Home Blog Page 222

அம்பலாங்கொடை துப்பாக்கிச்சூட்டு சம்பவம்: 4 பொலிஸ் குழுக்கள் விசாரணை வேட்டை!

அம்பலாங்கொடை நகர சபை வளாகத்துக்கு அருகில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் நான்கு பொலிஸ் குழுக்கள், விசாரணை வேட்டையில் இறங்கியுள்ளன.

துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்துள்ளார்.
55 வயதான நிலந்த வருஷ விதான என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காரொன்றில் வந்த இருவரே துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

குறித்த காரை மற்றுமொரு பிரதேசத்தில் கைவிடப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய கரந்தெனிய சுத்தா என்பவரின் மைத்துனர் என தெரியவருகின்றது. அவர் வர்த்தகர் எனவும் கூறப்படுகின்றது.

அதேவேளை, உயிரிழந்தவர் நகரசபை உறுப்பினர் அல்லர் எனவும் தெரியவருகின்றது.

 

காலி மாவட்ட பெருந்தோட்டங்களுக்கு பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் விஜயம்

 

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் காலி மாவட்டத்திலுள்ள பெருந்தோட்டங்கள் மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான விஜயமொன்றினை கடந்த 31 ஆம் திகதி மேற்கொண்டிருந்தார்.

இதன்போது காலி மாவட்டத்தின் எல்பிடிய திவித்துறை தமிழ் மகாவித்தியாலயம், தலங்கஹா சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயங்களில் இடம்பெற்ற நிகழ்வுகளில் அவர் கலந்துகொண்டார்.

விசேடமாக காலி மாவட்டத்தில் இரு கல்வி வலயங்களில் உடுகம கல்வி வலயத்தில் சரஸ்வதி தமிழ் வித்தியாலயம், தலங்கஸ்வல தமிழ் கனிஷ்ட வித்தியாலயம் மற்றும் எல்பிடிய கல்வி வலயத்தில்; விவேகானந்தா வித்தியாலயம் போன்ற வித்தியாலயங்களில் ஆசிரிய பற்றாக்குறை, உயர்தரத்தில் கணித விஞ்ஞானப் பிரிவு ஆரம்பித்தல் மற்றும் பாடசாலையில் காணப்படுகின்ற இடப்பற்றாக்குறை தொடர்பாக கல்வி அமைச்சுடன் கலந்துரையாடி தீர்வொன்றைப்பெற்றுக் கொடுப்பதாக பிரதியமைச்சர் தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற போதை ஒழிப்பு தேசிய வேலைத் திட்டங்களிலே பொது மக்களின் பங்களிப்பு அத்தியாவசியமானது எனத் தெரிவித்த அவர், விசேடமாக ஆன்மீக துறைசார்ந்தவர்கள், கல்வியியலாளர்கள், பெற்றோர் அனைவருக்குமே ஒரு பாரிய பொறுப்புள்ளதாகவும் அரசாங்கமும் பொதுமக்களும் ஒன்றிணைந்து செயல்படுவதால் மாத்திரமே எமது எதிர்கால தலைமுறையை சிறந்த பிரஜைகளாக உருவாக்க முடியும் எனவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

தான் விரும்பும் மொழியில் கல்விகற்கும் உரிமை நாட்டில் சகலருக்கும் உள்ளதாக குறிப்பிட்ட பிரதியமைச்சர், பாடசாலையில் காணப்படுகின்ற குறைபாடுகள் மற்றும் போக்குவரத்து பிரச்சினைகள் காரணமாக மாணவர்கள் மாற்று மொழிகளில் கல்விகற்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுவதாகவும் இதனால் அதிகமானவர்கள் இடைவிலக நேரிடுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

காலி மாவட்டத்தில் பத்தேகம, தலங்கஹா, நாக்கியாதெனிய, எம்மெலிய தோட்டங்களில் வாழும் மக்களோடும் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கலந்துரையாடினார்.

இதன்போது தாம் எதிர்கொள்கின்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் அம்மக்கள் பிரதியமைச்சரிடம் முன்வைத்தனர். இதில் வீடு, வீதி,போக்குவரத்து, மின்சாரம் போன்ற அடிப்படை பிரச்சினைகள் தொடர்ந்தும் காணப்படுவதாகவும் கடந்த காலங்களில் இங்கு வாழும் மக்கள் பல்வேறு பிரச்சினைகள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்ததாகவும் பிரதியமைச்சருக்கு எடுத்துக் கூறினர். இதன்போது எம்மெலிய தனியார் தோட்ட மக்கள் முகங்கொடுக்கின்ற காணி பிரச்சினைகள் தொடர்பாக காலி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளுமாறு இவ்விஜயத்தில் பங்கேற்ற காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்த யூ கமகேவிடம் பிரதியமைச்சர் பிரதீப் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வுகளில் நாக்கியாதெனிய பிரதேச சபை தலைவர் மற்றும் உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்ததோடு பெருந்தோட்ட அமைச்சினால் காலி தலங்கஹா பிரிவில் நிர்மாணிக்கப்படுகின்ற வீட்டுத் திட்டங்கள் அறநெறி பாடசாலை கட்டடங்கள், ஆலயங்களையும் பிரதியமைச்சர் பார்வையிட்டார்.

போதை ஒழிப்பு சமர்: சண்டியர்கள் நொண்டியர்களாக்கப்படுவர்!

 

போதைப்பொருளுக்கு முடிவு கட்டுவதற்குரிய சமர் ஆரம்பமாகியுள்ளது. இந்த சமரை கண்டு அஞ்ச வேண்டாம். அதற்கு பேராதரவு தாருங்கள். வடக்கு மண்ணில் இருந்து போதைப்பொருள் மாபியாக்கள் உட்பட குற்றச்செயல்களில் ஈடுபடும் தரப்புகளை துடைத்தெறிவோம் – என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகம் மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலகம் இணைந்து நடத்திய நடமாடும் சேவை சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு அழைப்பு விடுத்தார்.

“ போதைப்பொருள் விற்பனையாளர்கள், கஞ்சா கடத்துபவர்கள் மற்றும் வாள்வெட்டு குழுவினரால் யாழ். மாவட்டம் சீரழிந்து வருகின்றது. எனவே, இவற்றுக்கு முடிவு கட்டி, சுமூக நிலைமையை தோற்று விக்குமாறு யாழ். மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர். தற்போது போதைப்பொருள் கும்பல் மற்றும் பாதாள குழு உறுப்பினர்களின் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு வருகின்றது.

போதைப்பொருளுக்கு எதிரான கூட்டு நடவடிக்கை நாடு தழுவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாதாள குழு பின்னணியில் கறுப்பு நிர்வாக பொறிமுறையொன்றே உள்ளது. இதற்கு உதவும் சில நபர்கள் எல்லா இடங்களிலும் இருக்கவே செய்கின்றனர். இதன் பின்னணியில் கறுப்பு பணம் புகுந்து விளையாடுகின்றது.” எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலைமையை கண்டும், காணாததுபோல் இருக்க முடியாது. அது எமது இளைய தலைமுறையினருக்கு இழைக்கும் பெரும் துரோகமாகும். எனவே, யுகத்துக்கு முடிவு கட்டப்படும். மக்களால் சட்டப்பூர்வமாக செயற்படும் அரசாங்கம் தான் நாட்டை ஆள வேண்டும். கறுப்பு உலகத்தால் நிர்வாகத்தை முன்னெடுக்க இடமளிக்க முடியாது.

மக்களுக்காக செயலாற்றுவதே எமது அரசாங்கத்தின் நோக்கம். ஊழல், மோசடிகளற்ற தூய நிர்வாகத்தை நோக்கிய பயணத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். குறிப்பாக அரசாங்க ஊழியர்கள் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும். அரச ஊழியர்களுக்குரிய அத்தனை வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.

போதைப்பொருளுக்கு முடிவு கட்டுவதற்குரிய சமர் ஆரம்பமாகியுள்ளது. இந்த சமரை கண்டு அஞ்ச வேண்டாம். அதற்கு பேராதரவு தாருங்கள். மக்களுக்கு தகவல் தெரியும். அதனை உரிய தரப்பினருக்கு அறிவியுங்கள். எதற்கும் அஞ்சவேண்டாம். இளைஞர்களே முன்வாருங்கள், உங்களுக்கு பின்னால் அரசாங்கம் நிற்கும். சண்டியர்களை நொண்டியர்களாக்குவோம்.” – என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேலும் குறிப்பிட்டார்.

 

கல்யாண வீட்டில் கோழி கறிக்காக சண்டை: 15 பேர் காயம்!

 

உத்​தர பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகு​தி​யில் அண்​மை​யில் ஒரு திரு​மணத்தில் வறுத்த கோழி பரி​மாறு​வ​தில் தகராறு ஏற்​பட்​டது.

மணமகன் வீட்​டாருக்கு நடை​பெற்ற விருந்​தில் குறைந்த அளவுக்கு கோழி இறைச்​சித் துண்​டு​கள் பரி​மாறப்​பட்​ட​தாம்.

மேலும் விருந்து வகைகளைப் பரி​மாறும் நபர்​கள் தங்​களை மோச​மாக நடத்​தி​ய​தாக​வும் மணமகன் வீட்​டார் கோபப்​பட்​டனர்.

இதைத் தொடர்ந்து மணமகன் வீட்​டார், மணமகள் வீட்​டாருடன் சண்டை போட்​டனர். ஒரு கட்​டத்​தில் இரு வீட்​டாரும் கைகலப்பில் ஈடு​பட்டு திருமண மண்​டபமே களேபர​மானது. இதையடுத்து அங்கு பொலிஸார் வரவழைக்​கப்​பட்​டனர்.

பொலிஸார் தலை​யீட்​டின் பின்​னர் திரு​மணம் இனிதே நடந்து முடிந்​தது. திருமண வீட்​டில் நடந்த சண்​டை​யில் 15 பேர் காயமடைந்து மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டனர். திருமண வீட்​டில் நடந்த சண்டை தொடர்​பான வீடியோக்​கள் சமூக வலை​தளங்​களில்​ வெளி​யாகி வைரலாகின.

நாமல்தான் அடுத்த ஜனாதிபதியென நாட்டு மக்கள் கூற ஆரம்பித்துவிட்டனர்…!

நாமல் ராஜபக்ச சிறந்த இளம் தலைவராக செயற்பட்டுவருகின்றார். அவர்தான் அடுத்த ஜனாதிபதியென நாட்டு மக்கள் கூற ஆரம்பித்துள்ளனர் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சிரேஷ்ட தலைவர்களுள் ஒருவரான ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,

“ கடந்த ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்ச களமிறங்கியதால்தான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பாதுகாக்கப்பட்டது.

தோல்வி உறுதி என்பது தெரிந்தும், களமிறங்க வேண்டாம், உங்கள் அரசியல் எதிர்காலம் நாசமாகிவிடும் என நாமலிடம் பல உறுப்பினர்கள் கூறினர். அவரது குடும்ப உறுப்பினர்கள்கூட இதனை வலியுறுத்தினர். ஆனால் நெருக்கடியான சூழ்நிலையிலும் சவாலை ஏற்ற இளம் தலைவர் அவர். அதுமட்டுமல்ல நாடாளுமன்றத்திலும் துணிவுடன் செயல்பட்டுவருகின்றார்.

ஜனாதிபதி தேர்தலில் 2.5 சதவீத வாக்குகளே கிடைக்கப்பெற்றன. ஆனால் பொதுத்தேர்தலில் அது 10 சதவீதமாக அதிகரித்தது. நாமல் அன்று வழங்கிய உத்வேகமே இதற்கு காரணம்.

அதேவேளை, நாமல் ராஜபக்சதான் அடுத்த ஜனாதிபதியென நாட்டு மக்கள் கூறிவருகின்றனர். அது உண்மை. அடுத்த தேர்தலில் வென்று ஆட்சியை பிடிப்போம்.” – என்றார் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ.

அணு ஆயுத சோதனை: சீனா, ரஷ்யா அமெரிக்காவுக்கு எச்சரிக்கை!

சீனா உள்ளிட்ட நாடுகள் பூமிக்கடியில் அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்தை குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது.

“ சீனா ஒரு பொறுப்பான அணு ஆயுத நாடாகும். அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்த மாட்டேன் என்ற தன் நீண்டகால கொள்கையில் சீனா உறுதியாக உள்ளது.

எந்த சூழ்நிலையிலும், எந்த நேரத்திலும் அணு ஆயுதங்களை முதலில் சீனா பயன்படுத்தப் போவதில்லை என்பதை இதன் வாயிலாக உறுதியளிக்கிறோம்.” என்று சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சீனா ஒரு தற்காப்பு அணுசக்தி கொள்கையை கடைப்பிடித்து வருகிறது-. மேலும், அணு ஆயுத சோதனைகளுக்காக தானாக விதித்துக்கொண்ட தடையை பின்பற்றி வருகிறது.

இதேபோ ன்று உலகளாவிய அணு ஆயுத சோதனைகள் மீதான தடையையும், அணு ஆயுத பரவல் தடுப்பு முறையையும் பாதுகாப்பதற்கான அதன் உறுதிமொழிகளை அமெரிக்கா உண்மையுடன் கடைப்பிடிக்க வேண்டும்.” எனவும் சீன வெளிவிவகார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று அமெரிக்க ராணுவத்துக்கு, ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் ரகசியமாக அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்வதை இதற்கு காரணமாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், அமெரிக்கா முதலில் முழுமையான அணு ஆயுத சோதனையை துவக்கினால், ரஷ்யாவும் பதிலுக்கு சோதனையை துவங்கும் என, ரஷ்யா வெளிப்படையாக எச்சரித்துள்ளது.

அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தத்தின் உறுதிப்பாட்டை அமெரிக்கா மதிக்க வேண்டும் என, தற்போது சீனாவும் வலியுறுத்தியுள்ளது.

அணு ஆயுத சோதனை: சீனா, ரஷ்யா அமெரிக்காவுக்கு எச்சரிக்கை!

சீனா உள்ளிட்ட நாடுகள் பூமிக்கடியில் அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்தை குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது.

“ சீனா ஒரு பொறுப்பான அணு ஆயுத நாடாகும். அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்த மாட்டேன் என்ற தன் நீண்டகால கொள்கையில் சீனா உறுதியாக உள்ளது.

எந்த சூழ்நிலையிலும், எந்த நேரத்திலும் அணு ஆயுதங்களை முதலில் சீனா பயன்படுத்தப் போவதில்லை என்பதை இதன் வாயிலாக உறுதியளிக்கிறோம்.” என்று சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சீனா ஒரு தற்காப்பு அணுசக்தி கொள்கையை கடைப்பிடித்து வருகிறது-. மேலும், அணு ஆயுத சோதனைகளுக்காக தானாக விதித்துக்கொண்ட தடையை பின்பற்றி வருகிறது.

இதேபோ ன்று உலகளாவிய அணு ஆயுத சோதனைகள் மீதான தடையையும், அணு ஆயுத பரவல் தடுப்பு முறையையும் பாதுகாப்பதற்கான அதன் உறுதிமொழிகளை அமெரிக்கா உண்மையுடன் கடைப்பிடிக்க வேண்டும்.” எனவும் சீன வெளிவிவகார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று அமெரிக்க ராணுவத்துக்கு, ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் ரகசியமாக அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்வதை இதற்கு காரணமாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், அமெரிக்கா முதலில் முழுமையான அணு ஆயுத சோதனையை துவக்கினால், ரஷ்யாவும் பதிலுக்கு சோதனையை துவங்கும் என, ரஷ்யா வெளிப்படையாக எச்சரித்துள்ளது.

அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தத்தின் உறுதிப்பாட்டை அமெரிக்கா மதிக்க வேண்டும் என, தற்போது சீனாவும் வலியுறுத்தியுள்ளது.

சமஷ்டி அதிகாரங்கள் வேண்டும்: விக்னேஸ்வரன் வலியுறுத்து!

 

“ பூர்வீக குடிகளான எமக்கு நாம் இழந்த எமது தன்னாட்சி அதிகாரங்களை மீள வழங்குவதில் ஏனைய எல்லா கட்சிகளையும் விட மிகவும் இன ரீதியான சிந்தனையுடனும் அறிவுபூர்வமற்ற விதத்திலும் இந்த அரசாங்கம் செயற்படுகின்றது.”

– இவ்வாறு தேசிய மக்கள் சக்தி அரசைக் காட்டமாக விமர்சித்திருக்கின்றார் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சருமமான க.வி.விக்னேஸ்வரன்.

யாழ்ப்பாணம், சேர் பொன் இராமநாதன் வீதியில் தமிழ் மக்கள் கூடடணியின் தலைமைச் செயலகத்தைத் திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

“ இன்றைய அரசாங்கம் காணி அபகரிப்பு தொடர்பில் முன்னைய ஆட்சியாளர்களின் அதே மனோநிலையில் இருப்பதாகவே தென்படுகின்றது.

வடக்கு மாகாணத்தில் 65 ஆயிரம் ஏக்கர் அரச காணிகள் இன்னமும் படையினரால் கையகப்படுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. மிகக் குறைந்த தனியார் காணிகளே இன்றைய அரசாங்கத்தால் அவற்றின் சொந்தக்காரர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன.

அரச திணைக்களங்கள் வடமாகாண காணிகளைக் கையேற்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றன. “ எனவும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

எனினும் ஒரு சில பொது விடயங்களில் இந்த அரசாங்கம் நடந்து கொள்வது சரியானதாகவே படுகின்றது. நாட்டைச் சூறையாடியவர்களைச் சட்டத்தின் முன் கொண்டு வர அயராது பாடுபடுகின்றார்கள். தாம் கையேற்ற பொருளாதார வங்குரோத்து நிலையை மேலும் சீரழிந்து போகவிடாமல் காப்பாற்ற பல வழிகளில் பாடுபடுகின்றார்கள்.

வன்முறையில் ஈடுபடும் பாதாளக் குழுக்களை வேட்டையாடிக் கொண்டிருக்கின்றார்கள். போதை மருந்து வருகையையும் பாவனையையும் குறைக்கப் பாடுபடுகின்றார்கள்.

நான் எவ்வாறு முதலமைச்சராக இருந்த போது எனது அமைச்சர்கள் பற்றி ஊழல் முறைப்பாடுகள் வந்த போது அவற்றை மூடி மறைக்காமல் வெளிப்படுத்தி நீதி முறையான விசாரணைகளை ஆரம்பித்தேனோ அதேபோன்று ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பலர் சம்பந்தமாக அரசாங்கம் நீதிமுறை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளமை வரவேற்கத்தக்கது. அவர்கள் மேற்கொள்ளும் நல்ல நடவடிக்கைகளை நாம் பாராட்டித்தான் ஆகவேண்டும்.

அதேவேளை, எமக்கு எதிரான அவர்களின் செயற்பாடுகளையும் நாம் அச்சம் இல்லாமல் சுட்டிக்காட்டத்தான் வேண்டும்.

குறிப்பாக, பூர்வீக குடிகளான எமக்கு நாம் இழந்த எமது தன்னாட்சி அதிகாரங்களை மீள வழங்குவதில் ஏனைய எல்லா கட்சிகளையும் விட மிகவும் இனரீதியான சிந்தனையுடனும் அறிவுபூர்வமற்ற விதத்திலும் இந்த அரசாங்கம் செயற்படுகின்றது. இந்த நாட்டைப் பொருளாதார ரீதியாக வலுவான ஓர் அமைதி நிறைந்த நாடாகக் கட்டி எழுப்பப் போவதாகக் கூறுகின்றார்கள்.

ஆனால், இந்த நாட்டின் பூர்வீக மக்களான தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைகளை மதியாமலும் தொடர்ந்து நசுக்கி வைத்திருப்பதன் ஊடாகவும் நிலையான சமாதானத்தையோ அல்லது வலுவான பொருளாதாரதையோ கட்டி எழுப்ப முடியாது என்பதே யதார்த்தமாகும். இதனை நான் கூறவில்லை.
முரண்பாடுகளுக்கான தீர்வு தொடர்பிலான வல்லுநர்கள் இதனையே கூறுகின்றார்கள். ஆகவே, தமிழ் மக்களுக்கு இந்த அரசாங்கம் தனது மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பயன்படுத்தி, சமஷ்டி ரீதியான தக்க அதிகாரங்களை வழங்க வேண்டும்.

தமிழ் பேசும் வடக்கு, கிழக்கு மக்களுக்கு சமஷ்டி ரீதியான அதிகாரங்களை வழங்குவதே இலங்கையை ஆசியாவின் ஒரு நிலையான சமாதானமும், பொருளாதார வலுவும் மிக்க செழிப்பான நாடக ஆக்குவதற்கான ஒரே ஒரு இலகுவான அதேநேரம் விரைவானதுமான வழி ஆகும்.
சமஷ்டி என்று கூறாமல் கூட வடகிழக்கிற்கு சட்டப்படியான சுயநிர்ணய உரிமையைக் கையளிக்க முடியும். இதனைச் செய்தால், அரசாங்கம் எந்த ஒரு நாட்டிடமோ அல்லது சர்வதேச நாணய நிதியமிடமோ கை ஏந்த வேண்டியதில்லை.

ஆனால், என்.பி.பி. அரசாங்கம் இவ்வாறு செய்யும் அளவுக்கு யதார்த்தவாதிகளையோ, துணிச்சல்காரர்களையோ அல்லது இனவாதம் அற்றவர்களையோ தற்போது கொண்டிருக்கவில்லை என்பது எனது கருத்து.

குறைந்த பட்சம் அரசமைப்பில் இருக்கும் அரைகுறையான அதிகாரங்களைப் பெற்ற மாகாண சபைத் தேர்தல்களைக்கூட நடத்தி நாம் எந்த அதிகாரங்களையும் அனுபவிப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்ற சிந்தனையில்த் தான் அரசாங்கத்தினர் இருக்கின்றார்கள்.

இந்த இடத்தில், இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பில் இந்தியா தொடர்ந்தும் கரிசனை காட்டாது இருப்பதை நான் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கின்றது.
இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் கீழான 13 ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கும் இந்தியா ஏன் இலங்கை அரசாங்கத்தை நிர்ப்பந்திப்பதற்குத் தொடர்ந்து தயங்குகின்றது என்று தெரியவில்லை. “ – என வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

 

கொழும்பு வருமாறு இந்திய தொழில்துறை கூட்டமைப்பினருக்கு சஜித் அழைப்பு!

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச , புது டில்லியில் இந்திய தொழில்துறை கூட்டமைப்பினரை சந்தித்து முக்கிய பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையிலான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், வர்த்தகம் மற்றும் முதலீட்டு தொடர்புகளை விரிவுபடுத்தல் உள்ளிட்ட விடயங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

1895 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இந்தியத் தொழிற்துறை கூட்டமைப்பானது இந்தியாவின் முன்னணி வர்த்தக சங்கமாகும்.

இலங்கையில் தனியார் துறையால் இயக்கப்படும், புதுமைகளை அடிப்படையாகக் கொண்ட அபிவிருத்தி மாதிரியை மேம்படுத்துவதற்கு நாம் உறுதிபூண்டுள்ளோம் என்றும், இலங்கையின் மறுசீரமைப்புக்குப் பிந்தைய மீட்சியில் பெரும் பங்கை ஆற்றுவதற்கு இந்திய தொழில்துறைக்கு அழைப்பு விடுக்கிறோம் என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

விவசாய பதப்படுத்தல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வழங்கல் சேவைகள், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி போன்ற துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்புக்கு கூடிய வாய்ப்பைப் பெற்றுத் தருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு தெரிவித்தார்.

முதலீட்டு வாய்ப்புகளை அடையாளம் காணவும், இலங்கை ஏற்றுமதி சபைக்கும் , இந்திய தொழிற்துறை வலையமைப்புகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், இலங்கை – இந்திய தொழில்துறை கூட்டமைப் வர்த்தக மன்றம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கும் எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது யோசனை முன்வைத்தார்.

வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப கூட்டாண்மைகள் தொடர்பில் ஆராயும் பொருட்டு வணிக முயற்சி பிரதிநிதிகள் குழவினரை கொழும்புக்கு விஜயம் செய்யுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்தார்.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

யாழிலிருந்து யாத்திரைவந்த சிவபக்தர்களுக்கு மலையகத்தில் வரவேற்பு!

0
யாழ்ப்பாணத்தில் இருந்து சிவனொளி பாதமலைக்கான புனித திருத்தல யாத்திரை மேற்கொண்டுள்ள யாத்திரிகள், இன்று கொட்டகலை பகுதியை வந்தடைந்தனர். கொட்டகலை ரொக்கிலிலுள்ள சிவஆலயத்தில் , மலையக இந்து குருமார் ஒன்றியத்தால் அவர்களுக்கு வரவேற்பளிக்கப்பட்டது. அங்கு சிவ...

அணுசக்தி திட்டத்தை ஈரான் கைவிடாது!

0
ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி தற்போது மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பயணம், இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டது என்று அந்நாட்டின் தேசிய பாதுகாப்புத் தலைவர் Ebrahim...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...