Home Blog Page 223

சமஷ்டி அதிகாரங்கள் வேண்டும்: விக்னேஸ்வரன் வலியுறுத்து!

 

“ பூர்வீக குடிகளான எமக்கு நாம் இழந்த எமது தன்னாட்சி அதிகாரங்களை மீள வழங்குவதில் ஏனைய எல்லா கட்சிகளையும் விட மிகவும் இன ரீதியான சிந்தனையுடனும் அறிவுபூர்வமற்ற விதத்திலும் இந்த அரசாங்கம் செயற்படுகின்றது.”

– இவ்வாறு தேசிய மக்கள் சக்தி அரசைக் காட்டமாக விமர்சித்திருக்கின்றார் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சருமமான க.வி.விக்னேஸ்வரன்.

யாழ்ப்பாணம், சேர் பொன் இராமநாதன் வீதியில் தமிழ் மக்கள் கூடடணியின் தலைமைச் செயலகத்தைத் திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

“ இன்றைய அரசாங்கம் காணி அபகரிப்பு தொடர்பில் முன்னைய ஆட்சியாளர்களின் அதே மனோநிலையில் இருப்பதாகவே தென்படுகின்றது.

வடக்கு மாகாணத்தில் 65 ஆயிரம் ஏக்கர் அரச காணிகள் இன்னமும் படையினரால் கையகப்படுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. மிகக் குறைந்த தனியார் காணிகளே இன்றைய அரசாங்கத்தால் அவற்றின் சொந்தக்காரர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன.

அரச திணைக்களங்கள் வடமாகாண காணிகளைக் கையேற்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றன. “ எனவும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

எனினும் ஒரு சில பொது விடயங்களில் இந்த அரசாங்கம் நடந்து கொள்வது சரியானதாகவே படுகின்றது. நாட்டைச் சூறையாடியவர்களைச் சட்டத்தின் முன் கொண்டு வர அயராது பாடுபடுகின்றார்கள். தாம் கையேற்ற பொருளாதார வங்குரோத்து நிலையை மேலும் சீரழிந்து போகவிடாமல் காப்பாற்ற பல வழிகளில் பாடுபடுகின்றார்கள்.

வன்முறையில் ஈடுபடும் பாதாளக் குழுக்களை வேட்டையாடிக் கொண்டிருக்கின்றார்கள். போதை மருந்து வருகையையும் பாவனையையும் குறைக்கப் பாடுபடுகின்றார்கள்.

நான் எவ்வாறு முதலமைச்சராக இருந்த போது எனது அமைச்சர்கள் பற்றி ஊழல் முறைப்பாடுகள் வந்த போது அவற்றை மூடி மறைக்காமல் வெளிப்படுத்தி நீதி முறையான விசாரணைகளை ஆரம்பித்தேனோ அதேபோன்று ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பலர் சம்பந்தமாக அரசாங்கம் நீதிமுறை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளமை வரவேற்கத்தக்கது. அவர்கள் மேற்கொள்ளும் நல்ல நடவடிக்கைகளை நாம் பாராட்டித்தான் ஆகவேண்டும்.

அதேவேளை, எமக்கு எதிரான அவர்களின் செயற்பாடுகளையும் நாம் அச்சம் இல்லாமல் சுட்டிக்காட்டத்தான் வேண்டும்.

குறிப்பாக, பூர்வீக குடிகளான எமக்கு நாம் இழந்த எமது தன்னாட்சி அதிகாரங்களை மீள வழங்குவதில் ஏனைய எல்லா கட்சிகளையும் விட மிகவும் இனரீதியான சிந்தனையுடனும் அறிவுபூர்வமற்ற விதத்திலும் இந்த அரசாங்கம் செயற்படுகின்றது. இந்த நாட்டைப் பொருளாதார ரீதியாக வலுவான ஓர் அமைதி நிறைந்த நாடாகக் கட்டி எழுப்பப் போவதாகக் கூறுகின்றார்கள்.

ஆனால், இந்த நாட்டின் பூர்வீக மக்களான தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைகளை மதியாமலும் தொடர்ந்து நசுக்கி வைத்திருப்பதன் ஊடாகவும் நிலையான சமாதானத்தையோ அல்லது வலுவான பொருளாதாரதையோ கட்டி எழுப்ப முடியாது என்பதே யதார்த்தமாகும். இதனை நான் கூறவில்லை.
முரண்பாடுகளுக்கான தீர்வு தொடர்பிலான வல்லுநர்கள் இதனையே கூறுகின்றார்கள். ஆகவே, தமிழ் மக்களுக்கு இந்த அரசாங்கம் தனது மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பயன்படுத்தி, சமஷ்டி ரீதியான தக்க அதிகாரங்களை வழங்க வேண்டும்.

தமிழ் பேசும் வடக்கு, கிழக்கு மக்களுக்கு சமஷ்டி ரீதியான அதிகாரங்களை வழங்குவதே இலங்கையை ஆசியாவின் ஒரு நிலையான சமாதானமும், பொருளாதார வலுவும் மிக்க செழிப்பான நாடக ஆக்குவதற்கான ஒரே ஒரு இலகுவான அதேநேரம் விரைவானதுமான வழி ஆகும்.
சமஷ்டி என்று கூறாமல் கூட வடகிழக்கிற்கு சட்டப்படியான சுயநிர்ணய உரிமையைக் கையளிக்க முடியும். இதனைச் செய்தால், அரசாங்கம் எந்த ஒரு நாட்டிடமோ அல்லது சர்வதேச நாணய நிதியமிடமோ கை ஏந்த வேண்டியதில்லை.

ஆனால், என்.பி.பி. அரசாங்கம் இவ்வாறு செய்யும் அளவுக்கு யதார்த்தவாதிகளையோ, துணிச்சல்காரர்களையோ அல்லது இனவாதம் அற்றவர்களையோ தற்போது கொண்டிருக்கவில்லை என்பது எனது கருத்து.

குறைந்த பட்சம் அரசமைப்பில் இருக்கும் அரைகுறையான அதிகாரங்களைப் பெற்ற மாகாண சபைத் தேர்தல்களைக்கூட நடத்தி நாம் எந்த அதிகாரங்களையும் அனுபவிப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்ற சிந்தனையில்த் தான் அரசாங்கத்தினர் இருக்கின்றார்கள்.

இந்த இடத்தில், இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பில் இந்தியா தொடர்ந்தும் கரிசனை காட்டாது இருப்பதை நான் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கின்றது.
இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் கீழான 13 ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கும் இந்தியா ஏன் இலங்கை அரசாங்கத்தை நிர்ப்பந்திப்பதற்குத் தொடர்ந்து தயங்குகின்றது என்று தெரியவில்லை. “ – என வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

 

கொழும்பு வருமாறு இந்திய தொழில்துறை கூட்டமைப்பினருக்கு சஜித் அழைப்பு!

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச , புது டில்லியில் இந்திய தொழில்துறை கூட்டமைப்பினரை சந்தித்து முக்கிய பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையிலான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், வர்த்தகம் மற்றும் முதலீட்டு தொடர்புகளை விரிவுபடுத்தல் உள்ளிட்ட விடயங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

1895 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இந்தியத் தொழிற்துறை கூட்டமைப்பானது இந்தியாவின் முன்னணி வர்த்தக சங்கமாகும்.

இலங்கையில் தனியார் துறையால் இயக்கப்படும், புதுமைகளை அடிப்படையாகக் கொண்ட அபிவிருத்தி மாதிரியை மேம்படுத்துவதற்கு நாம் உறுதிபூண்டுள்ளோம் என்றும், இலங்கையின் மறுசீரமைப்புக்குப் பிந்தைய மீட்சியில் பெரும் பங்கை ஆற்றுவதற்கு இந்திய தொழில்துறைக்கு அழைப்பு விடுக்கிறோம் என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

விவசாய பதப்படுத்தல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வழங்கல் சேவைகள், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி போன்ற துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்புக்கு கூடிய வாய்ப்பைப் பெற்றுத் தருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு தெரிவித்தார்.

முதலீட்டு வாய்ப்புகளை அடையாளம் காணவும், இலங்கை ஏற்றுமதி சபைக்கும் , இந்திய தொழிற்துறை வலையமைப்புகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், இலங்கை – இந்திய தொழில்துறை கூட்டமைப் வர்த்தக மன்றம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கும் எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது யோசனை முன்வைத்தார்.

வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப கூட்டாண்மைகள் தொடர்பில் ஆராயும் பொருட்டு வணிக முயற்சி பிரதிநிதிகள் குழவினரை கொழும்புக்கு விஜயம் செய்யுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்தார்.

ஆவியாக வரமுடியாவிட்டால் மறுபிறவி எடுத்தேனும் பழி தீர்ப்பேன்!

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள போராட்டமானது அடுத்த ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதற்குரிய நடவடிக்கை அல்ல எனவே, அரசியல் பேதங்
களை மறந்து அனைத்து எதிர்க்கட்சிகளும் நுகேகொடையில் அணிதிரள வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்தார்.

நுகேகொடை போராட்டத்தில் பங்கேற்பதில்லை என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவிப்பு விடுத்துள்ள நிலையிலேயெ சாமர எம்.பி. மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

“ நுகேகொடை போராட்டமானது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிரானது. அதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு வழங்க வேண்டும். 2029 ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து இந்த போராட்டத்தை தவறவிடக்கூடாது. ஏனெனில் இது ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதற்குரிய கூட்டம் அல்ல.

இந்த அரசாங்கத்துக்கு எதிராக கட்டாயம் எதிர்ப்பை வெளியிட வேண்டும். சிலவேளை என்னை பழிவாங்க முற்படக்கூடும். ஆவியாக வர முடியாவிட்டால் அடுத்த பிறவி எடுத்தாவது நிச்சயம் பழி தீர்ப்பேன்.” எனவும் சாமர சம்பத் தஸநாயக்க மேலும் குறிப்பிட்டார்.

 

மரக்கறி விலைப்பட்டியல் (04.11.2025)

மரக்கறி விலைப்பட்டியல் (04.11.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (04) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

நுகேகொடை பேரணியில் பங்கேற்க மறுப்போருக்கு ஆளுங்கட்சியுடன் டீல்: மொட்டு கட்சி குற்றச்சாட்டு!

நுகேகொடை பேரணியில் பங்கேற்க மறுக்கும் தரப்பினருக்கு ஆளுங்கட்சியுடன் “டீல்” இருக்கக்கூடும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடக சந்திப்பு அக்கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது.

இதன்போது அரசாங்கத்துக்கு எதிராக எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் முன்னெடுக்கப்படவுள்ள பேரணியில் பங்கேற்பதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் சர்வஜன அதிகாரம் என்பன விடுத்துள்ள அறிவிப்பு தொடர்பில் கேள்வி எழுப்பட்டது.

இதற்கு பதிலளிக்கையிலேயே மேற்படி குற்றச்சாட்டை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதன்போது அவர் மேலும் கூறியவை வருமாறு ,

“ நுகேகொடை கூட்டமென்பது கட்சிகளின் கொள்கையுடன் தொடர்புபட்டது அல்ல. ஐக்கிய தேசியக் கட்சிக்கும், எமது கட்சிக்கும் இடையில் கொள்கை வேறுபாடுகள் காணப்படுகின்றன. எனினும், இது பொது வேலைத்திட்டமென்பதால் அக்கட்சி பங்கேற்கின்றது.

அரசாங்கத்தின் ஒடுக்குமுறையை எதிர்த்து ஜனநாயகத்துக்காகவும், நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தியுமே பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் எதிர்க்கட்சிகளால் பங்கேற்காமல் இருக்க முடியாது. குறைந்தபட்சம் பேரணியை ஆதரித்தாவது அறிவிப்பு வெளியிட வேண்டும்.

அவ்வாறு செய்ய மறுக்கும் எதிரணி தரப்புக்கு அரசாங்கத்துடன் “ டீல்”இருக்கக்கூடும் அல்லது வர்த்தக கொடுக்கல் – வாங்கல் இருக்கக்கூடும்.” – என்றார் சாகர காரியவசம்.

செம்மணி புதைகுழிக்குள் வெள்ளம்! அடுத்த வருடமே 3 ஆம் கட்ட அகழ்வுப் பணி

செம்மணி மனித புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதனால் அடுத்த வருடமே மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 239 என்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வு பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆராய்வதற்காக யாழ்.நீதவான் நீதமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார், சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் , சட்டத்தரணிகளான நிரஞ்சன், ஞா.ரஜித்தா உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

அதன் போது புதைகுழிக்குள் மழைநீர் தேங்கி நிற்பதனால் அடுத்த அகழ்வு பணிகளை மேற்கொள்வது தொடர்பில் எதிர்வரும் ஜனவரி மாதம் 19ஆம் திகதி மீண்டும் அகழாய்வு தளத்திற்கு விஜயம் மேற்கொண்டு, அடுத்த கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆராயப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழில் போதை மாத்திரைகளை விற்ற இருவர் கைது!

யாழ்ப்பாண நகரில் இளைஞர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் மாத்திரைகளை விற்பனை செய்யும் கும்பலைச் சேர்ந்த இருவர் இன்று கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து
3200 போதை மாத்திரைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த
இரகசிய தகவலுக்கமைய
கஸ்துரியார் வீதியில் மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த அவர்களை சோதனையிட்டபோதே போதை மாத்திரைகள் வைத்திருந்தமை
கண்டுபிடிக்கப்பட்டது.

ஐந்து சந்தி பகுதி அருகில் வசிக்கும் 21 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

போதைப்பொருள் தொடர்பாக பொலிஸாரின் கைது நடவடிக்கை தீவிரமடைந்துள்ள நிலையில் அதற்கான தட்டுப்பாடு காரணமாக சந்தேக நபர்கள் பத்து போதை மாத்திரைகள் அடங்கிய அட்டையை 3000 ரூபா வரை விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வழக்கை முடித்து உதவி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்க நடவடிக்கை எடுங்கள்: பிரதமருக்குகணபதி கனகராஜ் கடிதம்

வழக்கை முடிவுறுத்தி உதவி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கல்வியியல் ஒன்றியத்தின் தலைவரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் பிரதமரும் ,கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசேகருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

2023 ஆம் ஆண்டு 2665 உதவி ஆசிரியர் நியமனத்துக்கான போட்டி பரிட்சை நடைபெறவிருந்த தருணத்தில் அதற்கு எதிரான நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டது. இதனால் இந்த நியமனத்துக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தடைப்பட்டன. வருடங்கள் இரண்டு கடந்து விட்ட நிலையில் இதுவரையில் எவ்விதமான தீர்வும் கிடைக்கவில்லை.

மலையகத் பெருந்தோட்ட பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை நீக்கும் பொருட்டு கல்வி அமைச்சினால் 2665 ஆசிரிய உதவியாளர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுடிருந்தன. சுமார் 14,000 பேர் வரை ஆசிரியர் உதவியாளர் போட்டி பரிட்சைக்கு விண்ணப்பித்திருப்பதாக அறிகிறோம்.

ஆசிரியர் உதவியாளர் போட்டி பரீட்சையை நடத்த வேண்டாம் என்ற இடைக்கால தடை உத்தரவு கல்வி அமைச்சின் செயலாளருக்கு எதிராகவே பெறப்பட்டிருக்கிறது. எனவே இந்த வழக்கை சரியான முறையில் எதிர்கொண்டு அல்லது சமரசமாக தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கையை கல்வி அமைச்சு எடுக்க வேண்டும். இதனால் விடயத்தை கல்வி அமைச்சர் என்ற வகையில் பிரதம மந்திரியின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன் இது தொடர்பில் சரியான தீர்மானம் ஒன்றை எடுப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

ஆசிரியர் உதவியாளர் போட்டி பரிட்சைக்கு விண்ணப்பித்தவர்கள் இது தொடர்பில் ஒரு தீர்வை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். எனவே தங்கள் மலையக மாணவர்களினதும், போட்டி பரீட்சைக்கு விண்ணப்பித்திருந்த மலையக இளைஞர் யுவதிகளினதும் எதிர்பார்ப்பை ஈடு செய்யும் வகையில் உங்கள் நடவடிக்கை அமையும் என எதிர்பார்க்கிறேன். என. காங்கிரஸ் கல்வியல் ஒன்றியத்தின் தலைவரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் பிரதமர் ஹரிணி அமரசேகருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

பட்ஜட், தேர்தல் குறித்து ஆராய கூடுகிறது தமிழரசுக் கட்சி!

இலங்கை தமிழரசுக் கட்சியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் 05 ஆம் திகதி வவுனியாவில் நடைபெறவுள்ளது.

கட்சி தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு மத்திய குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம், மாகாணசபைத் தேர்தல், அரசியல் தீர்வை வென்றெடுப்பதற்குரிய நகர்;வுகள் உட்பட முக்கிய பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளன.

அதேவேளை, இலங்கை தமிழரசுக் கட்சிக்கும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கும் இடையில் விரைவில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதென தகவல் வெளியாகியுள்ளது.

சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் மஸ்கெலியா பொலிஸாரால் கைது!

 

சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் மஸ்கெலியா பொலிஸாரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

45 மற்றும் 52 வயதுடைய மவுஸ்சாகலை தோட்ட சீட்டன் பிரிவை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ் எஸ் புஷ்பகுமாரவுக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவல்களை தொடர்ந்து அவரது பணிப்புரையின் பிரகாரம் மஸ்கெலியா பொலிஸார், திடீர் சுற்றி வளைப்பை மேற்கொண்டு கைது செய்தனர்.

மாணிக்கக்கல் அகழ்வுக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.
மஸ்கெலியா நிருபர் செதி பெருமாள்

 

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

நவீனமயமாக்கப்பட்ட மருதானை ரயில் நிலையம் திறப்பு!

0
'Clean Sri Lanka' வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக, 'Dream Destination' திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட மருதானை புகையிரத நிலையத்தின் முதற்கட்ட நவீனமயமாக்கல் பணிகள் நிறைவு செய்யப்பட்டு, இன்று (25) முற்பகல் பயணிகள் பயன்பாட்டிற்காக திறந்துவைக்கப்பட்டது. புகையிரத...

லிந்துலையில் கோர விபத்து: இருவர் படுகாயம்!

0
டி.சந்ரு லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை, லெமனியர் தோட்டத்தில் கனரக லொறியொன்று சுமார் 150 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதியும், உதவியாளரும் படுகாயம் அடைந்துள்ளனர். வெல்லவாய பகுதியில் இருந்து ஹட்டனிலுள்ள தேயிலை தொழிற்சாலையொன்றுக்கு விறகு...

யாழிலிருந்து யாத்திரைவந்த சிவபக்தர்களுக்கு மலையகத்தில் வரவேற்பு!

0
யாழ்ப்பாணத்தில் இருந்து சிவனொளி பாதமலைக்கான புனித திருத்தல யாத்திரை மேற்கொண்டுள்ள யாத்திரிகள், இன்று கொட்டகலை பகுதியை வந்தடைந்தனர். கொட்டகலை ரொக்கிலிலுள்ள சிவஆலயத்தில் , மலையக இந்து குருமார் ஒன்றியத்தால் அவர்களுக்கு வரவேற்பளிக்கப்பட்டது. அங்கு சிவ...