Home Blog Page 212

‘அங்கம்மாள்’ படத்துக்காக சுருட்டு பிடித்துப் பழகிய கீதா கைலாசம்

எழுத்தாளர் பெருமாள் முருகனின் கோடித்துணி என்ற கதை ‘அங்கம்மாள்’ என்ற பெயரில் திரைப்படமாகியுள்ளது. இதில் அங்கம்மாள் கதாபாத்திரத்தில் கீதா கைலாசம் நடித்துள்ளார்.

விபின் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் சரண், பரணி, முல்லை அரசி, தென்றல் ரகுநாதன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஸ்டோன்பெஞ்ச் நிறுவனம், என்ஜாய் பிலிம்ஸ் மற்றும் பிரோ மூவி ஸ்டேஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படம் நவ. 21 இல் திரைக்கு வருகிறது.

இதையொட்டி படம் பற்றிய பேசிய கீதா கைலாசம், “இப்படம் அம்மா மகன் பற்றிய கதையைப் பேசுகிறது. இதில் ரவிக்கை அணியாமல் சுருட்டுப் பிடித்தபடி நடித்துள்ளேன். கதாபாத்திரத்துக்காக சுருட்டு மற்றும் பீடி புகைக்கப் பயிற்சி எடுத்தேன். முதலில் கஷ்டமாக இருந்தது. தொடர்ந்து பயிற்சி செய்தால் பழக்கமாகிவிடும் என்று எச்சரித்ததால் அதைப் படப்பிடிப்பில் மட்டுமே பயன்படுத்தினேன். ரவிக்கை அணியாமல் நடித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. சுருட்டு பிடித்தபடி கிராமத்துச் சாலையில் டிவிஎஸ் 50 ஓட்டி சென்றது சவாலாக இருந்தது.

சிறுவயதில் இருசக்கர வாகனம் ஓட்டி இருந்தாலும் இப்போது பதற்றமாக இருந்தது. இப்படம் திருநெல்வேலி மாவட்டத்தின் கதையாக உருவாகி இருக்கிறது. நெல்லை பேச்சு வழக்கை, முயற்சி செய்திருக்கிறேன். படப்பிடிப்பு பத்மநேரி கிராமத்தில் நடந்தது. அங்குள்ள மனிதர்களிடம் பழகியது புதிய உணர்வை கொடுத்தது” என்றார்.

மீண்டெழுகிறது ஐதேக! 6 மாதங்களுக்குள் 1000 கூட்டங்களை நடத்த ஏற்பாடு!!

ஐக்கிய தேசியக் கட்சி 6 மாக காலப்பகுதிக்குள் கட்டியெழுப்படும் எனவும், ஆயிரம் கூட்டங்களை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது எனவும் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் அணிதிரட்டலுக்கான பிரதிச் செயலாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள ஹரின் பெர்ணான்டோ நேற்று (10) தமது கடமையை பொறுப்பேற்றார்.

ஐதேக தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற இதற்குரிய நிகழ்வின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“ ஐக்கிய தேசியக் கட்சியையும், ஐக்கிய மக்கள் சக்தியையும் ஒன்றிணைப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிக்கு முழு ஆதரவு வழங்கப்படும். இரு தரப்பும் இணைய வேண்டுமென கிராம மட்டத்திலான மக்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர். எனவே, அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்பார்கள் என நம்புகின்றோம்.

அவ்வாறு இல்லையேல் அன்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கியதுபோல, ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ளவர்கள் ஐக்கிய தேசியக் கட்சி பக்கம் வருவதை தடுக்க முடியாது.”எனவும் ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டார்.

இலங்கையில் முழுமையாக டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட முதல் கட்சி என்ற நாமத்தை எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சி பெறும். இணையவழிமூலம் கட்சி ஆதரவாளர்கள் கட்சியுடன் தொடர்புகளை ஏற்படுத்தலாம்.” எனவும் ஹரின் பெர்ணான்டோ மேலும் குறிப்பிட்டார்.

மரக்கறி விலைப்பட்டியல் (11.11.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (11) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அரசுக்கு சவால் விடுப்பு!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வீழ்ச்சிப் பயணம் ஆரம்பித்துவிட்டதாகவும், கூட்டுறவு சங்க தேர்தல் முடிவுகள் இதனை உறுதிப்படுத்துவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (10) நடைபெற்ற வரவு – செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு ஆளுங்கட்சிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுவருகின்றது. எனினும், தேர்தல் நடத்தப்படுமா என்பது சந்தேகமே.

ஏனெனில் அரசாங்கத்தின் வீழச்;சி ஆரம்பமாகியுள்ளது. கூட்டுறவு சங்க தேர்தல் முடிவுகள் இதனை வெளிப்படுத்துகின்றன. அத்தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வி அடைந்துவருகின்றது.

முடிந்தால் மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு சவால் விடுக்கின்றோம். அவ்வாறு நடத்தினால் அரசாங்கம் தொடர்பில் மக்கள் மத்தியில் உள்ள நிலைப்பாடு சிறப்பாக தெரியவரும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டார்.

டெல்லி கார் வெடிப்புச் சம்பவத்தில் நடந்தது என்ன?

டெல்லி செங்கோட்டை அருகே சிக்னலில் நின்ற கார் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதில் 13 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்ததை அடுத்து, மும்பை, சென்னை உட்பட நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

டெல்லி செங்கோட்டை பகுதியில் நேற்று மாலை 6.30 மணி அளவில் வாகனங்கள் வழக்கம்போல சென்றுகொண்டு இருந்தன. அப்போது, சிக்னலில் நின்ற கார் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில், அருகே நின்றிருந்த சிலகார்களிலும் தீப்பிடித்தது. இதில் 13 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து டெல்லி காவல் ஆணையர் சதீஷ் கோல்சா கூறும்போது, “மாலை 6.52 மணி அளவில் செங்கோட்டை பகுதியின் கவுரி சங்கர், ஜெயின் கோயில்களுக்கு அருகே மெதுவாக சென்ற கார் ஒன்று சிக்னலில் நின்றுள்ளது. அப்போது அந்த கார் வெடித்துச் சிதறியுள்ளது. இதில் அருகே இருந்த கார்கள் 150 மீட்டர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டன. டெல்லி போலீஸ், என்ஐஏ, என்எஸ்ஜி அமைப்புகள் ஒன்றிணைந்து விசாரணை நடத்தி வருகின்றன” என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, டெல்லி போலீஸாரும், தீயணைப்பு படை வீரர்களும் விரைந்து வந்து, படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள எல்என்ஜேபி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஏராளமானோர் பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகேகடை நடத்தி வரும் ஒருவர் கூறும்போது, ‘‘பயங்கர சத்தத்துடன் கார்கள் வெடித்துச் சிதறி தூக்கிவீசப்பட்டன. பல கி.மீ. தூரம் சத்தம் கேட்டது. கடையில் இருந்த நான் அதிர்வு காரணமாக கீழே விழுந்துவிட்டேன்’’ என்றார்.

அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த ராஜ்தர் பாண்டே கூறும்போது, “எனது வீடு வரைவெடிப்பின் அதிர்வை உணர முடிந்தது. அந்த பகுதி முழுவதும் தீப்பற்றி எரிந்தது’’ என்று தெரிவித்தார். டெல்லி போலீஸார் கூறும்போது, ‘‘காரில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முழுமையான விசாரணைக்கு பிறகே கார்கள் வெடித்துச் சிதறியதற்கான காரணம் தெரியவரும்’’ என்று தெரிவித்தனர்.

எனினும், சதிச் செயலாக இருக்கக்கூடும் என்ற அச்சத்தால் டெல்லி முழுவதும் உச்சபட்ச உஷார்நிலை பிறப்பிக்கப்பட்டது. அனைத்து பகுதிகளும் காவல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

மோடி, அமித் ஷா ஆலோசனை: இந்நிலையில், டெல்லியில் நேற்று இரவு மத்திய உள்துறை அமைச்சகத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மூத்த அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தி,முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தார். பின்னர், பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தியஅவர், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவரித்தார். டெல்லிகாவல் ஆணையர் சதீஷ் கோல்சாவையும் அமித் ஷா தொலைபேசியில் தொடர்பு கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

அமித் ஷா கூறும்போது, “டெல்லி செங்கோட்டை அருகே சுபாஷ் மார்க் சிக்னல் அருகே கார் வெடித்துச் சிதறி உள்ளது. இதில் அருகே காரில் சென்றவர்கள், நடைபாதையில் நடந்து சென்றவர்கள் உயிரிழந்துள்ளனர். 10 நிமிடங்களுக்குள் டெல்லி போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்றுவிட்டனர். அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும்’’ என்று தெரிவித்தார்.

டெல்லியின் அண்டை மாநிலங்களான உத்தர பிரதேசம், ஹரியானா மட்டுமின்றி, மகாராஷ்டிரா, பிஹார், மேற்கு வங்கம், தமிழகம், கர்நாடகா உட்பட நாடு முழுவதும் காவல் துறையினர் உஷார்படுத்தப்பட்டனர். மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் சோதனை, கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. தமிழக சட்டம் – ஒழுங்கு டிஜிபி (பொறுப்பு) வெங்கடராமன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் கண்காணிப்பு மற்றும் ரோந்து நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு அனைத்து மண்டல ஐ.ஜி.க்கள், காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்.பி.களுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, சென்னை, கோவை, திருச்சி,மதுரை, சேலம், நெல்லை உட்பட அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடல் வழி பாதுகாப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரயில், பேருந்து, விமான நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. பல பகுதிகளிலும் நேற்று இரவு தீவிர வாகனசோதனை நடைபெற்றது.

ஹரியானாவில் சோதனையில் சிக்கிய 2,900 கிலோ வெடிபொருள்: பயங்கர சதி திட்டத்துக்காக பதுக்கியது அம்பலம்

டெல்லி, குஜராத், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பயங்கர வெடிகுண்டு தாக்குதல் நடத்தும் சதித் திட்டத்துடன் தீவிரவாதிகள் பதுக்கி வைத்திருந்த 2,900 கிலோ வெடிபொருட்கள் ஹரியானாவில் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்டன. பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக பெண் மருத்துவர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காஷ்மீரை சேர்ந்த மருத்துவர்கள் சிலருக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இதுதொடர்பாக காஷ்மீர், ஹரியானா, குஜராத், உத்தர பிரதேச போலீஸார் கடந்த 15 நாட்களாக தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த விசாரணையின்போது குஜராத்தின் அகமதாபாத் நகரில் ஆசாத், சுகைல், மருத்துவர் அகமது சயீது ஆகிய 3 தீவிரவாதிகள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதி சுபைன் உத்தரவின்பேரில் 3 பேரும் பணம், ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

காஷ்மீரை சேர்ந்த மருத்துவர் ஆதில் அகமது ரத்தர், உத்தர பிரதேசத்தின் சஹாரன்பூரில் பணியாற்றி வந்தார். பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த அவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ஏராளமான வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மருத்துவர் ஆதில் அகமது ரத்தரின் காதலி மருத்துவர் ஷாகின். உத்தர பிரதேச தலைநகர் லக்னோவை சேர்ந்த இவர் ஹரியானாவின் தோஜ் நகரில் உள்ள அல் பலா மருத்துவக் கல்லூரியில் பணியாற்றி வந்தார். அவர் நேற்று கைது செய்யப்பட்டார். அவரது காரில் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கி, ஏராளமான தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஹரியானாவில் மருத்துவர் கைது: ஹரியானாவின் தோஜ் நகரில் உள்ள அல் பலா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காஷ்மீரை சேர்ந்த மருத்துவர் முஜம்மில் ஷகீல் பணியாற்றி வந்தார். பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்த அவர் கடந்த 30-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

ஹரியானாவில் தோஜ் நகரில் ஷகீல் தங்கியிருந்த வீட்டில் காஷ்மீர், ஹரியானா போலீஸார் இணைந்து கடந்த நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அப்போது 350 கிலோ வெடிபொருட்கள், 20 டைமர்கள், துப்பாக்கிகள், கைத்துப்பாக்கி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

ஹரியானாவின் பதேபூர் டகா கிராமத்தில் ஷகீல் வாடகைக்கு எடுத்திருந்த ஒரு வீட்டில் போலீஸார் நேற்று சோதனை நடத்தினர். அப்போது 2,563 கிலோ வெடிபொருட்கள், ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக அந்த வீட்டின் உரிமையாளர் மவுலானா நேற்று கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: மொத்தம் 8 பேர் கைதாகி உள்ளனர். டெல்லியின் ஆசாத்பூர் மண்டி, அகமதாபாத்தின் காய்கனி சந்தை, லக்னோ ஆர்எஸ்எஸ் அலுவலகம் மற்றும் வட மாநிலங்களில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளபகுதிகளில் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக 4 மருத்துவர்கள் உட்பட 8 பேரும் ஆயுதங்கள், வெடிமருந்துகளை பதுக்கி வைத்துள்ளனர். இதுவரை 2,900 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பிலும் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இவ்வாறு போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

தலாவ பஸ் விபத்து: O/L மாணவனே பலி: சாரதி கைது!

🛑தலாவ பஸ் விபத்து! #update

🛑 17 வயது மாணவன் பலி: சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவிருந்தவர். கருத்தரங்கில் பங்கேற்று வீடு திரும்பும்வேளையிலேயே துயர் சம்பவம்.

🛑உயர்தரப்பரீட்சைக்கு தோற்றிய மற்றும் சாதாரண தரப்பரீட்சை கருத்தரங்கில் பங்கேற்ற மாணவர்கள் உட்பட பஸ் விபத்துக்குள்ளாகும்வேளை 47 பேர் இருந்துள்ளனர்.

🛑காயமடைந்தவர்கள் தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

🛑அநுராதபுரம் வைத்தியசாலையில் 31 பெண்கள் உட்பட 47 பேர் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர். இவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை.
பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

 

“வாத்தி”யாராகிறார் ரணில்!

“வாத்தி”யாராகிறார் ரணில்!

LEARN WITH RANIL வேலைத்திட்டம் டிசம்பரில் ஆரம்பம்!

(ஆர்.சனத்)

ஐக்கிய தேசியக் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அனுபவம் தொடர்பில் இளைஞர்கள் கற்றுக்கொள்வதற்கும், கேள்வி எழுப்புவதற்கும் உரிய வேலைத்திட்டத்தை ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுக்கவுள்ளது.

இதற்கமைய “LEARN WITH RANIL” (ரணிலிடம் கற்போம்) ரணில் எனும் வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பமாகும் என்று ஐதேக உறுப்பினரான முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் அணிதிரட்டலுக்கான பிரதிச் செயலாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள ஹரின் பெர்ணான்டோ இன்று (10) தமது கடமைகளை கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் பொறுப்பேற்றார்.

அதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே ஹரின் பெர்ணான்டோ மேற்படி தகவலை வெளியிட்டார்.

“ “LEARN WITH RANIL” வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பமாகும். இளைஞர்களை அழைத்து இரு மணிநேரம் இந்நிகழ்வு நடக்கும். இதற்காக இளைஞர்கள் ஒன்லைன்மூலம் பதிவு செய்யலாம். ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்விகளை எழுப்பலாம்.

அதன்பின்னர் மாதாந்தம் இரு வாரங்களுக்கு ஒரு தடவை , ரணில் விக்கிரமசிங்க என்ற அனுவபம்மிக்க தலைவரிடம் அரசியல் கற்பதற்கும், அதனை ஒன்லைன்மூலமும் அவதானிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்படும்.

இலங்கையில் முழுமையாக டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட முதல் கட்சி என்ற நாமத்தை எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சி பெறும். இணையவழிமூலம் கட்சி ஆதரவாளர்கள் கட்சியுடன் தொடர்புகளை ஏற்படுத்தலாம்.” எனவும் ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டார்.

இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க 4 சதாப்தங்களுக்கு மேலாக நாடாளுமன்ற அரசியல் அனுபவம்மிக்கவர். 1977 முதல் 2020 ஆம் ஆண்டுவரை தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். ஐந்து தடவைகளுக்கு மேல் பிரதமர் பதவியை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

(ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் வாழ்க்கை. ஏற்கனவே பதிவிட்டது. தற்போது மீள்பதிவு செய்யப்படுகின்றது.)

✍️பிறப்பு – 1949 மார்ச் 24.

✍️தந்தை – எஸ்மண்ட் விக்கிரமசிங்க.

✍️தாய் – மாலினி விக்கிரமசிங்க.

✍️மூன்று சகோதரர்கள், ஒரு சகோதரி. ரணில் இரண்டாவது மகன்.

✍️ ஆரம்பக்கல்வி – கொழும்பு ரோயல் கல்லூரி.

✍️உயர்கல்வி – கொழும்பு பல்கலைக்கழகம், சட்டத்துறை.

✍️ஐ.தே.கவின் இளைஞர் முன்னணி ஊடாக அரசியல் பயணம் ஆரம்பம். 1970 இல் களனி தொகுதி அமைப்பாளராக நியமனம். அதன்பின்னர் பியகம தொகுதி கையளிப்பு.

✍️1977 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் பியகம தொகுதியில் போட்டி. 22 ,045 வாக்குகளைப்பெற்று வெற்றிநடை.

✍️28 ஆவது வயதில் பிரதி வெளிவிவகார அமைச்சராக நியமனம்.

✍️1977 ஒக்டோர் 05 ஆம் திகதி அமைச்சரவைக்கு உள்வாங்கப்பட்டு இளைஞர் விவகார மற்றும் தொழில் அமைச்சு பதவி ஒப்படைப்பு.

✍️1980 பெப்ரவரி 14 கல்வி அமைச்சு பதவி கையளிப்பு. 9 ஆண்டுகள் அப்பதவியில் நீடித்த அவர், கல்வித்துறையில் நவீன யுகத்துக்கேற்ப பல மறுசீரமைப்புகளை மேற்கொண்டார்.

✍️1993 மே 17 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்பு.

✍️1994 இல் ஐ.தே.க. தலைவராக ரணில் விக்கிரமசிங்க நியமனம். கட்சியிலிருந்து வெளியேறி மீண்டும் தாய்வீடு திரும்பிய காமினி திஸாநாயக்க பிரதான எதிர்க்கட்சி தலைவரானார்.காமினி திஸாநாயக்க கொல்லப்பட்ட பின்னர் எதிர்க்கட்சி தலைவராகவும் ரணில் செயற்பட்டார்.

✍️1995 – திருமண வாழ்வில் இணைவு. களனிப் பல்கலைக்கழக ஆங்கிலப் பேராசிரியையான மைத்திரி விக்கிரமசிங்கவை கரம்பிடித்தார்.

✍️1999 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க முதன்முறையாக போட்டி. சந்திரிகாவே வெற்றிபெற்றார். ரணிலுக்கு 42.71% வாக்குகள் கிடைத்தன.

✍️2000 ஒக்டோபர் 10 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் சந்திரிகா தலைமையிலான மக்கள் கூட்டணி வெற்றி. ஓராண்டுக்குள் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு மீண்டும் 2001 டிசம்பர் 05 ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட்டது. ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது.

✍️2001 டிசம்பர் 09 ஆம் திகதி ரணில் பிரதமரானார். 2004 ஏப்ரல் 2 ஆம் திகதிவரை பதவியில் நீடித்தார்.

✍️நாடாளுமன்றத்தில் ஆயுட்காலம் முடிவடைவதற்குள்ளேயே நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி சந்திரிக்கா நாடாளுமன்றத்தைக் கலைத்து 2004 ஏப்ரல் 2 ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட்டது. ஐ.தே.க. ஆட்சி கவிழ்ந்தது. கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்க 3 இலட்சத்து 29 ஆயிரத்து 524 விருப்பு வாக்குகளைப் பெற்றார்.

✍️2005 நவம்பர் 17 ஆம் திகதி நடைபெற்ற ஐந்தாவது ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் ரணில் விக்கிரமசிங்கவே போட்டியிட்டார். 47 இலட்சத்து 6 ஆயிரத்து 366 வாக்குகளைப் பெற்றார். இத்தேர்தலில் மஹிந்தவே வெற்றிபெற்றார்.

✍️2010 ஜனவரி 26 ஆம் திகதி ஆறாவது ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் மஹிந்த களமிறக்கினார். அவருக்கு எதிராக எதிரக்கட்சிகளின் சார்பில் – இறுதிப்போரை வழிநடத்திய இராணுவத்தளபதி சரத் பொன்சேக்கா களமிறக்கப்பட்டார்.

✍️ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக ஐக்கிய தேசியக்கட்சி வேட்பாளர் களமிறங்கவில்லை என்பதுடன், யானை சின்னத்துக்கு பதிலாக அன்னப்பறவை சின்னமே முன்னிலைப்படுத்தப்பட்டது. இத்தேர்தலில் மஹிந்தவே வெற்றிபெற்றார்

✍️2010 ஏப்ரல் 4 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் ரணிலின் தலைமைத்துவத்தின்கீழ் யானை சின்னத்திலேயே ஐக்கிய தேசியக்கட்சி போட்டியிட்டது. தேர்தலில் தோல்வி. கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்க 2 இலட்சத்து 32 ஆயிரத்து 957 வாக்குகளைப் பெற்றார்.

✍️2015 ஜனவரி 8 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் விட்டுக்கொடுப்புகளை செய்யவேண்டியநிலை ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஏற்பட்டது. மஹிந்த அரசிலிருந்து வெளியேறிய சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு பொதுவேட்பாளராக களமிறங்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
மைத்திரி ஜனாதிபதி, ரணில் பிரதமர் என்ற தொனியிலேயே பரப்புரைகள் முன்னெடுக்கப்பட்டன. 62 இலட்சத்து 17 ஆயிரத்து 162 வாக்குகளைப் பெற்று மைத்திரி வெற்றிபெற்றார். மஹிந்தவின் 10 ஆண்டுகால சாம்ராஜ்யமும் சரிந்தது.

✍️2015 ஜனவரி 9 ஆம் திகதி பிரதமராக ரணில் பதவியேற்றார். இதனால், மஹிந்தவின் அமைச்சரவையும் கலைந்தது.

✍️2015 ஆகஸ்ட் நடைபெற்ற பொதுத்தேர்தலிலும் ஐக்கிய தேசியக்கட்சி 106 ஆசனங்களைக் கைப்பற்றி அறுதிப்பெரும்பான்மை இல்லாவிட்டாலும் தேசிய அரசமைத்து ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது.

✍️கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்க 5 இலட்சத்து 566 வாக்குகளைப் பெற்று மீண்டும் வரலாற்று வெற்றியை பதிவுசெய்தார்.

✍️2018 ஒக்டோபர் மாதம் ஆட்சிகவிழ்ப்பு சூழ்ச்சிமூலம் மஹிந்தவை, ஜனாதிபதி மைத்திரி பிரதமராக்கினார். எனினும், நீதிமன்றத்தைநாடி சவால்களையெல்லாம் சமாளித்து மீண்டும் பிரதமரானார் ரணில்.
நம்பிக்கையில்லாப் பிரேரணைகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உதவியுடன் மண்கவ்வ செய்தார்.

✍️2019 நவம்பர் 16 ஆம் திகதி நடைபெற்ற இலங்கையின் 8 ஆவது ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க வேண்டும் என்பதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறியாகவே இருந்தார். எனினும், கட்சிக்குள் எதிர்ப்புகள் வலுத்ததால், பங்காளிகள் விடாப்பிடியாக நின்றதாலும், நாட்டு மக்கள் சஜித்தை கோரியதாலும் மூன்றாவது முறையும் தியாகம் செய்யவேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.
எனினும், 1994 ஆம் ஆண்டுக்கு பிறகு ஐக்கிய தேசியக்கட்சியை சார்ந்த உறுப்பினர் ஒருவரை வேட்பாளராக களமிறக்கும் வாய்ப்பு உதயமானது.

✍️ 2019 ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி தோல்வியடைந்தது. அதன்பின்னர் ஐக்கிய தேசியக்கட்சி இரண்டாக உடைந்தது. சஜித் தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி உயதமானது.

✍️2020 பொதுத்தேர்தலில் இரு அணிகளும் தனியாக போட்டியிட்டன. ஐக்கிய மக்கள் சக்தி 54 ஆசனங்களைக் கைப்பற்றியது. ஐக்கிய தேசியக்கட்சிக்கு நாடு முழுவதும் 2.15% வாக்குகளே கிடைக்கப்பெற்றன.
தேசியப்பட்டியல் ஊடாக வாய்ப்பு கிடைத்தது.

✍️நாடாளுமன்ற அரசியலுக்கு வந்த பிறகு ரணில் எந்தவொரு பொதுத்தேர்தலிலும் தோற்றதில்லை. 42 வருடங்களாக தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து சாதனையும் படைத்துள்ளார். 2020 இல் தோல்வியை தழுவினார். எனினும், தேசியப்பட்டில் ஊடாக சபைக்கு நாடாளுமன்றம் வந்தார்.

✍️கோட்டாபய ராஜபக்ச பதவி விலகிய பின்னர், நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்புமூலம் ஜனாதிபதியானார். கடந்த தேர்தலில் போட்டியிடவில்லை.

R.Sanath
raasanath@gmail.com

 

 

கணக்காய்வாளர் நாயகத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு

 

கணக்காய்வாளர் நாயகத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையை
சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவிடம் பதில் கணக்காய்வாளர் நாயகம் ஜீ.எச்.டீ. தர்மபால பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் கையளித்தார்.

அரசியலமைப்பின் 154வது யாப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனகள், சபைகள், அதிகார சபைகள், நியதிச்சட்ட நிதியங்கள், நியதிச்சட்டமல்லாத நிதியங்கள், வெளிநாட்டு உதவித் திட்டங்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி நிறுவனங்கள், அரச நிறுவனங்கள் உள்ளிட்ட பல நிறுவனங்களை 2024 ஆம் ஆண்டில் கணக்காய்வு செய்து அவற்றின் கணக்காய்வு அறிக்கைகளை பாராளுமன்றத்துக்கு சமர்பிப்பதற்கு கணக்காய்வாளர் நாயகம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அதற்கமைய இந்த வருடாந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

பிரதிக் கணக்காய்வாளர் நாயகம் எஸ்.டி.பி. ரத்நாயக்க, கணக்காய்வு கண்காணிப்பாளர் ஆர்.டீ. சேனாரத்ன மற்றும் கௌரவ சபாநாயகரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் சமீர கால்லகே ஆகியோரும் இதன்போது கலந்துகொண்டனர்.

தலாவ பஸ் விபத்து மாணவன் பலி!

🛑தலாவ பஸ் விபத்து! #update

🛑 17 வயது மாணவன் பலி: சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவிருந்தவர். கருத்தரங்கில் பங்கேற்று வீடு திரும்பும்வேளையிலேயே துயர் சம்பவம்.

🛑உயர்தரப்பரீட்சைக்கு தோற்றிய மற்றும் சாதாரண தரப்பரீட்சை கருத்தரங்கில் பங்கேற்ற மாணவர்கள் உட்பட பஸ் விபத்துக்குள்ளாகும்வேளை 47 பேர் இருந்துள்ளனர்.

🛑காயமடைந்தவர்கள் தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

🛑அநுராதபுரம் வைத்தியசாலையில் 31 பெண்கள் உட்பட 47 பேர் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர். இவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை.
பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

…………..

 

அநுராதபுரம், தம்புத்தேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலாவ – ஜயகங்க சந்தி பகுதியில் பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் மாணவரொருவர் பலியாகியுள்ளார். மேலும் 46 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் 36 பேர் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களில் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. மேலும் 10 பேர் தலாவ வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.

தலாவயில் இருந்து பயணித்த பயணிகள் போக்குவரத்து பஸ்ஸே வீதியை விட்டு விலகி, பள்ளத்தில் வீழ்ந்து இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

க.பொ.த உயர்தரப்பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் உட்பட சுமார் 60 பேர்வரை பஸ்ஸில் பயணித்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.

 

 

சினிமா

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

செய்தி

நிர்வாகச் சீர்கேடு: ஹட்டன் – டிக்கோயா நகரசபையில் கடும் அமளி! சபை அமர்வு ஒத்திவைப்பு!

0
மலைவாஞ்சான் ஹட்டன்: ஹட்டன் – டிக்கோயா நகரசபையின் மாதாந்த அமர்வு இன்று (24) காலை 10.45 மணியளவில் நகரசபைத் தலைவர் அசோக்க கருணாரத்ன தலைமையில் கூடியது. எனினும், கடந்த 10 மாதங்களாக நகரசபை நிர்வாகத்தில்...

மலையகத்துக்கு மாடி வீட்டு திட்டம் வேண்டாம்: காணி உரிமையை உடன் வழங்குக!

0
" மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி, வீட்டு உரிமை வழங்கப்பட வேண்டும். எமது மக்களுக்கு மாடி வீட்டும் திட்டம் பொறுத்தமற்றது." என்று திட்டவட்டமாக வலியுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் மற்றும் ஜனநாயகத்துக்கான செயலூக்கப்படுத்தப்பட்ட பிரஜைகள் என்ற செயல்திட்டத்தின்...

காணி பிரச்சினைக்கு உரிய தீர்வு: இளங்குமரன் எம்.பி. உறுதி!

0
“வடக்கு,கிழக்கில் நிலவும் காணிப்பிரச்சினைக்கு சுமுக தீர்வை காண வேண்டும் என்பதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உறுதியாக உள்ளது. எனவே, மயிலிட்டி பிரச்சினையும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட வகையில் தீர்க்கப்படும்.” என்று தேசிய மக்கள்...