Home Blog Page 204

தமிழரசுக் கட்சி பிரமுகர்களை சந்தித்தார் இந்திய தூதுவர்!

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஆகியோரைச் சந்தித்துள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது, இந்திய – இலங்கை உறவுகள் மற்றும்,  இலங்கை அரசியலின் அண்மைய முன்னேற்றங்கள் குறித்து பரந்துபட்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இந்தியத் தூதரகம் தனது எக்ஸ் தளத்தில் இதனைப் பதிவிட்டுள்ளது.

அரசாங்கத்துடன் இணையமாட்டோம்: சஜித் அணியுடனான உறவு தொடரும்!

பொதுமக்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் நலனுக்காக தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற வகையில் 2026 வரவு செலவு திட்ட இரண்டாவது நிலை வாசிப்பில் ஆதரவாக வாக்களித்தோம், தற்போதைய அரசாங்கம் வாக்குறுதியளித்தபடி ஊதியத்தை அதிகரிக்கவில்லை என்றால் அரசாங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நுவரெலியாவில் உள்ள தனது அலுவலகத்தில் (15) சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர் கட்சி அல்லது எதிர்க்கட்சியைப் பொருட்படுத்தாமல் அரசாங்கம் கொண்டு வந்த நல்ல திட்டங்களை நாங்கள் ஆதரிக்கிறோம்.

2026 ஆம் ஆண்டுக்கான தமிழ் முற்போக்கு கூட்டணியின் வரவு செலவுத் திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.400 சம்பள உயர்வை வழங்கும் என்று கூறுவதால் அதற்கு ஆதரவாக வாக்களித்தோம்.

ஏதாவது ஒரு காரணத்திற்காக அரசாங்கம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றால், தமிழ் முற்போக்கு கூட்டணி அரசாங்கத்திற்கு எதிராக செயல்படும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது.

வரவு-செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததால் அரசாங்கத்தின் பக்கம் மாறுவதற்கு நாங்கள் தயாராக இல்லை. பொதுமக்கள் இந்த திட்டத்தை எதிர்த்தவர்களையே தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்” என்றார்.

பொதுமக்களின் சார்பாக அரசாங்கம் முன்வைக்கும் எந்தவொரு நல்ல திட்டத்தையும் நாங்கள் ஒருபோதும் எதிர்க்க மாட்டோம்.
பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் இடத்தில் நாங்கள் எப்போதும் நிற்போம்.

பாதீட்டுக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக ஐக்கிய மக்கள் சக்தி எம் மீது எந்த வெறுப்பும் இல்லை. ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் ரீதியாக முன்னேறுவோம் என்பதில் எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது.

கஜரூபன் திவ்யா நுவரெலியா

21 ஆம் திகதி பேரணி: வீடு தேடி சென்று சுமந்திரனுக்கு விளக்கமளித்தார் நாமல்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷ இன்று காலை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனை அவரது கொழும்பு அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிராக எதிர்வரும் 21 ஆம் திகதி எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள பொதுப் பேரணி குறித்து விளக்குவதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரைத் தாம் சந்தித்தார் என்று சந்திப்பின் பின்னர் நாமல் எம்.பி. கூறினார்.

அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளமை மற்றும் எதிர்க்கட்சிப் பேரணியில் முன்னிலைப்படுத்த விரும்பும் முக்கிய பிரச்சினைகள் குறித்து சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது என்றும் நாமல் எம்.பி. தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சி இந்தப் பேரணியில் பங்கேற்காது என்றாலும், எதிர்க்கட்சியின் முக்கிய அங்கமான அந்தக் கட்சிக்கு இந்த விடயம் குறித்துத் தெரியப்படுத்துவது முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நீண்ட காலமாகத் தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தலை மேலும் ஒத்திவைக்காமல் நடத்த வேண்டியதன் அவசியத்தை தானும் சுமந்திரனும் ஒப்புக்கொண்டனர் என நாமல் எம்.பி. மேலும் கூறினார்.

மாகாண நிர்வாகத்தை வலுப்படுத்த அரசமைப்பின்படி இந்தத் தேர்தலை நடத்துவது மிக முக்கியம் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்தச் சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசமும் கலந்துகொண்டார்.

இலங்கை, அமெரிக்காவுக்கிடையில் பாதுகாப்பு உறவை வலுப்படுத்த ஒப்பந்தம் கைச்சாத்து!

இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான பாதுகாப்பு கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்குரிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதற்குரிய நிகழ்வு இலங்கை பாதுகாப்பு அமைச்சில் நேற்று (14) நடைபெற்றது.

அமெரிக்கா அரசாங்கத்தின் சார்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் மொன்டானா தேசிய காவல்படையின் பிரதி ஜெனரல் பிரிகேடியர் ஜெனரல் Trenton Gibson ஆகியோர் கையெழுத்திட்டனர். இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா கையெழுத்திட்டார்.

குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் அமெரிக்க பாதுகாப்புத் துறையின் மாநில கூட்டுத் திட்டத்தின் கீழ் மொன்டானா தேசிய காவல்படை, அமெரிக்க கடலோர காவல்படை மாவட்டம் 13 மற்றும் இலங்கை ஆயுதப்படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை ஒருங்கிணைக்கின்றது.

இந்நிகழ்வில் உரையாற்றிய இலங்கை பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் ஜயசேகர ,

“ குறித்த ஒப்பந்தம் இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு கூட்டாண்மையில் ஒரு முக்கியமான மைல்கல்லை குறிக்கிறது.” என்று குறிப்பிட்டார்.
இந்த முயற்சி நமது பரஸ்பர அர்ப்பணிப்பு, பகிரப்பட்ட மூலோபாய நலன்களை பிரதிபலிக்கிறது.

மேலும் இந்த கூட்டாண்மை திறன் மேம்பாடு, கூட்டு பயிற்சி, மனிதாபிமான உதவி, அனர்த்த மீட்பு, சைபர் பாதுகாப்பு, அமைதி காப்பு நடவடிக்கைகள் மற்றும் தலைமைத்துவ மேம்பாட்டிற்கான புதிய வழிகளைத் திறக்கிறது.” எனவும் அவர் கூறினார்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், அமெரிக்க தேசிய காவல்படையுடன் கூட்டு சேர்ந்த 115 நாடுகளின் உலகளாவிய வலையமைப்பில் இலங்கையம் இணைந்துள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் முதல் கூட்டு நடவடிக்கைகள் 2026 ஆம் ஆண்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இது அனர்த்த மீட்பு, கடல்சார் கள விழிப்புணர்வு மற்றும் தொழில்முறை இராணுவக் கல்வி ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.

இராணுவம் மற்றும் கடற்படைத் தளபதிகள், விமானப்படை பிரதம அதிகாரி, இலங்கை கடலோர பாதுகாப்பு படை, அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் இரசாயன ஆயுதங்களுக்கெதிரான தேசிய ஆணையம் ஆகியவற்றின் பணிப்பாளர்கள் நாயகம், அமெரிக்க தூதரக அதிகாரிகள், மொன்டானா தேசிய காவல் படை பிரதிநிதிகள் மற்றும் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சுகளின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

காஷ்மீரில் பொலிஸ் நிலையத்தில் வெடிபொருட்கள் வெடித்ததில் 9 பேர் பலி; 30 பேர் காயம்!

ஜம்மு-காஷ்மீரில் உள்ள நவ்காம் பொலிஸ் நிலையத்தில்  வெடிபொருட்கள் வெடித்ததில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 30 பேர் காயம் அடைந்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் நவ்காம் பொலிஸ் நிலையம் அமைந்துள்ளது.

இந்த நிலையத்தில்  திடீரென வெடிபொருட்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் விரைந்தனர்.

இந்த சம்பவத்தில், 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 30 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளில் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறுவது இடம் பெற்றுள்ளது. பரிதாபாத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களை கையாளும் போது விபத்து நிகழ்ந்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட சில ரசாயனங்கள் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன.

விபத்து நிகழ்ந்த பகுதி சீல் வைக்கப்பட்டதால், மோப்ப நாய்களுடன் பாதுகாப்புப் படையினர் வளாகத்தைச் சுற்றி வளைத்தனர்.

ஏற்கனவே, இந்த வாரத் தொடக்கத்தில் டில்லி செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், காஷ்மீர் போலீஸ் ஸ்டேஷனில், வெடி விபத்து நிகழ்ந்திருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.

அதேவேளை குறித்த  சம்பவம் தற்செயலானது. பயங்கரவாத தாக்குதல் இல்லை என மத்திய உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

 

தெளிவத்தை ஜோசப் மூன்றாவது நினைவேந்தல் நிகழ்வு நாளை எல்லயில்!

தெளிவத்தை ஜோசப் மூன்றாவது நினைவேந்தல் நிகழ்வு நாளை எல்லயில்!

புகழ்பூத்த இலக்கியவாதி சாகித்தியரத்னா அமரர் தெளிவத்தை ஜோசப்பின் மூன்றாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு எல்ல , நிவ்பர்க் தமிழ் மகா வித்தியாலயத்தில் இயங்கும் குறிஞ்சி பேரவையின் ஏற்பாட்டில் நாளை 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மு.ப.10.00 மணிக்கு வித்தியாலயத்தில் பேரவையின் தலைவர் சு.இராஜமாணிக்கம் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வின் வரவேற்புரையை பேரவை உறுப்பினர் கே.இளையராஜாவும், தலைமையுரையை பேரவையின் தலைவர் சு.இராஜமாணிக்கமும் நிகழ்த்தவுள்ளனர்.

தெளிவத்தை ஜோசப் எனும் நாவலாசிரியர் எனும் தலைப்பிலான சிறப்புரையை கொட்டக்கலை அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஆ.கலையரசுவும், தெளிவத்தை ஜோசப் எனும் சிறுகதையாசிரியர் எனும் தலைப்பிலான சிறப்புரையை கொட்டகலை அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஜெ.சற்குருநாதனும் , தெளிவத்தை ஜோசப் எனும் ஆய்வாளரும் ஆவணக்காப்பாளரும் எனும் தலைப்பில் ஈழத்தின் பிரபல எழுத்தாளர் மல்லியப்புசந்தி திலகரும் நிகழ்த்தவுள்ளனர். நிகழ்வில் தெளிவத்தை ஜோசப் நினைவு விருது மூத்த எழுத்தாளர் டீ.எஸ். டேவிட்டிற்கு வழங்கப்படவுள்ளது.

நிகழ்வின் நன்றியுரையை ஆசிரியர் ஆலோசகர் என்.மனோகரன் நிகழ்த்தவுள்ளதுடன் நிகழ்ச்சி தொகுப்பை எழுத்தாளர் ராஜிவ்காந்தி வழங்கவுள்ளார்.

16 வயது மாணவி கொலை: புப்புரஸ்ஸ பகுதியில் பயங்கரம்!

16 வயது பாடசாலை மாணவியை கொலை செய்தார் எனக் கூறப்படும் 27 வயது இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புப்புரஸ்ஸ மில்லகாமுல்ல காசல்மில்க் பகுதியிலேயே நேற்றிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

திருகோணமலையில் தொழில் புரிந்த குறித்த இளைஞர் நேற்றிரவு வீடு திரும்பியுள்ளார். இவரின் காதலி எனக் கூறப்படும் குறித்த 16 வயது சிறுமி தங்கி இருந்த அறைக்கு சென்று கழுத்தறுத்து கொலை செய்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.

அதிக இரத்த கசிவு காரணமாக அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.
இதனையடுத்து சந்தேக நபர் தப்பியோடியுள்ளார்.

இன்று காலை கொழுந்து மடுவமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் பயன்படுத்திய தொலைபேசியும் அருகில் உடைந்த நிலையில் காணப்பட்டது.

கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

க. யோகா

எப்படியான சவால் வந்தாலும் பெருந்தோட்ட மக்களுக்கு சம்பள உயர்வை வழங்குவது உறுதி!

மலையக மக்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும்!

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எத்தடை வரினும் நாம் சம்பள உயர்வை நிச்சயம் பெற்றுக்கொடுப்போம். அவர்களுக்குரிய உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

அரசாங்கத்துக்கு எதிராக பிரமாண்ட அறிவிப்புகளை விடுத்த கூட்டு எதிரணி எனக் கூறிக்கொள்ளும் தரப்பினர், தற்போது திடீர் பின்வாங்கலை மேற்கொண்டுள்ளனர். ஏனெனில் மக்கள் எமது பக்கமே உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“அரசாங்கத்தை விரட்யடிப்பதற்குரிய முதலாவது வேட்டு நுகேகொடையில் வைக்கப்படும் என அன்று கூறினார்கள். ஆனால் உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்தை நினைவு படுத்துவதற்காகவே பேரணி என இன்று குறிப்பிடுகின்றனர்.

அரசாங்கம் என்ன செய்கின்றது என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரமே நாம் செயற்படுகின்றோம். மக்களுக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்.

அதேவேளை, தேசிய மக்கள் சக்தி புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டுசென்ற தரப்பினரே இன்று பொருளாதாரம் பற்றி கேள்வி எழுப்புகின்றனர்.” எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்கே தமிழர்கள் ஆணை!

புதிய அரசமைப்பு ஊடாக தமிழர்களுக்குரிய அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக போராடுவோம். சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை பெறுவதற்காகவே தமிழ் மக்கள் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு ஆணை வழங்கிவருகின்றனர் என்று அக்கடசியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ பொறுப்புகூறல், காணி விடுவிப்பு உள்ளிட்ட விடயங்களில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்குரிய அழுத்தங்களை பிரயோகிப்பதற்கு எமது மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். காணி விடுவிப்பில் ஓரளவு முன்னேற்றம் இருந்தாலும் மேலும் செய்ய வேண்டியுள்ளது.

தமது அரசியல் அபிலாசைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும், அதற்காக சமஷ்டி அடிப்படையிலான தீர்வு அவசியம். இதனை பெறும் நோக்கிலேயே தமிழரசுக் கட்சிக்கு தமிழ் மக்கள் ஆணை வழங்கிவருகின்றனர்.

இது கார்த்திகை மாதம், வடக்கு, கிழக்கில் எமது விடு தலைக்காக போராடிய வீரமறவர்களை நினைவுகூரும் மாதம். ஆயிரக்கணக்கான போராளிகள் இனத்தின் விடுதலைக்காக இம் மண்ணில் விதைக்கப்பட்டனர். அவர்களை நினைவு கூரும் மாதம்.

எனவே, பாலமொன்றை பெறுவதற்காக எமது ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் தியாகம் செய்யவில்லை. ஒரு பொறுப்புள்ள கட்சி என்ற அடிப்படையில் தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றி சிந்தித்து முடிவெடுக்க கூடிய உரிமை எமது கட்சிக்கு உள்ளது.

தமிழ் மக்களின் உரிமைக்கானது எமது கட்சி. ஜனாதிபதிமீது எமக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது.” எனவும் சாணக்கியன் எம்.பி. குறிப்பிட்டார்.

மரக்கறி விலைப்பட்டியல் (15.11.2025)

மரக்கறி விலைப்பட்டியல் (15.11.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (15) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

சினிமா

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

செய்தி

அமைதி பேச்சை மீள ஆரம்பிக்குமாறு திருத்தந்தை கோரிக்கை!

0
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவர அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் முன்னெடுக்குமாறு திருத்தந்தை லியோ, அறைகூவல் விடுத்துள்ளார். போரினால் அப்பாவி மக்கள் எதிர்நோக்கும் சொல்லொணாத் துயரங்களைக் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, மோதல்களைத் தவிர்த்து சர்வதேச...

யாழிலிருந்து சிவனொளிபாதமலைக்கு பாதயாத்திரை!

0
யாழ்ப்பாணத்திலிருந்து சிவனொளிபாதமலைக்கான புனித திருத்தல யாத்திரை, இன்று அதிகாலை வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் இருந்து பக்திப் பரவசத்துடன் ஆரம்பமானது. தொடர்ச்சியாகப் பத்தாவது ஆண்டாக இடம்பெறும் இந்த யாத்திரையில், சுமார் 60...

பிரதேச செயலகத்தை நோர்வூட்டுக்கு மாற்றுக: பொகவந்தலாவயில் நாளை கை எழுத்து இயக்கம் !

0
நோர்வூட் பிரதேச செயலகத்தை நோர்வூட் நகரத்தை அண்மித்து அமைக்கக் கோரும் கை எழுத்து இயக்கம் நாளை (25) பொகவந்தலாவ பகுதியில் இடம்பெறவுள்ளது. மலையக அரசியல் அரங்கம் முன்னெடுக்கும் இந்தத் தொடர் கை எழுத்துக்குத் தமது...