Home Blog Page 208

புப்புரஸ்ஸையில் ஆடுகள் கொள்ளை!

கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புப்புரஸ்ஸ லெவலன் தோட்டம், ஜனஉதான பகுதியில் நேற்றிரவு இரு ஆடுகள் களவாடப்பட்டுள்ளன.

பட்டிக்குள் புகுந்துள்ள கொள்ளையர்கள், அங்கிருந்த இரு ஆடுகளை களவாடிச்சென்றுள்ளனர்.

அருகில் உள்ள காட்டில் வைத்து ஆடுகளை வெட்டி, இறைச்சியை எடுத்துவிட்டு தோல்களை வீசிவிட்டு சென்றுள்ளனர்.

இது தொடர்பில் கலஹா பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணை வேட்டையை ஆரம்பித்துள்ளனர்.களவாடப்பட்டுள்ள ஆடொன்றின் பெறுமதி 90 ஆயிரம் ரூபாவென அதன் உரிமையாளர் தெரிவித்தார்.

க.யோகா

கொத்மலை பிரதேச சபையின் பட்ஜட் நிறைவேற்றம்!

கொத்மலை பிரதேச சபையின் 2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாதீடு தொடர்பான கொத்மலை பிரதேச சபைக் கூட்டம் அதன் தவிசாளர் தலைமையில் இன்று முற்பகல் நடைபெற்றது.

இதன்போது தேசிய மக்கள் சக்தி மற்றும் இதொகா உறுப்பினர்கள் பாதீட்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஐக்கிய மக்கள் சக்தி உட்பட சில எதிரணி உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர்.

கொத்மலை பிரதேச சபையில் 55 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 30 பேர் ஆதரவாக வாக்களித்தனர்.

 

பலாலியில் காணி விடுவிப்பு குறித்து ஆராய்வு!

யாழ்ப்பாணம்-பலாலி பகுதியில் தற்போது இராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியாருக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பது தொடர்பில் காணப்படும் முன்னேற்றங்களை மதிப்பிடுவதற்கான உயர்மட்டக் கூட்டம் (நவம்பர் 11) பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித்த ருவன் கொடித்துவக்கு ஆகியோர் இந்தக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினர்.

தேசிய நல்லிணக்கச் செயல்முறையின் ஒரு பிரதான அங்கமாக காணப்படும் நிலம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசாங்கத்தின் முயற்சிகளை விரைவுபடுத்துவதது தொடர்பில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.

எல்லை மீள் நிர்ணயத்தை இறுதி செய்தல், இழப்பீட்டுச் செயல்முறையை விரைவுபடுத்துதல், விடுவிப்பதற்கான நிலத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்தல் மற்றும் நிர்வாகத் தடைகளைத் தீர்த்தல் போன்ற முக்கிய விடயங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது.

முக்கியமான பாதுகாப்பு உட்கட்டமைப்பு விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டு காணி உரிமையாளர்களுக்கு தங்கள் சொத்துக்களை மீண்டும் பயன்படுத்தவதை உறுதி செய்யும் வெளிப்படையான மற்றும் சமமான செயல்முறையின் முக்கியத்துவத்தை அமைச்சர்கள் வலியுறுத்தினர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு செயலாளர், முப்படைத் தளபதிகள், பொலிஸ்மா அதிபர், பாதுகாப்பு மற்றும் நிர்வாகத் துறைகளைச் சேர்ந்த பல சிரேஷ்ட உயர் அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

புதிய அரசமைப்பு குறித்து ஜனாதிபதி அநுர மௌனம் காப்பது ஏன்?

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் ருசிக்க ஆரம்பித்துவிட்டார். இதன்காரணமாகவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம் உள்ளடங்கலாக புதிய அரசமைப்பு பற்றி அவர் மௌனம் காத்துவருகின்றார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நிறைவேற்று பணிப்பாளரான சட்டத்தரணி அஜித் பி பெரேரா எம்.பி. தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆவது வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ புதிய அரசமைப்பு இயற்றப்படும் என தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதியளிக்கப்பட்டிருந்தது. எனினும், இதற்குரிய நடவடிக்கை இன்னும் ஆரம்பமாகவில்லை. நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களை தற்போதைய ஜனாதிபதியும் ருசிக்க ஆரம்பித்துவிட்டார் போலும்.

மாகாணசபைத் தேர்தல் சம்பந்தமாகவும் வாக்குறுதி வழங்கப்பட்டது. அதுவும் நடக்கவில்லை. சட்டம் இயற்றி தருமாறு ஜனாதிபதி தற்போது கூறுகின்றார். பழைய முறைமையின்கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்தலாம். இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் தனி நபர் பிரேரணையொன்றுகூட முன்வைக்கப்பட்டுள்ளது. எனவே, மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்குரிய ஏற்பாடுகளுக்கு நாம் முழு ஆதரவை வழங்குவோம். குறிப்பிட்டார்.

மாகாணசபைகளில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத ஜனநாயக விரோதமாகும்;. எனவே, தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும். எல்லா விடயங்களை பற்றியும் பேசும் ஜனாதிபதி, புதிய அரசமைப்பு பற்றி ஏன் மௌனம் காக்கின்றார்? புதிய அரசமைப்பை இயற்றுவதற்காக இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் எவை? அதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா? எனவும் அவர் கேள்விகளை எழுப்பினார்.

காஷ்மீரின் குல்காம் பகுதியில் 200 இடங்களில் சோதனை

டெல்​லி​யில் நிகழ்ந்த தாக்​குதலில் தடை செய்​யப்​பட்ட ஜமாத்​-இ-இஸ்​லாமி (ஜெஇஐ) தீவிர​வாத அமைப்​புக்கு தொடர்பு இருப்​பது முதற்​கட்ட விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது.

இதையடுத்​து, காஷ்மீரின் குல்​காம் மாவட்​டத்​தில் உள்ள ஜமாத்​-இ-இஸ்​லாமி அமைப்​புடன் தொடர்​புடைய 200-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் பொலிஸாரும் பாது​காப்​புப் படை​யினரும் நேற்று சோதனை நடத்​தினர்

இது​போல சோபூர் மாவட்​டத்​தில் உள்ள 25-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் அம்​மாவட்ட காவல் துறை​யினரும் பாது​காப்​புப் படை​யினரும் இணைந்து ஒரே நேரத்​தில் சோதனை நடத்​தினர். சோதனை நடை​பெற்ற இரு மாவட்​டங்​களி​லும் முக்​கிய ஆவணங்​கள், டிஜிட்​டல் சாதனங்​கள் உள்​ளிட்​டவை பறி​முதல் செய்​யப்​பட்​டன. மேலும் இது​வரை சுமார் 500 பேரிடம் விசா​ரணை நடத்தி உள்​ள​தாக பொலி ஸார் தெரி​வித்​துள்​ளனர்.

ஊவா மாகாண முதல்வர் வேட்பாளராக களமிறங்குவாரா சாமர?

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு, மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு நான் தயாரில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினரும், ஊவா மாகாண சபையின் முன்னாள் முதல்வருமான சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். எனினும், சவாலை ஏற்குமாறு கட்சி கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் அது பற்றி பரிசீலிக்கலாம். ஆனால் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

“ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் வழங்குமாறு நான் கோரவில்லை. மாறாக பாதுகாப்பு வழங்குமாறே வேண்டுகோள் விடுத்துள்ளேன். அந்த கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
எனினும், வாகனம் வழங்கப்பட்டால் அதனை நிராகரிக்கமாட்டேன். ஏனெனில் பதுளையில் இருந்து கொழும்பு வருவதற்கு வாகனம் அவசியம்.

அதேவேளை, எதிரணி உறுப்பினருக்குரிய கடமையை நான் சரிவர நிறைவேற்றி வருகின்றேன். அரசாங்கம் தவறிழைக்கும்பட்சத்தில் அதனை சுட்டிக்காட்டும் உரிமை எனக்கு உள்ளது.

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள பேரணியில் நான் கலந்துகொள்வோம். சுதந்திரக்கட்சியாக நாம் களமிறங்குவோம்.” எனவும் சாமர சம்பத் தஸநாயக்க எம்.பி. குறிப்பிட்டார்.

இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை!

புதுடெல்லியில் குண்டு வெடித்துள்ள சம்பவம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அச்சம்பவத்தால் இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

இந்தியாவில் குண்டு வெடித்துள்ளது. எமது நாட்டு தேசிய பாதுகாப்புக்கும் ஏதேனும் அச்சுறுத்தல் உள்ளதா என அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர்,

“தற்போது அவ்வாறு எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. அச்சுறுத்தல் தொடர்பில் தகவல் கிடைக்கப்பெறவில்லை. இலங்கையில் புலனாய்வு அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டுவருகின்றன. முப்படைகள் மற்றும் பொலிஸார் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளனர். எனவே, பாதுகாப்பு தொடர்பில் அச்சுறுத்தல் இல்லை.” என்று குறிப்பிட்டார்.

பாதீட்டுக்கு எதிராக வாக்களிக்க சஜித் அணி முடிவு!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க ஐக்கிய மக்கள் சக்தி ஒருமனதாக தீர்மானித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, வரவுசெலவுத் திட்டம் தொடர்பாக எடுக்க வேண்டிய இறுதி நிலைப்பாடு குறித்து, கலந்துரையாடுவதற்காக ஐக்கிய மக்கள் சக்தி, இன்று அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் ஒரு சந்திப்பை நடத்த திட்டமிட்டுள்ளது.

மரக்கறி விலைப்பட்டியல் (13.11.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (13) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

செங்கோட்டை கார் வெடிப்பு: பயங்கரவாத சம்பவம் என மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி – செங்கோட்டை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள், அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள், அவர்களுக்கு உதவியவர்கள் என அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்த விசாரணை விரைந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என விசாரணை அமைப்புகளுக்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை கூட்டத்தில் டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்த அப்பாவி மக்களின் ஆன்மா சாந்தியடைய இந்த கூட்டத்தில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தேசவிரோத சக்திகளால் நடத்தப்பட்ட இந்த பயங்கரவாத சம்பவத்தை நாடு எதிர்கொண்டுள்ளது. பயங்கரவாதத்தின் அனைத்து வடிவத்தின் மீதும் துளியளவும் சகிப்புத்தன்மை காட்ட முடியாது என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. கொடூரமான மற்றும் கோழைத்தனமான இந்த செயலை மத்திய அமைச்சரவை சந்தேகத்துக்கு இடமின்றி கண்டிக்கிறது என கூட்டத்துக்கு பிறகு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

முன்னதாக, இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக பூடானுக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, டெல்லியில் தரையிறங்கிய உடன் நேராக எல்என்ஜேபி மருத்துவமனைக்குச் புதன்கிழமை சென்றார்.

காயமடைந்தவர்களை பிரதமர் மோடி தனித்தனியாகச் சந்தித்து உரையாடியதாகவும், அவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்தியதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், மருத்துவமனையில் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வருவோரின் உடல்நிலை, அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.

டெல்லி – செங்​கோட்டை அருகே திங்கட்கிழமை மாலை சுமார் 7 மணி அளவில் நடந்த கார் வெடிப்பு சம்​பவம் நாடு முழு​வதும் பெரும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யது. இந்த குண்டுவெடிப்பில் உயி​ரிழந்​தோரின் எண்​ணிக்கை 13-ஆக உயர்ந்துள்ளது. மேலும் படு​காயமடைந்த 20-க்​கும் மேற்​பட்​டோர் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வருகின்​றனர்.

சாலையில் வெடித்துச் சிதறிய காரை, காஷ்மீரின் புல்வாமா பகுதியை சேர்ந்த மருத்துவர் உமர் முகமது நபி ஓட்டி வந்துள்ளார். குண்டுவெடிப்பில் அவர் உடல் சிதறி உயிரிழந்தார். அவரும் ஹரியானாவின் அல் ஃபலா மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக பணியாற்றி வந்தார்.

அந்த மருத்துவக் கல்லூரியில் சக மருத்துவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் உமர் முகமது நபி, வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட தனது காரில் டெல்லிக்குள் நுழைந்துள்ளார். போலீஸ் சோதனையில் இருந்து தப்பிக்க கார் இன்ஜின் பகுதியில் அவர் வெடிபொருட்களை மறைத்து வைத்திருந்தார். இனிமேல் போலீஸ் பிடியில் இருந்து தப்ப முடியாது என்பதை உணர்ந்த மருத்துவர் உமர் முகமது நபி பதற்றத்தில் டெல்லி செங்கோட்டை அருகே தற்கொலை தாக்குதல் நடத்தி உள்ளார். இதைத் தொடர்ந்து டெல்லி செங்கோட்டை அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று 42 முக்கிய தடயங்களை சேகரித்தனர்.

சினிமா

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

செய்தி

நிர்வாகச் சீர்கேடு: ஹட்டன் – டிக்கோயா நகரசபையில் கடும் அமளி! சபை அமர்வு ஒத்திவைப்பு!

0
மலைவாஞ்சான் ஹட்டன்: ஹட்டன் – டிக்கோயா நகரசபையின் மாதாந்த அமர்வு இன்று (24) காலை 10.45 மணியளவில் நகரசபைத் தலைவர் அசோக்க கருணாரத்ன தலைமையில் கூடியது. எனினும், கடந்த 10 மாதங்களாக நகரசபை நிர்வாகத்தில்...

மலையகத்துக்கு மாடி வீட்டு திட்டம் வேண்டாம்: காணி உரிமையை உடன் வழங்குக!

0
" மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி, வீட்டு உரிமை வழங்கப்பட வேண்டும். எமது மக்களுக்கு மாடி வீட்டும் திட்டம் பொறுத்தமற்றது." என்று திட்டவட்டமாக வலியுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் மற்றும் ஜனநாயகத்துக்கான செயலூக்கப்படுத்தப்பட்ட பிரஜைகள் என்ற செயல்திட்டத்தின்...

காணி பிரச்சினைக்கு உரிய தீர்வு: இளங்குமரன் எம்.பி. உறுதி!

0
“வடக்கு,கிழக்கில் நிலவும் காணிப்பிரச்சினைக்கு சுமுக தீர்வை காண வேண்டும் என்பதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உறுதியாக உள்ளது. எனவே, மயிலிட்டி பிரச்சினையும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட வகையில் தீர்க்கப்படும்.” என்று தேசிய மக்கள்...