Home Blog Page 221

வாழ்த்துகிறோம்: ஆனால் 21 ஆம் திகதி பேரணியில் பங்கேற்கமாட்டோம்!

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள அரசாங்க எதிர்ப்பு பேரணியில் தமிழ் முற்போக்கு கூட்டணி பங்கேற்காது என்று அதன் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.

எனினும், எதிரணிகளால் முன்னெடுக்கப்படும் போராட்டத்துக்கு தான் வாழ்த்து தெரிவிப்பதாகவும் மனோ கணேசன் குறிப்பிட்டார்.

அதேவேளை, குறித்த போராட்டத்தில் தமது கட்சி பங்கேற்காது என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

ட்ரம்ப் எதிர்ப்பாளர் நியூயார்க் நகர மேயர் தேர்தலில் வெற்றி!

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றுள்ளார்.

அமெரிக்காவில் மிக முக்கியமான பிரபலமான நகரம் தான் நியூயார்க். இந்த நகரத்தின் மேயராக இருந்த ஜனநாயக கட்சியைச் சேர்ந்த எரிக் ஆடம்ஸ் ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் இந்த நகரத்திற்கு மேயர் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

ஜனநாயகக் கட்சி சார்பில் உகாண்டாவில் பிறந்து நியூயார்க் நகரில் வளர்ந்த 34 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி போட்டியிட்டார்.

அவரை எதிர்த்து டிரம்ப்பின் குடியரசுக் கட்சி சார்பில் கர்டிஸ் ஸ்லிவா போட்டியிட்டார்.
அதேபோல நியூயார்க்கின் முன்னாள் கவர்னர் ஆண்ட்ரூ கியூமோ சுயேச்சையாக களம் இறங்கினார்.

அக்டோபர் 25 ஆம் திகதி வாக்கு பதிவு ஆரம்பமாகி நவம்பர் 4ஆம் திகதிவரை நடந்தது.

நியூயார்க் நகர மேயர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ஜோஹ்ரான் மம்தானி மாபெரும் வெற்றியை பதிவு செய்து, நகரத்தின் புதிய மேயராகத் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

இந்த வெற்றியின் மூலம், நியூயார்க் நகரத்தின் அரசியல் வரலாற்றிலேயே முதல் இந்திய-அமெரிக்க முஸ்லிம் மேயர் என்ற வரலாற்றுச் சாதனையை ஜோஹ்ரான் மம்தானி மாம்டானி படைத்துள்ளார்.

அமெரிக்காவின் முக்கிய அரசியல் பதவிகளில் இளம் வயதிலேயே (34) இவர் பொறுப்பேற்றுள்ளது பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இவர் நடத்திய தீவிர தேர்தல் பிரச்சாரம் இவருக்கு இந்த மாபெரும் வெற்றிக்கு வழி வகுத்து இருக்கிறது.

ஜோஹ்ரான் மம்தானி ஜனாதிபதி டிரம்பின் கொள்கைகளையும், டிரம்பையும் கடுமையாக விமர்சித்து இருந்தார்.

கொழுந்து அரைக்கும் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி!

மஸ்கெலியா, மவுசாகலை தோட்ட தேயிலை தொழிற்சாலையில் இன்று அதிகாலை 2.10 மணியளவில் கொழுந்து அரைக்கும் இயந்திரத்தில் சிக்கி, தொழிலாளி ஒருவர் பலியாகியுள்ளார்.

4 பிள்ளைகளின் தந்தையான கிட்ணன் விஜயகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார் என மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

திடீர் மரண விசாரணை அதிகாரி மற்றும் ஹட்டன் நீதிமன்ற நீதிபதி சம்பவ இடத்திற்கு வருகைதந்து ஆராய்ந்த பிறகு , சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, சட்ட வைத்திய அதிகாரி முன் நிலையில் உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மஸ்கெலியா நிருபர் செதி பெருமாள்

மரக்கறி விலைப்பட்டியல் (05.11.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (05) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

யாழ்ப்பாணத்தில் 950 கிலோ கஞ்சா தீயிட்டு அழிப்பு!

யாழ்ப்பாணத்தில் 950 கிலோ கஞ்சா
தீயிட்டு அழிப்பு!

யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் கைப்பற்றப்பட்ட 950 கிலோ கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் மற்றும் மேலதிக நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் கடந்த காலங்களில் பல்வேறு நடவடிக்கைகளின் போது மீட்கப்பட்ட கஞ்சா போதைப்பொருள் சான்றுப்பொருளாக நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டிருந்தது.

அது தொடர்பான வழக்கு விசாரணைகளைத் தொடர்ந்து 950 கிலோ கஞ்சாவையும் தீயிட்டு அழிக்க மன்று உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் கோம்பயன் மணல் மயான மின் தகன மேடையில் கஞ்சா போதைப்பொருள் தீயிட்டு முற்றாக அழிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் மற்றும் மேலதிக நீதிவான் ஆகிய இருவரின் நேரடிக் கண்காணிப்பில் கஞ்சா அழிக்கப்பட்டது.

தலவாக்கலை விபத்து: சாரதிக்கு விளக்கமறியல்!

தலவாக்கலை நகரில் தீபாவளி தினத்தன்று இரண்டு இளைஞர்கள் வாகனமொன்றில் மோதி சென்ற சாரதியை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

தலவாக்கலை நகரில் தீபாவளி தினத்தன்று அதிகாலை வேளையில் தலவாக்கலை நகர மத்தியில் பட்டாசுகளை கொளுத்திக்கொண்டிருந்தபோது மஹேந்திரா பொளேரோ கெப் ரக வாகனமொன்றில் மோதி இழுத்துச் செல்லப்பட்டு ஆபத்தான நிலையில் நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த இளைஞன் சிகிச்சைப் பலனின்றி கடந்த (31) உயிரிழந்தார்.

சென்கிளையார் புகையிரத விடுதியைச் தற்காலிக வசிப்பிடமாக கொண்ட செல்வநாதன் புஸ்பகுமார் (வயது 28) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞனுக்கு நீதிகோரியும் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட சாரதியை மீண்டும் கைது செய்யுமாறுகோரியும் 100 இற்கும் அதிகமான இளைஞர்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர்.இதனையடுத்து குறித்த சந்தேக நபரான சாரதி நேற்று (3) தலவாக்கலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது சந்தேக நபரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

தலவாக்கலை பி.கேதீஸ்

விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி: யாழில் சோகம்!

யாழ்ப்பாணம் –  தெல்லிப்பழையில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தெல்லிப்பழை வைத்தியசாலையிலிருந்து கீரிமலை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வேளை கனரக வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட வேளை குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்துச் சம்பவத்தில் தெல்லிப்பழையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடனும் மோதி கனரக வாகனத்துடன் மோதியே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்துச்சம்பவம் தொடர்பாக தெல்லிப்பழை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தேசிய ஒற்றுமைக்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு வத்திக்கான் பாராட்டு

நாட்டில் பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி இலங்கையை மீண்டும் இயல்புநிலைக்குக் கொண்டுவர ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளை பெரிதும் பாராட்டுவதாகவும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும் தேசிய ஒற்றுமையை மேம்படுத்தவும் இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளை வத்திக்கான் ஆதரிப்பதாகவும் வத்திக்கானின் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர் ஆண்டகை தெரிவித்தார்.

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள வத்திக்கானின் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர் , இன்று (04) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்தார்.

பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர் ஆண்டகைக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அமோக வரவேற்பளித்ததோடு, நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றங்கள் குறித்து அவருக்கு தெளிவுபடுத்தினார். இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள தற்போதைய நிலையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டமை தொடர்பில் பேராயருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

பேராயரின் இலங்கைக்கான விஜயம் நாட்டுக்கு கிடைத்த ஆசீர்வாதம் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, வத்திக்கானுக்கும் இலங்கைக்கும் இடையிலான அரை நூற்றாண்டு கால இராஜதந்திர உறவுகள் நமது நாட்டிற்கு ஆன்மீக ரீதியாக மட்டுமன்றி, நாட்டில் மனித கண்ணியத்தை மேம்படுத்துவதிலும் பிரதானமாக அமைந்ததாகக் குறிப்பிட்டார்.

இலங்கையின் கல்வித் துறைக்கு வழங்கிய ஒத்துழைப்பைப் போன்றே சுனாமி பேரழிவிற்குப் பின்னர் நாட்டை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கு வத்திக்கான் அளித்த உதவிகளையும், இதன்போது நினைவு கூர்ந்த ஜனாதிபதி, கடந்த 50 ஆண்டுகளாக வத்திக்கான் காட்டிய ஆதரவு மற்றும் நட்புறவுக்கு நன்றி தெரிவித்தார்.

XIV ஆவது பாப்பரசர் லியோவின் உடல்நலன் குறித்தும் ஜனாதிபதி விசாரித்தோடு அவர் தொடர்ந்து சிறந்த தேகாரோக்கியத்தையும் வலிமையையும் பெற பிராத்தித்ததோடு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இலங்கையின் தற்போதைய முன்னேற்றத்தை தானும் புனித பாப்பரசரும் பெரிதும் பாராட்டுவதாகக் கூறிய பேராயர் கல்லாகர் ஆண்டகை, XIV ஆவது பாப்பரசர் லியோ விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்வது குறித்து பரிசீலிப்பார் என்றும் மேலும் குறிப்பிட்டார்.

வத்திக்கானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 50 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பேராயர் கல்லாகர் ஆண்டகை நாட்டில் உள்ள அனைத்து சமூகங்களிடையேயும் அமைதி, ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர புரிதலை மேம்படுத்துவதற்கான இரு நாடுகளின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில், நவம்பர் 8 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார். அந்த சமயத்தில் அவர் நாட்டின் பல முக்கிய இடங்களுக்கு விஜயம் செய்ய உள்ளார்.

1975 செப்டம்பர் 6 ஆம் திகதி இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டதைக் குறிக்கும் வகையில் ‘வத்திக்கானின் தொலைநோக்கு, உரையாடல் மற்றும் அமைதிக்கான அர்ப்பணிப்பு’ என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கில் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர் ஆண்டகை பங்கேற்க உள்ளார்.

வத்திக்கான் அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, அருட்தந்தைகளான ரொபர்டோ லுகினி மற்றும் டோமிஸ்லாவ் சுபெத் ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். அதே வேளை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.

இந்திய நிதி அமைச்சரை சந்தித்தார் சஜித்!

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, புது டில்லியில் அமைந்துள்ள நிதி அமைச்சில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்தியா போன்ற பெரிய சந்தை வாய்ப்புகளை அணுகுவதன் மூலம் இலங்கையின் தொழிற்துறையை வேகமாக முன்னேற்றம் காணச் செய்ய முடியும் என்று இந்திய நிதி அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.

வலுவான உள்நாட்டு தொழிற்துறைகள் மூலம் இலங்கையின் பொருளாதார இறையாண்மையை மேம்படுத்திக் கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2022 இல் ஏற்பட்ட நெருக்கடியின் போது இந்தியா வழங்கிய 4 பில்லியன் அமெரிக்க டொலர் ஒத்துழைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது நன்றிகளை இதன்போது தெரிவித்தார்.

அத்துடன், ஒரு தனி நாடாக இலங்கைக்கு வழங்கிய மிகப்பெரிய நிதி மானியம் இதுவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொழிற்துறை கொள்கை மற்றும் டிஜிட்டல் ஆளுகை தொடர்பில் இந்தியாவின் சாதனைகளை பாராட்டிய எதிர்க்கட்சித் தலைவர், ஒப்பீட்டு ரீதியாக நிலைத்தன்மை காணப்பட்ட போதிலும், இலங்கை இன்னும் வெளிநாட்டு கையிருப்புக்களை மீண்டும் கட்டியெழுப்புதல், ஏற்றுமதிகளை பன்முகப்படுத்தல் மற்றும் வறுமை ஒழிப்பு உள்ளிட்ட முக்கிய சவால்களை எதிர்கொண்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.

வெளிப்படையான மற்றும் நம்பிக்கை அடிப்படையிலான ஒத்துழைப்பின் அவசியப்பாடு தொடர்பில் இரு தரப்பினரும் இங்கு இணங்கிக் கொண்டனர்.

கூட்டு முயற்சியாண்மைகள் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றத்தை ஊக்குவிப்பதற்கு இந்தியா-இலங்கை தொழிநுட்பம் சார் கைத்தொழில் வலயத்தை உருவாக்கும் யோசனையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது முன்வைத்தார்.

 

நவீன வர்த்தக யதார்த்தங்களுக்கு ஏற்றவாறு இந்திய-இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை புதுப்பித்துக் கொள்வதற்கும் இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்தார்.

அம்பலாங்கொடை துப்பாக்கிச்சூட்டு சம்பவம்: 4 பொலிஸ் குழுக்கள் விசாரணை வேட்டை!

அம்பலாங்கொடை நகர சபை வளாகத்துக்கு அருகில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் நான்கு பொலிஸ் குழுக்கள், விசாரணை வேட்டையில் இறங்கியுள்ளன.

துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்துள்ளார்.
55 வயதான நிலந்த வருஷ விதான என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காரொன்றில் வந்த இருவரே துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

குறித்த காரை மற்றுமொரு பிரதேசத்தில் கைவிடப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய கரந்தெனிய சுத்தா என்பவரின் மைத்துனர் என தெரியவருகின்றது. அவர் வர்த்தகர் எனவும் கூறப்படுகின்றது.

அதேவேளை, உயிரிழந்தவர் நகரசபை உறுப்பினர் அல்லர் எனவும் தெரியவருகின்றது.

 

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

அணுசக்தி திட்டத்தை ஈரான் கைவிடாது!

0
ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி தற்போது மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பயணம், இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டது என்று அந்நாட்டின் தேசிய பாதுகாப்புத் தலைவர் Ebrahim...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

ஈரான் வெளிவிவகார அமைச்சர், பாகிஸ்தான் ராணுவ தளபதி சந்திப்பு!

0
ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி மற்றும் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோருக்கு இடையில் முக்கிய சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு விவகாரங்கள்...