக்கு திரும்புவார்கள், அவர்களுக்கு ஊதியமும் வழங்கப்படும்.

சினிமா

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

செய்தி

நிர்வாகச் சீர்கேடு: ஹட்டன் – டிக்கோயா நகரசபையில் கடும் அமளி! சபை அமர்வு ஒத்திவைப்பு!

0
மலைவாஞ்சான் ஹட்டன்: ஹட்டன் – டிக்கோயா நகரசபையின் மாதாந்த அமர்வு இன்று (24) காலை 10.45 மணியளவில் நகரசபைத் தலைவர் அசோக்க கருணாரத்ன தலைமையில் கூடியது. எனினும், கடந்த 10 மாதங்களாக நகரசபை நிர்வாகத்தில்...

மலையகத்துக்கு மாடி வீட்டு திட்டம் வேண்டாம்: காணி உரிமையை உடன் வழங்குக!

0
" மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி, வீட்டு உரிமை வழங்கப்பட வேண்டும். எமது மக்களுக்கு மாடி வீட்டும் திட்டம் பொறுத்தமற்றது." என்று திட்டவட்டமாக வலியுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் மற்றும் ஜனநாயகத்துக்கான செயலூக்கப்படுத்தப்பட்ட பிரஜைகள் என்ற செயல்திட்டத்தின்...

காணி பிரச்சினைக்கு உரிய தீர்வு: இளங்குமரன் எம்.பி. உறுதி!

0
“வடக்கு,கிழக்கில் நிலவும் காணிப்பிரச்சினைக்கு சுமுக தீர்வை காண வேண்டும் என்பதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உறுதியாக உள்ளது. எனவே, மயிலிட்டி பிரச்சினையும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட வகையில் தீர்க்கப்படும்.” என்று தேசிய மக்கள்...