Home Blog Page 211

தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு: நாமல் கூறுவது என்ன?

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படுவது நல்ல விடயம். அது கட்டாயம் செய்யப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ ஆனால் இது விடயத்தில் அரசாங்கத்திடம் புதுமையான நிகழ்ச்சி நிரல்தானே உள்ளது. அதாவது தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்குவதற்காக வியாபாரிகளுக்கு அரசாங்கம் கொடுப்பனவு வழங்குகின்றது. மக்களிடம் இருந்து வரிப்பணம் அறிவிடப்படுகின்றது.

அந்த பணத்தை எடுத்து முதலாளிகளுக்கு வழங்கி சம்பளம் வழங்குமாறு கூறப்படுகின்றது.

சிறு தோட்ட உரிமையாளர்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவதற்குரிய அரசாங்கத்தின் வேலைத்திட்டம் என்ன? தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்குவதற்கு வேறு வழியை கண்டுபிடியுங்கள். நிறுவனங்களுக்கு வரிச்சலுகையை வழங்குங்கள். மாறாக மக்களிடம் வரி பணத்தை எடுத்து நிறுவனங்களுக்கு வழங்குவதில் என்ன பயன்?” – எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.

செல்வந்தர்களிடமிருந்து பெற்று ஏழைகளுக்கு வழங்கும் நிலையை மாற்றி, ஏழைகளின் வயிற்றில் அடித்து, செல்வந்தர்களுக்கு நிவாரணம் வழங்கும் நடைமுறையை அரசாங்கம் கைவிட வேண்டும் எனவும் நாமல் வலியுறுத்தினார்.

சதிகாரர்கள் நீதியின்முன் நிறுத்தப்படுவர்: பிரதமர் மோடி உறுதி!

 

டெல்லியில் நடந்த கொடிய கார் குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார்.

இரண்டு நாள் அரசு பயணமாக பூட்டானுக்கு சென்றுள்ளார் பிரதமர் மோடி.

திம்புவில் நடந்த ஒரு நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு உறுதியளித்துள்ளார்.

“இன்று, நான் மிகவும் கனத்த இதயத்துடன் இங்கு வந்துள்ளேன். நேற்று மாலை டெல்லியில் நடந்த கொடூரமான சம்பவம் அனைவரையும் மிகவும் வருத்தப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயரத்தை நான் புரிந்துகொள்கிறேன். இன்று முழு தேசமும் அவர்களுடன் நிற்கிறது.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் அனைத்து நிறுவனங்களுடனும் நான் நேற்று இரவு முழுவதும் தொடர்பில் இருந்தேன். எங்கள் விசாரணை அமைப்புகள் இந்த சதித்திட்டத்தின் காரணத்தை கண்டுபிடிக்கும். இதற்குப் பின்னால் உள்ள சதிகாரர்கள் தப்பவிடப்பட மாட்டார்கள். இந்த கொடிய சம்பவத்துக்கு பின்னால் உள்ள அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்” எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

அதேவேளை, நாட்டின் முன்னணி புலனாய்வு அமைப்புகள் டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் விரைவான மற்றும் முழுமையான விசாரணையை நடத்தி வருவதாகவும், இச்சம்பவத்துக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சம்பள உயர்வு: வரலாற்று வெற்றி!

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1750 ரூபாயாக அதிகரித்துள்ளதன் மூலம் ஜனாதிபதி வரலாற்றில் பதியப்படுவதை எவராலும் தடுக்க முடியாது என ஆளுங்கட்சி உறுப்பினர் கிட்ணன் செல்வராஜா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (10) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்ட உரை மீதான இரண்டாம்நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1750 ரூபாவாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார். இது தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைத்த வரலாற்று வெற்றியாகும். அதற்காக ஜனாதிபதி வரலாற்றில் பதியப்படுவதை எவராலும் தடுக்க முடியாது.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை வரலாறு, பெரும் போராட்டத்துக்குரியது.1939 ஆம் ஆண்டு முல்லோயாத் தோட்டத்திலே தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்திற்கான பிள்ளையார் சுழி போடப்படுகின்றது.

அப்போது பதினாறு சதமாக இருந்த தோட்டத்த தொழிலாளர்களின் சம்பளத்தை மேலும் 10 வீதத்தால் உயர்த்தி தருமாறு கேட்டபோது அன்றைய ஆட்சியாளர்களினால் கோவிந்தன் என்ற தோட்டத் தொழிலாளி சுட்டுக் கொல்லப்பட்டார்.

அதனால் இந்த வரலாறு என்பது மிகவும் போராட்டமிக்க வரலாறாகும். தற்போது இந்த நாட்டில் உழைக்கும் வர்க்கத்தினரின் ஆட்சியே அமைக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கான உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1750 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது . இது ஒரு வரலாற்று வெற்றியாகும் என்றார்.

கொட்டகலை பிரதேச சபையின் பட்ஜட் ஏகமனதாக நிறைவேற்றம்!

 

2026 ஆம் ஆண்டுக்கான கொட்டகலை பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் சபையினால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

கொட்டகலை பிரதேச சபையின் நவம்பர் மாதத்திற்கான மாதாந்த சபைக்கூட்டமானது கொட்டகலை பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் தலைவர் இராஜமணி பிரசாந்த் தலைமையில் உப தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பங்கேற்புடன் இன்றைய தினம் இடம்பெற்றது.

இச்சபைக்கூட்டத்திலே கொட்டகலை பிரதேச சபையின் 09 ஆவது வரவு செலவுத் திட்டமான 2026 ஆம் வருடத்திற்கான வரவுசெலவுத்திட்டம் மற்றும் செயற்பாட்டுத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டு 2026 ஆம் ஆண்டுக்கான கொட்டகலை பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் கௌரவ சபையினால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

மேலும் பிரதேசத்தில் காணப்படும் பிரச்சனைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

10 வருடங்களுக்கு பிறகு தாய்வீடு திரும்பிய நாமல்!

 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரான நாமல் ராஜபக்ச, சுமார் 10 வருடங்களுக்கு பிறகு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்துக்கு நேற்று சென்றிருந்தார்.

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள போராட்டம் தொடர்பில் சுதந்திரக் கட்சியுடன் கலந்துரையாடுவதற்காகவே நாமல் உள்ளிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் இவ்வாறு சு.க. தலைமையகம் சென்றிருந்தனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவர்தான் மஹிந்த ராஜபக்சவின் தந்தையான டீ.ஏ. ராஜபக்ச. சுதந்திரக் கட்சி ஊடாகவே ராஜபக்சக்களின் அரசியல் பயணம் தென்னிலங்கையில் கோலோச்சியது.

மஹிந்த ராஜபக்ச, பஸில் ராஜபக்ச, சமல் ராஜபக்ச, நிருபமா ராஜபக்ச, நாமல் ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்தவர்கள் சுதந்திரக்கட்சி ஊடாகவே நாடாளுமன்றம் பிரவேசித்தனர்.

எனினும், 2015 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்ற பின்னர், சுதந்திரக்கட்சியின் தலைமைப் பதவி மைத்திரி வசம் ஆனது. அதன்பின்னர் ராஜபக்சக்கள் இணைந்து புதிய கட்சியை ஆரம்பித்தனர்.

சுமார் 10 வருடங்கள் அவர்கள் சுதந்திரக்கட்சி தலைமையகம் செல்லவில்லை. இந்நிலையிலேயே நேற்று நாமல் ராஜபக்ச சென்றிருந்தார்.

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை காணுமாறு வலியுறுத்து!

இலங்கையில் புரையோடிப்போயுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை காண்பதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்வரவேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

“ வரவு- செலவுத் திட்ட பற்றாக்குறையை குறைப்பதற்குரிய வழிவகைகள் பற்றி பேசப்பட்டது. இந்நாட்டில் புரையோடிப்போயுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை காண்பதன்மூலம் இந்நாடு நன்மையடையக்கூடிய சூழ்நிலை காணப்படுகின்றது.

புலம்பெயர்ந்துள்ள எமது மக்கள் முதலீடுகளை செய்வதற்கு முன்வரக்கூடும். இதன்மூலம் அவர்களிடமிருந்து பொருளாதாரத்துக்கு பங்களிப்பு பெற்றுக்கொள்ள முடியும்.

இறுதிப்போரில் நடந்த சம்பவங்கள் தொடர்பில் பொறுப்புகூறல் அவசியம் என ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கான பரிகாரம் மற்றும் மீள்நிகழாமை என்பன பற்றியும் வலியுறுத்தப்பட்டுள்ளன. இவற்றில் இந்த ஆட்சியிலும் முன்னேற்றம் தென்படவில்லை. இது பற்றியும் கவனம் செலுத்தப்படவேண்டும்.” எனவும் ஸ்ரீநேசன் எம்.பி. குறிப்பிட்டார்.

ஈக்வடார் சிறைச்சாலை கலவரத்தில் 31 பேர் பலி!

ஈக்வடார் நாட்டின் சிறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கலவரத்தில் 27 கைதிகள் மற்றும் நான்கு ஊழியர்கள் கொல்லப்பட்டனர். 33 கைதிகள் காயமடைந்தனர்.

எல் ஓரோ மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான மச்சாலாவில் ஏற்பட்ட சிறைக் கலவரத்தில் 27 கைதிகள் கொல்லப்பட்டனர். சிலர் மூச்சுத் திணறலால் இறந்தனர், மற்றவர்கள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மச்சாலா நகரில் உள்ள சிறைச்சாலையில் இருந்து சில கைதிகளை அருகிலுள்ள மாகாணத்தில் உள்ள ஒரு புதிய, உயர் பாதுகாப்பு சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கான திட்டத்தை எதிர்த்து கலவரம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சிறைச்சாலையின் உள்ளே இருந்து துப்பாக்கிச் சூடுகள், வெடிச்சத்தங்கள் மற்றும் உதவிக்கான கூக்குரல்கள் கேட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

உடனடியாக ஒரு சிறப்பு பொலிஸ் குழு சிறைக்குள் நுழைந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தது. சிறைச்சாலைக்குள் இரண்டு கும்பல்களுக்கு இடையேயான கலவரமாக இது இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக செப்டம்பர் மாத இறுதியில், அதே சிறையில் நடந்த மற்றொரு ஆயுதமேந்திய கிளர்ச்சியில் 13 கைதிகளும் ஒரு சிறைக் காவலரும் கொல்லப்பட்டனர்.

எதிரணிகளின் ஒன்றிணைவுதான் பல கட்சி முறைமைக்கு அச்சுறுத்தல்!

“எதிரணிகளின் ஒன்றிணைவுதான் பல கட்சி முறைமைக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது. மாறாக எதிரணியை ஆளுங்கட்சி குறிவைக்கவில்லை. அதற்கு எமக்கு நேரமும் கிடையாது.” – என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு- செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” பல கட்சி முறைமை மற்றும் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் என எதிரணி தரப்பில் இருந்து குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஜனநாயகத்துக்கு எங்கு, எவ்வாறு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்பதை எதிரணி விளக்கினால் நல்ல.
தராதரம் பராது சட்டத்தை உரிய வகையில் செயற்படுத்துவதற்கு பெயர்தான் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் என்பதா” எனவும் பிரதமர் கேள்வி எழுப்பினார்.

பல கட்சி ஆட்சி முறைமைக்கு அச்சுறுத்தலாம். எதிரணியில் உள்ள பல கட்சிகள் ஒன்றிணைவதுதான் பல கட்சி முறைமைக்கு அச்சுறுத்தலாகும். எனவே, பல கட்சி முறைமையை எதிரணிதான் நாசமாக்கியுள்ளது. தமது கட்சியை பாதுகாத்து அதனை வலுப்படுத்துவதற்கு எதிரணிகளால் முடியாமல்போயுள்ளது.
நிலைமை இவ்வாறு இருக்க ஆளுங்கட்சியை குறைகூறுவது ஏற்புடையது அல்ல. நாம் எதிரணியை குறிவைக்கவில்லை. அதற்கு நேரமும் கிடையாது. ஏனெனில் மக்களுக்கான சேவையே எமக்கு முக்கியம்.” என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேலும் குறிப்பிட்டார்.

கிணற்றில் தவறி விழுந்து 4 வயது சிறுவன் பலி: யாழில் சோகம்!

துன்னாலை வடக்கு, கரவெட்டி பகுதியில் வீட்டு கிணற்றில் தவறி விழுந்த நான்கு சிறுவன் உயிரிழந்துள்ளார்.

அதே இடத்தைச் சேர்ந்த அருண் நேரு அஸ்வந் என்ற நான்கு வயது சிறுவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று திங்கட்கிழமை காலை சிறுவன் வீட்டில் தந்தையுடன் இருந்த நிலையில் தந்தை உறக்கத்தால் கண் விழித்த போது சிறுவனை காணாது தேடினார்.

அப்போது கிணற்றுக்குள் சிறுவன் காணப்பட்ட நிலையில், சிறுவனை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது சிறுவன் ஏற்கனவே உயிரி ழந்துவிட்டார் என அங்கு தெரிவிக் கப்பட்டது. இம் மரணம் தொடர்பில் பருத் தித்துறை திடீர் மரண விசாரணை அதிகாரி திருமதி அன்ரலா வின்சன் தயான் விசாரணை மேற்கொண் டார்.

நெல்லியடி பொலிஸா புலன் விசாரணைகளை மேற்கொண்ட மையுடன் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக் கபட்டது.

சினிமா

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

செய்தி

நிர்வாகச் சீர்கேடு: ஹட்டன் – டிக்கோயா நகரசபையில் கடும் அமளி! சபை அமர்வு ஒத்திவைப்பு!

0
மலைவாஞ்சான் ஹட்டன்: ஹட்டன் – டிக்கோயா நகரசபையின் மாதாந்த அமர்வு இன்று (24) காலை 10.45 மணியளவில் நகரசபைத் தலைவர் அசோக்க கருணாரத்ன தலைமையில் கூடியது. எனினும், கடந்த 10 மாதங்களாக நகரசபை நிர்வாகத்தில்...

மலையகத்துக்கு மாடி வீட்டு திட்டம் வேண்டாம்: காணி உரிமையை உடன் வழங்குக!

0
" மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி, வீட்டு உரிமை வழங்கப்பட வேண்டும். எமது மக்களுக்கு மாடி வீட்டும் திட்டம் பொறுத்தமற்றது." என்று திட்டவட்டமாக வலியுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் மற்றும் ஜனநாயகத்துக்கான செயலூக்கப்படுத்தப்பட்ட பிரஜைகள் என்ற செயல்திட்டத்தின்...

காணி பிரச்சினைக்கு உரிய தீர்வு: இளங்குமரன் எம்.பி. உறுதி!

0
“வடக்கு,கிழக்கில் நிலவும் காணிப்பிரச்சினைக்கு சுமுக தீர்வை காண வேண்டும் என்பதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உறுதியாக உள்ளது. எனவே, மயிலிட்டி பிரச்சினையும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட வகையில் தீர்க்கப்படும்.” என்று தேசிய மக்கள்...