Home Blog Page 219

மாகாணசபை ஆட்சியில் மொட்டு கட்சியே தீர்மானிக்கும் சக்தியாக மாறும்!

மாகாண சபைத் தேர்தல் நடக்கும்பட்சத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியே சபைகளில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக மாறும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிவி சானக தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

“ மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துவதாக இருந்தால் பழைய முறைமையின்கீழ் அதனை செய்யலாம். நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் அதற்குரிய சட்டத்திருத்தத்தை நிறைவேற்றலாம்.

ஆனால் தேர்தல் நடத்தப்பட்டால் தமக்கு ஏற்படும் நிலை குறித்து அரசாங்கம் அஞ்சுகின்றது. அதனால்தான் எல்லை நிர்ணய விடயத்தைக் காண்பித்து இழுத்தடிப்பு இடம்பெறுகின்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு ஜனாதிபதிதேர்தலில் 2.5 சதவீத வாக்குகளை கிடைக்கப்பெற்றன. அதன்பின்னர் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அது 10 சதவீதமாக அதிகரித்தது.

எனவே, மாகாணசபைத் தேர்தல் நடைபெறும்பட்சத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வாக்கு வங்கி அதிகரிக்கும். மாகாணசபைகளில் முதலமைச்சர் உட்பட ஆட்சியை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக கட்சி மாறும்.” எனவும் டிவி சானக குறிப்பிட்டார்.

“பட்ஜட் ரெடி”: நாளை முன்வைப்பு

 

2026 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவை பரிசீலிப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (05) இரவு ஜனாதிபதி செயலகத்தில் இணைந்துகொண்டார்.

நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

தற்போதைய அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டம், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நாளை (07) பிற்பகல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

தெல்தோட்டையில் பிடிபட்ட மலைப்பாம்பு!

தெல்தோட்டையில் பிடிபட்ட மலைப்பாம்பு!

தெல்தோட்டை, போப்பிட்டி பிரதேசத்தில் இன்று காலை பாரிய மலைப்பாம்பு ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது.

போப்பிட்டிய பகுதியிலுள்ள குளமொன்றுக்கு அருகில் இருந்தே பிரதேச வாசிகளால் குறித்த மலைப்பாம்பு பிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பாத்த ஹேவாஹேட்ட பிரதேச சபை உறுப்பினர் ஜெகதீஸ்வரன், உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினார். பாம்பை வனப்பகுதியில் விடுவிப்பதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது.

க.யோகா

மக்கள் ஏற்கும் பொது எதிரணியே அவசியம்: 21 ஆம் திகதி போராட்டம் குறித்து ராஜித மழுப்பல்!

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள அரசாங்க எதிர்ப்பு பேரணியில் பங்கேற்பது தொடர்பில் தான் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

மேற்படி பேரணிக்கு ஆதரவை வழங்கும் முடிவை கட்சி எடுத்திருந்தாலும், அது பற்றி தான் இன்னமும் பரிசீலித்துவருவதாகவும் ஊடக சந்திப்பின்போது அவர் குறிப்பிட்டார்.

” தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்மீது நாட்டு மக்கள் அதிருப்தி அடைந்துவருகின்றனர். எனவே, எதிரணி வசம் சிறந்த மாற்று தேர்வு இருக்க வேண்டும். மாறாக மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களுடன் பயணிக்க தொடங்கினால் அது பிரச்சினைக்கே வழிவகுக்க வேண்டும்.

மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான பொது எதிரணியொன்று கட்டியெழுப்பட வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும்.” என ராஜித சேனாரத்ன மேலும் குறிப்பிட்டார்.

சஜித் பிரேமதாச உலக விவகாரங்களுக்கான இத்திய கவுன்சிலில் உரை!

 

இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச , புது டில்லியில் உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலில் (Indian Council of World Affairs-ICWA) சிறப்புரை நிகழ்த்தினார்.

இதில், உலகளாவிய இராஜதந்திர நடவடிக்கைகள் தொடர்பில் இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் பரிணாமம் கண்டு வரும் வகிபாகத்தை பாராட்டி “beacon of strategic autonomy and South–South cooperation.” என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு விபரித்தார்.

இதன் பிரகாரம், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஆழமான நாகரிக மற்றும் ஜனநாயக உறவுகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மீண்டுமொறு முறை உறுதிப்படுத்தியதோடு, இந்தியப் பெருங்கடலை அமைதி மற்றும் ஒத்துழைப்புக்கான வலயமாக பாதுகாப்பதற்கான கூட்டுப் பொறுப்பையும் சுட்டிக்காட்டினார்.

மேலும் பூகோளப் பொருளாதாரத்தின் எழுச்சி மற்றும் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு முன்னுரிமைகளை ஒருங்கிணைப்பதன் மூலம் எதிர்பார்க்கப்படும் கட்டமைப்பு மாற்றத்தை எட்டிக் கொள்ள முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாகரிக மற்றும் தொழில்நுட்ப சக்தியாக இந்தியா உருவெடுப்பதை எடுத்துக்காட்டி, அதன் டிஜிட்டல் ஜனநாயகம், தயாரிப்புகள் மற்றும் நம்பகமான உலகளாவிய கூட்டாண்மைகளை போஷிப்பதில் கண்டு வரும் வெற்றிகள் தொடர்பிலும் அவர் பாராட்டினார்.

குறிப்பாக மின்சார வாகனங்கள் மற்றும் விநியோக சேவைத் துறைகளில் இந்தியாவின் தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப முன்முயற்சிகளுடன் இணைவதற்கான இலங்கையின் விருப்பத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு சுட்டிக்காட்டினார்.

நியாயமான மற்றும் சமநிலையானதொரு உலகளாவிய ஒழுங்கை வடிவமைக்க ஐக்கிய நாடுகள பாதுகாப்புப் பேரவையில் நிரந்தர உறுப்பினர் இடத்தைப் பெற்றுக் கொள்வதற்கு இந்தியாவிற்கு காணப்படும் இயலுமை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

 

மரக்கறி விலைப்பட்டியல் (06.11.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (06) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

11 மாதங்களுக்குள் நீரில் மூழ்கி 230 பேர் பலி!

நாட்டில் இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் நீரில் மூழ்கி 230 பேர் உயிரிழந்துள்ளனர்.

பொலிஸ் உயிர் பாதுகாப்பு பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என தெரியவருகின்றது.

சிலாபம் – தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற 05 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இத்துயர் சம்பவம் நேற்று இடம்பெற்றது.

முன்னேச்சரத்துக்கு சுற்றுலா சென்றிருந்த குழுவில் இருந்த ஐவரே உயிரிழந்துள்ளனர். இவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த உறவினர்களாவர்.

பிலிப்பைன்சில் புயல்: பலி எண்ணிக்கை 85 ஆக உயர்வு!

பிலிப்பைன்சை தாக்கிய கால்மேகி புயல் மற்றும் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது.

பசிபிக் பெருங்கடலில் உருவான குறைந்தழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. கால்மேகி என பெயரிடப்பட்ட இந்தப் புயல் பிலிப்பைன்ஸ் நகரை நோக்கி நகர்ந்தது.

அங்குள்ள பாலவான் தீவு அருகே இந்தப் புயல் மணிக்கு 20 கி.மீ வேகத்தில் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 220 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசியதுடன் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.

கடலோர மாகாணங்களான நீக்ரோஸ் ஆக்சிடென்டல், செபு உள்ளிட்டவற்றில் தொடர் மழை கொட்டியது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக் காடாக மாறின. அங்கு சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு குப்பைமேடு போல ஒன்றன் மேல் ஒன்றாகக் குவிந்தன.

இந்நிலையில், பிலிப்பைன்சை தாக்கிய கால்மேகி புயல் மற்றும் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது. மேலும், மாயமான 20 பேரை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது. புயலால் 7 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

நாட்டை நாசமாக்கியவர்களே நுகேகொடையில் ஒன்றிணைவு: பொன்சேகா போர்க்கொடி!

“மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் ஆட்சிபீடமேறுவதற்கு இடமளிக்க கூடாது. இந்நாட்டை நாசமாக்கிய தரப்புகள் இணைந்து நடத்தும் நுகேகொடை கூட்டத்தில் பங்கேற்குமளவுக்கு நான் முட்டாள் அல்லன்.” – என்று முன்னாள் இராணுவத் தளபதி பீலட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உட்பட மேலும் சில கட்சிகள் இணைந்து நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி முன்னெடுக்கவுள்ள அரசாங்க எதிர்ப்பு பேரணி தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே பொன்சேகா மேற்கண்டவாறு கூறினார்.

” எதிரணி தரப்பில் உள்ள கட்சிகளின் அரசியல் நடவடிக்கையானது நாடு மற்றும் நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் அமையவில்லை. அதனால்தான் கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது அந்த முகாமில் இருந்து வெளியேறிவிட்டேன்.

எனவே, மீண்டும் எதிரணி கூட்டணிக்குள் செல்லும் அளவுக்கு நான் முட்டாள் கிடையாது. எதிரணி தரப்பில் உள்ளவர்கள் ஆட்சிக்கு வரக்கூடாது என பிரார்த்திக்கின்றேன்.

நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மக்கள் மீண்டும் ஆணை வழங்கக்கூடாது.” எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.
அதேவேளை, தமது தரப்பிலுள்ள குறைகளை ஆளுங்கட்சியும் நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும். அவ்வாறு இல்லையேல் மக்கள் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் எனவும் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.

நுகேகொடை கூட்டத்தில் தமிழரசுக் கட்சி பங்கேற்காது!

“எதிர்வரும் 21 ஆம் திகதி எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு பேரணியை ஏற்பாடு செய்திருக்கின்றார்கள். தமிழரசுக் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. நாங்கள் அதில் பங்கேற்கவும் மாட்டோம்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் வவுனியாவில் இன்று நடைபெற்ற பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இன்றைக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய மத்திய செயற்குழுக் கூட்டம் வவுனியாவில் உள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் காலை 10 மணியிலிருந்து மாலை வரை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திலே விசேடமாக வரப் போகின்ற வரவு – செலவுத் திட்டம் சம்பந்தமாக நாடாளுமன்ற உறுப்பினர்களோடு ஒரு கலந்துரையாடல் நடத்தியிருக்கின்றோம்.

எதிர்வரும் 7ஆம் திகதி ஜனாதிபதி, நிதி அமைச்சர் என்ற வகையில் தன்னுடைய வரவு – செலவுத் திட்ட யோசனைகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க இருக்கின்றார். அதற்குப் பிறகு இரண்டாம் வாசிப்பு விவாதம் நடைபெற்று 14 ஆம் திகதி அதற்கான வாக்கெடுப்பு நடைபெறும். அதற்குப் பிறகு குழுக்கள் மட்டத்தில் விவாதம் நடைபெறும். அதைத் தொடர்ந்து மூன்றாம் வாசிப்பு இடம்பெற்று அதற்கான வாக்கெடுப்பு நடைபெறும். இந்த விடயத்தை நாங்கள் மிகவும் தீவிரமாக ஆராய்ந்தோம். நாடாளுமன்றக் குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் தங்களுடைய நிலைப்பாடுகளை அல்லது தங்களுடைய கருத்துக்களைச் சொன்னார்கள்.

மத்திய செயற்குழு உறுப்பினர்களும் இன்றைய சூழ்நிலையிலே நாங்கள் என்னவிதமாக இதனை அணுக வேண்டும் என்கின்ற தங்களுடைய கருத்துக்களைச் சொன்னார்கள். இறுதி முடிவு எதுவுமே எடுக்கப்படவில்லை.

நாங்கள் ஜனாதிபதி தன்னுடைய யோசனைகளை எதிர்வரும் 7ஆம் திகதி முன்வைத்த பிறகு இரண்டாம் வாசிப்பு முடிவடைவதற்கு முன்னதாக எங்களுடைய அரசியல் குழுவோடு நாடாளுமன்றக் குழுவும் இணைந்து வாக்களிப்பில் எப்படிக் கலந்துகொள்வது என்பது சம்பந்தமான இறுதி முடிவெடுப்பது எனத் தீர்மானித்திருக்கின்றோம்.

அதைத் தொடர்ந்து நாங்கள் மற்றைய தமிழ் அரசியல் கட்சிகளோடு இணைந்து செயற்படுகின்ற விடயம் சம்பந்தமாகப் பேசப்பட்டது.

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியோடு தலைவரும் நானும் ஏற்கனவே சில சந்தர்ப்பங்களில் உரையாடி இருக்கின்றோம். அது சம்பந்தமாக எங்களுடைய நிலைப்பாட்டை நாங்கள் அவர்களுக்குத் தெரியப்படுத்தி இருக்கின்றோம். அந்த நிலைப்பாட்டில் அவர்களும் இணங்கி வருவார்களாக இருந்தால் நாங்கள் முன்னர் இருந்ததைப் போல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியினரோடு இணங்கிச் செயற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆகவே, அப்படியாக இணங்கிச் செயற்பட முன்வருமாறு நாங்கள் அவர்களுக்கு அழைப்பும் விடுக்கின்றோம். மத்திய செயற்குழுவிலே அதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கின்றது.

அதேபோல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரோடும் நாங்கள் இது சம்பந்தமாக பேசலாமா என்ற விடயமும் எடுத்துக்கொள்ளப்பட்டது. சகல தமிழ்த் தரப்புக்களோடும் பிரதான தலைமைத் தமிழ்க் கட்சி என்ற ரீதியில் நாங்கள் அனைவரையும் இணைந்து செயற்படுமாறு அழைத்து விடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரோடு வைத்தியர் சத்தியலிங்கம் சுவிஸ் விஜயத்தின் போது சம்பாசனைகளில் ஈடுபட்டிருக்கின்றார். அது பற்றி எங்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டது.

அரசியல் தீர்வு சம்பந்தமாக ஒரே நிலைப்பாட்டைத் தமிழ்க் கட்சிகள் முன்வைக்குமா என்கின்ற ஒரு கேள்வி இருக்கின்றது. ஆகவே, அது சம்பந்தமாக இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இறுதியாகக் கோட்டாபய ராஜபக்ஷ அரச காலத்தில் அபாபோதைய குழுவுக்கு முன்வைத்த யோசனை ஒன்று இருக்கின்றது. அதுதான் நாங்கள் இறுதியாக ஓர் அரசுக்கு முன்வைத்த யோசனை. நாங்கள் அதனை மற்றவர்களுக்கும் காண்பிப்பது என்று தீர்மானித்திருக்கின்றோம். அவர்கள் அதில் இணங்கி வருவார்களாக இருந்தால் அதை ஒரு பொது நிலைப்பாடாக நாங்கள் அரசுக்குத் தெரிவிக்க முடியும் என்று தீர்மானித்திருக்கின்றோம்.

ஜனாதிபதியைச் சந்திப்பதற்குத் தமிழரசுக் கட்சி ஒரு கோரிக்கை விடுத்திருக்கின்றது. எப்படியான விடயங்களை நாம் கதைப்பது என இதற்கு முன்னர் நடந்த மத்திய செயற்குழுவிலே எடுத்த தீர்மானத்தின் அமைவாக தலைவரும் நானும் கையெழுத்திட்டு அரசியல் தீர்வு சம்பந்தமாக அவரோடு பேசுவதற்கு எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நாம் இருவரையும் (தலைவர், செயலாளர்) சேர்த்து பத்து பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது எனவும், நேரம் ஒதுக்கித் தருமாறும் நாங்கள் அவரிடத்திலே கோரிக்கை விடுத்திருந்தோம்.

அந்தக் கடிதம் அவருக்கு அனுப்பி வைக்கப் போகும்போது அவர் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையிலே கலந்துகொள்வதற்காக வெளிநாட்டுக்குச் சென்றிருந்தார். ஆகவே, அவர் திரும்பி வந்த பிறகு ஒரு நினைவூட்டல் கடிதமும் நான் அனுப்பி இருக்கிறேன். ஆனால், இதுவரைக்கும் எந்தவிதமான பதிலும் ஜனாதிபதியிடத்திலிருந்து எங்களுக்குக் கிடைக்கவில்லை.

எனினும் எதிர்வரும் 21 ஆம் திகதி எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு பேரணியை ஏற்பாடு செய்திருக்கின்றார்கள். தமிழரசுக் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. நாங்கள் அதில் பங்கேற்கவும் மாட்டோம்.

இதற்கு முன்னர் பல தடவைகளிலே பல்வேறு எதிர்க்கட்சிகள் சேர்ந்து செயற்படுகின்ற போது எங்களுக்கு அழைப்புகள் விடுப்பார்கள். நாங்கள் சில வேலைத்திட்டங்கள் சம்பந்தமாக இணைந்து பணியாற்றுகின்றோம். மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று சில வேலைத்திட்டங்களிலே எங்களோடு இணைந்து வருகின்றவர்களோடு சேர்ந்து பயணிக்கத் தயாராக இருக்கிறோம். ஆனால், பொதுவாக ஓர் எதிர்க்கட்சிக் கூட்டணியாக ஒன்று சேர்ந்து பயணிக்கத் தயாராக இல்லை.” – என்றார்.

சினிமா

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

செய்தி

ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை!

0
ஐ.பி.எல். தொடரில் இன்றிரவு நடைபெறும் 36 ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் , சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7...

ஹங்குராங்கெத்த ஆதவன் தமிழ் வித்தியாலயத்தில் புதிய இரண்டு மாடி கட்டிடம் திறப்பு

0
நுவரெலியா மாவட்டம், ஹங்குராங்கெத்த கல்வி வலயத்திற்குட்பட்ட ஹோவாஹேட்ட நூல்கந்தூர ஆதவன் தமிழ் வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி கட்டிடத் திறப்பு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இலங்கையில் முதன்முதலில் தேயிலை பயிரிடப்பட்ட வரலாற்றுச்...

2.5 மில்லியன் டொலர் திருட்டு – விசாரணைக்கு உதவும் அவுஸ்ரேலிய அதிகாரிகள்

0
நிதி அமைச்சின் கணினி அமைப்புகளை ஊடுருவி, இணையக் குற்றவாளிகள் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் திருடிய சம்பவம் தொடர்பான விசாரணைக்கு, அவுஸ்ரேலிய அதிகாரிகள் உதவி வருவதாக அவுஸ்ரேலிய தூதுவர் மத்யூ டக்வொர்த் தெரிவித்துள்ளார். இந்த...