Home Blog Page 210

மாவீரர்நாள் நினைவேந்தலை நடத்துவதில் யாழ். மாநகரசபையில் இழுபறி

நல்லூரில் யாழ். மாநகர சபைக்குச் சொந்தமான காணியில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து மாவீரர் நாள் நினைவேந்தலை அனுஷ்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று யாழ். மாநகர மேயர் திருமதி. மதிவதனி விவேகானந்தராஜா தெரிவித்தார்.

நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக உள்ள யாழ். மாநகர சபைக்குச் சொந்தமான காணியில் கடந்த சில வருடங்களாக மாவீரர் நாள் நினைவேந்தல் நடைபெற்று வருகின்றது.

ஆனால், இந்த முறை அந்தப் பகுதியை இரண்டு தரப்புக்கள் கோருவதால் அதை யாருக்கு வழங்குவது என்பதில் முடிவு எட்டப்படாத நிலை காணப்பட்டது.

இதையடுத்து யாழ். மாநகர சபையின் கடந்த மாதாந்த அமர்வு நடைபெற்றபோது மேயரின் அறிவிப்பில், மாவீரர் நாள் நினைவேந்தலைச் செய்வதற்கு நல்லூரில் ஒரே இடத்தை இரண்டு தரப்புக்கள் கோரும் நிலையில் அந்த இடத்தை மாவீரர் வார காலத்தில் வாடகைக்கு விடுவதில்லை என்றும், எதிர்வரும் காலங்களில் நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் மற்றும் மாவீரர் நாள் நினைவேந்தலை யாழ். மாநகர சபை பொறுப்பெடுத்துச் செய்ய வேண்டும் என்றும் யோசனையை முன்வைத்தார்.

இந்த யோசனை தொடர்பில் உறுப்பினர்களிடையே வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டதையடுத்து அது தொடர்பில் முடிவுகள் எட்டப்படவில்லை. அதில் இணக்கத்தை ஏற்படுத்த கால அவகாசம் வழங்கப்பட்ட போதும் இணக்கமான நிலை ஏற்படவில்லை.

யாழ். மாநகர சபையில் அங்கம் வகிக்கும் பெரும்பாலான கட்சிகள் மேயரின் யோசனையை வரவேற்ற போதும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடுமையாக எதிர்த்தது.

இந்நிலையில், நேற்றுநடைபெற்ற யாழ் மாநகர சபை அமர்விலும் இந்த விடயம் தொடர்பில் கடும் வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டன.

இதன்போது கருத்துத் தெரிவித்த யாழ். மாநகர சபை மேயர், “சைக்கிளோ, மானோ தனியாக ஒரு கட்சி நினைவேந்தல் செய்ய இடமளிக்க முடியாது. தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து செய்ய வேண்டும்.” – என்றார்.

மேயரின் முடிவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகள் மேயரின் முடிவை வரவேற்றனர்.

அரசின் ஊழல் ஒழிப்பு சமர் சிறப்பு: பொன்சேகா பாராட்டு!

ஊழல் வலையமைப்புக்கு முழுமையாக முடிவு கட்டுவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுக்கும் முயற்சி பாராட்டத்தக்கது என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், ஊழல்வாதிகள் மற்றும் மோசடியாளர்களுக்கு இடமளிக்கப்படவில்லை என்பதை நாம் ஏற்றாக வேண்டும்.
அதேபோல ஊழல் வலையமைப்பை முற்றாக இல்லாதொழிப்பதற்கு இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். ஆனால் அதற்குரிய முயற்சி எடுக்கப்படுவதை மதிக்கின்றோம்: வரவேற்கின்றோம்.” எனவும் பொன்சேகா குறிப்பிட்டார்.

அதேவேளை கடந்தகால அரசாங்கங்கள் பயணித்ததைவிட தற்போதைய அரசாங்கத்தின் பயணம் சிறப்பாக உள்ளது.

ரணில் விக்கிரமசிங்கதான் என்னை அரசியலுக்கு கொண்டுவந்தார். அவரை சிறையில் அடைத்தபோது கவலை அடைந்தேன். எனினும், இதன்மூலம் அரசாங்கம் சிறந்த முன்னுதாரணத்தை வழங்கியது. நாட்டில் அனைவருக்கும் ஒரே கரண்டியில்தான் பகிரப்படுகின்றது என்பதே இதன்மூலம் வழங்கப்பட்ட செய்தியாகும். இதனை நாம் மதிக்க வேண்டும்.” எனவும் பொன்சேகா குறிப்பிட்டார்.

ஏழைகளிடம் வசூலிப்பு: செல்வந்தர்களுக்கு நிவாரணம்!

ஏழைகளிடமிருந்து வரி வசூலித்து, செல்வந்தர்களுக்கு நிவாரணம் வழங்கும் நடைமுறையை அரசாங்கம் கைவிட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு- செலவுத் திட்டத்திலுள்ள விடயங்களில் குறைந்தபட்சம் 50 சதவீதத்தையேனும் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

செல்வந்தர்களிடமிருந்து பெற்று ஏழைகளுக்கு வழங்கும் நிலையை மாற்றி, ஏழைகளின் வயிற்றில் அடித்து, செல்வந்தர்களுக்கு நிவாரணம் வழங்கும் நடைமுறையை அரசாங்கம் கைவிட வேண்டும்.

2026 ஆம் ஆண்டுக்குரிய வரவு- செலவுத் திட்டத்தை சர்வதேச நாணய நிதியம் தயாரித்ததா அல்லது ஜனாதிபதி தயாரித்தாரா என்பதை என்னால் உறுதியாகக் கூறமுடியாது. ஆனால் ஏழைகளுக்கு வரி விதித்து, செல்வந்தர்களுக்கு நிவாரணம் வழங்கும் நடைமுறை இடம்பெறுகின்றது என்பது தெரிகின்றது. இது நிறுத்தப்பட வேண்டும்.” எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.

“அவர் வலியை மறக்க குடிக்கவில்லை” – அபினய் குறித்து நடிகை விஜி உருக்கம்!

மறைந்த நடிகர் அபினய் குறித்து நடிகை விஜி உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: “சென்னை 28’ படத்துக்குப் பிறகு ஒரு பெரிய விளம்பரப் படத்தில் நடித்தேன். அதில் அபினய்யும் நடித்தார். அப்போது அபினய் விளம்பர உலகில் நம்பர் 1 ஆக இருந்தார். நான்கு நாட்கள் படப்பிடிப்புக்காக டெல்லி சென்றிருந்தோம். ஒரு சர்வீஸ் அபார்ட்மெண்டில் தங்கியிருந்தோம். ஒவ்வொரு நாள் மாலையும் ஒரு வட இந்திய குழு எங்களை அங்கே இறக்கிவிட்டு சென்று விடுவார்கள். அப்போது இந்த விஜியாக இருக்கவில்லை. நான் மிகவும் பயந்த சுபாவம் கொண்ட, புதியவர்களை கண்டு அஞ்சக்கூடிய, உலகில் என்னுடைய இடத்தை தேடக்கூடிய ஒரு பெண்ணாக இருந்தேன். அந்த சூழலில் அறிமுகம் இல்லாத ஒரு ஆணுடன் என்னை தனியா தங்க வைத்தது எனக்கு மிகுந்த கலாச்சார அதிர்ச்சியாக இருந்தது.

நான் ஏற்கெனவே ஃபெரோஸை (விஜியின் கணவர்) காதலித்துக் கொண்டிருந்தேன். ஒரு ஆணுடன் தனியாகத் தங்கி இருக்கிறேன் என்பதை அவனிடம் சொல்லவே நான் மிகவும் அஞ்சினேன். அதனால், நான் அதைச் சொல்லவில்லை. அந்த அழுத்தத்தை என்னால் தாங்க முடியவில்லை. ஆனால், அபினய்… ஒரு ஜென்டில்மேன். நல்ல பழக்கவழக்கம் கொண்டவர், கனிவானவர். அவருடைய திரைப் ஆளுமையை பற்றி குறிப்பிடவே தேவையில்லை. அவர் ஒவ்வொரு ஃப்ரேமையும் எளிதாகத் தனதாக்கிக் கொண்டார்.

ஒவ்வொரு இரவும் படப்பிடிப்பு முடிந்த பிறகு, அவர் ஹாலில் உட்கார்ந்து தனியாக குடிப்பார். அவர் இன்னும் அங்கேயேதான் இருக்கிறாரா என்று பார்க்க, சில சமயம் என் அறையில் இருந்து எட்டிப் பார்ப்பேன். அவர் எப்போதுமே அங்குதான் இருப்பார். ஒரு பாட்டிலை முடித்துவிட்டு, ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி இருப்பார். இவ்வளவு சிறிய வயதில் ஒருவர் அமைதியாகக் குடிப்பதைப் பார்ப்பது, மனதிற்கு மிகவும் பாரமாக இருந்தது.

கடைசி நாள் இரவில், நான் மீண்டும் ஒருமுறை எட்டிப் பார்க்க என் கதவைத் திறந்தேன். இந்த முறை அவர் என்னைக் கவனித்துவிட்டு, அருகில் வரச் சொன்னார். நான் அவர் முன்னால் சென்று அமர்ந்தேன். அவர் எனக்கு ஒரு மது கொடுத்தார். அப்போது நான் குடிப்பதில்லை என்பதால், நான் ‘வேண்டாம்’ என்று மறுத்தேன்.

மேஜை மீது, திறக்கப்பட்ட ஒரு ஃபான்டா பாட்டில் இருந்தது. அதை அவர் எனக்குக் கொடுத்தார். அப்போது, என் மனம், ‘வேண்டாம். உள்ளே என்ன இருக்கிறது என்று உனக்குத் தெரியாது’ என்று எச்சரித்தது. எனவே, மீண்டும் ஒருமுறை நான் மறுத்தேன்.

ஆனால், எனக்குள்ளே ஒரு கேள்வி எரிந்து கொண்டிருந்தது, அதை கேட்கக் கூடாது என நானே எனக்கு கடிவாளம் போட்டேன். இருந்தும், அது எளிதாக வெளியே வந்துவிட்டது. “நீங்கள் ஏன் இவ்வளவு அதிகமாகக் குடிக்கிறீர்கள்? நீங்கள் இளைஞராகவும், வெற்றிபெற்றவராகவும் வாழ்க்கையில் நன்றாகவும் இருக்கிறீர்கள்… ஏன் இந்த பழக்கம்?” என்று கேட்டேன்.

அப்போதுதான் அவர் மனம் திறந்து பேசினார். அவர் தனது வாழ்க்கை, தனது பொறுப்புகள், தனது தாய், மற்றும் குடும்பத்தில் உழைப்பவராக இருப்பதன் பாரம் ஆகியவற்றைப் பற்றிப் பேசினார். அவர் மன அழுத்தம், வலி, தனிமை ஆகியவற்றைப் பற்றிப் பேசினார். நான் ஒரு வார்த்தையும் பேசவில்லை. நான் கேட்டுக் கொண்டேயிருந்தேன். இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது. அவர் சோர்வடையும் வரை, ஏறக்குறைய அமைதி அடையும் வரை, அவருடைய மனதை அவர் கொட்டித் தீர்க்க நான் அனுமதித்தேன்.

அடுத்த நாள் விமான நிலையத்தில், விடைபெறும் நேரம் வந்தது. அவர் என்னைப் பார்த்துச் சொன்னார், “என் வலியை இப்படி யாரும் இதற்கு முன் கேட்டதில்லை. நன்றி, விஜி. உன்னைப் போலவும் கடவுள் பெண்களைப் படைப்பார் என்று எனக்குத் தெரியாது. ஒருவேளை உனக்கு இரட்டைச் சகோதரி யாராவது இருந்தால் எனக்குத் தெரியப்படுத்து”

நான் வாய்விட்டுச் சிரித்து, அவரைக் கட்டியணைத்து விடைபெற்றேன். அதுதான் நான் அவரை கடைசியாகப் பார்த்தது. இன்று அவர் காலமானார் என்று கேள்விப்பட்டபோது நான் அழுதேன். ஆனால் அது துக்கத்தின் கண்ணீர் அல்ல. அவருக்காக நான் விசித்திரமான முறையில் மகிழ்ச்சி அடைந்தேன். அவருடைய போராட்டம் முடிந்துவிட்டது. அவர் ஒருவழியாக அமைதியை அடைந்தார் என்பதில் மகிழ்ச்சி.

ஏனெனில் இந்த முறை நான் தெரிந்து கொண்டது என்னவென்றால்… அவர் வலியை மறக்க குடிக்கவில்லை. அவர் சுதந்திரத்தை கொண்டாடியிருக்கிறார்” இவ்வாறு விஜி தெரிவித்துள்ளார்.

சர்வதேச திரைப்பட விழாக்களில் வரவேற்பை பெறும் ‘மாண்புமிகு பறை’

பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடித்துள்ள படம் ‘மாண்புமிகு பறை’. இதனை சுபா & சுரேஷ் ராம் திரைக்கதை எழுத விஜய் சுகுமார் இயக்கியுள்ளார். தேவா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த மே மாதம் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்று கவனம் ஈர்த்தது.

இந்த நிலையில் தற்போது கேன்ஸ் நகரத்தில் நடைபெற்ற மற்றொரு சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று சிறந்த சமூக நீதிக்கான திரைப்படம் என்ற பிரிவில் தேர்வாகியுள்ளது. மேலும் இத்தாலியில் நடைபெற்ற ஓதிஸ்மோஸ் திரைப்பட விழாவில் இப்படத்துக்கு கலாச்சார பாரம்பரியம் மற்றும் உள்ளூர் அடையாளம் என்ற பிரிவில் விருது வழங்கப்பட்டுள்ளது.

மரக்கறி விலைப்பட்டியல் (12.11.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (12) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

15,500 கிலோ கஞ்சா போதைப்பொருள் மீட்பு!

இலங்கையில் கடந்த ஜனவரி முதல் இதுவரையில் 40 லட்சத்துக்கு மேற்பட்ட போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (11) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். அத்துடன், இக்காலப்பகுதியில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களின் அளவையும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வெளியிட்டார்.

இதற்கமைய 2025 ஜனவரி முதல் இதுவரையில் ஆயிரத்து 493 கிலோ ஹேரோயின் போதைப்பொருளும், 15 ஆயிரத்து 500 கிலோ கஞ்சா போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன், 32 கிலோ கொக்கைன் போதைப்பொருள், 604 ஹஸீஸ் போதைப்பொருள், 2 ஆயிரத்து 554 ஐஸ் போதைப்பொருள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதேவேளை, தேசிய போதை ஒழிப்பு நடவடிக்கை ஆரம்பமான பின்னர் கடந்த இரு வாரங்களில் 13 ஆயிரத்து 490 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

டெல்லி குண்டு வெடிப்பு எதிரொலி: சென்னை விமான நிலையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு!

டெல்லி செங்​கோட்டை அருகே நேற்று முன்​தினம் இரவு நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்​பவம் பெரும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யது. இதையடுத்து நாடு முழு​வதும், பொது​மக்​கள் அதி​கம் கூடும் இடங்​களில் பாது​காப்பு அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது. அதன்​படி, சென்னை விமான நிலை​யத்​தில் வழக்​க​மாக இருக்​கும் 3 அடுக்கு பாது​காப்பு முறை, 5 அடுக்கு பாது​காப்​பாக அதிகரிக்கப்பட்டுள்​ளது.

விமான நிலைய பாது​காப்பு அதி​காரிகள், வெடிகுண்டு நிபுணர்​கள், அதிரடிப்​படை வீரர்​கள், விமான நிலை​யத்​தின் அனைத்து பகு​தி​களி​லும் தீவிர ரோந்து வந்​து, பாது​காப்​புப் பணி​களில் ஈடு​படு​கின்​றனர். விமான நிலை​யத்​துக்கு வரும் கார்​கள் அனைத்​தும், வெடி குண்டு நிபுணர்​கள், மோப்ப நாய் உதவி​யுடன் சோதனை செய்​யப்​படு​கின்​றன.

விமானப் பயணி​களுக்கு வழக்​க​மான சோதனை​களு​டன், பயணி​கள் விமானங்​களில் ஏறும் இடத்​தில், மீண்​டும் ஒரு​முறை, அவர்​களு​டைய கைப்பை உட்பட அனைத்​தையும் தீவிர​மாக சோதிக்​கின்​றனர். பயணி​கள் கையில் எடுத்​துச் செல்​லும் லக்​கேஜில், கத்திரிக்​கோல், ரேசர் பிளேடு, ஊசிகள், கயிறு, இன்​சுலேசன் டேப், வாக்​கிங் ஸ்டிக், கோடாரி போன்ற கூர்​மை​யான ஆயுதங்​கள், ஊறு​காய் பாட்​டில் உள்​ளிட்​ட​வற்றை எடுத்​துச் செல்ல தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது.

மத்​திய தொழில் பாது​காப்​புப் படை​யினர், அனை​வருக்​கும் விடு​முறை​ ரத்து செய்​யப்​பட்​டு, உடனடி​யாக பணிக்கு திரும்​ப உத்​தர​விடப்​பட்​டுள்​ளதோடு, அவர்​களின் பணி நேர​மும் 12 மணிநேர​மாக அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது. சென்னை விமான நிலை​யத்​தில் பயணி​களுக்கு கூடு​தல் சோதனை​கள் நடத்​தப்​படு​வ​தால், உள்​நாட்டு பயணி​கள் ஒன்​றரை மணி நேரம், சர்​வ​தேச பயணி​கள் மூன்றரை மணி நேரத்​துக்கு முன்​ன​தாகவே வரு​மாறு விமான நிறு​வனங்​கள் அறி​வுறுத்​தி​யுள்​ளன. விமானங்​களில் பார்​சல்​ ஏற்​றும் இடங்கள், விமானங்​களுக்கு எரிபொருள் நிரப்​பும் இடங்​களில் கூடு​தல் கண்​காணிப்​பு​ மேற்​கொள்​ளப்​படு​கிறது.

இராணுவ ஆட்சியை ஏற்படுத்தும் மனோநிலை எனக்கு இருக்கவில்லை!

“நான் சர்வாதிகாரியெனில் இறுதிபோரின்போது ஆட்சியை பிடித்திருப்பேன். ஜனநாயகத்தின் பிரகாரம் செயற்படுவதால் அவ்வாறான தேர்வுகளை நாடவில்லை.” என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றுகையிலேயே பொன்சேகா இவ்வாறு குறிப்பிட்டார்.

“ பொன்சேகா தலைவரானால் சர்வாதிகார ஆட்சியே நடக்குமென விமர்சிப்பவர்கள் இருக்கவே செய்கின்றனர். நான் இராணுவத்தில் இருந்தபோது கூட சர்வாதிகாரிபோல செயற்பட்டது கிடையாது.

அவ்வாறான மனோநிலை இருந்திருக்குமானால், இறுதிப்போரின்போது இராணுவ தலைமையகத்தின் நுழைவாயில்களை இரு பக்கமும் மூடி இருந்தால் எனக்கு ஆட்சியை பிடித்திருக்க முடியும். நாம் அவ்வாறு செய்பவர்கள் அல்லர். ஏனெனில் ஜனநாயகத்தை மதிப்பவர்கள்.

போரை முடிவுக்கு கொண்டுவந்ததால்தான் என்னை சர்வாதிகாரியென விமர்சிக்கின்றனர். நாடு முன்னேற வேண்டுமெனில் நாட்டை நேசிக்கக்கூடிய சர்வாதிகாரியொருவர் அவசியம்தான்.@ எனவும் பொன்சேகா கூறினார்.

பாகிஸ்தான் அணி 6 ஓட்டங்களால் வெற்றி!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 6 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 299 ஓட்டங்களைப் பெற்றது.

300 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 293 ஓட்டங்களை மாத்திரமே பெற்று, தோல்வி அடைந்தது.

சினிமா

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

செய்தி

நிர்வாகச் சீர்கேடு: ஹட்டன் – டிக்கோயா நகரசபையில் கடும் அமளி! சபை அமர்வு ஒத்திவைப்பு!

0
மலைவாஞ்சான் ஹட்டன்: ஹட்டன் – டிக்கோயா நகரசபையின் மாதாந்த அமர்வு இன்று (24) காலை 10.45 மணியளவில் நகரசபைத் தலைவர் அசோக்க கருணாரத்ன தலைமையில் கூடியது. எனினும், கடந்த 10 மாதங்களாக நகரசபை நிர்வாகத்தில்...

மலையகத்துக்கு மாடி வீட்டு திட்டம் வேண்டாம்: காணி உரிமையை உடன் வழங்குக!

0
" மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி, வீட்டு உரிமை வழங்கப்பட வேண்டும். எமது மக்களுக்கு மாடி வீட்டும் திட்டம் பொறுத்தமற்றது." என்று திட்டவட்டமாக வலியுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் மற்றும் ஜனநாயகத்துக்கான செயலூக்கப்படுத்தப்பட்ட பிரஜைகள் என்ற செயல்திட்டத்தின்...

காணி பிரச்சினைக்கு உரிய தீர்வு: இளங்குமரன் எம்.பி. உறுதி!

0
“வடக்கு,கிழக்கில் நிலவும் காணிப்பிரச்சினைக்கு சுமுக தீர்வை காண வேண்டும் என்பதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உறுதியாக உள்ளது. எனவே, மயிலிட்டி பிரச்சினையும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட வகையில் தீர்க்கப்படும்.” என்று தேசிய மக்கள்...