Home Blog Page 209

பாதீட்டுக்கு ஆதரவா? தமிழரசுக் கட்சியின் முடிவு இன்று!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவும் நாடாளுமன்றக் குழுவும் இன்று வியாழக்கிழமை மாலை இணைய வழியில் ஒன்றுகூடி கலந்துரையாட இருக்கின்றன.

நாடாளுமன்றத்தில் அநுர அரசு சமர்ப்பித்துள்ள வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

வரவு – செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிப்பதா அல்லது நடுநிலை வகிப்பதா என்பது குறித்து இன்றைய கலந்துரையாடலில் தீர்மானிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கட்சி இன்று எடுக்கும் முடிவை நாளை நாடாளுமன்றத்தில் தமிழரசுக் கட்சியின் எம்.பிக்கள் வெளியிடுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அரசு சமர்ப்பிக்கும் வரவு – செலவுத் திட்டத்தை ஆராய்ந்து அது தொடர்பில் முடிவெடுக்கும் தீர்மானத்தைக் கட்சியின் அரசியல் குழுவும் நாடாளுமன்றக் குழுவும் இணைய வழியில் கூடி இறுதி செய்ய வேண்டும் என அண்மையில் வவுனியாவில் கூடிய கட்சியின் மத்திய குழு தீர்மானித்திருந்தமை தெரிந்ததே.

பாதீடு: 2ஆம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு நாளை!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றுவரும் நிலையில், பாதீடு தொடர்பான முதலாவது பலப்பரீட்சையை தேசிய மக்கள் சக்தி நாளை 14 ஆம் திகதி எதிர்கொள்கின்றது.

2 ஆம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு 14 ஆம் திகதி மாலை இடம்பெறவுள்ளது.

நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த 7 ஆம் திகதி வரவு- செலவுத் திட்டத்தை முன்வைத்தார்.

2 ஆம் வாசிப்புமீதான விவாதம் 8 ஆம் திகதி ஆரம்பமானது. 14 ஆம் திகதிவரை விவாதம் நடைபெறும். 14 ஆம் திகதி மாலை 2 ஆம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு நடத்தப்படும்.

இதன்போது எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பில் ஆராய்வதற்காக அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் இன்றும், நாளையும் இடம்பெறவுள்ளன.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்பன எதிராக வாக்களிக்கும் என தெரியவருகின்றது.

பாதீட்டை நிறைவேற்றிக்கொள்வதற்குரிய பெரும்பான்மைபலம் தன்வசம் உள்ளபோதிலும், எதிரணிகளும் வரவு- செலவுத் திட்டத்தை ஆதரிக்க வேண்டும் என அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.
அதேவேளை, அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம் நவம்பர் 15 ஆம் திகதி ஆரம்பமாகும். பாதீடு மீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 5 ஆம் திகதி நடைபெறும்.

யாழ். கிட்டு பூங்காவில் வெள்ளி ஆரம்பமாகும் ‘கார்த்திகை வாசம்’ நிகழ்வில் திருமாவளவன்

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் வடக்கு மாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு நடத்துகின்ற ‘கார்த்திகை வாசம்’ மலர்க்கண்காட்சி யாழ்ப்பாணம் – நல்லூர் கிட்டு பூங்காவில் (சங்கிலியன் பூங்கா) நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்குஆரம்பமாகவுள்ளது.

இந்தத் தொடக்க விழாவில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான முனைவர் தொல். திருமாவளவன் கௌரவ விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளார்.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணியின் துணைச் செயலாளர் தம்பிராசா யுகேஸ் தலைமையில் நடைபெறவுள்ள இந்தத் தொடக்க நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையின் மேனாள் தலைவர் பேராசிரியர் சி.சிவலிங்கராஜா கலந்துகொள்கின்றார்.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தொடக்க உரையாற்ற, அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் சிறப்புரை ஆற்றவுள்ளார்.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் தாவர உற்பத்தியாளர்களுடன் இணைந்து நடத்தும் இந்தக் கண்காட்சி இந்த மாதம் 23ஆம் திகதி வரை தினமும் காலை 8.30 மணி தொடக்கம் முன்னிரவு 7.00 மணி வரை நடைபெறவுள்ளது.

கண்காட்சியைப் பார்வையிட வரும் மாணவர்களுக்கு வழமை போன்று இம்முறையும் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் இலவசமாக மரக்கன்றுகளை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசியல் மாபியாக்களிடமிருந்து யாழ்.மாவட்டத்தை மீட்போம்!

“நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில் எதிர்வரும் டிசம்பர் மாதம் இலங்கையர் தினம் நிகழ்வு நடைபெறுகின்றது. இதன்மூலம் இன ஒற்றுமை, மத ஒற்றுமை மேம்படுத்தப்பட்டு சமத்துவம் கட்டியெழுப்படும்.” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

அத்துடன், அரசியல் மாபியாக்களிடமிருந்து விடுபட்ட யாழ்ப்பாணத்தை உருவாக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரினார்.

நாடாளுமன்றத்தில் இன்று (12.11.2025) நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டமானது மக்களுக்கான வரவு- செலவுத் திட்டமாகும். நாட்டிலுள்ள அனைத்து பகுதிகளும் உள்வாங்கப்பட்டுள்ளன. அனைத்து துறைகள் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எந்தவொரு பகுதிக்கும் பாகுபாடு காட்டப்படவில்லை. வடக்கு,கிழக்கு மக்களும் வரவேற்றுள்ளனர். இது மகிழ்ச்சியளிக்கின்றது.

கார்த்திகை மாதமென்பது முக்கியமான மாதம். மாவீரர்களை நினைவு கூருகின்ற மாதம். அதுமட்டுமல்ல வடக்கு, கிழக்கில் உள்ளவர்கள் தமது பிள்ளைகளை நினைவு கூருகின்ற மாதமாகும். அந்த மாதத்தில் இருந்து கொண்டு நாம் கடந்த காலத்தை திரும்பி பார்க்க வேண்டிய தேவை உள்ளது.

தமிழ் மக்களுக்கு எதையாவது செய்ய வேண்டும் என்ற நோக்கில் போராடிய இளைஞர்கள் எதிர்பார்த்தது என்ன? அவர்களின் அபிலாசைகள் என்ன என்பதை புரிந்துகொள்ள வேண்டும். தமது மக்கள் நிம்மதியாக வாழும் சூழ்நிலை ஏற்பட அவர்கள் போராடி இருந்தால், அந்த கனவை நிறைவேற்றுவதற்குரிய செயற்பாட்டை எந்தவொரு தமிழ்க் கட்சியாவது, அரசியல்வாதியானது முன்னெடுக்கின்றனரா? இல்லை. அது கேள்விக்குறியாகவே உள்ளது.

வடக்கு மாகாணத்தில் மக்கள் தொகை குறைவடைந்து வருகின்றது. வறுமையும் இங்குதான் அதிகரித்துவருகின்றது. கடந்தகால ஆட்சியாளர்கள் இப்பகுதி பற்றி அவதானம் செலுத்தவில்லை. தமது மடியை நிறைத்துக் கொள்ளும் வகையிலான அரசியலே இப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கல்வியில் யாழ்ப்பாணம் சிறந்து விளங்கியது. எனினும், கடந்த காலங்களில் அது வீழ்ச்சியடைந்து வருகின்றது. கடந்த 7 மாதங்களாக புது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. போதைப்பொருள் மாபியாக்கள் வடக்கை அச்சம் கொள்ள வைத்துள்ளன.

போதைப்பொருளுக்கு பின்னால் இராணுவம் உள்ளது என குற்றஞ்சாட்டினீர்கள். அதில் உண்மை உள்ளது. ஆனால் இராணுவமும், பொலிசும் வேறாக இல்லை. அங்குள்ள மாபியாக்களுடன் இணைந்துள்ளன. அந்த மாபியாக்களுடன் தமிழ் அரசியல் வாதிகளும் பிணைந்துள்ளனர். அவ்வாறானவர்கள் கைது செய்யப்பட்டும் உள்ளனர்.

ஒட்டுமொத்த இராணுவம், பொலிஸ்மீது குறைகூற முடியாது. ஒரு சிலரின் செயற்பாடு தொடர்பில் பிழை உள்ளது. மாபியாக்களின் பின்னால் அரசியல்வாதிகள் உள்ளனர் என்பதை மறந்துவிடக்கூடாது.” எனவும் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் குறிப்பிட்டார்.

குளவிக்கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி: புசல்லாவையில் சோகம்!

குளவிக்கொட்டுக்கு இலக்காகி வயோதிப பெண்ணொருவர் பலியாகியுள்ளார். புசல்லாவை, சோகம தோட்டம் நடுகணக்கு பகுதியிலேயே இன்று மாலை இத்துயர் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த பெண்ணின் சடலம் புசல்லாவை, வகுவப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் புசல்லாவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

” ஒரு குளவியே இவரை கொட்டியுள்ளது. எனவும், வலி தாங்காமல் ஓடிவரும்வேளையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்” என பிரதேச வாசியொருவர் தெரிவித்தார்.

உயிரிழந்த பெண்ணின் வயது 67 ஆகும் எனவும் அவர் குறிப்பிட்டார். பிரேத பரிசோதனை இன்னும் நடக்கவில்லை.

க.யோகா

 

 

நுவரெலியா- கொழும்பு பஸ் கெலிஓயாவில் விபத்து: ஒருவர் பலி!

கம்பளை– கண்டி பிரதான வீதியில் கெலிஓயா , கரமட விகாரைக்கு அருகில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

மேலும் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரியவருகின்றது.

நுவரெலியாவில் இருந்து கொழும்பை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த கடைமீது மோதியுள்ளது.
அத்துடன், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவொன்றையும் மோதி தள்ளி முன்சென்று, வீடொன்றின் மதில்மீது மோதி நின்றுள்ளது.

கடையில் இருந்த பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார். ஐந்து வயது சிறுமி மற்றும் ஆணொருவர் காயமடைந்த நிலையில் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் பேராதனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

க.யோகா

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை தடுக்க எதிரணி சதி: காலை வாரவும் முயற்சி!

“ மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்குரிய சம்பள உயர்வை தடுப்பதற்குரிய சுழ்ச்சியில் எதிரணி உறுப்பினர்கள் சிலர் ஈடுபட்டுள்ளனர். எது எப்படி இருந்தாலும் ஜனவரி முதல் நிச்சயம் சம்பள உயர்வு வழங்கப்படும். தோட்டத் தொழிலாளர்கள் வீண் அச்சம் கொள்ள வேண்டியதில்லை.” என்று பெருந்தோட்டத்துறை அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வீதிக்கு இறங்கி போராடாமலேயே இம்முறை சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 350 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படும் என்றே உறுதியளிக்கப்பட்டிருந்தது. எனினும், 400 ரூபா பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

கம்பனி தரப்பில் இருந்து 200 ரூபாவும், அரசாங்கத்தால் 200 ரூபாவும் வழங்கப்படும். இதற்கமைய நாளொன்றுக்கு தோட்டத் தொழிலாளர்கள் ஆயிரத்து 750 ரூபாவை பெறமுடியும்.

இந்நிலையில் எதிரணியிலுள்ள எம்.பிக்கள் சிலர் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். அரசாங்க பணத்தை எப்படி கம்பனிகளுக்கு வழங்க முடியும் என கேள்வி எழுப்புகின்றனர். இது தவறு. அவ்வாறு கொடுப்பனவு வழங்க முடியாது எனக் கூறிவருகின்றனர். இப்படியொரு கருத்தை உருவாக்கி, தமது சகாக்களை நீதிமன்றத்துக்கு அனுப்புவதற்கு முற்படக்கூடும்.

தோட்டத் தொழிலாளர்களுக்குரிய சம்பள உயர்வு விவகாரத்தில் காலை வாருவதற்குரிய முயற்சி இடம்பெறுகின்றது. சமூகத்தில் வதந்தியை பரப்புவதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றது.

எது எப்படி இருந்தாலும் தோட்டத் தொழிலாளர்கள் அச்சப்பட வேண்டியதில்லை. ஜனவரி மாதம் முதல் நிச்சயம் சம்பள அதிகரிப்பு கிடைக்கப்பெறும்.” என அமைச்சர் சமந்த வித்யாரத்ன குறிப்பிட்டார்.

பாப்பரசர் இலங்கை வரும் சாத்தியம்!

பாப்பரசர் லியோ இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதற்குரிய சாத்தியம் இருப்பதாக தெரியவருகின்றது. வத்திக்கான் உயர் தூதுவர் ஒருவரை மேற்கோள்காட்டி கத்தோலிக்க செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கும், வத்திக்கானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவு ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் 50 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளன. இதனையொட்டி வத்திக்கான வெளிவிவகார அமைச்சர் போல் ரிச்சர்ட் கல்லாகர், கடந்த 3ஆம் திகதி கொழும்புக்கு பயணம் மேற்கொண்டார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து பேச்சு நடத்தியபோது, அமைதி மற்றும் உறுதித்தன்மையை நோக்கிய, இலங்கையின் முன்னேற்றத்தை அங்கீகரிக்கும் வகையில், பாப்பரசர் லியோ இலங்கைக்கு வருகை தரக் கூடும் என குறிப்பிட்டிருந்தார்.

மத மற்றும் இனக்குழுக்களிடையே அமைதி மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துவதில் இலங்கையின் முன்னேற்றத்தை பாப்பரசர் வரவேற்றுள்ளார்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அவர் கொழும்பு வரக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்லாமாபாத் குண்டு வெடிப்புக்கு இந்தியாவே காரணம்: பாகிஸ்தான் பிரதமர் குற்றச்சாட்டு!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றத்துக்கு வெளியே நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர், 20 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு தெரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) தீவிரவாத படை பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில், இந்தத் தாக்குதலுக்கு இந்தியாதான் காரணம் என பாகிஸ்தான் பிரதமர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“பாகிஸ்தானை நிலைகுலைய செய்யும் வகையில் இந்திய அரசின் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்பு இஸ்லாமாபாத்தில் இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. இதே அமைப்புதான் வானா பகுதியிலும் தாக்குதல் நடத்தியது. அதில் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவின் ஆதரவுடன் திட்டமிடப்பட்ட இந்த தாக்குதலுக்கு வெறும் கண்டனங்கள் போதாது” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாமாபாத்தின் ஜி-11 பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகத்தின் நுழைவாயிலுக்கு அருகில் நேற்று தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்தது. இந்தத் தாக்குதலில் உயிரிழந்த 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அரசு நடத்தும் பாகிஸ்தான் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

சினிமா

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

செய்தி

நிர்வாகச் சீர்கேடு: ஹட்டன் – டிக்கோயா நகரசபையில் கடும் அமளி! சபை அமர்வு ஒத்திவைப்பு!

0
மலைவாஞ்சான் ஹட்டன்: ஹட்டன் – டிக்கோயா நகரசபையின் மாதாந்த அமர்வு இன்று (24) காலை 10.45 மணியளவில் நகரசபைத் தலைவர் அசோக்க கருணாரத்ன தலைமையில் கூடியது. எனினும், கடந்த 10 மாதங்களாக நகரசபை நிர்வாகத்தில்...

மலையகத்துக்கு மாடி வீட்டு திட்டம் வேண்டாம்: காணி உரிமையை உடன் வழங்குக!

0
" மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி, வீட்டு உரிமை வழங்கப்பட வேண்டும். எமது மக்களுக்கு மாடி வீட்டும் திட்டம் பொறுத்தமற்றது." என்று திட்டவட்டமாக வலியுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் மற்றும் ஜனநாயகத்துக்கான செயலூக்கப்படுத்தப்பட்ட பிரஜைகள் என்ற செயல்திட்டத்தின்...

காணி பிரச்சினைக்கு உரிய தீர்வு: இளங்குமரன் எம்.பி. உறுதி!

0
“வடக்கு,கிழக்கில் நிலவும் காணிப்பிரச்சினைக்கு சுமுக தீர்வை காண வேண்டும் என்பதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உறுதியாக உள்ளது. எனவே, மயிலிட்டி பிரச்சினையும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட வகையில் தீர்க்கப்படும்.” என்று தேசிய மக்கள்...